PDA

View Full Version : காதலின் குரல்...



ரௌத்திரன்
14-07-2012, 11:59 PM
(இந்தக் கவிதையின் உட்குரலாய் இருந்து உரத்துப் பேசிய, இந்தக் கவிதை உருவாகக் காரணமாய் இருந்த "அந்தப் பெண்ணுக்கு" என் அடி நெஞ்சின் ஆயிரம் நன்றிகள்..)


இனி முதுமை
இங்கு தலைக்கு மட்டுமல்ல
பலர்
இதயங்களுக்கும் சேர்த்தே
வெள்ளையடிக்க
வேண்டியிருக்கிறது...

வயதானால்
தோல் சுருங்க வேண்டுமேயன்றி
இதயமல்ல.

எப்போதுதான்
மாறப் போகிறீர்கள்?

எப்போதுதான்
சிந்திக்கப் போகிறீர்கள்?

உம்மைச்
சிந்திக்க விடாதிருக்கும்
சக்திதான் யாது?

மதமும் சாதியும் தானா?

மதமும் சாதியும்
முட்புதர்கள்!

முட்புதர்களை வளர்க்கவா
முல்லைப் பூக்களை உரமிடுவீர்?

வாழ்த்த வேண்டிய கையில்
வாய்க்கரிசி...

ஆனந்தமாய்
ஆசீர்வதிக்க வேண்டிய நெஞ்சில்
அடங்காத கொலைவெறி...


போதும் பெற்றோர்கள்!
போதும்!

ஏற்கெனவே பூமி
மூன்று பக்கமும்
உப்பு நீரால் சூழப்பட்டு விட்டது.
இன்னொரு பக்கத்திற்காய்
காதலரின் கண்ணீரைக்
கடன்கேட்காதீர்கள்!


இந்தியா
சுதந்திர நாடென்று
சொன்னது யார்?


வெளிநாட்டில் ஒருவன்
தன்
சாவைத் தேர்ந்தெடுப்பதற்கும்
சட்டம்
சம்மதிக்கிறது.

ஆனால் இங்கே

வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கும்
உரிமையில்லை.

இந்தியா
சுதந்திர நாடென்று
சொன்னது யார்?

பெற்றவரின் கட்டாயத்திற்காக
மனதில் ஒருவனையும்
மஞ்சத்தில் ஒருவனையும் சுமந்து
போலி வாழ்க்கை வாழும்
பெண்கள்தான் எத்தனை பேர்?

ஆனால் இவள்
அந்தச் சாதியல்ல.


எங்கள்
காதல் பூக்களை உதிர்த்துவிட
உம்மால் ஆகாது.

உங்கள் சாதியென்னும்
பூகம்பம்
பாதம் பதிக்க முடியாத

உங்கள் மதமென்னும்
புயல் காற்றின்
புழுதி கூடத் தொடமுடியாத

நெருப்பு வனத்திலே
நட்டிருக்கிறோம்
எங்கள்
காதல் செடியை....




------------ரெளத்திரன்

jayanth
15-07-2012, 11:14 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கலைவேந்தன்
17-07-2012, 03:51 PM
காதலை நியாயப்படுத்தி பெற்ரோர்களின் மடமையை ( சில நேரங்களில் ) சாடுகின்ற அழகான கவிதை.

இந்தியா என்பது ஒன்றும் தனிப்பொருள் அல்ல. அனைவரும் சேர்ந்த ஒரு அமைப்பே. அனைவரும் திருந்தினால் இந்தியா வளம்பெறும்.

அதே சமயம் ஒவ்வாக்காதலையும் பொருந்தாக் காதலையும் கயவனிடம் அடைபடத்துடிக்கும் அபலைக் குழந்தைகளையும் காக்க பெற்றோர் எடுக்கும் சில நடவடிக்கைகளைக் குறை கூற இயலாது.

அழகான சிந்தனை படைத்த கவிதைக்கு பாராட்டுகள் ரௌத்திரன்.