PDA

View Full Version : "உன் வாரிசுகள் " (கலீல் ஜிப்ரன்)



chezhian
07-04-2003, 08:10 PM
<span style='color:#ff00a3'>"உன் வாரிசுகள் " </span>

பெற்றோர் - பிள்ளை உறவு பற்றி
கலீல் ஜிப்ரன் கவிதையின்
என் மொழிபெயர்ப்பு.

<span style='color:#0900ff'>இவர்கள்
உன் வாரிசுகளா...... ?
இல்லை.

வாழ்வுச்சங்கிலி
இடைவிடாது தொடர
வார்த்துக்கொண்ட கண்ணிகள்.

உன் மூலம் வந்திருக்கலாம்...
உன்னிடம் இருந்து அல்ல....
உன் தனிச்சொத்தும் அல்ல...

இன்று உன்னோடு இருக்கலாம்..
ஆனால் உன்னுடையது அல்ல....

உன் "வாரிசுக்கு"
அன்பை அள்ளிக்கொடு.....
உன் சொந்தக்
கருத்துக்களைத் திணிக்காதே...

கருத்து என்பது
அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது......

உன் இன்றைய வீட்டுச் சுவருக்குள்
உலவது அவர்கள் உடல் மட்டுமே....
அவர்கள் உள்ளம் உலவுவது...
"நாளை" என்ற புது வீட்டில்.
நீ நினைத்தாலும்
ஏன் உன் கனவிலும்
நுழைய முடியாத
நாளை என்ற புது வீட்டில்.

உன் வாரிசு போல் நீ ஆக ஆசையா?
ம்..... முயற்சி செய்..!
ஆனால்
உன்னைப்போல் உன் வாரிசு ஆக
நிர்ப்பந்திக்காதே...
நீ வில்... அவர்கள் அம்பு....
முன்னோக்கிச் செல்லட்டும்.

வாழ்க்கை பின்னோக்கிப் பாயும் நதியல்ல......

</span>

anushajasmin
08-04-2003, 12:18 AM
நல்ல சித்தாந்தங்கள். தொடருங்கள் செழியா... பாராட்டுகள்

prabhaa
08-04-2003, 01:43 AM
<span style='color:blue'>கலீல் ஜிப்ரன் - என்னை பொருத்தவரை, மிகச்சிறந்த கவிஞர். இவர் படைத்த பல கவிதை/கதைகள் என்னை மிகவும் பாதித்துள்ளன.

அனைவரும் அவைகளை படித்து இன்புறவேண்டும்.!!

இவர் படைத்த "Broken Wings" நிகரற்ற காதல் காவியம்.

</span>

இளசு
08-04-2003, 06:13 AM
பெருங்கவியின் நல்ல ஒரு பாடலை
அருமைத் தமிழில் தந்த செழியனுக்கு பாராட்டும், நன்றியும்...

அமரன்
28-04-2008, 04:43 PM
கலீல் ஜிப்ரானின் கவிதைகள் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13427) தொகுக்கப்பட்டிருப்பதால், இத்திரியை மூடுகின்றேன்.

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 06:59 PM
அற்ப்புதமான கவிதை,நெடுநாட்களுக்கு முன் படித்தாது இப்போது மீண்டும் படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தியதுக்கு நன்றி("பொத்தனூர்"பிரபு)