PDA

View Full Version : இசைக் குறிப்பு...



HEMA BALAJI
11-07-2012, 02:12 PM
http://4.bp.blogspot.com/-uNKzhKiXrT0/T8W358uRKRI/AAAAAAAAAmw/hINyFLFXqFo/s400/music.jpg


கடலில் இருக்கும் மீன்
கடலைத் தேடிக் கொண்டிருப்பதை போல
என்னில் உன்னை வைத்துக் கொண்டே
வெளியே தேடுகின்றேன்....

இரவைப் பகல் தொடரும்
இயல்பு போல
நான் உன்னில் இருந்தபடியே
உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...

ஓடை நீரில் மலரை
பொத்திவைப்பது போலவே
உன் நினைவுகளை மறைத்து
தோற்றுப் போகிறேன்

பூட்டி வைத்திருந்த எனது கூடங்களில்
வாத்தியங்கள் எல்லாம்
எட்டிப் பார்த்து நீ
இழுத்து விடும் சுவாசத்தையே
குறிப்பாகக் கொண்டு
இசைக்கத் தொடங்கி விடுகின்றன..

நீ எப்போதும்
எனது இலக்காய் அல்ல
முடிவாகவே இருக்கிறாய்...

கீதம்
11-07-2012, 11:19 PM
சுரம் பிசகாத இசைக்குறிப்புகள்!

அழகும் ரசனையும் உட்குறிப்புகள்!

பாராட்டுகள் ஹேமா.

ஜானகி
12-07-2012, 03:58 AM
லயமான கணிப்பு...!

HEMA BALAJI
12-07-2012, 07:10 AM
சுரம் பிசகாத இசைக்குறிப்புகள்!

அழகும் ரசனையும் உட்குறிப்புகள்!

பாராட்டுகள் ஹேமா.

நன்றி கீதம்...

HEMA BALAJI
12-07-2012, 07:11 AM
லயமான கணிப்பு...!

நன்றி ஜானகி ...

சிவா.ஜி
12-07-2012, 07:39 AM
அழகான இசைக்கோர்ப்பு....இசைந்து வரும் வார்த்தைக் கோர்ப்பு கவிதைக்கு அழகூட்டுகிறது.

வாழ்த்துக்கள்ம்மா ஹேமா.

HEMA BALAJI
14-07-2012, 03:34 PM
அழகான இசைக்கோர்ப்பு....இசைந்து வரும் வார்த்தைக் கோர்ப்பு கவிதைக்கு அழகூட்டுகிறது.

வாழ்த்துக்கள்ம்மா ஹேமா.

நன்றி சிவா அண்ணா..