PDA

View Full Version : அவளும் அவள்சார்ந்த இடமும்

இராஜிசங்கர்
11-07-2012, 08:10 AM
கோவில்களில்மட்டும் நுகர்ந்து பழகியிருந்த
புனிதவாசனை பரவிக்கிடந்தது அவள் அறையில்;
என்னவென்று சென்று பார்த்தேன்
என் தேவதை உடைமாற்றியிருந்தாள்;

எழுதாமல் ஊடல் செய்துகொண்டிருந்த பேனாவிற்கு
இதழ்சிகிச்சை செய்து எழுத வைக்கிறாள்;
இதைத்தான் எதிர்பார்த்தேனென்று அவள்
கைவிரல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது;

ஜன்னல் கம்பிகளுக்குள் தகராறு
அங்கேபாரேன் அழகியபூச்செடி என்றவளை
நேற்றிரவு சேகரித்த மழைத்துளிகளால்
கன்னம் நனைத்திடத் துடிக்கிறது;

அழகனைத்தையும் அடைந்துவிட்ட மமதையில்
ஆட்டம் காட்டுகிறது உன் அறைப்படுக்கை
நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
என்று ஏங்கச் செய்து விடுகிறது!!

எவ்ளோநேரம் வா போகலாமென்கிறாய்
என் சிதறிய இதயத்தை சேகரித்துக் கொண்டு
ஒன்றுமறியா உன் உயிர் நண்பனாய் வெளியே வர
இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமடி எனக்கு..

HEMA BALAJI
11-07-2012, 01:13 PM
ஹை. ரொம்ப நல்லா இருக்குப்பா கவிதை. வாழ்த்துக்கள் ராஜி.

கலைவேந்தன்
11-07-2012, 02:22 PM
இது ஒரு சங்கடமான நிலை.

எப்படியோ அறிமூகமாகி உயிர் நண்பனாய்ப் பரிமளித்து தன் தோழியின் அழகும் குணமும் அதிகமாகக் கவர்ந்துவிட தன் நட்பினைக் காத்துக்கொள்ளத் தவிக்கும் நிலை மிக துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்தோழி காதலியாய் மாறுவது ஒன்றும் வியப்பில்லைதான். அதனை அவள் அழகின் ஒவ்வொரு படிமானத்தையும் முதல் வரியில் இருந்து கோர்த்துக்கொண்டே வரும்போதே தெளிவடையச் செய்கிறது.

அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராஜி அவர்களே..!

சிவா.ஜி
11-07-2012, 03:37 PM
அழகுணர்வு பரிமளிக்கும் சுகமான வரிகள். நட்பு காதலாய் மாறும் இரசாயன விளைவு ஒருபக்க நினைவுகளாய் அழகாய் தெரிவிக்கப்படுகிறது.

பாராட்டுக்கள்ம்மா தங்கையே.

கீதம்
11-07-2012, 10:44 PM
பத்திகளில், நுழைந்து வார்த்தைகளில் பரவியதோடு, எழுத்துக்களிலும் இடைச்செருகிய காதல், இன்னும் ஏன் அவள் மனம் செருகவில்லை என்பது வியப்புதான்.

உடை, பேனா, ஜன்னல் கம்பி, படுக்கை என்று அவள் ஸ்பரிசம் படும் ஒவ்வொன்றையும் பார்த்து ஏங்கும் ஏக்கம் ரசனை. எத்தனை நாள்தான் எட்டநின்று நண்பனாய் நடிப்பது?

என்றேனும் காதல் ஏற்றுக் கைப்பிடிக்குள் சிறைப்படுத்தமாட்டாளா என்று ஏங்கிச் சிதறும் இதயத்தின் வேதனையை அழகாய்ப் பிரதிபலிக்கும் வரிகள்.

புனிதவாசனை! சொல்லும்போதே அதை நினைவுக்கும் நுகர்வுக்கும் கொண்டுவந்துவிடுகிறது மனம். அழகிய ரசனையான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
12-07-2012, 04:11 AM
ஹை. ரொம்ப நல்லா இருக்குப்பா கவிதை. வாழ்த்துக்கள் ராஜி.
நன்றி ஹேமா மச்சி... ( சும்மா செல்லமா)

இராஜிசங்கர்
12-07-2012, 04:12 AM
இது ஒரு சங்கடமான நிலை.

எப்படியோ அறிமூகமாகி உயிர் நண்பனாய்ப் பரிமளித்து தன் தோழியின் அழகும் குணமும் அதிகமாகக் கவர்ந்துவிட தன் நட்பினைக் காத்துக்கொள்ளத் தவிக்கும் நிலை மிக துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்தோழி காதலியாய் மாறுவது ஒன்றும் வியப்பில்லைதான். அதனை அவள் அழகின் ஒவ்வொரு படிமானத்தையும் முதல் வரியில் இருந்து கோர்த்துக்கொண்டே வரும்போதே தெளிவடையச் செய்கிறது.

அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராஜி அவர்களே..!
நன்றிங்க கலை அண்ணா

இராஜிசங்கர்
12-07-2012, 04:13 AM
அழகுணர்வு பரிமளிக்கும் சுகமான வரிகள். நட்பு காதலாய் மாறும் இரசாயன விளைவு ஒருபக்க நினைவுகளாய் அழகாய் தெரிவிக்கப்படுகிறது.

பாராட்டுக்கள்ம்மா தங்கையே.

நன்றிங்க சிவா அண்ணா

இராஜிசங்கர்
12-07-2012, 04:14 AM
பத்திகளில், நுழைந்து வார்த்தைகளில் பரவியதோடு, எழுத்துக்களிலும் இடைச்செருகிய காதல், இன்னும் ஏன் அவள் மனம் செருகவில்லை என்பது வியப்புதான்.

உடை, பேனா, ஜன்னல் கம்பி, படுக்கை என்று அவள் ஸ்பரிசம் படும் ஒவ்வொன்றையும் பார்த்து ஏங்கும் ஏக்கம் ரசனை. எத்தனை நாள்தான் எட்டநின்று நண்பனாய் நடிப்பது?

என்றேனும் காதல் ஏற்றுக் கைப்பிடிக்குள் சிறைப்படுத்தமாட்டாளா என்று ஏங்கிச் சிதறும் இதயத்தின் வேதனையை அழகாய்ப் பிரதிபலிக்கும் வரிகள்.

புனிதவாசனை! சொல்லும்போதே அதை நினைவுக்கும் நுகர்வுக்கும் கொண்டுவந்துவிடுகிறது மனம். அழகிய ரசனையான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

உணர்ந்த ரசித்ததற்கு மிக்க நன்றி கீதம் அக்கா

jayanth
13-07-2012, 04:18 AM
நல்லாருக்கு ராஜி...

இராஜிசங்கர்
13-07-2012, 04:20 AM
நல்லாருக்கு ராஜி...

நன்றி அண்ணா