PDA

View Full Version : ஒன்று முதல் பத்து வரை.



M.Jagadeesan
11-07-2012, 01:14 AM
ஓரெழுத்தில் கவிதை ஓது என்றாள்

" நீ " என்றேன் .

ஈரெழுத்தில் கவிதை இயம்பு என்றாள்

" நான் " என்றேன்.

மூன்றெழுத்தில் கவிதை முடி என்றாள்

" காதல் " என்றேன்.

நான்கெழுத்தில் கவிதை நாட்டு என்றாள்

" முத்தம் " என்றேன்.

ஐந்தெழுத்தில் கவிதை அறை என்றாள்.

" திருமணம் " என்றேன்.

ஆறு எழுத்தில் கவிதை ஆக்கு என்றாள்

" இல்வாழ்க்கை " என்றேன்.

ஏழு எழுத்தில் கவிதை எழுது என்றாள்

" தாய்மை உனக்கு " என்றேன்.

எட்டெழுத்தில் கவிதை கட்டு என்றாள்

" பிள்ளை குட்டிகள் " என்றேன்.

ஒன்பதெழுத்தில் கவிதை ஓட்டு என்றாள்

" முதியோர் காப்பகம் " என்றேன்.

பத்தெழுத்துக் கவிதை அவளும் கேட்கவில்லை

செத்து முடிந்ததால் நானும் சொல்லவில்லை.

ஜானகி
11-07-2012, 02:35 AM
பத்து எண்ணுவதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் போலிருக்கிறதே.....உஷார்...

கீதம்
11-07-2012, 06:39 AM
பத்தெழுத்துக் கவிதையாய் பத்தாம் நாள் காரியம் முடிந்துவிட்டது போலும்.

ஏறுமுகமாய் எழுதிய வாழ்க்கைக் கவிதை எவ்வித இடையூறுமின்றி சுபமாய் முடிந்ததில் சுகம்.

கவிதையை மொழியச் சொன்ன வினைகளில் வித்தியாசம் காட்டி ரசிக்கவைத்து தமிழோடு விளையாடியமை தங்கள் சிறப்பு.

மனக்கருவூலத்திலிருந்து இதுபோல் இன்னும் பல கவியாபரணங்கள் வெளிக்கொணர எங்கள் வாழ்த்துக்கள் ஐயா.

M.Jagadeesan
11-07-2012, 07:15 AM
ஜானகி , கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !

HEMA BALAJI
11-07-2012, 01:15 PM
வித்தியாசமான காதலி வித்தியாசமான கவிஞரப்பா... ஒருவர் கேட்க ஒருவர் ஒன்றொன்றாய் கூட்டி முடிக்க.. அழகுக் கவிதை.

M.Jagadeesan
11-07-2012, 02:34 PM
ஹேமாபாலாஜி அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

சிவா.ஜி
11-07-2012, 03:33 PM
அழகான காதல் கவி ஏணி.....ஓரொரு படியாய் ஏற ஏற சுகம்....உச்சத்தில் ஒரு நிம்மதி.

வாழ்த்துக்கள் ஐயா.

கலைவேந்தன்
11-07-2012, 04:56 PM
பதினொன் றெழுத்துகளில்
பதியொரு கவிதையென்றாய்..
பதிந்தனை என்மனதில்..
மதிதனைக் கவர்ந்தனை
அதிலெதுவும் ஐயமில்லை..


பத்தினிலே வாழ்க்கையது
பத்தினியால் முக்தியது
சொத்தினியும் அவளேதான்
அத்தனையும் அவளேதான்..
பத்தும் பறந்திடினும்
சத்தெனவே நிற்பவளாம்..!

பதினொரு எழுத்துகள் கொண்ட பதினொருவரிகளில் இக்கலையின் பாராட்டுகள் ஐயா..!

M.Jagadeesan
11-07-2012, 05:24 PM
சிவா. ஜி, கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !