PDA

View Full Version : உரிமை????...



HEMA BALAJI
09-07-2012, 04:56 PM
http://2.bp.blogspot.com/-IFXWtbe7xRw/T_qCicnsaII/AAAAAAAAAyk/DnzlbNV2HKU/s320/buddha.jpg



சித்தார்த்தன் புத்தனான்
இல்லறம் துறந்து..

வெங்கட வரதன் ராகவேந்திரனானன்
இல்லறம் துறந்து...

வர்தமானன் மாஹாவீர் ஆனான்
இல்லறம் துறந்து...

இல்லறம் என்பது இருவர்
சார்ந்தது என்றால்...

முடிவின் உரிமையை
ஒருவர் மட்டும் எடுப்பது ஏன்????...

ஆதவா
09-07-2012, 05:18 PM
எல்லாம் ஆணாதிக்கமுங்க....
பாருங்க... யாராச்சும் பெண்கள் இல்லறம் துறந்து வந்திருக்காங்களா??

கீதம்
09-07-2012, 10:10 PM
எல்லாம் ஆணாதிக்கமுங்க....
பாருங்க... யாராச்சும் பெண்கள் இல்லறம் துறந்து வந்திருக்காங்களா??

வந்திருக்கிறார்களே. ஆனால் கணவனை விட்டு அல்ல. கணவனே விட்டுச் சென்றுவிட்டதால்...

பரமதத்தன் கைவிட்டதால் துறவறம் பூண்ட புனிதவதி அம்மையாரும் கோவலன் பிரிந்துசென்றதால் துறவு பூண்ட மாதவியும் நினைவுக்கு வருகிறார்கள். (மாதவியும் கற்புநெறியில் கண்ணகிக்கு குறைந்தவள் இல்லை என்பதால் அவளைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.)

இன்னும் பலர் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

கீதம்
09-07-2012, 10:13 PM
http://2.bp.blogspot.com/-IFXWtbe7xRw/T_qCicnsaII/AAAAAAAAAyk/DnzlbNV2HKU/s320/buddha.jpg



சித்தார்த்தன் புத்தனான்
இல்லறம் துறந்து..

வெங்கட வரதன் ராகவேந்திரனானன்
இல்லறம் துறந்து...

வர்தமானன் மாஹாவீர் ஆனான்
இல்லறம் துறந்து...

இல்லறம் என்பது இருவர்
சார்ந்தது என்றால்...

முடிவின் உரிமையை
ஒருவர் மட்டும் எடுப்பது ஏன்????...


தம் முன்னால் திரிந்தலையும் கேள்விகளுக்கு விடை தெரியாமல்தானே துறவறம் மேற்கொண்டார்கள்!

இவர்களுடன் இன்னொருவரையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் இல்லறத்துறவி.

நல்ல சிந்தனையும் கேள்வியும்! விடைதான் நம்மிடம் இல்லை...

பாராட்டுகள் ஹேமா.

M.Jagadeesan
10-07-2012, 12:42 AM
இல்லறம் என்பது இருவர் சார்ந்ததுதான் ; ஆனால் தொல்லை தாங்கமுடியாமல்தான் , ஆண் துறவறத்தை மேற்கொள்கிறான். எனவே ஆண்மகனின் துறவுக்குக் காரணம் அவன்மட்டுமல்ல, இருவரும்தான் என்று உணர்க.

aasaiajiith
10-07-2012, 05:03 AM
ஆஹா அடடா ! அற்புதம்,அபாரம்
ஆண்டாண்டு காலமாய் , இன்றுவரை அபாண்டமாய்
ஆணாதிக்க அராஜகவாதி ஆக்கிய,ஆக்கப்பட,
ஆக்கப்பட்ட அப்பாவி ஆண்கள் ஆயிரம் பேர் இருக்கையிலே
ஆன்மிகம் போற்றி, சான்றோர் என பெயர் வாங்கிய
ஆன்றோர் தானா அகப்பட்டார் ?
ஆணாதிக்கவாதி எனும் அரிதாரம் அப்பிட

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டதில்லை என்பதாலோ ??

aasaiajiith
10-07-2012, 05:08 AM
புத்தன்
மகாவீர்
இராகவேந்திரர்

இவர்கள் யாவரும் ஆணாதிக்கவாதிகளா???

புத்தமதத்தை பின்பற்றும் பல வட மாநில பெண்கள் இளம் வயதினிலே துறவறம் பூத்தாய் அடிக்கடி கேள்விபட்டது எல்லாம் பொய்யோ ???

ஆதவா
10-07-2012, 05:58 AM
வந்திருக்கிறார்களே. ஆனால் கணவனை விட்டு அல்ல. கணவனே விட்டுச் சென்றுவிட்டதால்...

பரமதத்தன் கைவிட்டதால் துறவறம் பூண்ட புனிதவதி அம்மையாரும் கோவலன் பிரிந்துசென்றதால் துறவு பூண்ட மாதவியும் நினைவுக்கு வருகிறார்கள். (மாதவியும் கற்புநெறியில் கண்ணகிக்கு குறைந்தவள் இல்லை என்பதால் அவளைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.)

இன்னும் பலர் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

ஆஹா.. தகவலுக்கு நன்றிங்க... மாதவி என்றதும் மணிமேகலையும் ஞாபகத்திற்கு (இப்பொழுதுதான்) வந்தது!! என்றாலும் இவர்கள் இருவரும் உறுதிபடுத்தப்படாத மாந்தர்கள்!!

என் கேள்விக்குப் பின் ஒளிந்துள்ள கிண்டலைப் புரிந்து கொண்டு பதில் சொன்னமைக்கு நன்றிங்க...

-----------
மிஸ்டர் ஆசை அஜித்,
ரொம்ப பொங்கிட்டீங்க போலிருக்கே... கூல்..
ஆணாதிக்கம் எனும் வார்த்தை தவறான பிரயோகமல்ல. ஆண்கள் ஓரிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதைக் குறிப்பிடுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் பெரும்பாலும் நான் கேள்விப்பட்டது துறவியர்கள் ஆண்களே பெருமளவிலும் இருப்பார்கள். ஒருசிலர் மட்டுமே துணைவியரைக் கொண்டிருப்பார்கள். ஆக, சமான அளவில் பாத்திரப்படைப்பை எழுதாத ஆசிரியனும் ஆணாதிக்க சிந்தனையுடையவனாகவே இருந்திருப்பான் என்பது யூகம். புகழ்பெற்ற முனிவர் என்றதும் சட்டென ஞாபகம் வரும் ஆண்கள், வசிஷ்டர், விசுவாமித்திரர், துர்வாசர், வியாசர், நாரதர் மற்றும் கவிதை சொல்லும் புத்தர், மஹாவீரர், ராகவேந்திரர்... விவேகானந்தர் வரை இப்படி சில சொல்லமுடியும்...... ஆனால் பெண்கள்??

சரித்திரத்தில் எப்போதுமே ஆண்களின் பெயர்தாங்க அதிகம்..

HEMA BALAJI
10-07-2012, 09:11 AM
கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

இங்கு புத்தன், மஹாவீர் மற்றும் ராகவேந்திரரை கூறியது அவர்களின் ஆணாதிக்கத்தைக் காட்டவோ, அவர்கள் துறவரம் பூண்டது தவறு எனும் கருத்தைச் சொல்லவோ இல்லை. எல்லாருக்கும் தெரிந்த மஹான்கள் என்பதால் எடுத்துக் காட்டினேன்.

அவர்களின் மறுபுறமான, அவரைச் சார்ந்திருந்த பெண்களும் குழந்தைகளுமான உலகத்தை, அடுத்த பக்கத்தை கற்பனை செய்தேன் அவ்வளவே...அவர்கள் பட்ட துயரத்தின், தியாகத்தின் கனி தானே நாம் அம் மஹான்கள் மூலம் பெற்ற மார்கம். அதில் அவர்களுக்கும் பங்குண்டே?

இருவரும் ஈருடல் ஓருயிராக பங்கு கொண்ட, சகலத்தையும் பகிர்ந்து கொண்ட இல்லறத்தில் கணவன் துறவரம் ஏற்கும் போது ஈருடலின் ஒரு உயிரான மனைவியை கருத்தில் கொண்டு புரியவைத்து பிரிவை ஆசுவாசப் படுத்தியபின் எடுக்கப்பட்டிருக்குமா தீர்மானம் என்பது தான் என் சந்தேகம்.

இது விடையற்ற/இப்போது தெளிவிக்க முடியாத* கேள்விதான்.

என் கற்பனை வரிகளை படித்து கருத்திட்டு பின்னூட்டிய அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்..

தாமரை
10-07-2012, 11:24 AM
பக்த மீரா, அக்கம்மா தேவி என இல்லறத்தை உதறிய பெண்களும் உண்டு. அவர்களுக்கு உண்டான தொல்லைகளால் இல்லறம் வேண்டாம் என உதறினார்கள்.

துறவு பூணும் பொழுது தம் மனைவியரை ஏன் கலப்பதில்லை என்பது கேள்வி.

அப்படிக் கலந்தவர்கள் உண்டு. அவர்கள் குடும்பத்தோடு துறவு மேற்கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என் தந்தை வழிப் பாட்டனார் மற்றும் பாட்டி இருவரும் ஒன்றாகவே தீட்சை பெற்று துறவறம் மேற்கொண்டனர். :icon_ush:

உங்கள் கேள்விக்கு பதில் இப்படி இருக்கிறது..

அவர்கள்
ஞானம் தேடியே
துறவறம் சென்றார்கள்


இருந்திருந்தால்
பிரிந்திருப்பார்களா?

ஆதி
10-07-2012, 12:54 PM
துறவும் இறப்பும் ஒன்று

இரண்டுமே இன்மையை உணர்தல்

இன்மையை உணர்தல் ஞானம்

இறப்பை போல துறவும் முடிவெடுக்கப்படுவதல்ல*

நேர்வ*து அது

துற*வு வெறுத்த*ல் அல்ல*

அய*மையாதல்

துறத்தல் வாழ்ந்தவாறே இறத்தல்

இறத்தல் வாழ்ந்தபிறகு துறத்தல்

முடிவின்(இறப்பதின்) உரிமை எப்ப*டி யாரும் வ*ழ*ங்குவ*து இல்லையோ, அப்ப*டியே துற*ப்ப*தின் உரிமையும் யாரும் வ*ழ*ங்குவ*தில்லை, அது தானே நேர்வ*து

துற*வு இவ*ர்க*ளுக்கு நேர்ந்த*

ராம*கிருஸ்ண*ர் திரும*ண*த்துக்கு முன்பே துற*வு கொண்ட*வர், துற*வையையே இல்ல*ற*த்தில் ந*ட*த்தினார்

புத்த*னுக்கு சீட*ர்க*ளாக*வே அவ*ன் ம*னையும் ம*க*னும் மாறின*ர், அவ*ன் இற*க்கும் முன்பே இருவ*ரும் இற*ந்த*த*ன*ர்

கோவ*ல*ன் கைவிட்ட* மாத*வி துற*வு பூண்டாள், க*ண்ண*தாச*னின் மாங்க*னியில் பொன்ன*ர*சி துற*வு கொண்டும் அர*சு ஆண்டாள், ஏழு திரும*ண*ம் முடித்த* சீவ*க*ன் துற*வுதான் எய்தான்

காரைக்கால் அம்மையார் க*ல்யாண*த்திற்கு பிற*குதான் துற*வு பூண்டார்

பொருள் தேடி புற*ப்ப*ட்டால் பூரிக்கும் உற*வுகள், ஞானம் தேடி புற*ப்ப*ட்டால் பொல*பொல*ப்ப*தேன் ?

சிவா.ஜி
10-07-2012, 05:17 PM
நல்ல அலசல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் வரிகள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதே சமயம் சரியான கேள்வியாகவும் இருக்கிறது. ஆதவாவின் ஆணாதிக்கம் விடுத்து மற்ற சிலவும் தெரிகிறது....பொறுப்பை உதறிப்போன, நம்பி வந்தவளை தனியாக்கிப் போன, தான் தேடும் ஒன்றுக்காக....தன்னை சார்ந்தவைகளை கைகழுவிப்போன இவர்களை...எந்தப் பிரிவில் சேர்ப்பது?

சிந்திக்க வைத்த வரிகளுக்குப் பாராட்டுக்கள் தங்கையே.

HEMA BALAJI
11-07-2012, 02:01 PM
கருத்திட்ட அனைவருக்கும் மிக நன்றி..