PDA

View Full Version : விட்டுச் சென்றவை...

HEMA BALAJI
09-07-2012, 06:39 AM
http://1.bp.blogspot.com/-Rcw1ZVVLPGQ/T8i74LpKiLI/AAAAAAAAAnk/xNSBTNtmYA4/s1600/al.jpg

பெரு மனதுடன்
எனக்காகவே எத்தனையோ
விட்டுச் சென்றாய்
உனக்காக சிலவற்றை மட்டும்
எடுத்துக் கொண்டு

நிலவைப் பரித்துக் கொண்டு
வானத்தை விட்டுச் சென்றாய்

ஈரத்தை உரிஞ்சிக் கொண்டு
மேகத்தை விட்டுச் சென்றாய்

சுவாசத்தைத் திருடிக் கொண்டு
காற்றை விட்டுச் சென்றாய்

பார்வையை பிடுங்கிக் கொண்டு
கண்களை விட்டுச் சென்றாய்

வேர்களை வெட்டி கொண்டு
கிளைகளை விட்டுச் சென்றாய்

நினைவுகளை எடுத்துக் கொண்டு
தனிமையை விட்டுச் சென்றாய்

நீ விட்டுச் சென்றது இப்படி எத்தனையோ
என்னையும் சேர்த்து
உன்னைத் தவிர.....

பென்ஸ்
09-07-2012, 01:52 PM
காதல் ஒரே ஒரு விசயம் தான் ஆனால்...
ஆனால் அந்த காதலை எத்தனைவிதமாகவும் எழுதலாம் கவிதையாய்...
காதல் தோல்வி அதைவிட பலமானது...

கையில் கலசத்தை மட்டும் கொடுத்து விட்டு
நீரை எடுத்து சென்றிருக்கிறான்....
நிறை பாத்திரத்தில் எதையும் ஊற்ற முடியாது காத்திருங்கள்...
அமிர்தம் நிரம்பும்...

ஆதவா
09-07-2012, 03:23 PM
கையில் கலசத்தை மட்டும் கொடுத்து விட்டு
நீரை எடுத்து சென்றிருக்கிறான்....
நிறை பாத்திரத்தில் எதையும் ஊற்ற முடியாது காத்திருங்கள்...
அமிர்தம் நிரம்பும்...

நான் மட்டும் உங்களவுக்கு வயசில இருந்தேன்னு வையுங்க...

“யோவ்,, எங்கய்யா போயிருந்தே, வந்து எழுதுய்யா”

இப்படி சொல்லியிருப்பேன்... (தப்பா நெனச்சுக்காதீங்க... அம்பூட்டு இஷ்டம்!!)

மீள் வரவுக்கு வரவேற்புகள்.

-----

கவிதை விட்டு, எடுத்துச் சென்ற நேர்த்தியான வார்த்தை பிரயோகம்.
எதுவுமில்லாத உலகம், நீயும் நானும் மட்டும் வஸ்துகள் என்பது மாதிரி
சடாரென ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

“அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்”

கவிதை தொடங்கிய இடத்தில் முரண்பட்டு முடிவது பிடித்திருக்கிறது... நீ விட்டுச் சென்றாய்.. உன்னைத் தவிர, அவள் அங்கேயே இருக்கிறாளா, விட்டுச் சென்றாளா எனும் மாயமான கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு விஷயத்தை விட்டுவிட்டு மீதியை கொண்டு செல்பவள், அவளை எடுத்துக் கொண்டு எதை விட்டுச் சென்றாள்??

கொஞ்சம் உளறிட்டேன்ல??

HEMA BALAJI
09-07-2012, 04:49 PM
காதல் ஒரே ஒரு விசயம் தான் ஆனால்...
ஆனால் அந்த காதலை எத்தனைவிதமாகவும் எழுதலாம் கவிதையாய்...
காதல் தோல்வி அதைவிட பலமானது...

கையில் கலசத்தை மட்டும் கொடுத்து விட்டு
நீரை எடுத்து சென்றிருக்கிறான்....
நிறை பாத்திரத்தில் எதையும் ஊற்ற முடியாது காத்திருங்கள்...
அமிர்தம் நிரம்பும்...

கருத்துக்கும் வரவுக்கும் நன்றி திரு. பென்ஸ்..

HEMA BALAJI
09-07-2012, 04:50 PM
நான் மட்டும் உங்களவுக்கு வயசில இருந்தேன்னு வையுங்க...

“யோவ்,, எங்கய்யா போயிருந்தே, வந்து எழுதுய்யா”

இப்படி சொல்லியிருப்பேன்... (தப்பா நெனச்சுக்காதீங்க... அம்பூட்டு இஷ்டம்!!)

மீள் வரவுக்கு வரவேற்புகள்.

-----

கவிதை விட்டு, எடுத்துச் சென்ற நேர்த்தியான வார்த்தை பிரயோகம்.
எதுவுமில்லாத உலகம், நீயும் நானும் மட்டும் வஸ்துகள் என்பது மாதிரி
சடாரென ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

“அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்”

கவிதை தொடங்கிய இடத்தில் முரண்பட்டு முடிவது பிடித்திருக்கிறது... நீ விட்டுச் சென்றாய்.. உன்னைத் தவிர, அவள் அங்கேயே இருக்கிறாளா, விட்டுச் சென்றாளா எனும் மாயமான கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு விஷயத்தை விட்டுவிட்டு மீதியை கொண்டு செல்பவள், அவளை எடுத்துக் கொண்டு எதை விட்டுச் சென்றாள்??

கொஞ்சம் உளறிட்டேன்ல??

ஹி..ஹி..ஹி.. நன்றி!..

கீதம்
09-07-2012, 10:38 PM
ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஒரு அப்பா. இரு பிள்ளைகள். அப்பா சாகுந்தருவாயில் மகன்களிடம் சொல்வார், இருக்கும் சொத்தை சமமாக அனுபவித்துக்கொள்ளும்படி! சொத்து என்பது ஒரு பசு, ஒரு கம்பளி, ஒரு தென்னைமரம். மூத்தவன் இளையவனிடம் சொல்வான்."தம்பி, அப்பாவின் விருப்பப்படி நாம் இவற்றை பங்கிட்டுக் கொள்ளலாம். பசுவின் முன்பாதியை உனக்கே விட்டுக்கொடுக்கிறேன். எனக்கு பின்பாதி போதும். கம்பளியை பகல் பொழுது முழுவதும் நீயே வைத்துக்கொள். இரவில் மட்டும் எனக்குத் தந்தால் போதும். தென்னையின் அடிப்பாகம் முழுவதும் உனக்கே சொந்தம், மேற்பாகம் போதும் எனக்கு." அண்ணனின் திட்டம் புரியாமல் தம்பி தலையசைத்துவைப்பான்.

இந்தக் கதையை நினைவுபடுத்தும் வரிகள். பார்வை பிடுங்கியபின் கண்ணிருந்து பயன் என்ன? மிகவும் அழகான தேர்ந்த உவமைகளால் அவளி(னி)ல்லாத அவன(ள)து நிலையை கவிதையில் உணர்த்தியிருக்கிறீர்கள். ஆழ்ந்து ரசிக்கமுடிகிறது ஹேமா.

M.Jagadeesan
10-07-2012, 12:52 AM
காதலிப்பவன் கதி இதுதான் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

சாற்றை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு
சக்கையை விட்டுச் சென்றால்
என்னுயிரை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு
உடலை விட்டுச் சென்றாள்.

என்றெல்லாம் எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் காதலில் இழப்புத்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். காதலிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாராட்டுக்கள் !

HEMA BALAJI
11-07-2012, 01:44 PM

ரசிப்புக்கு நன்றி கீதம்...

HEMA BALAJI
11-07-2012, 01:45 PM
காதலிப்பவன் கதி இதுதான் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

சாற்றை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு
சக்கையை விட்டுச் சென்றால்
என்னுயிரை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு
உடலை விட்டுச் சென்றாள்.

என்றெல்லாம் எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் காதலில் இழப்புத்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். காதலிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாராட்டுக்கள் !

பாராட்டுகளுக்கு நன்றி ஐயா..

பென்ஸ்
27-07-2012, 10:18 AM
கதையின் ஒரு பகுதியை மட்டும் சொன்னால் எப்படி கீதம்...
பசுவின் வாயை கட்டி உணவை கொடுக்காமல் இருந்ததும்
இரவில் கம்பளத்தை நனைத்து கொடுத்ததும்
தென்னை மரத்தின் அடியை தோன்டி விற்க சென்றதும் அண்ணனுக்கு பாடம் புகட்டிய மீதம் அன்றோ....
கவிதையில் அது போலவே....
சிங்க கூட்டில் இருக்கும் சர்க்கஸ்காரன் போல அடுத்தவரிடம் கவனமாக இருக்க சில பாடங்கள் படித்து கொடுத்தே ஆகவேண்டும்...

பென்ஸ்
27-07-2012, 10:20 AM
நான் மட்டும் உங்களவுக்கு வயசில இருந்தேன்னு வையுங்க...

“யோவ்,, எங்கய்யா போயிருந்தே, வந்து எழுதுய்யா”

இப்படி சொல்லியிருப்பேன்...

தம்பியை மரியாதை கொடுத்து எல்லாம் திட்ட வேண்டாமே ஆதவா...

கோபாலன்
21-09-2012, 02:45 PM
கவிதை மிக அருமையாக இருந்தது... தொடர்ந்து கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் .

HEMA BALAJI
22-09-2012, 06:49 AM
கவிதை மிக அருமையாக இருந்தது... தொடர்ந்து கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் .

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. கோபாலன். கண்டிப்பாக முயல்கிறேன் உங்களின் வாழ்த்துக்களுடன்.