PDA

View Full Version : தூர் வாராதே !



M.Jagadeesan
06-07-2012, 09:51 AM
உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரிய போது அது
நிர்மலமாய் இருக்கக் கண்டு
நிம்மதியடைந்தேன்.
அங்கு,
என் நினைவைத் தவிர வேறு
ஆடவனின் ...இல்லையில்லை
அந்த ஆண்டவனின் நினைவுகூட
இல்லாதிருக்கக் கண்டு இன்பமடைந்தேன்.

உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரியது போல
என் மனக் கிணற்றிலே குதித்துத்
தூர் வார நீ விரும்புகிறாய் !

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தைதான்
ஆண்களின் மனமும் அப்படித்தான்.
தூர் வாரத் தொடங்கினால் துர்நாற்றம் கிளம்பும்
துயரந்தான் மிஞ்சும்.

பொய், களவு, சூது, பொறாமை,பிறன்மனை நயத்தல் போன்ற
அள்ள அள்ளக் குறையாத அசிங்கங்கள்
அங்கே இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைவாய்!

முன்பொரு நாள்
மலையை மத்தாக்கி , பாம்பைக் கயிறாக்கித்
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து
தூர் வாரியபோது
அமுதமும், ஆலகால விஷமும் தோன்றியதாம்.

என் மனதைத் தூர் வார விரும்பும் பெண்ணே!
உனக்கு ஓர் எச்சரிக்கை !
என் மனக் கிணற்றில் நீ தூர் வாரும்போது
அமுதம் தோன்றாது என்று அடித்துச் சொல்லுகின்றேன்.

என் மனச்
சேற்றிலே பிறந்த செந்தாமரை நீ!
இனி அங்குத்
தூர் சேரவிடாது தூய்மையோடு வைத்திருப்பேன்
என்று அந்தக்
கார்மேக வண்ணன் கண்ணனின் மீது......
இல்லையில்லை
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த
இராமனின் மீது ஆணையிட்டு உரைக்கின்றேன்!

தாமரை
06-07-2012, 11:47 AM
உங்க கவிதை புன்னகைக்க வைக்கிறது.

தசரதன் சத்தியமாக இல்லையில்லை தசரதராமன் சத்தியமாக என்றுச் சொல்லி இருந்தால் நயமாக இருந்திருக்குமோ?

தூர்வாருதல் அப்படின்னா நான் தூர்வாரிய கீதமக்காவின் இந்தக்கவிதை ஞாபகம் வருது.

http://www.tamilmantram.com/vb/showthread.php/24753-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?p=496129&viewfull=1#post496129

M.Jagadeesan
06-07-2012, 12:14 PM
உங்க கவிதை புன்னகைக்க வைக்கிறது.

தசரதன் சத்தியமாக இல்லையில்லை தசரதராமன் சத்தியமாக என்றுச் சொல்லி இருந்தால் நயமாக இருந்திருக்குமோ?

தூர்வாருதல் அப்படின்னா நான் தூர்வாரிய கீதமக்காவின் இந்தக்கவிதை ஞாபகம் வருது.

http://www.tamilmantram.com/vb/showthread.php/24753-மூன்றாவது-போட்டி?p=496129&viewfull=1#post496129 (http://www.tamilmantram.com/vb/showthread.php/24753-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?p=496129&viewfull=1#post496129)


உண்மைதான் ! கடைசி வரிகளில் தசரதனையும், இராமனையும் ஒப்பிட்டு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

jayanth
07-07-2012, 04:16 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifஅருமை...!!!அருமை...!!!