PDA

View Full Version : என் ஊர் காரைக்கால் (முடிவு)சொ.ஞானசம்பந்தன்
05-07-2012, 08:50 AM
வங்கக் கடலுடன் அரசலாறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள சிறு நகரமாகிய காரைக்கால் நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஊர் . சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகை உடைய இதன் எல்லைகள் : கிழக்கே கடல் , மேற்கில் வாஞ்சியாறு , தெற்கே அரசலாறு , வடக்கில் கோயில்பத்து என்னும் சிற்றூர் . தெற்கு வடக்காக 2 1/2 கி. மீ. அகலமும் கிழக்கு மேற்காக 3 1/2 கி. மீ. நீளமும் கொண்ட

காரைக்காலும் இதை முப்புறமும் சூழ்ந்துள்ள பகுதிகளும் சேர்ந்த 160 ச. கி. மீ. பரப்பானது புதுச்சேரி மானிலத்தின் ஒரு மாவட்டமாக விளங்குகிறது.

இந்த மாவட்டத்தின் வடக்கே தரங்கம்பாடியும் , தெற்கில் முஸ்லிம்களின் புனிதத் தலமான நாகூரும் இருக்கின்றன ; நாகூருக்கும் அதற்குச் சற்றுத் தெற்கிலுள்ள நாகப்பட்டினத்துக்கும் இடையே உள்ள காடம்பாடி மறைமலையடிகளை ஈன்ற பெருமையுடையது .

( காரைக்கால் மாவட்டம் புதுச்சேரிக்குத் தெற்கில் 150 கி. மீ. தொலைவில் இருக்கிறது என்பதும் இடைப்பட்ட பிரதேசம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடற்குரியது )

புதுச்சேரியில் போன்றே காரைக்கால் தெருக்கள் கோணல்மாணல் இன்றி , நூல் பிடித்தாற்போல் நேர்நேராய் அமைந்து எழிற்கோலம் காட்டுவதால், " காரைக்கால் வீதியழகு " என வெளியூர்க்காரர்களால் புகழப்படுகிறது " காரைக்கால் கருப்பு , சென்னைப்பட்டினம் சிவப்பு " என்று விடுகதையிலும் என் ஊர் இடம்பெற்றுள்ளது . இதன் விடை உங்களுக்குத் தெரியுமா ? ( இறுதியில் சொல்வேன் )

என் ஊரின் சிறப்பு மூன்று மத மக்களும் பெரிய எண்ணிக்கையில் கலந்து ஒற்றுமையாய் வாழ்வது : கைலாசநாதர் கோயில் தெரு, பெரமசாமி பிள்ளை தெரு , சின்னக்கண்ணு செட்டித் தெரு , மெய்தீன் பள்ளி வீதி , மாமாத்தம்பி மரைக்காயர் தெரு , காதர் சுல்தான் வீதி , மாதாகோயில் தெரு , தோமாஸ் அருள் வீதி , தாவீது பிள்ளை தெரு எனத் தெருப் பெயர்களில் மும்மத மணம் கமழ்வதை உணரலாம் .

( தொடரும் )

தாமரை
05-07-2012, 09:35 AM
நான்கு வருடங்களுக்கு முன்பாக திருக்கடையூரிலிருந்து காரைக்கால் வழியே திருநள்ளாறு பயணம் சென்றேன். காரைக்காலில் சற்றே தேநீர் பருகி பயணம் தொடர்ந்தோம்.

நீண்ட நேரான சாலைகள், சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையே விடப்பட்டிருந்த காலி இடங்கள், சாலையோர மரங்கள் எல்லாம் கண்டபோது மிகவும் நேர்த்தியான அந்த அமைப்பு மிகவும் கவர்ந்தது. காரைக்கால் ரோட்டப் பாரு காதர் சுல்தான் வீட்டப் பாரு என்பார்கள். அந்தக் காதர் சுல்தான் வீட்டில என்னங்க விஷேசம்?

காரைக்கால் கருப்பு சென்னைப்பட்டிணம் சிவப்பு என்பதற்கான பதில் குன்றிமணி தானே?

வயல்கள் கூட சரியான செவ்வகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பது இன்னொரு விஷயம்.

சிவா.ஜி
05-07-2012, 05:51 PM
பிறந்து வளர்ந்து தொழில்புரிந்த ஊரைப்பற்றிய நினைவுகளும், விவரங்களும் அழகா இருக்கு. இன்னும் சொல்லுங்க ஐயா. சுவாரசியமா இருக்கு.

ravikrishnan
05-07-2012, 06:28 PM
காரைக்கால் மாதாகோயில் தெரு ,நான் சிறுவனாக இருந்தபோது விளையாடிய தெரு ஒரங்கள்,பின்னர் உறவினர்களை விட்டு அருகில் உள்ள நாகப்பட்டிணத்தில் குடியேறினோம்,இப்போதும் விடுமுறையில் உறவினர்களை சந்திக்க காரைக்கால் செல்வது வழக்கம்..அன்பர் தாமரைஅவர்கள் சொன்னதுபோல்//நீண்ட நேரான சாலைகள், சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையே விடப்பட்டிருந்த காலி இடங்கள், சாலையோர மரங்கள் எல்லாம் கண்டபோது மிகவும் நேர்த்தியான அந்த அமைப்பு மிகவும் கவர்ந்தது. // ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு,என்பார்கள் மேலும் தமிழ்க்கு அடுத்து பிரெஞ்சு மொழி பேசுபவர் அதிகம்..வேலைவாப்பிலும் அங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது...

சொ.ஞானசம்பந்தன்
06-07-2012, 07:12 AM
நான்கு வருடங்களுக்கு முன்பாக திருக்கடையூரிலிருந்து காரைக்கால் வழியே திருநள்ளாறு பயணம் சென்றேன். காரைக்காலில் சற்றே தேநீர் பருகி பயணம் தொடர்ந்தோம்.

நீண்ட நேரான சாலைகள், சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையே விடப்பட்டிருந்த காலி இடங்கள், சாலையோர மரங்கள் எல்லாம் கண்டபோது மிகவும் நேர்த்தியான அந்த அமைப்பு மிகவும் கவர்ந்தது. காரைக்கால் ரோட்டப் பாரு காதர் சுல்தான் வீட்டப் பாரு என்பார்கள். அந்தக் காதர் சுல்தான் வீட்டில என்னங்க விஷேசம்?

காரைக்கால் கருப்பு சென்னைப்பட்டிணம் சிவப்பு என்பதற்கான பதில் குன்றிமணி தானே?

வயல்கள் கூட சரியான செவ்வகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பது இன்னொரு விஷயம்.

சரியாய்ச் சொன்னீர்கள் . காதர் சுல்தான் மாடி வீட்டில் தலைக்குமேல் ( தளத்தில் ) முகம் காட்டும் பெரிய பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன . நாம் நடக்கையில் நம் உருவம் அவற்றில் தல்லைகீழாய் நடப்பதை வியப்புடன் பார்ப்போம் . கண்ணாடி பங்களா என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டை யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று பார்க்க முன்பு அனுமதித்தார்கள். விடுகதை விடையைக் கண்டுபிடித்தமைக்கு என் பாராட்டு .

சொ.ஞானசம்பந்தன்
06-07-2012, 07:13 AM
பிறந்து வளர்ந்து தொழில்புரிந்த ஊரைப்பற்றிய நினைவுகளும், விவரங்களும் அழகா இருக்கு. இன்னும் சொல்லுங்க ஐயா. சுவாரசியமா இருக்கு.

பாராட்டுக்கு மிக்க நன்றி . தொடர்வேன் .

சொ.ஞானசம்பந்தன்
06-07-2012, 07:15 AM
காரைக்கால் மாதாகோயில் தெரு ,நான் சிறுவனாக இருந்தபோது விளையாடிய தெரு ஒரங்கள்,பின்னர் உறவினர்களை விட்டு அருகில் உள்ள நாகப்பட்டிணத்தில் குடியேறினோம்,இப்போதும் விடுமுறையில் உறவினர்களை சந்திக்க காரைக்கால் செல்வது வழக்கம்..அன்பர் தாமரைஅவர்கள் சொன்னதுபோல்//நீண்ட நேரான சாலைகள், சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையே விடப்பட்டிருந்த காலி இடங்கள், சாலையோர மரங்கள் எல்லாம் கண்டபோது மிகவும் நேர்த்தியான அந்த அமைப்பு மிகவும் கவர்ந்தது. // ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு,என்பார்கள் மேலும் தமிழ்க்கு அடுத்து பிரெஞ்சு மொழி பேசுபவர் அதிகம்..வேலைவாப்பிலும் அங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது...

நீங்களும் காரைக்காலில் வசித்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
06-07-2012, 07:18 AM
பெரும்பாலான இந்துக்கள் வேளாளர்கள் ; சோழ நாட்டுக்காரர் ஆகையால் சோழிய வேளாளர் எனப்படுகின்றனர் . இவர்களின் சாதிப் பட்டம் பிள்ளை ( இச் சொல்லுக்குப் பலசாலி என்று பொருளுண்டு )

முஸ்லிம்கள் மரைக்காயர் எனப்படுதற்குக் காரணம் ஒரு காலத்தில் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்தமை. இவர்கள் ஊனுணவு விரும்பிகள் . திருமணம் முதலிய இன்ப நிகழ்ச்சியானாலும் சாவு முதலான துக்க நிகழ்வு ஆனாலும்

ஆட்டுக் கறி பிரியாணி பரிமாறப்படும். .முஸ்லிம் மாதர்கள் உடல் முழுதும் வெள்ளைத் துப்பட்டாவால் போர்த்துக்கொண்டுதான் வெளி இடங்களுக்கு வருவார்கள். .முஸ்லிம் தமிழ் சிறிது வேறுபடும். : அப்பா - வாப்பா ; அம்மா - உம்மா ; அக்கா - லாத்தா ; அண்ணன் - நானா .; கொழம்பு - ஆணம் ; நின்னான் - நிண்டான் ; எழுதுனான் - எளுவினான் ; வாங்கித் தா - வேங்கித் தா ; அவங்க சொன்னாங்க - அக சொன்னாக.

தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவியது போலக் காரைக்காலில் கிறித்துவ ஆதிக்கம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது . இந்துக்கள் உழவில் ஈடுபட , முஸ்லிம்கள் திரவியம் தேடுவதற்குத் திரைகடல் ஓட , கிறித்துவர்கள் கல்வி கற்று, வேலை வாய்ப்புகளும் பட்டம் பதவிகளும் அரசியல் தலைமையும் போட்டி இல்லாமல் பெற்று உயர்ந்தார்கள். இவர்களும் ஆட்சி புரிந்த வெள்ளையரும் ஒரே மதம் என்பதும் ஏற்றத்துக்கு உதவியது .

மும்மதத்தாரையும் பற்றி என் ஊரில் வழங்கும் ஒரு கருத்து : " முஸ்லிம் உண்டு கெட்டார் , கிறித்துவர் உடுத்துக் கெட்டார் , இந்து வைத்துக் கெட்டார் ."

( தொடரும் )

M.Jagadeesan
06-07-2012, 08:49 AM
காரைக்கால் அம்மையாரின் பாதம் பட்ட ஊரில் தாங்கள் பிறந்ததற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்னும் தொடருங்கள்.

கலையரசி
06-07-2012, 01:09 PM
நானும் காரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை உங்களது இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். தாம்ரை கேட்ட காதர் சுல்தான் வீடு, சென்னை சிவப்பு, காரைக்கால் கருப்பு, கிறித்துவ ஆதிக்கம். உண்டு கெட்டார் என்ற சொல் வழக்கு இவையெல்லாமே புதிய செய்திகள். சுவையாக எழுதுவதற்குப் பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

சொ.ஞானசம்பந்தன்
07-07-2012, 06:47 AM
காரைக்கால் அம்மையாரின் பாதம் பட்ட ஊரில் தாங்கள் பிறந்ததற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்னும் தொடருங்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான் . பின்னூட்டமும் ஊக்கமும் தந்தமைக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
07-07-2012, 06:50 AM
காரைக்காலில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையார் . . அவர் திருவந்தாதி , இரட்டை மணி மாலை , திருவாலங்காட்டுத் திருப்பதிகம் என்ற மூன்று செய்யுள் நூல்களை இயற்றுமளவுக்குத் தமிழ்ப் புலமை உடையவர். .அவரது கதையைப் பெரியபுராணம் விவரிக்கிறது . அதன்படி

அவரது வரலாறு மாங்கனித் திருவிழா என்னும் பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . ஆனிப் பௌர்ணமியன்று முற்பகலில் அம்மையார்க்குத் திருமணம் நிகழ்ந்து இரவில் முத்துப் பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம் செல்வார்கள் . மறு நாள் விழாதான் முக்கியமானது; அன்று மதியம் பரமசிவன் யாசகர் கோலத்தில் ( பிச்சையாண்டவர் என்று பெயர் ) அம்மையாரின் இல்லத்துக்கு உணவுண்ணப் போவார். .சாமியைச் சூழ்ந்து தெருவை அடைத்துக்கொண்டு, நகரும் பக்தர் கூட்டத்தை நோக்கி, சிற்சில மாடிகளிலிருந்து மாங்கனிகள் வீசப்படும் ; பழத்தைத் தாவிப் பிடிக்க முடிந்தவர்கள் பரவசத்துடன் தின்பார்கள் .

இரு வாரத்துக்குப் பின் விழா முடியும் .

முஸ்லிம்களுக்கு முக்கிய விழா காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்காவின் கந்தூரி . முதல் நாள் மாலை கண்ணாடித் தேர் ஊர்வலமும் பத்தாம் நாளிரவு சந்தனக் கூடு ஊர்வலமும் நடைபெறும் . இந்த விழாவின் தேதிகள் ஆண்டுதோறும் மாறும் ; பல ஆண்டுக்கொரு முறை இதுவும் ஆனி மாதத்தில் நடக்கும் . இப்போது அப்படித் தான் கந்துரி 30 / 6 இலும் மாங்கனி விழா 2 / 7 இலும் தொடங்கி நிகழ்ந்துகொண்டுள்ளன .

( தொடரும் )

சிவா.ஜி
08-07-2012, 07:43 PM
இந்த மாங்கனித்திருவிழாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மத நல்லிணக்கத்துக்கு உதாரனமான ஊரைப் பற்றிக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பகிருங்கள் ஐயா.

கீதம்
09-07-2012, 03:47 AM
காரைக்கால் பற்றிய பலரும் அறிந்திராத பல விவரங்களை அழகாகத் தொகுத்து வழங்கும் தங்களுக்கு நன்றி. பிறந்து வளர்ந்த ஊரின் பெருமையைச் சொல்லச் சொல்ல மனம் மலரும். கேட்க கேட்க விழிகள் விரியும். அப்படியொரு உணர்வுடன் அனுபவித்து எழுதும் அழகு ரசிக்கவைக்கிறது.

நான் என் சிறு வயதில் கோடைவிடுமுறைகளுக்கு காரைக்காலில் உள்ள சித்தியின் வீட்டுக்கு வருவது வழக்கம். கடற்கரை செல்லும் வழியில் அரசலாற்றை ஒட்டிய நடைமேடைகளில் நித்தம் நடந்து ரசித்ததும், அங்கிருக்கும் வானிலை மையத்திலிருந்து பறக்கவிடப்படும் பலூனை வேடிக்கைப் பார்த்து வியந்ததும், காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் கடைவீதிகளில் திரிந்ததுமான அனுபவங்கள் நினைவுக்கு வந்து சிலிர்ப்பூட்டுகின்றன.

ஜானகி
09-07-2012, 04:05 AM
தங்களின் எளிய நடைமுறை எழுத்தாற்றல் மூலம் காரைக்காலின் அழகை ரசிக்கிறேன்... நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
09-07-2012, 10:47 AM
நானும் காரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை உங்களது இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். தாம்ரை கேட்ட காதர் சுல்தான் வீடு, சென்னை சிவப்பு, காரைக்கால் கருப்பு, கிறித்துவ ஆதிக்கம். உண்டு கெட்டார் என்ற சொல் வழக்கு இவையெல்லாமே புதிய செய்திகள். சுவையாக எழுதுவதற்குப் பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
பாராட்டுக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-07-2012, 10:51 AM
இந்த மாங்கனித்திருவிழாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மத நல்லிணக்கத்துக்கு உதாரனமான ஊரைப் பற்றிக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பகிருங்கள் ஐயா.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் .

சொ.ஞானசம்பந்தன்
09-07-2012, 10:57 AM
காரைக்கால் பற்றிய பலரும் அறிந்திராத பல விவரங்களை அழகாகத் தொகுத்து வழங்கும் தங்களுக்கு நன்றி. பிறந்து வளர்ந்த ஊரின் பெருமையைச் சொல்லச் சொல்ல மனம் மலரும். கேட்க கேட்க விழிகள் விரியும். அப்படியொரு உணர்வுடன் அனுபவித்து எழுதும் அழகு ரசிக்கவைக்கிறது.

நான் என் சிறு வயதில் கோடைவிடுமுறைகளுக்கு காரைக்காலில் உள்ள சித்தியின் வீட்டுக்கு வருவது வழக்கம். கடற்கரை செல்லும் வழியில் அரசலாற்றை ஒட்டிய நடைமேடைகளில் நித்தம் நடந்து ரசித்ததும், அங்கிருக்கும் வானிலை மையத்திலிருந்து பறக்கவிடப்படும் பலூனை வேடிக்கைப் பார்த்து வியந்ததும், காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் கடைவீதிகளில் திரிந்ததுமான அனுபவங்கள் நினைவுக்கு வந்து சிலிர்ப்பூட்டுகின்றன.

மலரும் நினைவுகளை என் கட்டுரை எழுப்பியதறிந்து மகிழ்கிறேன் . அரசலாற்றை ஒட்டிய நடைமேடை போல் வேறு ஊரில் நான் பார்த்ததில்லை . மாலை நேரத்தில் அங்குக் குழுவாக அமர்ந்து ஆற்றின் குளிர்ச்சியையும் தென்றலின் குளிர்ச்சியையும் ஒரு சேர அனுபவித்தபடி நிறைய பேர் மகிழ்வாய்ப் பொழுது போக்குவார்கள் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-07-2012, 10:58 AM
தங்களின் எளிய நடைமுறை எழுத்தாற்றல் மூலம் காரைக்காலின் அழகை ரசிக்கிறேன்... நன்றி.

பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

மதுரை மைந்தன்
10-07-2012, 10:03 AM
காரைக்காலுக்கு நான் சென்றதில்லையென்றாலும் உங்களின் அருமையான எழுத்துக்களின் மூலம் சென்று வந்ததைப் போல் உணருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
10-07-2012, 12:25 PM
காரைக்காலுக்கு நான் சென்றதில்லையென்றாலும் உங்களின் அருமையான எழுத்துக்களின் மூலம் சென்று வந்ததைப் போல் உணருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

பாராட்டியதற்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
11-07-2012, 10:59 AM
சுதந்தர விழா கொண்டாட்டத்துக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது . :

ஆகஸ்ட் 15 : இந்திய விடுதலை ;
ஆகஸ்ட் 16 : பிரஞ்சியரிடமிருந்து விடுமுறை .

1962 இல் பிரஞ்சுக்காரர் வெளியேறியபோது , விருப்பம் உள்ளவர் பிரஞ்சுக் குடியுரிமை பெறலாம் என்று வாய்ப்புத் தரப்பட்டது ; அதன்படி , பொதுமக்களுள் ஒரு பகுதியினரும் பிரஞ்சு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் பட்டாளத்தாரும் , முன்னாள் அரசு அலுவலர்களுமாகச் சுமார் 500 காரைக்கால்வாசிகள் பிரஞ்சுக் குடிகளானார்கள் . இவர்களும் சந்ததியினரும்

1 - இந்திய அரசியலில் ஈடுபடக்கூடாது ;

2 - நம் நாட்டு அரசு அலுவல் , .குடும்ப அட்டை , அரசு சலுகைகள் பெற இயலாது .

மற்றெல்லா உரிமைகளும் உண்டு : நிரந்தரமாய் வசிக்கலாம் , வாணிகமும் தொழிலும் செய்யலாம் , சொத்துகள் வாங்கலாம் , விற்கலாம் .

இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கக் காரைக்காலில் ஒரு பிரஞ்சு இடைநிலைப் பள்ளி நடத்தப்படுகிறது . மேல் கல்விக்குப் புதுச்சேரி போகவேண்டும் . வேலை வாய்ப்புகளைப் பிரான்சில் தேடவேண்டும் .

பிரான்சில் நடைபெறும் தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்கக் காரைக்காலில் ஒரு வாக்குச்சாவடியைப் பிரான்சு அரசு அமைக்கும் .

( தொடரும் )

கீதம்
11-07-2012, 11:25 PM
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் மறுக்கப்படும் உரிமைகளையும் பற்றி இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

காரைக்கால் பற்றிய, தொடரும் தகவல்களுக்கு மிகவும் நன்றி.

சிவா.ஜி
12-07-2012, 07:48 AM
ஓ....இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களா? புதிய தகவல். இன்னும் சொல்லுங்க ஐயா.

பாரதி
13-07-2012, 04:29 PM
காரைக்கால் குறித்து உங்களின் பார்வை பல புதிய செய்திகளை எங்களுக்கு அறியத்தருகிறது ஐயா! வீதியின் நேர்த்திக்கு பிரஞ்சுக்காரர்கள் காரணமாக இருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மிகவும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

சொ.ஞானசம்பந்தன்
14-07-2012, 12:32 PM
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் மறுக்கப்படும் உரிமைகளையும் பற்றி இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

காரைக்கால் பற்றிய, தொடரும் தகவல்களுக்கு மிகவும் நன்றி.

பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
14-07-2012, 12:34 PM
ஓ....இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களா? புதிய தகவல். இன்னும் சொல்லுங்க ஐயா.

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
14-07-2012, 12:36 PM
காரைக்கால் குறித்து உங்களின் பார்வை பல புதிய செய்திகளை எங்களுக்கு அறியத்தருகிறது ஐயா! வீதியின் நேர்த்திக்கு பிரஞ்சுக்காரர்கள் காரணமாக இருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மிகவும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

பாராட்டியதற்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
15-07-2012, 05:35 AM
காரைக்காலின் கல்வி வளர்ச்சியில் பிரஞ்சு ஆட்சி அக்கறை செலுத்தவில்லை . பிரஞ்சு ஒன்றே

பயிற்றுமொழி ; ஏழாம் வகுப்புவரை நாள்தோறும் ஒரு பாடவேளை மட்டும் தமிழ்

கற்பித்தார்கள் ; அதற்குமேல் பிரஞ்சு மாத்திரமே . உயர்நிலைக்குப் பின்பு படிக்கப் புதுச்சேரி

போகவேண்டும் . அங்குக் கல்லுரி இருந்தது ; ஆனால் விடுதி ( ஆஸ்டல் ) இன்மையால் உறவினர்

இருப்பின் அவர்கள் இல்லத்தில் தங்கிப் பயிலலாம் . எத்தனை பேருக்கு இந்த வசதி இருக்

கும் ? ஆகவே உயர்கல்வி கற்ற காரைக்கால்வாசிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தனர் .

இந்தியாவுடன் இணைந்த பின்பு , மகளிர் கலைக் கல்லூரி , ஆடவர் கலைக் கல்லூரி , பொறியியல் கல்லூரி , மருத்துவக் கல்லூரி , வேளாண் கல்லூரி

எனக் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன ; ஆனால் மற்ற துறைகளில் சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி இல்லை . மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் தனி யூனியன் பகுதியாக ஆகிவிட்டால்தான்

வளர்ச்சி சாத்தியம் என்றெண்ணி அந்தக் கோரிக்கையைக் காரைக்கால் மக்கள் சில ஆண்டுகளாக எழுப்பிவருகிறார்கள் ; போராட்டக் குழு ஒன்று அமைத்துப் பலவித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் .

24 ஆண்டுகள் ( கால் நூற்றாண்டு ) பறந்துவிட்டன என் ஊரைவிட்டு நான் நீங்கி. . இறுதியாய் 2003 இல் சென்றிருந்தேன் : எங்கள் வீதி கடை தெருவாகியுள்ளது ; எங்கள் வீடு உட்படப் பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டுப் புத்துருவம் பெற்றுக் கடைகளாகவும் கிடங்குகளாகவும் பயன்படுகின்றன.

நண்பர்கள் , சக ஆசிரியர்கள் , உறவினர்களுள் என் வயது உடையோர் ஆகியவர்களுள் கிட்டத்தட்ட யாரும் உயிரோடில்லை .

காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன் .

குறிப்பு - விடுகதையின் விடை : குன்றிமணி ( குண்டுமணி ) என்பதைத் தாமரை தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டார் .

---------------------------------------------------------------------------------------------------------------------------
.

சிவா.ஜி
15-07-2012, 11:46 AM
அழகான நினைவுகளோடு, நிறைய தகவல்களுடன் சேர்ந்து....காரைக்காலைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும்விதமாக இருந்த பதிவு.

“காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன்”

இந்த வரிகள்....சொந்த ஊரைப் பிரிந்து வந்த அனைவருக்கும் பொருந்தும் விதமாக மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

கீதம்
16-07-2012, 10:59 AM
காரைக்காலை மாற்றாந்தாய் பிள்ளை போல் புதுச்சேரி அரசு நடத்துவதாகக் கூறி போராட்டங்கள் நடந்துவந்த செய்திகளை அறிந்திருந்தேன். காரணம் இப்போதுதான் தெரிந்தது. பழகிய ஊரின், மக்களின் பிரிவு மிகவும் வேதனை தருவது. அதை தங்கள் எழுத்தால் உணர்கிறேன். காரைக்கால் பற்றிய பல புதிய தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
17-07-2012, 07:55 AM
அழகான நினைவுகளோடு, நிறைய தகவல்களுடன் சேர்ந்து....காரைக்காலைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும்விதமாக இருந்த பதிவு.

“காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன்”

இந்த வரிகள்....சொந்த ஊரைப் பிரிந்து வந்த அனைவருக்கும் பொருந்தும் விதமாக மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
17-07-2012, 07:56 AM
காரைக்காலை மாற்றாந்தாய் பிள்ளை போல் புதுச்சேரி அரசு நடத்துவதாகக் கூறி போராட்டங்கள் நடந்துவந்த செய்திகளை அறிந்திருந்தேன். காரணம் இப்போதுதான் தெரிந்தது. பழகிய ஊரின், மக்களின் பிரிவு மிகவும் வேதனை தருவது. அதை தங்கள் எழுத்தால் உணர்கிறேன். காரைக்கால் பற்றிய பல புதிய தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி.

பாராட்டுக்கு மிக்க நன்றி .

தாமரை
17-07-2012, 09:58 AM
ஒரு ஊரை விட்டு விட்டு வந்து பல ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்குச் செல்லும் பொழுது உண்டாகும் எதிர்பார்ப்பும் அதனை முதன் முதலில் பார்க்கும்பொழுது அந்த மாற்றங்களைக் கண்டு உண்டாகும் பிரமிப்பும், பின் தன்னுடைய பிணைப்புகள் அறுபட்டதை எண்ணி உண்டாகும் பிசையும் மனதும் அதன் வலியும்..

சில ஊர்களில் வாழ்ந்ததால் அதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. காலத்துடன் நாமும் நகரும்பொழுது புரிபடாத மாற்றங்களின் பிரம்மாண்டம் சில ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்பொழுது மலைக்க வைக்கிறது. அந்த மாற்றத்தில் நமது அடையாளங்கள் தொலைந்து போவது போல் வருத்தம் தருவது வேறு எதுவும் இல்லை.

பிறந்தமண் மேல் நாம் கொண்ட பாசம் நம்மை இணைத்து உயர்த்துகிறது. அப்பாசத்தை உங்கள் வரிகளில் கண்டேன். கசிந்தேன்

மதுரை மைந்தன்
17-07-2012, 11:35 AM
உங்களுடைய சொந்த ஊரான காரைக்காலை பற்றிய பல விவரங்களை அறிந்து கொண்டேன். நன்றி. காரைக்கால் போல மாஹி என்ற ஊரும் பிரெஞ்சு ஆளுகையில் இருந்தது என்று சரித்திரத்தில் படித்திருக்கிறேன். அந்த ஊர் இப்போது எப்படியிருக்கிறது என்று அறிய ஆவல்.

சொ.ஞானசம்பந்தன்
19-07-2012, 12:14 PM

மிக அற்புதமாய் விவரித்திருக்கிறீர்கள் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
19-07-2012, 12:19 PM
உங்களுடைய சொந்த ஊரான காரைக்காலை பற்றிய பல விவரங்களை அறிந்து கொண்டேன். நன்றி. காரைக்கால் போல மாஹி என்ற ஊரும் பிரெஞ்சு ஆளுகையில் இருந்தது என்று சரித்திரத்தில் படித்திருக்கிறேன். அந்த ஊர் இப்போது எப்படியிருக்கிறது என்று அறிய ஆவல்.

மாஹியும் பிரஞ்சு ஆட்சியில் இருந்தது . புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் போன்றே மாஹியும் ஓர் அங்கமாக இருக்கிறது . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

ராஜா
20-07-2012, 03:37 AM
சொந்த ஊரைப்பற்றி கூறுவது ஒரு சுகம்தான்.. அவ்வூர் பற்றி அறிந்தோர், அதைக் கேட்பதும் சுகம்தான்..

பாராட்டுகள் நண்பரே..!

சுகந்தப்ரீதன்
20-07-2012, 11:55 AM
சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப்போல வருமா...?! அந்த ஏக்கத்தை உங்கள் எழுத்துகளிலும் உணரமுடிகிறது..!!

காரைக்காலைப் பற்றிய சிலபல அரிய தகவல்களை நினைவில் நிறுத்தி எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றியய்யா..!!:)

சொ.ஞானசம்பந்தன்
20-07-2012, 01:10 PM
சொந்த ஊரைப்பற்றி கூறுவது ஒரு சுகம்தான்.. அவ்வூர் பற்றி அறிந்தோர், அதைக் கேட்பதும் சுகம்தான்..

பாராட்டுகள் நண்பரே..!

பாராட்டுக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
20-07-2012, 01:13 PM
சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப்போல வருமா...?! அந்த ஏக்கத்தை உங்கள் எழுத்துகளிலும் உணரமுடிகிறது..!!

காரைக்காலைப் பற்றிய சிலபல அரிய தகவல்களை நினைவில் நிறுத்தி எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றியய்யா..!!:)

பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

Hega
21-07-2012, 03:18 PM
காரைக்கால் எனும் ஊர் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா.

பகிர்ந்தமைக்காக நன்றி

அமரன்
11-08-2012, 08:51 PM
பிறந்த தவழ்ந்த மண்ணை விட்டுப் பிரிந்தோம். வளர்ந்து புரண்ட மண்ணை விட்டுப் பிரிந்தோம். பிறந்த மண்ணை இன்று வரை இருபது ஆண்டுகளாகியும் மீண்டும் மிதித்ததில்லை. வளர்ந்த மண்ணை பத்தாண்டுகளுக்குப் பின் மிதித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, பல மாற்றங்களுடன், தெரியாத முகங்களுடன் என்னுடன் ஒட்டாமல் இருந்தபோது ஏற்பட்ட வலி. இனி அந்த மண்ணை மிதிக்கவே மாட்டேன் என எடுத்த குழந்தை முடிவு.. அசைபோட வைத்த்து காரைக்கால் காற்று..