PDA

View Full Version : காரணம் யார்? - குறுங்கவிதை



PUTHUVAI PRABA
05-07-2012, 05:58 AM
உயிர் கொண்டு
உலவிய
ஒருவர்கூட
காரணமாகவில்லை
சித்தார்த்தன்
புத்தனாவதற்கு.


புதுவைப் பிரபா

தாமரை
05-07-2012, 06:20 AM
அப்படியானால் உயிரில்லை
இல்லவே இல்லை!!!

PUTHUVAI PRABA
05-07-2012, 10:25 AM
அப்படியானால் உயிரில்லை
இல்லவே இல்லை!!!

தாமரை என்ன சொல்ல வர்றாங்கனே புரியலையே!:mini023:

தாமரை
05-07-2012, 10:38 AM
சித்தார்த்தனை சிந்திக்கத் தூண்டியவர்கள் 3 பேர். 1. நோயாளி, 2. மூப்புடையவர் 3.பிணம். அங்கேயே இரு உயிர்கள் உண்டு.

உயிர் பற்றியச் சிந்தனைதான் சித்தார்த்தனை தேடலிலே தள்ளியது. அப்படி இருக்க உங்க வாதத்தை எப்படி எடுத்துக் கொள்ள?

சித்தார்த்தான் தேடினான்
உயிர்களின் வாதைக்கு விடுதலை?
யாருக்கு?
உயிர்களுக்காக

ஆக
முன் காரணமும் உயிர்தான் (காரியம் செய்யத் தூண்டுபவை முன் காரணம்)
பின் காரணமும் உயிர்தான் (காரியத்தின் பலனைப் பெறுபவை பின் காரணம்)

அதாவது

எதனால்
எதற்காக

இரண்டு கேள்விக்கும் பதில் உயிர், உயிரின் துன்பம் என்றிருக்கும்பொழுது

ஒரு உயிரும் காரணமில்லை என்பது - முழு பூசணிக்காய் சோற்றில்.

PUTHUVAI PRABA
06-07-2012, 02:42 AM
உயிர் பற்றியச் சிந்தனையை சித்தார்த்தன்க்குள் உண்டாக்கியது பிணம்தான் என்பதென் பார்வை.
உயிர் கொண்டு உலவிய புத்தன் பின் பலரின் ஞானத்திற்கு காரணமாயிருந்தான் என்பதைப்போல்... அவனுக்கு காரணமாயிருந்தது பிணமல்லவா?

தாமரை
06-07-2012, 02:52 AM
புத்தன் உயிர் பற்றிச் சிந்திக்கலை. துன்பம் பற்றியே சிந்தித்தான். அதனால்தான்ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தனின் அடிப்படைக் கொள்கை. உயிர் பற்றி என்றால் மரணத்தைப் பற்றி அல்லவா பேசியிருக்க வேண்டும். துன்பத்தைப் பற்றி எப்படிப் பேசுவார்?

PUTHUVAI PRABA
06-07-2012, 04:39 AM
துன்பம் பற்றி சிந்தித்தான்.உண்மைதான்.ஆனால் அந்த சிந்தனையை தோற்றுவித்தது என்கிற முறையில் அந்த பிணத்திற்கு பெரும்பங்குண்டு என்பதை அறவே மறுக்கமுடியாது அல்லவா?

தாமரை
06-07-2012, 04:51 AM
ஆனால் சிறுபங்கும் வேறு யாருக்கும் இல்லை எனச் சொல்லக் கூடாதல்லவா?

PUTHUVAI PRABA
06-07-2012, 04:58 AM
பார்வை மாறுபாடுதான் கருத்துவேறுபாட்டிற்கு காரணம் என்று கருதுகிறேன்.

aasaiajiith
06-07-2012, 05:04 AM
எண்ணங்களும் நன்றே , கருத்துக்களும் நன்றே
கண்ணோட்டம் தான் மாறுபடுகின்றது ...!

PUTHUVAI PRABA
06-07-2012, 05:06 AM
:mini023::aetsch013::sprachlos020::lachen001:

தாமரை
06-07-2012, 05:26 AM
உண்மைதான்..

நீங்கள் சொல்ல நினைத்தது

உயிர்த் துன்பம் பற்றிய சிந்தனையை தோற்றுவித்ததில் பிணத்திற்கு பெரும்பங்குண்டு

நீங்கள் சொல்லியது

உயிர்த் துன்பம் பற்றியச் சிந்தனையை உயிருள்ள எதுவுமே தூண்டவில்லை.

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை என்பது உங்கள் பார்வை
உண்டு என்பது என்பார்வை

அவ்வளவுதான்.

PUTHUVAI PRABA
06-07-2012, 10:10 PM
நீங்கள் சொல்ல நினைத்தது

உயிர்த் துன்பம் பற்றிய சிந்தனையை தோற்றுவித்ததில் பிணத்திற்கு பெரும்பங்குண்டு

நீங்கள் சொல்லியது
உயிர்த் துன்பம் பற்றியச் சிந்தனையை உயிருள்ள எதுவுமே தூண்டவில்லை.

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை என்பது உங்கள் பார்வை
உண்டு என்பது என்பார்வை

அவ்வளவுதான்.


உண்மைதான்..