PDA

View Full Version : சட்டத்தின் படி ....-சுவாரஷ்யமான தொடர்கதை

otakoothan
05-07-2012, 04:47 AM
வணக்கம். நீங்கள் எதிர்பார்த்தபடி...
சுவாரஷ்யமான தொடர்கதை ஒன்றை எழுதலாம் என்றிருக்கிறேன். . இனி வார வாரம் திங்கள் கிழமையில் தொடர்கதை வெளியாகும்.
படியுங்கள். ரசியுங்கள். சுவாரஷ்யத்துக்கு நான் கேரண்டி.

வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் முகவரியில்,
அண்டை மாநில மொழி,வடக்கத்திய மொழி அந்நிய மொழி அதனை மொழி பேசுபவர்களையும் மும்மொழிக்கு சொந்தமாகிய இன்மையான தமிழில்,
"அன்புள்ள பயணிகளின் கனிவான கவனத்திற்கு ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிற நீலகிரி எக்ஸ்பிரஸ் தடம் என் 1 இல் வந்து கொண்டிருக்கிறது".
இதோ வந்து விட்டது.
2 நிமிட ஹோரன் சத்தம்.....
அத்தனை பயணிகளையும் சுமந்து வந்த களைப்புடன் நீண்ட பெருமூச்சு விட்டு, நின்றது அந்த நீண்ட ரயில்.
அப்பப்பா எதனை ஆராவாரம்...எத்தனை விதமான மனிதர்கள்...
எண்ணற்ற செய்திதாளின் பெயர்களை கூறியபடி விற்பனை செய்து கொண்டிருந்தா ஒரு ஆள்.
டி, காபி ......
"சார் கூலி.....".
"போர்டர் இங்க வாப்பா...."- இது போன்ற சத்தங்கள்.
வந்தவரை வரவேற்க அலைபாயும் கண்களுடன் கையில் செல்போனுடன் ஒரு இளம்பெண்...
"இல்லப்பா அவ்ளோ எல்லாம் முடியாது."..
"சார் போட்டு கொடுங்க"...
"ஓகே..பா நான் ட்ரை பண்றேன்".
இதில் குழந்தைகளின் குறும்புகள் வேறு...
"அம்மா...டூ பாத்ரூம்...முதுகில் ரெண்டு சாத்து...மூதேவி...train லையே போக வேண்டியது தான...கொஞ்சம் பொறுத்துக்கோ".
"எங்க எல்லாத்தையும் எடுத்திடிங்களா? அந்த சூட்கேசுலதான் எங்க மாமாவுக்கும், தங்கச்சிக்கும் வாங்கி வச்ச புடவையும் சுடிதாரையும் வச்சிருக்கேன், அந்த பேக் எங்க?" "ஏய்ய் ..அது மேல தாண்டி உக்காந்திருக்க..".
"சார் சூட்கேஸ் ரிப்பேர்."...
"பாத்தியாடி அவன் conform பண்ணிட்டான்..சூட்கேஸ் ஒடஞ்சிருச்சுன்னு."..
இப்படி ஆவல், நகைச்சுவை, எரிச்சல், தவிப்பு, நம்பிக்கை, திகைப்பு, என், எதற்கு, எப்படி விடை தெரியாமல் பல முகங்கள் சென்னை சென்டரல் நிலையத்தில், அனைத்து பயணிகளும் ப்ளு மௌண்டன் லிருந்து இறங்கி விட்டார்கள்.
ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
என்ன நடந்தது?....அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

இராஜிசங்கர்
05-07-2012, 05:08 AM

நல்ல தொடக்கம்..இனிப்பு எடுத்துக்கோங்க ஓட்டக்கூத்தன் நண்பரே!! https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcRLvp1nL3AurnbMZ0mGLjxs7GpO9fXpQX12J8TZKSa6V3kwPud8

otakoothan
05-07-2012, 05:45 AM
நன்றி நண்பரே