PDA

View Full Version : மதுமேகம்



M.Jagadeesan
05-07-2012, 01:10 AM
லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும் முன்பிருக்க
பிட்டு ருசிக்க முடியலையே!-கட்டுடலை
மெல்லக் கரைக்கின்ற சர்க்கரை நோயென்னும்
தொல்லைக்கு என்செய்வேன் கூறு.

தாமரை
05-07-2012, 04:30 AM
அதான் கரை.. கரையென கரைகிறதே...

நாம கரைக்காட்டி அது கரைக்க ஆரம்பிச்சிடுது..

ராஜா
24-07-2012, 08:44 AM
சனியன் சக்கரை குறித்த இனிய வெண்பா அய்யா..!

அனுபவக்கவிகள் ஆழம் மிக்கவை..!

கீதம்
24-07-2012, 10:03 AM
இனிப்பை ருசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கு.

அதனால் ரசிக்கத்தக்க பா விளைகிறதே என்ற ஆனந்தம் எங்களுக்கு.

என்றென்றும் திகட்டாத இனிப்பான தமிழ் கரைந்திருக்கிறதே உங்கள் கவியில். பாராட்டுகள் ஐயா.

vasikaran.g
29-07-2012, 08:18 AM
இனிப்பில் களிப்பு ,
சர்க்காரை வந்தாலும்
சலிக்காது மது மேகம் .

M.Jagadeesan
29-07-2012, 08:42 AM
தாமரை, ராஜா, கீதம், வசீகரன் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி!

ஆதி
29-07-2012, 08:50 AM
முக்கனிக்தீண் டாமல் முழுவயிறு உண்ணாமல்
பக்கத்தில் சோறுவரின் பாவமென்று கூறிநித்தம்
பத்திய சாப்பாட்டை பக்குவமாய் பேணிமாறும்
புத்தியை கட்டுதலே வாழ்வு

வாழ்த்துக்கள் ஐயா

kulakkottan
31-07-2012, 05:12 AM
உங்கள் கவியை வாசிக்கையில் சக்கரை வியாதி என்னையும் பற்றிகொள்ளுமோ என பயம்!
அவ்வளவு இனிக்கிறது உங்கள் கவிதை !

M.Jagadeesan
31-07-2012, 05:22 AM
முக்கனிக்தீண் டாமல் முழுவயிறு உண்ணாமல்
பக்கத்தில் சோறுவரின் பாவமென்று கூறிநித்தம்
பத்திய சாப்பாட்டை பக்குவமாய் பேணிமாறும்
புத்தியை கட்டுதலே வாழ்வு

வாழ்த்துக்கள் ஐயா

தங்களின் அழகான கவிதைக்கு நன்றி ஆதன்!!

M.Jagadeesan
31-07-2012, 05:28 AM
உங்கள் கவியை வாசிக்கையில் சக்கரை வியாதி என்னையும் பற்றிகொள்ளுமோ என பயம்!
அவ்வளவு இனிக்கிறது உங்கள் கவிதை !

நன்றி ! குளக்கோட்டன்!

தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதன் காரணம் , இனிமையான தமிழ் மொழியை அவர்கள் பேசுவதுதான்.

அனுராகவன்
31-07-2012, 05:33 PM
சாப்பாட்டு பிரியன் போல....
அனுபவமான வரிகள்...

M.Jagadeesan
01-08-2012, 01:19 AM
நன்றி! அச்சலா!