PDA

View Full Version : தந்துவிடவா..?



thamizhkkaadhalan
04-07-2012, 01:24 AM
தலைப்புகளின்றித் தவிக்கின்றன, என் கவிதைகள்...

தந்துவிடவா, அவைகளுக்கு..?

தலைக்கிரீடமாய் உந்தன் பெயரை..!

aasaiajiith
04-07-2012, 05:20 AM
தலைப்புகளின்றித் தவிக்கின்றன, என் " காதல் " கவிதைகள் என்று காதலையும் இணைத்திருக்கலாம் !...


நல்ல வரிகள் !

வாழ்த்துக்கள் !

இராஜிசங்கர்
04-07-2012, 08:43 AM
தலைப்புகளின்றித் தவிக்கின்றன, என் கவிதைகள்...

தந்துவிடவா, அவைகளுக்கு..?

தலைக்கிரீடமாய் உந்தன் பெயரை..!

வரிகள் அருமை நண்பரே ...


"எந்தக் கவிதையும் உன்னை நினைத்து எழுதுவதில்லை
எழுதிய அனைத்திலும் நீ இல்லாமல் இருப்பதில்லை.."

கீதம்
04-07-2012, 11:19 PM
கருவானதும் நானே...

கவிதையென உருவானதும் நானே...

தலையாவதற்கு மட்டும் தடைவிதிப்பேனோ?

என்னைத் தலைக்கிரீடமாய்ச் சுமக்கும் கவிதைகளுக்கு

தலைக்கனம் மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உம் பொறுப்பு. ;)

என்றாளோ அவள்!

காதல் ரசனைக்கும் கவிரசனைக்கும் பாராட்டுகள் தமிழ்க்காதலன்.

thamizhkkaadhalan
05-07-2012, 01:31 AM
தமிழினை தம் எழுத்துக்களிலாவது அழியாமல் பாதுகாக்கும், எம் நண்பர்களுக்கும், கருத்துக்களை பதிவு செய்த தோழர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக...

தாமரை
05-07-2012, 04:27 AM
தமிழ்..

நல்ல தலைப்புதான்

அப்ப நீங்க

மொழிபெயர்ப்பு கவிதைகளா எழுதறீங்க?

--------------------------------------------------

உங்க பெயர் தமிழ்காதலனாச்சே அதனால கேட்டேன்.. (தலைப்புல மட்டும் அவ பேருன்னா???)

thamizhkkaadhalan
10-07-2012, 05:40 PM
தமிழ்..

நல்ல தலைப்புதான்

அப்ப நீங்க

மொழிபெயர்ப்பு கவிதைகளா எழுதறீங்க?

--------------------------------------------------

உங்க பெயர் தமிழ்காதலனாச்சே அதனால கேட்டேன்.. (தலைப்புல மட்டும் அவ பேருன்னா???)


இவை மொழிபெயர்ப்புகளல்ல...
என் கனவுகளிலிருந்து களவாடப்பட்ட நினைவுகளை, தமிழால் வார்க்கும் எழுத்துக்களின் அணிவகுப்பே...

தலைப்புகள் மட்டுமல்ல... என் தவிப்புகளும் அவள்(தமிழ்) பெயராலே...

சிவா.ஜி
10-07-2012, 06:01 PM
கவிதைகளை உருவாக்கும் காரணி....காதலி....தலையும் அவளே....உடலும் அவளே....கவிதையே அவளானதால்....அவளின் பெயர் தலைமை தாங்கட்டும்.

அழகான வரிகள். வாழ்த்துக்கள் தமிழ்காதலன்.

கலைவேந்தன்
10-07-2012, 06:14 PM
அருமையான முயற்சி நண்பரே.. பாராட்டுகள்..!

HEMA BALAJI
11-07-2012, 01:43 PM
கவிதை நன்று. வாழ்த்துக்கள் தமிழ்க்காதலன்...