PDA

View Full Version : மறுபிறப்பு உண்டென்றால்...



thamizhkkaadhalan
04-07-2012, 01:21 AM
மானிடனாய்ப் பிறந்த எனக்கு,
மறுபிறப்பு உண்டென்றால்...

உன் நுதல் முதல் இதழ் வரை ஊஞ்சல் கட்டும்,
ஒற்றைத் தலை முடியாய்ப் பிறக்க வேண்டுமடி..!

கீதம்
14-08-2012, 05:29 AM
எதற்கு இத்தனைக் குறுகிய ஆசை?

இடையுரசி உறவாடுபவற்றுள் ஒன்றெனப் பிறந்தால் இன்னும் சுகமாமே....

அழகிய ரசனைக்குப் பாராட்டுகள்.

ராஜா
14-08-2012, 06:08 AM
தமிழ்க்காதலனின் ஆசை வெகு அழகு..

கீதத்தின் மறுமொழி, மிகக் குறும்பு..!