PDA

View Full Version : பூவா..? தலையா..?



thamizhkkaadhalan
04-07-2012, 01:09 AM
'தலை' என்று சொல்லி
நாணயத்தைச் சுண்டிவிட்டாய்...

அது விரல் பிரிந்து
விரதம் கலைந்து
காற்றைக்கிழித்து
கவனம் ஈர்த்து
கடைசியில் விழுந்தேவிட்டது,
உன்காலடியில்,
என்னைப் போல..!

கீழே குனிந்து விழுந்தது தலை என்றாய்...

நாணயம் உன் கண்களை பார்த்துச்
சொன்னது..,
விழுந்தது, உன் கூந்தல் இழந்துவிட்ட "பூ" என்று..!

கீதம்
14-08-2012, 05:22 AM
நாநயம் இல்லாத நாணயம் போலும்.

சுண்டிய நாணயமது சுழன்றுவிழும் அழகையும் கவியாக்கிய வரிகள் அழகு.

பாராட்டுகள் தமிழ்க்காதலன்.