PDA

View Full Version : நிழல் நிஜத்தைவிட நீளம்



chezhian
07-04-2003, 09:08 PM
நிழல் நிஜத்தைவிட நீளம்

அரிதாரம் முன்னே
அம்மண முகம்

அலங்காரப் பொய் முன்னே
தயங்கி வரும் உண்மை

அலட்டும் அதிகாரம் முன்
கைகட்டி பொதுநலம்

அவசரமான உலகம்
தகிக்கும் நிஜத்தைவிட
கற்பனை நிழலருகே
கூட்டம் அதிகம்தான்......

இளசு
08-04-2003, 07:57 AM
நன்று செழியனே

உண்மை தயங்கி தயங்கி வெளியே புறப்படுவதற்குள்
பொய் பெரிய அலங்காரத்துடன் ஊர்கோலமே முடித்து திரும்பிவிடும்...(யாரோ)

poo
08-04-2003, 02:09 PM
நிஜத்தை அழகாய் சொன்னீர்... பாராட்டுக்கள் செழியன்!!

karikaalan
08-04-2003, 02:52 PM
செழியன் ஜி!

வாழ்த்துக்கள். நிழல்தான் சிலசமயங்களில் நிஜமாகிவிடுகிறது.

===கரிகாலன்