PDA

View Full Version : அவர் சொன்னபடியேசொ.ஞானசம்பந்தன்
30-06-2012, 06:49 AM
சூடாமணி 50 வயதுப் பெண்மணி . பருத்த உருவம் ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை . ஆன்மிகப் பழமாகிய அவர் பக்திப் பனுவல்களைப் பரவசத்துடன் பாராயணம் செய்வார் . ஆசாரம் , அனுஷ்டானம் , நோன்பு , சம்பிரதாயம் எல்லாம் தீவிரமாய்க் கடைப்பிடிப்பார் . நல்ல நாள் பார்த்துத்தான் முக்கிய செயல்களில் ஈடுபடுவார் .சோதிடத்தில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவர் .

ஒரே மகன் , மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி , மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர் .

துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது ? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று ; வியர்த்துக் கொட்டியது ..

இதயத் தாக்கு ! மூவரும் புரிந்துகொண்டனர் .

" கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன் "

மகன் பரபரத்தான் . அமைதிப் படுத்தினார் தாயார் :

" தம்பி , நேற்று அஷ்டமி , இன்று நவமி . ரொம்பக் கெட்ட நாளுப்பா . இப்போது வேண்டாம் ; விடிந்ததும் போவோம் ".

" ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா ; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க "

கெஞ்சினான் . எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும் .

அவர் மசியவில்லை :

" பயப்படாதீங்க . ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன் . பகவான் கைவிடமாட்டார் . பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம் " என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர் .எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

முதல் தாக்குதல்தானே ? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது .

" ஐயோ ! " அலறினார் அம்மா ; அவ்வளவுதான் , அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர் .

================================================================
.

கீதம்
30-06-2012, 09:23 AM
நல்ல மனமிருந்தும், நாள் கிழமையின் மீது கொண்ட நம்பிக்கையால் தம் வாழ்வை இழந்தாரே அப்பெண்மணி!

தக்க முதலுதவியும் சிகிச்சையும் எடுத்திருந்தால் இன்னும் சில காலம் (சாதகப்படி இன்னும் இருபது வருடம்) வாழ்ந்திருக்கலாமே.

சிலர் அலட்சியத்தால் ஆபத்தை உணராமல் இருப்பார்கள். இவரோ சோதிடத்தின் மேலுள்ள அதீத நம்பிக்கையால் ஆபத்தை அலட்சியப்படுத்திவிட்டார்.

நல்ல கருத்துள்ள கதைக்குப் பாராட்டு.

சொ.ஞானசம்பந்தன்
01-07-2012, 07:21 AM

உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிழைத்திருப்பார் என்று உறுதியாய்ச் சொல்லமுடியாவிட்டாலும் முயன்று பார்த்திருக்கவேண்டும் ; சிலர் தேவையின்றி நாள் நட்சத்திரம் பார்த்து தமக்கே கேடு சூழ்கின்றனர் . பாராட்டுக்கு மிக்க நன்றி .

சிவா.ஜி
01-07-2012, 08:01 AM
இப்படித்தான் சில பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை தவறல்ல....ஆனால்....கோல்டன் அவர் எனச் சொல்லப்படும், மாரடைப்பு வந்த பிறகான அந்த ஒரு மணி நேரத்துக்கு அஷ்டமி, நவமி பார்க்கக்கூடாது. அவரது நம்பிக்கையே அவரை சாய்த்துவிட்டதே. பாடம் சொல்லும் கதைக்கு பாராட்டுக்கள் ஐயா.

கலையரசி
01-07-2012, 11:47 AM
குறித்த நேரத்தில் சிகிச்சை எடுத்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புண்டு. புத்தாண்டு முதல் தினத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மறுப்பவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் தினத்தில் மருத்துவமனைக்குச் சென்றால் அந்த ஆண்டு முழுதும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுமாம். இது போன்ற மூடநம்பிக்கைகளால் உயிரிழந்தவர் எத்தனையோ பேர். நல்லதொரு விழிப்புணர்வு ஊட்டும் கதைக்குப் பாராட்டுக்கள்.

Keelai Naadaan
01-07-2012, 01:05 PM
நல்ல கருத்து. பாராட்டுக்கள் ஐயா.

அளவுக்கு அதிகமான கடவுள்-ஜோதிட நம்பிக்கை நல்லதல்ல, அதுவும் அவசர உடல் கேடு நேரத்தில்.

ஒரு சந்தேகம், ராமன் அவதரித்தது நவமியில், கிருஷ்ணன் அவதரித்தது அஷ்டமியில். அதை ஏன் கெட்ட நேரம் என்கிறார்கள்?

மதி
01-07-2012, 01:23 PM
நல்லதொரு கதை.. எல்லாவற்றுக்கும் நாளும் கிழமையும் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. தக்க சமயத்தில் செயல்படவேண்டும் என்ற கருத்துடன் அழகான கதை

சொ.ஞானசம்பந்தன்
02-07-2012, 03:00 PM
இப்படித்தான் சில பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை தவறல்ல....ஆனால்....கோல்டன் அவர் எனச் சொல்லப்படும், மாரடைப்பு வந்த பிறகான அந்த ஒரு மணி நேரத்துக்கு அஷ்டமி, நவமி பார்க்கக்கூடாது. அவரது நம்பிக்கையே அவரை சாய்த்துவிட்டதே. பாடம் சொல்லும் கதைக்கு பாராட்டுக்கள் ஐயா.

பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
02-07-2012, 03:04 PM
குறித்த நேரத்தில் சிகிச்சை எடுத்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புண்டு. புத்தாண்டு முதல் தினத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மறுப்பவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் தினத்தில் மருத்துவமனைக்குச் சென்றால் அந்த ஆண்டு முழுதும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுமாம். இது போன்ற மூடநம்பிக்கைகளால் உயிரிழந்தவர் எத்தனையோ பேர். நல்லதொரு விழிப்புணர்வு ஊட்டும் கதைக்குப் பாராட்டுக்கள்.
எத்தனையோ மூட நம்பிக்கைகள் நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன . மக்கள் சிந்திக்கக் கற்கவேண்டும் . பாராட்டுக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
02-07-2012, 03:06 PM
நல்ல கருத்து. பாராட்டுக்கள் ஐயா.

அளவுக்கு அதிகமான கடவுள்-ஜோதிட நம்பிக்கை நல்லதல்ல, அதுவும் அவசர உடல் கேடு நேரத்தில்.

ஒரு சந்தேகம், ராமன் அவதரித்தது நவமியில், கிருஷ்ணன் அவதரித்தது அஷ்டமியில். அதை ஏன் கெட்ட நேரம் என்கிறார்கள்?நல்ல வினா. எனக்கும் இந்த ஐயம் உண்டு . பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
02-07-2012, 03:08 PM
நல்லதொரு கதை.. எல்லாவற்றுக்கும் நாளும் கிழமையும் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. தக்க சமயத்தில் செயல்படவேண்டும் என்ற கருத்துடன் அழகான கதை

பாராட்டியதற்கு மிக்க நன்றி .