PDA

View Full Version : தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!!

கலைவேந்தன்
30-06-2012, 05:21 AM
http://1.bp.blogspot.com/_koLrQOsNMPc/TPci8t6Bi7I/AAAAAAAACJg/1P5q34pnuS4/s400/00034.jpg

தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!

நெஞ்சறிய பொய்பேசி என்னபலன் கண்டாய்
வஞ்சனைகள் எண்ணி நீயும் என்ன சுகம் கண்டாய்
கொஞ்சமெனும் இறைவனுக்கு அஞ்சிநட வென்பேன்
நஞ்சமது நமைக்கொல்லும் நன்கறிவாய் நண்பா..!!

நான்குபேர்கள் சொன்னதாலே யாவும்உண்மையாமோ
தீங்குபல எண்ணுவதால் தீட்சை பெறுவாயோ
ஈங்குவந்து அவதரித்தோர் மெய்யதனை வென்றார்
தாங்குமிந்த பூசுழலும் மெய்யிலது நண்பா..!!

பட்டறிந்து முன்னோர் சொன்ன பத்துவித மெய்கள்
நட்டமில்லை நாமுணர்ந்து நாளும்கடை கொண்டால்
சட்டதிட்ட மல்லநம்மை சரணடையச் செய்ய*
வட்டமிடும் நம்மனத்தின் சான்று பெரிதென்றோ..?

நட்புபேணில் அவ்விலக் கணமறிவாய் நன்றாய்
முட்புதராய் மண்டிநிற்கும் காழ்ப்புணர்வைக் கொல்வாய்
தட்பவெப்பம் கண்டுதானே மாவினமும் பெருக்கும்
நுட்பமதை நீயறிந்தால் நீயுயர்வாய் நண்பா..!!

சீற்றம்கொண்ட சிந்தனைகள் சீரழிக்கும் உன்னை
ஏற்றம்பெறும் வழியனைத்தும் ஏய்த்துவிடும் முன்னே
ஆற்றலென்ன வென்றபோதும் ஆர்மதிப்பர் உனையே
தூற்றலின்றி வேறுஏது தொடர்ந்துவரும் நண்பா..?

எந்தன் நெஞ்சில் ஏதுமில்லை என்றுகொள்ளு நீயும்
நொந்த மனம் தேற்றிநீயும் நோன்பில் மூழ்குவாயே
எந்தவிடம் உந்தன் நெஞ்சில் காயமாக்கும் என்றே
உந்தன் நெஞ்சைத் தேற்றிநீயும் தேறிடுவாய் நண்பா!!

கீதம்
30-06-2012, 09:09 AM
அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான அருமையான அறவுரைகள்.

மெய்யெது, பொய்யெது என்று பிரித்தறிய இயலாமை தீது, பிரித்தறிந்த பின்னும் பொய்வழிப் புகும் கயமை அதனினும் தீது.

குற்றங்களிலிருந்து விடுபட சட்டத்தின் துணை தேவையில்லை, மனசாட்சியின் துணையே தேவை என்னும் வரிகளில் இருக்கும் உண்மையை வெகுவாய் ரசித்தேன்.

அற்புதமான இப்புதிய கீதைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

ஜானகி
30-06-2012, 10:50 AM
கலியுகக் கண்ணனுக்குப் பாராட்டுக்கள் !

சிவா.ஜி
30-06-2012, 10:54 AM
இதை வாசித்ததும் பின்னூட்டமிட பலமுறை முயன்று இணையப் பிரச்சனையால் தாமதமாகிவிட்டது.

தூற்றுவார் தூற்றட்டும்....போற்றுவார் போற்றட்டும்...எல்லாமே கடந்து போகிறவை...தன் மனசாட்சிப் படி நடந்தால்...நன்மை எனச் சொல்லும் கருத்துக்கு வாழ்த்துக்கள் கலை. அழகான தமிழுக்கு வந்தனம்.

கலைவேந்தன்
30-06-2012, 11:08 AM
அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான அருமையான அறவுரைகள்.

மெய்யெது, பொய்யெது என்று பிரித்தறிய இயலாமை தீது, பிரித்தறிந்த பின்னும் பொய்வழிப் புகும் கயமை அதனினும் தீது.

குற்றங்களிலிருந்து விடுபட சட்டத்தின் துணை தேவையில்லை, மனசாட்சியின் துணையே தேவை என்னும் வரிகளில் இருக்கும் உண்மையை வெகுவாய் ரசித்தேன்.

அற்புதமான இப்புதிய கீதைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

கவிதையின் உட்பொருள் உணர்ந்து பின்னூட்டமிடுவது ஒரு கலை. அக்கலையில் தேர்ந்துள்ள கீதமுக்கு எனது நன்றிகள்.

vasikaran.g
30-06-2012, 11:18 AM
கவிதை
கரு !
செறிவு நிறைந்த வரிகள் ! நிறைவு நிறைய தந்த வரைவு !.

கலைவேந்தன்
30-06-2012, 11:33 AM
கலியுகக் கண்ணனுக்குப் பாராட்டுக்கள் !

கண்ணன் அளவுக்கு நான் இல்லை ஜானகி. ஒரு சாதாரண மனிதன். பட்டறிந்த உண்மைகளைப் பகிர்கின்றேன் கவிதையில்.

பாராட்டுக்கு நன்றி.

கலைவேந்தன்
30-06-2012, 11:35 AM
இதை வாசித்ததும் பின்னூட்டமிட பலமுறை முயன்று இணையப் பிரச்சனையால் தாமதமாகிவிட்டது.

தூற்றுவார் தூற்றட்டும்....போற்றுவார் போற்றட்டும்...எல்லாமே கடந்து போகிறவை...தன் மனசாட்சிப் படி நடந்தால்...நன்மை எனச் சொல்லும் கருத்துக்கு வாழ்த்துக்கள் கலை. அழகான தமிழுக்கு வந்தனம்.

உண்மைதான் சிவா. நடந்தவைகளைக் கட்டுப்படுத்தும் திறன் நமக்கு இல்லை. நடந்தவைகளிலிருந்து பாடம் கற்கப் போதுமான அறிவு இருந்தாலே போதும். பாராட்டுக்கு நன்றி நண்பனே.

கலைவேந்தன்
30-06-2012, 11:36 AM
கவிதை
கரு !
செறிவு நிறைந்த வரிகள் ! நிறைவு நிறைய தந்த வரைவு !.

அழகான பாராட்டுக்கு நன்றி வசீகரன்.