PDA

View Full Version : எந்தன் பார்வையில்...



thamizhkkaadhalan
29-06-2012, 08:02 AM
காதல்...


பூமியின் பூச்செடிகளுக்குப் புன்னகை ஊற்றிக்கொண்டிருப்பதும் அதுதான்...


கல்லறைச் செடிகளுக்குக் கண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பதும் அதுதான்...


சாதி மதங்களை எல்லாம் சங்கிலியால்

பிணைப்பதுவும் அதுதான்...


போதி மரங்களை எல்லாம் பொறுமையாய்ப்

புதைப்பதுவும் அதுதான்...



காதல்...


சில கண்களுக்குக் கடவுள்...

சில கண்களுக்குக் கற்சிலை...


சிலருக்கு கார்வானில் ஓடும் வெள்ளை நிலா...

சிலருக்கு வெள்ளை நிலவை மூடும் கருப்பு வானம்...


எது எப்படியோ...

எந்தன் பார்வையில்,


காதல்...

இதயம் அழுது, இரத்தமாய்ச் சிந்தும் கண்ணீர்த்துளிகளாயினும்...

அந்த இதயத்தின் வலிகளை

சற்றே தீர்க்கும் ஒற்றை மருந்து..!

சிவா.ஜி
29-06-2012, 08:37 AM
காதலின் பரிமாணம் சொல்லும் அழகிய கவிதை. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தமிழ்காதலன்.

(எழுத்துப் பிழைகள் கவிதையின் சிறப்பை சற்றே குறைக்கின்றன.. ”கற்ச்சிலை” ற் க்குப் பிறகு க் வராது மேலும் இதயத்தின் வலிகளை என்றிருக்க வேண்டும்)

thamizhkkaadhalan
29-06-2012, 06:22 PM
பிழைகளைத் திருத்த உதவியதற்கு நன்றி தோழரே...

கீதம்
30-06-2012, 01:30 AM
ஓராயிரம் துயரங்களுக்கும் ஒற்றை மருந்தாய்க் காதல்!

சஞ்சீவி மூலிகையென சகலரோக நிவாரணியாய்க் காதல்!

காதல் மனங்களில் கவிதையெனவும், கவிமனங்களில் காதலெனவும் வெளிப்படும் அதிசயம்!

இங்கே... தமிழ்க்காதலரின் பார்வையின் அசத்தும் காதல்!

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

பென்ஸ்
02-07-2012, 08:16 AM
யதார்த்ததை தன் துயரங்களால் மட்டுமே வடிக்கும்
இந்த மானிடத்தில்...
காதல் ஒரு யதார்த்தமான விஷயம் தான்...

வலியையும், இன்பத்தையும் கொடுக்காத பொருளுக்கு
இந்த உலகில் இந்தனை மரியாதை இருக்கிறதா என்ன...???

மன்றத்தில் ஆதவன், தாமரை போன்றோர் எழுதிய
"கவிதை எழுதுவது எப்படி" திரிகள் உள்ளன...
படித்து பயன் பெறலாமே...???

thamizhkkaadhalan
10-07-2012, 05:53 PM
யதார்த்ததை தன் துயரங்களால் மட்டுமே வடிக்கும்
இந்த மானிடத்தில்...
காதல் ஒரு யதார்த்தமான விஷயம் தான்...

வலியையும், இன்பத்தையும் கொடுக்காத பொருளுக்கு
இந்த உலகில் இந்தனை மரியாதை இருக்கிறதா என்ன...???

மன்றத்தில் ஆதவன், தாமரை போன்றோர் எழுதிய
"கவிதை எழுதுவது எப்படி" திரிகள் உள்ளன...
படித்து பயன் பெறலாமே...???

மிக்க நன்றி சகோதரரே... கவிதை எழுத முயற்சிக்கிறேன்...