PDA

View Full Version : பேனர் -புதுக்கவிதை



PUTHUVAI PRABA
29-06-2012, 06:57 AM
தற்போது-
அனேக விசேஷங்களையும்
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது
"பேனர்"

மணமகளே இல்லாமல் கூட
திருமணம் நடக்கும்
பேனர் இல்லாமல்?

பிரபலங்களின்
பிறந்தநாள் விழா
தொழிலதிபர் வீட்டு
பூப்பூ நீராட்டு விழா
காதணி விழா-
குடிபுகு விழா-
எல்லாவற்றிற்கும்
பிரமாண்டமான பேனர்கள்

ஏழு- பதினாறு- முப்பதாம் நாள்
துக்கத்திற்கும்
கண்ணீர்துளி சொட்டும்
கருப்பு வெள்ளை பேனர்கள்

அடச்சீ!
ஒரே ஒரு
சடங்கிற்குத்தான்
இன்னும் யாரும்
பேனர்வைக்கத்
துணியவில்லை

ஆனால்...
ஆடம்பரத்தின்
அடையாளமாக
விளம்பர மோகத்தின்
வெளிப்பாடாக
விளங்கும் பேனர்களின்
மீதான ஆத்திரம்
அடங்கிப்போகிறது-
ஆர்ப்பாட்டமில்லாமல் அது
ஓட்டைக்குடிசைகளுக்கு
திரையாகிடும்போதும்
ஏழைக் குளியலறைக்கு
சுவராகிடும்போதும்.


புதுவைப்பிரபா-

தாமரை
29-06-2012, 07:32 AM
ஒரு விஷயத்தின் இரு பக்கங்களையும் பார்க்கும் பார்வை பிடிச்சிருக்கு.

இன்னும் சில பக்கங்களையும் பார்த்தால் முழுமையாக இருந்திருக்கும்.

1. எங்களுக்கெல்லாம் யாருங்க பேனர் வைக்கிறாங்க.. நாங்கல்லாம் எப்ப இப்படி தெருவில நிக்கறது? அதனால விழான்னு சொல்லி நாங்களே வச்சுக்க வேண்டியதுதான்

2. அந்த பேனர் செய்யறதால சில பேர் பசி தீருது

இப்படி இன்னும் கோணங்கள் இருக்கு. ஆசைக்கு பேனர் வச்சுக்கறதும், ஆடம்பரத்திற்கு பேனர் வக்கிறதும், காக்கா பிடிக்க பேனர் வைக்கறதும், காறிதுப்ப பேனர் வக்கிறதும் இப்படி பேனர் வைக்கிறதில பலப்பல வித்தியாசங்கள் இருக்கு. குழி இருக்கிறது பார்த்துச் செல்லவும்னு பேனர் வச்சா அதைப் பார்த்துகிட்டே குழியில் விழறவங்களும் உண்டு..

நாடோடிகள் படத்தில் வருகிற மாதிரி - எதுக்கெடுத்தாலும் பேனர் வச்சாலும் தப்பில்லை. அது எதையும் கெடுக்காம பேனர் வச்சா சரி.

சிவா.ஜி
29-06-2012, 08:51 AM
பேனரில்லா முச்சந்தியில்லை, சாலைகளில்லை எனும் நிலையாகிவிட்டது. பேனர்களைப் பார்க்கும்போது ஏற்படும் எரிச்சல் அதன் பலதரப்பட்ட உபயோகங்களால் அடங்கிப் போகிறது என்ற பார்வை ரசிக்க வைக்கிறது.

வித்தியாசமான எண்ணத்துடனிருக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள் பிரபா.

jayanth
30-06-2012, 04:20 AM
வித்தியாசமான கவிதைக்கு பாராட்டுக்கள் .

aasaiajiith
30-06-2012, 05:15 AM
வாழ்த்துக்கள் பிரபா !

vasikaran.g
30-06-2012, 11:29 AM
பேனர்
சிலருக்கு
ஹானர் !
பலருக்கு
உணவு
கொடுக்கும்
ஓனர் !
நாகரீகத்தின்
உச்சம்
என்று
எண்ணும்
உயர்த்தட்டின்
கோணல்
எண்ணம் !
கவிதை நன்று.

PUTHUVAI PRABA
01-07-2012, 02:04 AM
கவிதை முயற்சியை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்திய உறவுகள்...தாமரை, சிவா.ஜி, ஆசை அஜித், ஜெயந்த், வசிகரன் ஆகியோருக்கு நன்றி! நன்றி!

M.Jagadeesan
01-07-2012, 02:12 AM
உங்களுடைய வித்தியாசமான சிந்தனைகளே , உங்கள் கவிதையின் வெற்றிக்குக் காரணம். வாழ்த்துக்கள்.

Keelai Naadaan
01-07-2012, 05:18 AM
நல்ல கவிதை...பாராட்டுக்கள்

சுய விளம்பரங்களை எல்லோரும் விரும்புகிறார்கள், அல்லது அதனால் தனக்கு மதிப்பு ஏற்படுவதாக நினைக்கிறார்கள். வைத்துக்கொள்ளட்டும்.

பொது இடங்களில் பேனர் வைப்பவர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடனோ அல்லது ஓரிரு நாளிலோ எடுத்து விட்டால் நல்லது.
பல இடங்களில் மாத கணக்கில் கடைகளை காட்சிகளை மறைத்து கொண்டிருக்கிறது.

PUTHUVAI PRABA
01-07-2012, 02:16 PM
உங்களுடைய வித்தியாசமான சிந்தனைகளே , உங்கள் கவிதையின் வெற்றிக்குக் காரணம். வாழ்த்துக்கள்.


நல்ல கவிதை...பாராட்டுக்கள்

தங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜகதீசன் சார்..கீழைநாடன் சார்...