PDA

View Full Version : பெருங்காயம்......



ravikrishnan
27-06-2012, 10:34 AM
பெருங்காயம்
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/165994_10151053508911388_468906927_n.jpg

பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது.

வரலாறு:

திபெத் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று என்று அழைக்கப்படுகிறது.மருத்துவக் குணங்கள்:

நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.
காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது.
தசைகளுக்கு பலம் கொடுக்கும்,
சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது.
தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது.
மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
நன்றி:இணையம்

jayanth
27-06-2012, 06:12 PM
தகவலுக்கு நன்றி ரவி...

கீதம்
28-06-2012, 06:23 AM
பெருங்காயம் எப்படி எதிலிருந்து கிடைக்கிறது என்று இதுவரை யோசித்ததே இல்லை. தகவலுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

சிவா.ஜி
28-06-2012, 07:04 AM
தங்கை கீதம் சொன்னதைப்போல பெருங்காயத்தின் வரலாறு தெரியாமலேயே சுவைத்துக்கொண்டிருந்தேன். இப்போது தெரிந்துகொண்டு சுவைப்பேன். தகவலுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.