PDA

View Full Version : சென்னை அண்ணா மேம்பாலத்தில்....



ravikrishnan
27-06-2012, 10:21 AM
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகன ஓட்டுனரின் இருக்கை கழன்றதால் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த்தாக கூறப் படுகிறது
ஆறு நபர்கள் கவலைக்கிடம் - கடைசித்தகவல்.
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/540991_394666573925472_994357958_n.jpg
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/282889_468914113137165_1222989290_n.jpg
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/539757_10150923206063303_974523975_n.jpg