PDA

View Full Version : ஆத்திரக்காரனுக்கு....குறுங்கதை



PUTHUVAI PRABA
27-06-2012, 12:38 AM
திண்டிவனம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் சடகோபன். வேகத்தை ரசித்தபடியே முன்சீட்டில் தொழிலதிபர் பார்த்தீபன் பயணித்துக்கொண்டிருந்தார்.

கார் தீவனூரை நெருங்கியபோது, திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார். சடகோபன் சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கää பார்த்தீபன் பதறியடித்துக்கொண்டு " யோவ் ! யோவ் ! மோதிடப்போறீயா. . . " என கூக்குரலிட்டார். எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் சடகோபன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார், பார்த்தீபன். அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

-புதுவைப்பிரபா -

கீதம்
27-06-2012, 05:44 AM
காரின் வேகத்தை மட்டுப்படுத்த, கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது ஒரு விபத்து.

ஆத்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்த நொடியே அரங்கேறியது ஒரு கொலைச்செயல்.

வேகக் கட்டுப்பாடு, சாலைப்பயணத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்துக்கும் தேவை.

குறுங்கதையில் பெரிய விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் புதுவை பிரபா.

தாமரை
27-06-2012, 06:34 AM
ஏறத்தாழ நவ்ஜோத் சிங் சித்து இதே மாதிரி ஒரு சின்ன சாலை விபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு மரணத்துக்கு காரணமாகி 3 வருட சிறை தண்டனை பெற்றார்(1988 ல் நடந்த சம்பவத்திற்கு தீர்ப்பு 2006 ல் வழங்கப் பட்டது.) அவர் தமது எம்.பி பதவியை அதனால் இராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

உடனே அவர் உச்ச நீதி மன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்ல 2007 ஜனவரியில் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவர் 2007 தேர்தலிலும் போட்டியிட்டு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

இந்தக் கதை இப்படி உண்மைச் சம்பவமாகவே இருந்தாலும் கோர்ட்டு கேஸூன்னு அலையப் போறது சடகோபனா பார்த்தீபனா என்ற கவலையும் வருகிறது, யதார்த்த உலகத்தில்...

சிவா.ஜி
27-06-2012, 08:41 AM
தாமரை சொன்னதைப்போல அலையப்போவது சடகோபன் என்றாலும் காரின் உரிமையாளராய் பார்த்தீபனுக்கும் தலைவலி. ஆனால்....இந்த ஆத்திரத்தால் விளைந்தது கொலைப்பழி. மோட்டார் விகடனில் ஒரு விஷயம் சொல்லியிருந்தார்கள். சாலையில் வாகனம் ஓட்டும்போது இப்படி குறுக்கிடுபவர்கள், சாலைவிதிகளை மதிக்காமல் ஓட்டுபவர்கள் என எல்லோர் மீதும் கோபம் கொண்டால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் மீது கோபப்படாதீர்கள்...நிதானமாய் செயல்படுங்கள் என்று.

அதை பார்த்தீபன் கடைபிடித்திருந்தால்....இந்த வீணான மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். நல்ல செய்தி சொல்லும் கதைக்கு வாழ்த்துக்கள் பிரபா.

PUTHUVAI PRABA
27-06-2012, 10:07 PM
குறுங்கதையில் பெரிய விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் புதுவை பிரபா.


நல்ல செய்தி சொல்லும் கதைக்கு வாழ்த்துக்கள் பிரபா.

குறுங்கதையாயினும் அதை பெரிய மனதோடு பாராட்டியிருக்கிற கீதம், தாமரை ,சிவாஜி அவர்களுக்கு நன்றி .

உண்மையில்....எனக்கேற்பட்ட அனுபவத்தை மையமாககொண்டு எழுதப்பட்டதுதான் இக்கதை.... (ஆனால்...அரைவிடுதலுக்கு முன் வரை உண்மை...அதற்குப்பிறகு கற்பனை...)

Keelai Naadaan
28-06-2012, 04:39 PM
கோபத்தை அடக்குவது நல்லது.
சில வரிகளில் கதையை சொன்னாலும் சொல்ல வந்த கருத்து அவசியமானது. நன்று.

PUTHUVAI PRABA
29-06-2012, 06:50 AM
கோபத்தை அடக்குவது நல்லது.
சில வரிகளில் கதையை சொன்னாலும் சொல்ல வந்த கருத்து அவசியமானது. நன்று.

நன்றி சார்...

கலைவேந்தன்
18-07-2012, 01:54 PM
குறுங்கதையாயினும் படிப்பினை கூறுங்கதை..

கலையரசி
18-07-2012, 02:42 PM
ஆத்திரத்தில் அறிவை இழந்து விடாதீர்கள் என்ற படிப்பினையைத் தரும் கதை. பாராட்டுக்கள் பிரபா!

அனுராகவன்
04-08-2012, 10:50 PM
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு..கோபம் ஒரு கொலை செய்யவும் தயங்காது..
சின்ன கதை பெரிய விசியம்..
என் வாழ்த்துக்கள்...

அமரன்
16-08-2012, 09:25 PM
கருத்தில் கொள்ள வேண்டிய கருவுடன் கூடிய குறுங்கதை.

பார்த்தீபனின் செயல்களில் அவனுடைய ஆத்திரக் குணவியல்பு மட்டும் அல்ல, அதிகாரக் குணவியல்பும் வெளிப்படுகிறது.

நறுக் கதைக்கு பாராட்டு பிரபா.

M.Jagadeesan
17-08-2012, 06:03 AM
வேகம் விவேகமல்ல, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, போன்ற நீதிகளை குறுங்கதையில் எடுத்துச் சொன்ன புதுவைபிரபாவுக்குப் பாராட்டுக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 12:35 PM
அவசரகாரனுக்கு புத்தி மட்டு...தேவையா இது ..வண்டி ஓட்டி போனோமா சம்பளத்த வாங்குனோமான்னு இருக்கனும் வீரத்த காட்டுர எடமா இது...அருமை புதுவை பிரபா ..அப்புறம் பிரபா எதயாச்சும் மன்றத்துல தொலச்சா மட்டும் தான் வருவீங்களோ...