PDA

View Full Version : சட்டத்தின் படி- சுவாரஷ்யமான தொடர்கதைotakoothan
25-06-2012, 08:52 AM
வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் முகவரியில்,
அண்டை மாநில மொழி,வடக்கத்திய மொழி அந்நிய மொழி அதனை மொழி பேசுபவர்களையும் மும்மொழிக்கு சொந்தமாகிய இன்மையான தமிழில்,
"அன்புள்ள பயணிகளின் கனிவான கவனத்திற்கு ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிற நீலகிரி எக்ஸ்பிரஸ் தடம் என் 1 இல் வந்து கொண்டிருக்கிறது".
இதோ வந்து விட்டது.
2 நிமிட ஹோரன் சத்தம்.....
அத்தனை பயணிகளையும் சுமந்து வந்த களைப்புடன் நீண்ட பெருமூச்சு விட்டு, நின்றது அந்த நீண்ட ரயில்.
அப்பப்பா எதனை ஆராவாரம்...எத்தனை விதமான மனிதர்கள்...
எண்ணற்ற செய்திதாளின் பெயர்களை கூறியபடி விற்பனை செய்து கொண்டிருந்தா ஒரு ஆள்.
டி, காபி ......
"சார் கூலி.....".
"போர்டர் இங்க வாப்பா...."- இது போன்ற சத்தங்கள்.
வந்தவரை வரவேற்க அலைபாயும் கண்களுடன் கையில் செல்போனுடன் ஒரு இளம்பெண்...
"இல்லப்பா அவ்ளோ எல்லாம் முடியாது."..
"சார் போட்டு கொடுங்க"...
"ஓகே..பா நான் ட்ரை பண்றேன்".
இதில் குழந்தைகளின் குறும்புகள் வேறு...
"அம்மா...டூ பாத்ரூம்...முதுகில் ரெண்டு சாத்து...மூதேவி...train லையே போக வேண்டியது தான...கொஞ்சம் பொறுத்துக்கோ".
"எங்க எல்லாத்தையும் எடுத்திடிங்களா? அந்த சூட்கேசுலதான் எங்க மாமாவுக்கும், தங்கச்சிக்கும் வாங்கி வச்ச புடவையும் சுடிதாரையும் வச்சிருக்கேன், அந்த பேக் எங்க?" "ஏய்ய் ..அது மேல தாண்டி உக்காந்திருக்க..".
"சார் சூட்கேஸ் ரிப்பேர்."...
"பாத்தியாடி அவன் conform பண்ணிட்டான்..சூட்கேஸ் ஒடஞ்சிருச்சுன்னு."..
இப்படி ஆவல், நகைச்சுவை, எரிச்சல், தவிப்பு, நம்பிக்கை, திகைப்பு, என், எதற்கு, எப்படி விடை தெரியாமல் பல முகங்கள் சென்னை சென்டரல் நிலையத்தில், அனைத்து பயணிகளும் ப்ளு மௌண்டன் லிருந்து இறங்கி விட்டார்கள்.
ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
என்ன நடந்தது?.... காத்திருங்கள்

jayanth
25-06-2012, 11:04 AM
சுவராசியம்...தொடருங்கள்...

otakoothan
10-07-2012, 06:39 AM
சட்டத்தின் படி ....(2)

சென்ற வாரம்
ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

ராசாத்தி ராசாததி கதவைத திற. யேய் கதவைத் திற. ஏன படபடவென கதவைத் தட்டினான் வேலு.
ஏய் வேலு என்ன இன்னும் தெளியலையா? ச்சி இந்தாட சாவி. உன் பொண்டாட்டி குழந்தையை தூக்கிட்டு போயிட்டா..என்று வெறுப்புடன் சாவியை கொடுத்தார் பக்கத்து வீட்டு பார்வதி.

புதறி போன வேலு, அக்கா எங்கக்க போனா..? நாக்கு குழறியது.

“போடா…உன்னால அவளுக்கு நிம்மதியேப் போச்சுடா…ஒரு தடவையா ரெண்டு தடவையா? தினம் தினம் இப்படி பண்ணினா எவதாண்டா பொறுத்துக்குவா? அவளுக்கு என்னடா குறைச்சல் பாவம்டா அவ…”

அக்கா…இனிமேல் நான் சத்தியமா…என்று வேலு சொல்லுவதற்கு முன்..
“ஆமாண்டா நீயும் உன் சத்தியமும்…”

வேலு அழுகையுடன்” அக்கா சொல்லுக்கா..அவ எங்க போறன்னு சொன்னா?”

“ச் சீ…அழுகாதே.என் தம்பியா இருந்தா வெட்டியே போட்டிருப்பேன். ஏவ்வளவோ எடுத்துச சொன்னேன். இந்த குழந்தையையும், இனி வர குழந்தையையும் காப்பாத்தனும்னா நான் போயிதான்கா ஆகணும்ன்னு போயிட்டா”
ஏதோ நினைவு வந்தவளாக..”ஆங்…மெட்ராஸ்ல அவங்க ஒண்ணுவிட்ட அண்ணன்..அது ஓரு கடலுக்கு பக்கத்திலே கடை வெச்சிருக்கானாம்..அங்கே போறேன்னு சொன்னாள்”

ஆடி போன வேலு கதவை திறந்து..பையில் வேட்டி சட்டையை திணித்து, சாமி அலமாரியில் இருந்த கவரில் 200 ருபாய் குறைய 800 ருபாய் இருந்தது. ருhசாததி 200ருபாய் எடுத்து கொண்டதை நினைத்து தலையில் இடித்து கொண்டு இழுதான்.

கதவை சாத்திவிட்டு சாவியை பக்கத்து வீட்டு பார்வதியிடம் கொடுத்தான்.
“போடா போய் அவளை தேடி கூட்டிட்டு வர்ர வழியைப்பாரு”

ஓட்டமும் நடையுமாக திருப்பூர் ரயில் ;நிலையத்தை அடைந்தான்.
“சார் மெடராஸ் ரயில் எப்ப வரும்?”
“யோவ் மணி என்ன? அது போய் அரைமணி நேரமாகுது.”
தலையில் இடிவிழுந்தது போல் விக்கித்து நின்றவனைப் பார்த்து “என்ன பேய் அறைஞ்ச மாதிரி நிக்கற?
சுதாரித்து கொண்ட வேலு..”சார் மெட்ராஸ் எத்தனை மணிக்கு போய் சேரும்?”
“யோவ்..இது நம்ம நாட்டு ரயில். சரியான நேரத்திற்கு போகாது. சுமார் 5.30 லிருந்து 6 மணிக்குள் போய் சேரும்.”

“நன்றிய்யா” என்று வொல்லிக் கொண்டே லாரி ஸ்டேண்டை நோக்கி ஓடினான்.

சென்னை துறைமுகம் செல்ல பனியன் லோடுடன் லாரியின் டிரைவர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
http://1.bp.blogspot.com/-qpUc_1Z9vls/T-fuDX6owkI/AAAAAAAAAUI/_y5cfz2-wZA/s1600/Shasun1+copy.jpg

“அண்ணே மெட்ராஸ் போகுமான்னே? “
“இல்லை லண்டன் போகுது வர்ரியா?” ஏன்றார் எரிச்சலுடன்..
அப்போது அங்கு வந்தார் ஒருவர்..
“யோவ் இன்னுமா நீ கிளம்பல?”
கிளினர் இன்னும் வரல..வந்ததும் கிளம்ப வேண்டியதுதான் “

வேற டிரைவர் கிளினர போடச்சொல்லி இந்த மேனேசரை எத்தன தடைவ சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான். யோவ் இப்ப நீ கிளம்பறயா இல்ல வேற சிப்ட் ஆளுகள வர்ற சொல்லட்டா?


இதோ சார் கிளினர் வந்துட்டான். நாங்க கிளம்பறோம்.

“சார்…..”
வேலுவை பார்த்து எனைய்யா என்றார் டிரைவர்.

ஏன்னையும் ஏத்திட்டு போங்க சார்…தயவு செய்து…

சென்னையை நோக்கி லாரி புறப்பட்டது.

தன்னோட சொந்த கதையை டிரைவரிடம் புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.

தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.

மனைவி கிடைத்தாளா, இல்லையா?
தொடரும்….

இராஜிசங்கர்
10-07-2012, 06:56 AM
அருமை..தொடருங்கள் பாஸ்!!

கீதம்
10-07-2012, 08:42 AM
கண் கெட்ட பின்னே சூரியனைத் தேடுகிறான். இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்குமா? அல்லது நிரந்தர இருள்தானா? தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

otakoothan
11-07-2012, 05:40 AM
சென்ற வாரம்
தன்னோட சொந்த கதையை டிரைவரிடம் புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.
தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.அருகில் நெருங்கிய ரயில்வே ஊழியர் கதவை பலமாகத்தட்டி “என்ன ஓசி பயணமா? டிக்கட் வாங்கலியா? திடுக்கிட்டு எழுந்த ராசாத்தி…

இல்லை டிக்கெட் இருக்கு என்று படபடப்புடன் கூறினாள் ராசாத்தி.

“தோடா..எறங்கு வண்டி கூட்ஸு க்கு போகுது..”

“பீச்சுக்கு எப்படி போகணும்?

இதோடா…இன்னா மெட்ராசுக்கு புச்சா கொயந்தைபையனை கூட்டிகினு.. தோம்மா மெட்ராஸ் நல்லவிங்களும் கெட்டவிங்களும் கலந்த ஊரு. பீச்சுல யார பாக்கணும்?

எங்க அண்ணன் பீச்சுல கடை வெச்சிருக்காரு என்றாள் ராசாத்தி.
“அட்ரஸ் இருக்கா?

“இல்ல..காந்தி சிலைக்கு பக்கத்திலே”…..என்று பயம் கலந்த நடுக்கத்தோடு சொன்னாள் ராசாத்தி.

தன் மகன் அரவிந்தையையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்டரல் ஸ்டேசனை விட்டு வெளியே வந்தாள்.
இனம் புரியா கலக்கத்தோடு கண்களில் கண்ணீரோடு மகன் அரவிந்தை பார்த்தாள்.

‘அம்மா வலிக்குது ம்மா..அப்பா போட்ட சூடு ரொம்ப வலிக்குதம்மா”…என்றான் குழந்தை அரவிந்த்.

ராசாத்தி அழுதபடி மகனை முத்தமிட்டு ரோட்டோர கடையில் பையனுக்கு 4 இட்லி வாங்கி கொடுத்தாள்.

“அம்மா..உனக்கு…”
“பசியில்லை ப்பா.. நீ சாப்பிடு”..

கடைக்காரனிடம் “ஐயா ஆஸ்பத்திரி எங்க இருக்குது?”
எதிர்புறமுள்ள அரசு மருத்துவமனையைக் காட்டினான் அந்த கடைக்காரன்.

சீட்டு பெற்றுக்கொண்டு, ஞானி MD DCH என்ற பெயர் தாங்கிய அறைக்குள் மகனை அழைத்தபடி சென்றாள்

டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்தபின் “என்னம்மா இப்படி சூடு வைச்சுருக்கீங்க? குழந்தையின்னா குறும்பு பண்ணத்தான் செய்யும்..அதுக்குப்போயி இப்படியா பண்றது? ஆமா எந்த ஊரு?”

“திருப்பூ ரு ங்க..”
“திருப்பூ ரா?” என்று கேட்டபடி டாக்டர் ராசாத்தியை நிமிர்ந்து பார்த்தார் .
“நானும் திருப்பூ ர்க்காரன் தான் ..திருப்பூ ரில் எந்த பக்கம்?”
“தென்னம்பாளையமுங்க…”

“இங்கே எதற்கு வந்தீங்க?..” என டாக்டர் முடிப்பதற்குள்,
“எங்க அண்ணன் பீச்சுல கடைவெச்சுருக்காரு….”

“ஓ அவர பாக்கவா? பையன் காலையிலே ஏதாவது சாப்பிட்டானா? ஊசி போடணும்..”
“களிம்பு மருந்து மாத்திரை எல்லாம் எழுதியிருக்கேன் போய் வாங்கிக்க..கவலைப்படாதே” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.

ஆஸபத்திரியிலிருந்து வெளியே வந்தாள் ராசாத்தி…
பலரிடம் அண்ணன் இருக்கும் இடத்தைப் பற்றிய விசாரிப்பிற்குப் பின், டவுன்பஸ் ஏறினாள்.

“பீச்செல்லாம் எறங்கு”…கண்டக்டர் விசிலடித்தார்.

“அம்மா காந்தி தாத்தாம்மா…”
ம..; என்றாள்.


வருடத்தில் 3 முறை மட்டுமே நமக்கு காந்தியை தெரியும்.
அதோ உழைப்பாளர் சிலை…உழைப்பாளர்களுக்காக குரல் கொடுத்த ஏழையின் சிகரம் ஜீ வா .

அங்கே இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த ஜீவானந்தம் இருக்காரே..ஒரே ஒரு வேட்டி சட்டையை துவைத்துப் போட்டு, அது காயும் வரை இடுப்பில் துண்டுடன் இருந்தவரைக் கண்ட கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ஜீவாவுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கிக் கொடுத்தார்.அந்த எளிமையான தலைவனின் கல்லறை அன்று சிதிலமடைந்து காலி மது பாட்டில் கழிபிடமாக மாறிக் கிடக்கிறது. கம்யூ னிஸட் காரர்கள் இதை கண்டுகொள்வது போல் இல்லை. மேடையில் உரக்க பேசினால் மட்டும் போதாது..வளர்த்;த தலைவனை தலைமுறைக்கு நினைவு படுத்த வேண்டாமா? என்று வேதனையுடன் சொல்லி;க் கொண்டிருந்தார்.”

ஒவ்வொரு கடையாக விசாரித்தாள் ராசாத்தி,

அனுதாபத்தில் பதில், அனுசரனையாக பதில், மேலும கீழும் பார்த்து பதில், நையாண்டி நக்கல் பதில்,

கடைசியில் வந்த பதில்…
‘தெரியாதே..அவர் இல்லை..”

இந்த பதிலுக்காக மாலை 6 மணிவரை கால் கடுக்க குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

உழைப்பாளர் சிலை அடியே அமர்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.
பித்துபிடித்தவள் போல் குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள்.
http://3.bp.blogspot.com/-AHkd-tcFHxE/T-mPHIzptmI/AAAAAAAAAVE/k1duaT-V-II/s320/chennai+dairy.jpg

அப்பொழுது ராசாத்தி அருகே ஒரு சொகுசுக் கார் வந்து நின்றது.
“என்னம்மா ஏன் என்னாச்சு? ஏன் அழுவுற?” என்று மிடுக்காக இருந்த 50 வயது மதிக்கத்தகக ஒருவர் கேட்டார்.

தலைநிமிர்ந்த ராசாத்தி நிலைமையைச் சொன்னாள்.
“ஓ..அந்த ஆளா? அவன் என்கிட்டத்தான் வாட்ச் மேனா இருக்கான்.. காரில் ஏறு” என்று பின்கதவை திறந்து விட்டார்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நினைத்த ராசாத்தி..அவரை கையெடுத்துக் கும்பிட்டாள்.

பையனுடன் காரில் ஏறினாள்.
“டேய் தம்பி..முன் சீட்டுக்கு வா..அப்படியே மெட்ராசை வேடிக்கைப்பாரு..”

எதார்த்தமாக ராசாத்தி மகனை முன்சீட்டுக்கு அனுப்பினாள்.

அந்த ஆள் பையன் ஏறுவதற்கு வசதியாக முன் கதவைதிறந்துவிட்டு, அதே சமயம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார்.

திடீரென்று கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட் கதவைத் திறக்கும் நேரத்தில், தவறி விழுந்தது.

“அடடே..பிஸ்கட் விழுந்திருச்சே…தம்பி.. கீழே குனிஞ்சு அதை எடு…”
குழந்தை பிஸ்கட் எடுக்க சென்ற போது, கார் கதவு மூடியபடி விர்ரென்று புறப்பட்டது…

“அய்யா என் குழந்தை..வண்டியை நிறுத்துங்க..என்ற கத்தினாள் ராசாத்தி….அவளால் அந்த கார் ஜன்னலையையும் திறக்க முடியவில்லை.”
“அய்யா….காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன்….தயவுசெஞ்சு என்னை இறக்கி விடுங்கள் பெத்த வயிறு பற்றி எரியுது”…என்று வெறிப் பிடித்தவள் போல் கதறினாள் ராசாத்தி.

அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
“உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.

குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது.

ராசாத்தி மற்றும் அந்த குழந்தைக்கு என்ன ஆனது?
காத்திருங்கள்.

இராஜிசங்கர்
11-07-2012, 07:20 AM
அய்யயோ...பாவம் ராசாத்தி..அரவிந்த் தம்பி சீக்கிரம் வந்து அம்மாவை எப்டியாவது காப்பாற்றி விடுடா

கலைவேந்தன்
11-07-2012, 12:23 PM
கதை சுவாரசியமாகப் போகிறது. தொடருங்கள் நண்பரே..

otakoothan
12-07-2012, 05:03 AM
அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
“உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.
குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது


காலை மாலை இருவேலையிலும் அவசரத்தின்மேல் அவசரம் இதற்கு விடையே இல்லையா நகரத்தில்?
அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், உழைக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பெண்கள் உட்பட கார், பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டியில் பயணிக்கும் போது சிக்னல் விழவதற்குள் போய்விட வேண்டும்.
அப்படி என்ன அவசரமோ?

என்ன காரணமாக இருக்கும்?
மனைவி சொல்லை மந்திரமாக கொண்ட கணவன் ;

பிஞ்சுகளைக் காப்பகத்திலிருந்து அழைத்து செல்லும் தாய்மார்கள்,

இந்த ரயிலை விட்டால் பிளாட் பாரம்தான் கதி என கதிகலங்கும் வேலைமுடித்துச்செல்லும் சம்பளதாரர்கள்.

மாலை உங்களுக்காக ரெடியாயிருப்பேன் சாக்கு போக்கு சொல்லக்கூடாது என்ற புதுமனைவியின் கடட்டளை. இது கடுகளவு தவறினாலும் நிலைமை மோசமாகிவிடும்.

மூன்று மாதம் தொடர் முயற்சி விடாமுயற்சியுடன் கடை பஸ்ஸடாப், தண்ணீர்பைப் பால்பூத் , கல்லூரி என விடாது சுற்றி, வெற்றியடைந்து காதலித்த காதலி, இன்னும் கால் மணி நேரம் தான் காத்திருப்பாள் அதற்குள் போய்விட வேண்டும் இல்லையேல் பட்ட கஸ்டம் பாலாகிவிடும். என துடிக்கும் இளைஞன்.

அம்மாவை ஆஸ்பிட்டல் கூட்டி போக வேண்டும்... டாக்டர் அடுத்த கிளினிக் போவதற்குள் போயாக வேண்டும் என்ற மகனின் பாச பரிதவிப்பு.

மாப்பிள்ளை லேட் பண்ணாதே உனக்காக காத்திருக்கோம்! நீ வந்த பின்தான் ஓப்பன் பண்ணனும் !!! மது பிரியர்களின் அன்புக்கட்டளை.

அன்றைக்கு கிடைத்த கூலியில் வீட்டு தேவையானதையும், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவன்.

முதலில் டாஸ்மாக்கு, அப்புறம் கடவுள் புண்யத்தில் மிச்சம் மீதியிருந்தால் வீட்டுக்கு என ஒரு பாலிசியே வைத்திருக்கும் சைக்கிலில் சவாரி செய்யும் தொழிலாளி

வீடு போய் சேருவதற்குள் சீரியல் முடிந்து விடுமா? மனதில் கேள்விக்குறியுடன் பரபரப்போடு பயணத்தை எதிர்கொள்ளும் சில தாய்மார்கள்.

இப்படி பலரின்; அவசரம் ஆதங்கம் இந்த நகரத்தில்.
அப்பப்பா எத்தனை விதமான மனிதர்கள் இந்த சென்னையில்….
http://1.bp.blogspot.com/-jGU_p_vBeU8/T_Pp032psyI/AAAAAAAAAVw/wW-Z04sEsTY/s320/1.jpg


ராசாத்தியின் மகன் குழந்தை அரவிந்த் “அம்மா அம்மா..” என்றபடி ரோட்டை கடக்க முயல, திடீரென வந்த கார் மோதியது. அம்மா என்ற கத்தலுடன் கீழே விழுந்தான் அரவிந்த்.

சட்டென நின்றது கார்.

“பையன் மேலதான் தப்பு,”

“ஏய்… மெதுவா வந்தாதான் என்ன? கார் போனா வேற கார் வாங்கிக்கலாம் உயிர் போனா வருமா?”

“போலிஸ்ஸை கூப்பிடு”

“முதல்ல ஆம்புலன்ச கூப்பிடுங்கய்யா….”

என்றவாறு பல பேச்சுக்கள் அங்கே.

ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது.

காரை ஓட்டிவந்த ஆள் பயந்து நடுங்கியபடி “எம்மேல தப்பு இல்லீங்க”.

அவனை ஓங்கி ஒரு அறை விட்டார் ஒரு வாட்டசாட்டமான ஆள். “என்னடா வண்டி ஓட்டுற ராஸ்கல்..”

குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து காலிலுள்ள ரத்தத்ததை துடைத்தபடி 101க்கு போன் செய்தார்.

அப்போது கூட்டத்தைப்பார்த்து அங்கு வந்த டாக்டர் ஞானி பையனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

“காலையில்தான் அவனுடைய அம்மாவும் அந்த குழந்தையும் எங்கிட்டே சிகிச்சை எடுத்தாங்;க… எங்கப்பா உங்கம்மா…? என்று பையனை பரிசோதனை செய்தபடி கேட்டார் டாக்டர் ஞானி.

“அம்மா… அம்மா கார்லே போச்சு” என்று வலியால் அழுதபடி சொன்னான் அரவிந்த்.


பாருங்கள் இதுதான் விதியென்பது….

அந்த வழியே…ராசாத்தியையும் குழந்தையையும் தேடிவந்த வேலு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து…இங்கே யாவது இருப்பார்களா? என்று யோசித்தபடி… “இருக்கணும் கடவுளே… கருணைக் காட்டு” என்று கடவுளை மனதார வேண்டியபடி கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தான்.

அவனுக்கு தலையில் இடியே விழுந்ததது போல் இருந்தது.
“மகனே அரவிந்த்” தென்று கத்தினான்.

கூட்டம் மொத்தமும் அவனை பலவித பார்வையில் பார்த்தது.

அப்பாவின் குரலைக் கேட்டவுடன் “அப்பா” என்றான் அரவிந்த்.

ஓடிச் சென்று டாக்;டரிடமிருந்து மகனை வாரி எடுக்க முயன்றான்.

“இந்தாப்பா குழந்தை.. என் கூட எடுத்து வா” என காரை நோக்கி சென்றார் டாக்டர்.

கூட்டத்தை திரும்பி பார்த்து “நான் கவர்மெண்ட் டாக்டர்.. பெயர் ஞானி. என்னுடைய கிளினிக்குக்கு பையனை எடுத்து போறேன் நானே போலிசுக்கும் கம்ப்ளைண்ட் கொடுத்துடுறேன் அடி ஒண்ணும் பலமா இல்லை. பயப்பட வேண்டாம்”

போகும் போது மோதிய கார் காரனிடம் அவன் முகவரி அனைத்தையும் பெற்றுக் கொண்டார் டாக்டர்.

“உங்க பேரு என்ன? ஊசி போட்டபடி சின்னக் காயம் தான் பயப்பட தேவையில்லை.”

வேலுங்க ஐயா…

“காலையிலேதான் அவனுக்கு சிகியளித்தேன் அம்மா எங்கப்பா ன்னு கேட்டா காரிலே போயிருச்சிங்குறான்? என்ன உங்களுக்குள்ளே ஏதாவது சண்டையா?”

தலைதலையாய் அடித்துக் கொண்டு “ஆமாம் டாக்டர் ஆமாம். இந்த மொடாக்குடிகாரன் தினம் தினம் குடிச்சட்டு அவளை சந்தேகபட்டு அடி அடின்னு அடிச்சிடுவேங்க.. புள்ளைத்தாச்சின்னு கூட பாக்காம போதையிலே மிதந்திருக்கேங்க.. ஒருநாள் அவளை சூடு வைக்க போனப்ப.., தடுத்த என் புள்ளை மீது பட்டு அதுல காயம் வந்ததுதான் டாக்டர் இது” என்று மகன் காலைக் காட்டியபடி கதறி அழுதான் வேலு.

“இந்தாப்பா வேலு குடி குடியைக் கெடுக்கும் என்பது உன் விசயத்தில் எவ்வளவு உணை;மை பாத்தியா,? இப்போ குடும்பம் போச்சே…ச்சே.. கவலைப்படாதே எப்படியும் உனக்கு உன் மனைவி கிடைப்பாள். பார் உன் கண்ணில் இருக்கும் மஞ்சள் நிறம், கை கால் நடுக்கம், இர் எல்லாம நுரையீரல் கெட்டுப் போன அறிகுறி … பரிசோதிக்காமலேயே தெரியுது…

ஒருத்தன் வறுமையோடு வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திடலாம,; உழைப்பால் முன்னேறிடலாம் ஆனால் வாழ்நாள் முழுவதுமாக மருந்து மாத்திரையோடு வாழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

இயற்கையா வர்ற வியாதியை மருந்து மூலம் குணப்படுததிடலாம் ஆனால் தானா தேடிப்பிடித்த வியாதியை குணப்படுத்துவதுதான் கஸ்டம். அது ஒயிருக்கே உலை வைத்துவிடும்”

இப்போ மனைவியை இழந்து அதுவும் கர்ப்பிணி வேறு போ தேடி போய் கண்டுபிடி..”
“சரி போட்டோ இருக்கா,’

“இல்லைங்க..”

“சரி முடிந்தளவு தேடிப்பார். இரவில் தங்குவத்ற்கு வேண்டுமானால் கிளினிக்கில் படுத்துக்கோ”.என்று சொல்லிவிட்டு பர்சை எடுத்து 1000 ரூபாய் கொடுத்தார் கருணையின் மறுவடிவம் ஞானி.

(அட்மிட் ஆனவுடன் கவுண்டரில் ஆயிரக்கணக்கில் எணம் கட்ட சொல்லும் மருத்துவர் உலகில் இப்படி ஓர் உயர்ந்த உள்ளம்)

டாக்டரிடம் விடைபெற்ற வேலு மகனைக்கூட்டிக்கொண்டு மீண்டும் ரயில்வே ஸ்டேசனுக்கு சென்றான்.

ஒரு ரூபாய் காயின் பாக்சில் தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.

மறுமுனையில்

“Hello”

யார் சொன்னது அந்த Hello……

அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.

சிவா.ஜி
12-07-2012, 07:37 AM
ரொம்ப விறுவிறுப்பாத்தான் போகுது. ஆரம்பிச்ச கொஞ்ச அத்தியாயத்துலேயே பல சம்பவங்கள் நடந்துடிச்சே....காரில் கடத்தப்பட்ட அம்மா கிடைப்பாளா....வேலு திருந்துவானா...இன்னும் கொடுங்க....!!!

(கதை உங்களோடது இல்லைங்கற பட்சத்துல இந்தக் கதை இருக்க வேண்டிய பகுதி படித்ததில் பிடித்தது. இந்தப் பகுதி சொந்த படைப்புகளுக்கு மட்டுமே ஒட்டக்கூத்தன்)

கீதம்
12-07-2012, 09:54 AM
ஒட்டக்கூத்தன் அவர்களே...

இரண்டுமுறை தனிமடலிட்டும் என் சந்தேகத்துக்குத் தாங்கள் பதிலளிக்கவில்லை. இது தங்களுடைய சொந்தப்படைப்பெனில் தயங்காமல் சொல்லலாம். வெறொருவருடையது எனில் இது அதற்கான பகுதி இல்லை. படித்ததில் பிடித்தது பகுதியில் பதிய வேண்டும். எனவே விரைவில் பதிலளியுங்கள். இல்லையெனில் இப்படைப்பு இங்கிருந்து அகற்றப்படும்.

otakoothan
13-07-2012, 06:50 AM
அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம், கீதம் அவர்களே
இந்த தொடர்கதை நான் எழுதுவது தான். சுந்தரகனகு என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கீதம்
13-07-2012, 06:56 AM
அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம், கீதம் அவர்களே
இந்த தொடர்கதை நான் எழுதுவது தான். சுந்தரகனகு என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. முன்பே இருமுறை தனிமடலில் கேட்டிருந்தும் தாங்கள் பதில் அளிக்காமையாலும், சுந்தர கனகு என்பவருடைய கதையென்பதால் சில கதைகளை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்துகிறேன் என்று தங்களிடம் தெரிவித்தபோது மறுப்பேதும் சொல்லாததாலும் பொதுவில் கேட்கும் நிலை ஏற்பட்டது. மன்றத்தில் எந்த பயனர் பெயரை உபயோகிக்கிறீர்களோ அதே பெயரில் பதிவுகளைப் பதிவிடுவதால் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

otakoothan
13-07-2012, 11:22 AM
தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. முன்பே இருமுறை தனிமடலில் கேட்டிருந்தும் தாங்கள் பதில் அளிக்காமையாலும், சுந்தர கனகு என்பவருடைய கதையென்பதால் சில கதைகளை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்துகிறேன் என்று தங்களிடம் தெரிவித்தபோது மறுப்பேதும் சொல்லாததாலும் பொதுவில் கேட்கும் நிலை ஏற்பட்டது. மன்றத்தில் எந்த பயனர் பெயரை உபயோகிக்கிறீர்களோ அதே பெயரில் பதிவுகளைப் பதிவிடுவதால் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

என் மீது தான் தவறு...ஒத்துகொள்கிறேன். முன்பே நீங்கள் கேட்டதற்கு பதில் அளித்திருக்க வேண்டும் நான். பதிலளிகாதது என் தவறு தான். அதற்கு என்னை பொருத்தருள வேண்டுகிறேன்.

கலைவேந்தன்
13-07-2012, 04:34 PM
சில அத்தியாயங்களிலேயே பரபரப்பு உச்சத்தை அடைந்துவிட்டதே.. பாராட்டுகள். தொடருங்கள்..!

otakoothan
16-07-2012, 06:44 AM
சட்டத்தின் படி (5) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
சென்ற வாரம்
ஒரு ரூபாய் காயின் பாக்சில் தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.
மறுமுனையில்
“Hello”
யார் சொன்னது அந்த Hello……


மேட்டுக்குடி ஆண்களில் சில பேர் காம வெறி பிடித்து ஏழை பெண்களை நாசமாக்குவதை தடுக்கவே முடியாதா?

கார் கண்ணாடிகளை உயர்த்தி, பெண்களை கடத்தி வன்புணர்வு கொள்ளும் மிருகங்களை என்னதான் செய்வது?

“அய்யா நான்; மாசமா இருக்கிறேன் என்னை…………விட்டுடுங்க…. கதறினாள் துடித்தாள் .

கொடுமையிலும் கொடுமையிலும் இக்கொடுமையினை நடத்திவிட்டான் அந்த காமுகன். என்பதை விட தெருநாய்.

காரிலிருந்து ராசாத்தியை இறக்கிவிட்டு சில 500 ரூபாய் நோட்டுகளை ஜாக்கெட்டுக்குள் திணித்து விட்டு சென்றான். பண்ணின பாவத்துக்கு பரிகாரமாக.

தன் நிலையுணர்ந்த ராசாத்தி திடிரென்று பித்து பிடித்தவளாக மகனைத் தேடி ஓடினாள்.

அடுத்தடுத்து வந்த சிலைகளைத் தாண்டி ஓடினாள்.

பெருமூச்சு வாங்க நின்றாள் பக்கத்தில் சிலம்புடன் கண்ணகி சிலை. மதுரையை எரித்தவள்.

கண்கலங்க அழுவதற்குக் கூட திராணியில்லாமல் வாயில் உதடுகள் மட்டும் ஏதோ கண்ணகியைப் பார்த்து முணுமுணுத்தது.

கண்ணகியிடம் இந்த அவலத்தை சொல்லி சென்னையை எரிக்கவா முடியும்?

எங்கு மகனை விட்டுச் சென்றாளோ அந்த இடத்தில் வருவோரிடமும், போவோரிடமும் எல்லாம் மகனை பற்றி விசாரித்தாள்.

ராசாத்தியின் கோலத்தைப்பார்த்து சிலரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

“யம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கார்லே அடிப்பட்டது உம் மவனா? அவன தூக்கிட்டு போயிட்டாங்களே? என்ன மனுசி நீ? கொழந்தை புள்ளையை அநாதையா விட்டுட்டு நீ எங்கே போனே?”

ஐயோ காருல அடி பட்டுடானா? உலகமே இருண்டது போல தலையில் இடிவிழுந்தது போல் மயங்கி விழுந்தாள்.

செய்தி சொன்னவன் திடுக்கிட்டு செய்வதறியாமல் நின்றாள்.

“யோவ்…என்னைய்யா பொம்பளை மயங்கி கிடக்கிறா…! நீ மசமசன்னு நின்னுட்டு இருக்கிறே.? தண்ணீரை முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தனர்.

மயக்கம் தெளிந்த ராசாத்தி தன்னை சுற்றி நின்றிருந்த சிறு கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், என்ன ஏது என்றுகூட கேட்காமல் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் கடலை நோக்கி சென்றாள்.

கட்டிய கணவன, பெற்ற மகன், கட்டிக்காத்த கற்பு, இத்தனையும் போய்விட்ட பின்பு இனியும் வாழ வேண்டுமா?.

ஆர்ப்பரிக்கிற அலையின் மீது கால் பட்டதும், அலையின் வேகம் ஒவ்வொரு அடியாக உயர்ந்தது.
http://4.bp.blogspot.com/-kWZqWIEhKew/T_vKWOowTYI/AAAAAAAAAWY/qZf9o0g7pC8/s320/4.jpg

ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…


‘தங்கச்சி….. தங்கச்சி’

குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.

அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.

ராசாத்திக்கு என்ன ஆனது?

அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

சிவா.ஜி
16-07-2012, 07:56 AM
பாவம் ராசாத்தி. என்ன நினைத்து இந்தப் பேரை வைத்தார்களோ அவளது பெற்றோர். சுவாரஸியமாய் போகிறது.....தொடருங்கள் ஒட்டக்கூத்தன்.

சுகந்தப்ரீதன்
20-07-2012, 10:34 AM
விருவிருவென நகரும் கதையோட்டத்தில் சமயம் கிடைக்குமிடத்து சமரசமின்றி சமூக அவலங்களை சாடும் தங்களின் வெகுஇயல்பான எழுத்துநடை எமக்குள் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது அன்பரே..!! தொடர்ந்து கலக்குங்கோ..:icon_b:

சட்டத்தின்படி கதைக்கு நீங்க கொடுத்த வாக்குபடி வரும் திங்கள்களில் தவறாது வெளிவருமா அடுத்தடுத்த பாகங்கள் ஒட்டக்கூத்தரே..!!:lachen001:

otakoothan
23-07-2012, 07:52 AM
கண்டிப்பாக திங்கள் கிழமைகளிலேயே நீங்கள் கதையை வாசிக்கலாம்….உங்கள் எதிர்பார்ப்பை நான் வீணாக்க மாட்டேன்.

otakoothan
23-07-2012, 07:58 AM
சட்டத்தின் படி ....(6)
சென்ற வாரம்
ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…
‘தங்கச்சி….. தங்கச்சி’
குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.
அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.


வேலுவின் ஹலோ என்ற கேள்விக்கு மறுமுனையிலிருந்து

"ஹலோ யாரு?"

"என்ன சார் என்னை தெரியல?" என்றான் வேலு,.

"யோவ் இது என்ன வீடியோ வா உன் மூஞ்சியெல்லாம் தெரிவதற்கு? பேரை சொல்லுய்யா?"

"சார் நான் தான் உங்கள் லாரியில திருப்புர்ல இருந்து வந்தேனே?" என்று நிறுத்தினான் வேலு.

"ஒ? புரியிது. ஆமா வந்த காரியம் என்ன ஆச்சு?"

"மனைவி மகன் கிடைத்தார்களா? சரி நீ எங்க இருக்குற? நான் மெட்ராஸ் போர்ட் ல இருக்கிறேன்." என்றார் டிரைவர்.

"சார் நானும் மெட்ராஸ் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து தான் சார் பேசறேன்".

"அப்படியா நான் இன்னும் ௪௫ நிமிசத்துல திருப்பூர் கிளம்பிடுவேன். நீ வரதுன்னா வா"

"சார் நானும் என் மகனும் திருப்பூர் தான் வரோம்". என்றான் வேலு.

"அப்படியா அப்போ உன் மனைவி? சரி சரி உடனே கிளம்பி வா அன்னைக்கி உன்னை இறக்கி விட்டேன் இல்லே ...அந்த இடத்துக்கு வா போகும் போது எல்லாம் பேசி கிட்டே போகலாம்".என்றார் டிரைவர்.

நகர பேருந்தை பிடித்து இருவரும் மெட்ராஸ் போர்ட்க்கு சென்றடைந்தார்கள்

"வாய்யா வேலு இது உன் பையனா? சரி லாரியில் ஏறு.. என்றபடி கிளினரை எதிர் பார்த்தபடி அதோ கிளி வந்துட்டான்...(கிளினரோட சுருக்கம் )

"என்னடா கிளி ...கிளி கூண்டோட வர? இந்த ரெண்டு கிளியையும் எங்க வாங்குன?"

"அண்ணே என்னை மன்னிச்சுடுங்க" என்றான் அந்த கிளினர்.

"ஏண்டா...என்னடா பண்ணுன?"

"அண்ணே இரண்டு வருசத்துக்கு முன்னால.."

".என்னடா பிளாஷ் பேக்கா?"

"அது இல்லைண்ணே..."

"இரண்டு வருசத்துக்கு முன்னால என் அத்தை இறந்து போன பின் என் மாமா அவருடைய பொன்னை கூட்டிட்டு மெட்ராஸ் வந்துட்டாரு. இந்த ஹோர்பார் ல தான் அவர பார்த்தேன். காலமெல்லாம் அவ தான் என் உசிருன்னு நான் நெனச்ச என் நினைப்பு வீண் போகல. மாமாவும் கரிசனையுடன் இங்கயே வேலை வாங்கி தரதா சொல்லிட்டாரு.இனிமேல் நான் கிளினர் வேலைக்கு வர மாட்டேன். இந்த கிளி அவளுக்கு..." என்று ......கிளினர் தொடருவதற்குள்...

"அது யாருடா."..என்று கேட்டார்...டிரைவர்.

"அது தான்னே ...என் அத்தை பொண்ணு ரேவதி. பார்க்க கிளி மாதிரி இருப்பான்னே... அவளுக்கு கிளின்னா ரொம்ப பிடிக்கும்...அதுதாண்ணே வாங்கிட்டு போறேன்". (கருப்பு முகம் சிவப்பானது ... வேறென்ன வெக்கம் தான்)

எது எப்படியோ...நல்ல இருந்தா சரி...

"சரி இந்த உன் பேட்டா...உன் சம்பளத்தை திருப்பூர் ஆபீஸ் ல வந்து வாங்கிக்கோ.. அப்புறம்...ரெண்டு கிளி வச்சுரிக்கயில்ல....ஒரு கிளியை அந்த சின்ன பயன் கிட்ட கொடுடா...பாவம் வச்சு விளையாடட்டும்."

"சரிண்ணே...கொடுத்துட்டா போச்சு"... என்று சொல்லிய படி.....கிளி கூட்டை திறந்தான் கிளினர்.

திறந்தவுடன்...ஒரு கிளி அந்த இண்டு இடுக்கில் புகுந்தபடி...பறந்து விட்டது..

"ஐயோ அண்ணே...ஆசையாய் வாங்கிட்டு வந்த கிளி பறந்து போயிடுச்சே....அய்யய்யோ அண்ணே...இந்த ஒரு கிளியை யாவது என் அத்தை பொண்ணுகிட்ட கொண்டு போய் சேர்கிறேன் ண்ணே..என் சம்பளத்தை நீங்களே வாங்கி வச்சுகோங்க"..என்றபடி...வேகமாக நடந்தான் அந்த கிளினர்.

திகைத்து போன டிரைவர் வேலுவையும், குழந்தையையும் பார்த்தபடி வண்டியை கிளப்பினார்....டிரைவர்.
"நமக்குன்னு வாய்க்கிற கிளினர் யாருமே சரியா அமைய மாடிங்குரானுங்க.....ம்ம்... ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்ல வேலு...அண்ணல் சரியான நேரத்துக்கு வேற போய் சேரனும். என்று டிரைவர் பேசி முடிப்பதற்குள் ...

அண்ணே...எனக்கும் driving தெரியும் , உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் வேணும்னா வண்டியை ஓட்டுறேன்...அண்ணே எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்...ஒரு வேலை நீங்க வாங்கி கொடுத்திங்கன்னா ...நான் பொழச்சுக்குவேன் ....."

ம்ம்....சரி இங்க வா...ஒட்டு....

அவன் ஓட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்தவனாக...சரி சரி நான் போய் பின்னாடி பேனட்டுல படுதுகுறேன்...நீ பார்த்து பத்திரமா ஒட்டு.

வேலுவுடைய அதிர்ஷ்டம்...எந்த செக் போச்டுளையும்...எந்த வித தடையுமில்லை....வண்டி பாட்டுக்கு போய் கொண்டே இருந்தது.

அதிகாலை 5 மணிக்கு லோர்ரி வந்து சேர்ந்தது திருப்புருக்கு. வேலு டிரைவரை எழுப்பினான். டிரைவர் வேலுவை ஆச்சிரியத்துடன் பார்த்தார்.

"பரவால்லையே வேலு....சரி இன்னும் 2 கிலோமீட்டர் இருக்கு அந்த கம்பனி க்கு போக.....சரி நீ இந்த பக்கம் வா...நான் ஓட்டுறேன்..."

வண்டியை ஓட்டும் போது டிரைவருக்கு ஆயிரம் மன குழப்பம்.....
இவனை வேலைக்கு சேர்த்து விட்டால்...நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுருவானோ..? ....அவன் கதையை கேட்டாலும் பாவமா த்தான் இருக்கு..என்ன பண்ணலாம்..? சரி பாப்போம்..."

அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?

http://4.bp.blogspot.com/-xWxQUTyozY4/UAfIhX8vVlI/AAAAAAAAAXA/xqNoj3Ajaiw/s400/1.jpg
அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

otakoothan
30-07-2012, 11:10 AM
சட்டத்தின் படி(7) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?


“தங்கச்சி தங்கச்சி அய்யோ கடவுளே யாராவது காப்பாத்துங்களேன்”
முத்துவினுடைய கதறலைக்கேட்டு சிறு கூட்டம் கூடி விட்டது.

“அய்யோ பாவம் என்ன கஸ்டமோ… ஏய்யா நீ எல்லாம் ஒரு மனுசனா என்த விச்சனைன்னாலும் வீட்டோடுயிருக்கணும். இப்போ நிலைமையைப் பாரு.” என்று ஆளுக்கு ஆள், வேலுவைப்பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

சிறு தூரத்தில் மீனவத்தாய்மார்களும் பெண்களும் தங்களுடைய உறவுகள் எவ்வித ஆபத்துமின்றி கொலைவெறி பிடித்த இலங்கை கப்பற்படையிடமிருந்து உயிர் தப்பிப்பித்து வர வேண்டும் என தத்தம் தமது கடவுள்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.
http://2.bp.blogspot.com/-Wi3tmud1Cz4/UA01VxoZt_I/AAAAAAAAAX8/wZealXiR3bg/s400/beach-chennai.jpg

இங்கு நடக்கும் களேபரத்தைப்பார்த்து அவர்களும் ஓடி வந்தார்கள்.

ஆர்ப்பரிக்கும் பேரலை மீது படகு ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்படகிலிருந்து இருவர் கடலில் குதித்தனர்.

கடல் அலை இழுத்து சென்ற ராசாத்தியை இருவரும் கரைக்குத் தூக்கி கொண்டு வந்தனர்.

தன் உயிரையும் துச்சமென மதித்து மற்ற உயிரை காப்பாற்றிய அந்த மீனவ சமுதாயத்தை காப்பாற்ற தமிழக மக்களிடமிருந்து எத்தனை வகையான ஆர்பாட்டம,; உண்ணாவிரதம்.?

கட்சி பாகுபாடுயின்றி ஒரே அணியாக சேர்ந்து போராடினால்தான் இதற்கெ;ல்லாம் வழி பிறக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்குமே தவிர நமது மத்திய அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.. மக்கள் கையில் இருக்கும் வலிமையுள்ள ஒரே ஆயுதம் ஓட்டு மடடும்தான். அந்த ஆயுதத்தினால்தான் இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நினைத்ததை பெற முடியும்.

ராசாத்தியை தரையில் கிடத்தியவுடன் மீனவப் பெண்கள் முதலுதவி செய்து அவளை காப்பாற்றினார்கள்.

“அய்யோ பாவம் கர்ப்பமாயிருக்கு…இந்த புள்ள”.. அதில் ஒரு பெண் பரிதாபப்பட்டாள்.

“ஏய்யா உனக்கு அறிவிருக்கா என்ன நடந்திருந்தாலும் பேசி தீர்ககணும். ஒரு உயிரு இல்லையா..ரெண்டு உயிர். போயிருந்தா என்ன பண்ணுவ?” முத்துவைப் பார்த்து திட்டினார் ஒருவர்.

மற்;றொருவர் பீடிக் குடித்துக்கொண்டே “இவனையெல்லாம் சுட்டுக் கொள்ளணும்.”

“கொல்லுங்கைய்யா கொல்லுங்க…யாருன்னே தெரியாத இவ… கடலுக்குள்ளே விழுந்து சாக போறாளே ன்னு எப்படியாவது இவளை காப்பாற்றணும்ன்னு தங்கச்சி தங்கச்சி ன்னு கூப்பிட்டு பின்னாலயே ஓடி வந்தேன் பாரு அதுக்காக என்னை கொல்லுங்கய்யா” கண் கலங்க கொன்னான் முத்து.

“என்னது உன் தங்கச்சி இல்லையா..?” என்றபடி எல்லோரும் முத்துவை வியந்து பார்த்தார்கள்.

“ஆமாய்யா… இவளை அந்த ரோட்டுலயே பார்த்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே நான் டாஸ்மாக்குல தண்ணியடிச்சிட்டு வந்திட்டு இருந்தேன்.இவளுடைய பையன்னை கார் இடிச்சிருச்சு. ஆனால் 2 பேர் வந்து பையனை தூக்கிட்டு போனாங்;க..என்ன ஏதுன்னு விசாரிக்கல..கொஞ்ச நேரத்திலே குழந்தையை பற்றி கேட்டு. இவ வந்தா.. நான் பாதி மப்புலே குழந்தை போயிட்டதுன்னு சென்னேன். நான் குழந்தை செத்து போயிட்டதா சொன்னதா நினைச்சு இந்த புள்ள மயக்கமாயிட்டா. மயக்கம் தெளிந்த பின் நடந்ததுதான் இந்த சம்பவம்.. காப்பாத்தனும்ன்னு நெனச்சேன். அதான் இந்த புள்ள பின்னாடியே ஓடி வந்தேன்” சொல்லி முடித்தான் முத்து.


சுணடல் விற்கும் சிறுவன் முதல் சுற்றுலா பயணிகள் வரை சிலர் பாராட்டவும் சிலர் திட்டவும் செய்தனர். சில பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்.

“இப்போ அநாதையான இவளை என்ன செய்ய போற?” என்றுதான் கேட்டார்களே தவிர ராசாத்திக்கு அடைக்கலம் தரும் மன நிலைமை யாருக்கும் இல்லை.

“ஏய்யா கூட பொறந்தாத்தான் தங்கச்சியா, கூட பொறக்கலைன்னா தங்கச்சி இல்லையா? இந்த மெட்ராசுல கால்வாசி பேரு அநாதையா வந்தவங்க தாய்யா.. ஏன் நான் கூட அநாதையா வந்தவன் தாய்யா. உங்க எல்லோரும் முன்னாடியும் நான் ஒண்ணு சொல்றேன். இவளை நான் என் தங்கச்;சி மாதிரி வைச்சுக்குவேன் பாதுகாப்பேன். இனிமே இவ என் தங்கச்சித்தான் தங்கச்சித்தான.;”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராசாத்தி வருத்தம் கலந்த சந்தோசத்துடன் முத்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முத்து ராசாத்தியின் கையைப் பிடித்து “ எந்திரிம்மா தங்கச்சி…அண்ணே நான் இருக்கேன் கவலைப் படாதே..உ;ன குழந்தையை எப்படியும் தேடி கண்டு பிடிக்கலாம்.என்று சொல்லி மீனவர்களைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தியை கூட்டிக்கொண்டு நடந்தான்.

அந்த படகில் உயிருடன் இருந்த ஒரு மீன் ஒரே துள்ளலில் மீண்டும் கடலுக்குள் குதித்தது.

பானு பானு என்று தன் வீட்டுக் கதவை தட்;டினான் முத்து.

கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும் திகைத்து நின்றார்கள்.

எதற்காக…..இந்த திகைப்பு?

அடுத்த வாரம் வரை காத்திருக்கலாமே?!!

இராஜிசங்கர்
30-07-2012, 11:51 AM
பானு ஏற்றுக்கொள்வாளா ராசாத்தியை??? விருவிருப்பாய்த் தொடர்ந்துகொண்டிருக்கிறது ஒவ்வொரு வாரமும்...வாழ்த்துக்கள்

சிவா.ஜி
30-07-2012, 12:55 PM
நிறைய திருப்பங்களுடன் நகரும் கதை சுவாரசியம். தொடருங்க....!!!

(எழுத்துப்பிழைகளை களைந்தால் இன்னும் நல்லாருக்கும்)

மதி
30-07-2012, 01:46 PM
ஏழு பகுதிகளையும் படித்து முடித்தேன். விறுவிறுப்பாக கொண்டு போறீங்க.. தொடருங்கள்..!

சுகந்தப்ரீதன்
30-07-2012, 02:35 PM
உங்க நேர்மை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு ஒட்டகூத்தரே...!!:lachen001:

otakoothan
06-08-2012, 04:13 AM
சட்டத்தின் படி( 8) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும் திகைத்து நின்றார்கள்.
எதற்காக…..இந்த திகைப்பு?


வேலுவையும் அவன் குழந்தையையும் பேக்டரிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மேனேசரிடம் பனியன் பண்டலை நல்லமுறையில் சேர்த்ததை பெற்றுக்கொண்டவரின் கையப்பமுள்ள நகல்களை சமர்பித்துவிட்டு திரும்பிய பொழுது,

என்னப்பா இப்பத்தான் வந்தியா? சரி சரி ரொம்ப களைப்பாயிருப்ப.. போய் ரெஸ்ட் எடு.. என்றார் கம்பெனி முதலாளி திவாகரன்.

டீரைவர் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் திவாகரின் செல் அலறியது.

'மனேஜர் டிரைவர் மணி எங்கே?'
http://2.bp.blogspot.com/-RDzEpeTFIps/UBOMAdckj1I/AAAAAAAAAYQ/v3e34R4Gx68/s400/22431_1218524479+copy.jpg

'சார் நீங்கத்தான் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி வைச்சிட்டீங்க' என்றார் பவ்யமாக…

லாரி டிரைவரைப்பார்த்து 'நீ ரொம்ப டயர்டா இருக்கிறீயா? வண்டி ஓட்டுவியா?'

'முதலாளி எனக்கு தெரிந்த ஆள் ஒருத்தர் இருக்கிறார்.. அவரு கார் ஓட்டுவார்'
என்று ஆபீஜ் ருமின் ஜன்னல் வழியே வேலுவைக்காட்டினான்;.

'அவரைக் கூப்பிடுய்யா…'

'வேலு இங்க வாப்பா'…அழைத்தவன் லாரி டிரைவர்.

தன் குழந்தையுடன் முதலாளியின் அறைக்குள் பவ்யமாக வந்து நின்றான் வேலு.

'ஏப்பா கார் ஓட்டுவியா?'

'ஓட்டுவேன் முதலாளி ஆனால் லைசன்ஸ் இல்லை'

'ம்ம்ம…சரி அது பரவாயில்லை..இது யார் உன் குழந்தையா?'

'ஆமாங்க…''மேனேசர் நாங்க வர்ர வரைக்கும் குழந்தையை வாட்ச் மேனிடம் பார்த்துக்க சொல்லு.'

லாரி டிரைவரைப் பார்த்து 'சரிப்பா வேலைப் போட்டு கொடுத்துடலாம் நாளை காலை என்னை வந்து பார்.'

வேலு பின் சீட்டுக் கதவை திறந்து விட்டான் திவாகரன் அமர்ந்தபடி

'திருப்பூர்ல உனக்கு எல்லா இடமும் தெரியுமா?' ஏன்றார்.

'தெரியுமுங்க..'

'சரி ஹோட்டல் வேலனுக்கு போ…Buyer வெயிட் பண்ணீட்டு இருப்பார்.'

வேலுவினுடைய டிரைவிங்கில் இருந்த நிதானம், சாலை விதிமுறைகளை அனுசரித்தல், மொத்தத்தில் அனுபவமுள்ள ஓட்டுனரின் திறமை யிருந்ததை கண்டு மனதுக்குள்ளேயே பராட்டினார் திவாகரன்.

'உனக்கு பனியன் கம்பனியில் என்ன வேலை தெரியும்?'

'முதலாளி நான் ஏழு வயசிலிருந்தே பனியன் கம்பனிகளில் வேலை செய்யறேன.கை மடிக்கறதுலயிருந்து கட்டிங், டெய்லரிங், அயன், பரிண்டிங், டையிங்ன்னு எல்லா செக்சனிலும் வேலை செஞ்சிருக்கேன் '.

'உன் குடும்பம் எல்லாம் எங்கே யிருக்காங்க?''

இந்த கேள்வியை வேலு சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையைச்சொன்னால் வேலை கொடுப்பாரா? இல்லை ஒரு குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாத உனக்கு எத்தனை வேலை தெரிந்தாலும் ஒழுங்காக வேலை செய்ய முடியாது என்று எண்ணி வேலைக் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள்ளேயே நீண்டநேரம் யோசித்தான் வேலு.

அதற்குள் ஹோட்டலையடைந்தது கார்.

தன்னை சுதாரித்துக் கொண்ட வேலு காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு பின்கதவை பவ்யமாக திறந்தான் திவாகரன் முன்னே செல்ல பின்னாலேயே ஓடிவந்தான் வேலு.

"முதலாளி சூட்கேஜ் மறந்துட்டீங்க".

திவாகரன் வேலுவை மேலும் கீழும் பார்த்தபடி சூட்கேஸை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குள் சென்றான்.

உள்ளுர் ஏஜென்ட் Buyer யை அறிமுகப்படுத்தினார்.

Glad to meet you Mr Diwagaran என்றார் அந்த வெளிநாட்டு Buyer

Thank you very much Sir என்றபடி இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

"Mr. we want XXL size black and blue color T shirt with must be picture of our President of America."

"Oh..Sure sir…I am bring this cloth material for show you as a sample and Also this is our documents where we doing business with some other good companies in America.. .Please see.."

"Good Diwakaran it is surprising. I am so happy to see this you are having business connection with our Nation..this cloth is very nice…it may be suitable for that T shirt. Ok…well…we need 1,50000 pieces next October…ok? Can you do this?"

"Sure sir…no problem."

என்றபடி அவர்களது பிஸினஸ் பேச்சுவார்த்தைகள் இனிதாக முடிந்தது.'

இந்த சிறிய இடைவெளியில் காரை சுத்தமாக துடைத்து வைத்திருந்தான் வேலு.

முதலாளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி|ருந்தான்.

திவாகரன் பேச்சுவார்த்தையை முடித்தபடி மகிழ்ச்சியாக வெளியே வந்தான்…
.
வேலு கார் கதவை திறந்து விட, ஏறி அமர்ந்தான் திவாகரன்.

'பேக்டரிக்கு போப்பா…ஆமா நான் குடும்பத்தைப் பற்றிக் கேட்டதற்கு ஒண்ணும் பதிலேக் காணோம்?' ஏன்று பழையதை ஞாபகப் படுத்தினர் திவாகரன்

'ஒரு முடிவுக்கு வந்தவனாக உண்மையை சொல்லுவோம்.. பொய்க்கும,; குடிக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைப்போம் என்ற முடிவுடன்
முதலாளி சின்ன வயசிலே அம்மா இறந்துட்டாங்க எனக்கு அம்மாங்கற பேர்ல வந்த ஒருத்தியால சரியான சாப்பாடு, படிப்பு. எதுவுமே கிடைக்காம போச்சு. ஏழு வயசிலிருந்தே உழைக்க ஆரம்பிச்சுட்டேன்.கூட்டாளிகளுடன் சேர்ந்து குடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.

சொல்றதுக்கு இருந்த அம்மாவும் அப்பாவும் போயிட்டாங்க ஆனால் சொந்தக் காரங்களாப் பார்த்து தூரத்து உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சாங்க..அவளை செய்யாத சித்ரவரையெல்லாம் செஞ்சேன். மூணு வருசமா அத்தணையையும் பொறுத்தவ…( சற்று நிறுத்தி;) போன மாசத்துல ஒருநாள் கோவிச்சுக்கிட்டு பையனைக் கூட்டிட்டு சென்னைக்கு போயிட்டா..அப்புறம் அதை கேள்விப்பட்டு நானும் சென்னைக்கு போயி அவளை தேடி தேடி அலைஞ்சேன்…கடைசியில அவளை பார்க்கவே முடியல…என் பையன் மட்டும்தான் கிடைச்சான்"..என்று தேம்பி தேம்பி அழுதபடி சொல்லி முடித்தான் வேலு.

கார் பேக்டரியை வந்தடைந்தது.

வேலு இறங்கி திவாகருக்காக காரின் பின்பக்க கதவை திறந்துவிட முயலுவதற்குள்,

ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.

வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.

அடிமேல் அடி என்பது இதுதானோ?

என்னதான் நடக்கும் என்பதை அறிய அடுத்தவாரம் வரை காத்திருங்களேன்.

சிவா.ஜி
09-08-2012, 01:18 PM
வேலுவுக்கு வேலை கிடைச்சாச்சு...ஆனா...அவன் கதையைக் கேட்டதும் முதலாளி ஏன் பதட்டப்பட்டார்....சுவாரசியமான அத்தியாய முடிவு. நல்லாருக்குங்க ஒட்டக்கூத்தன்...தொடருங்க.

otakoothan
13-08-2012, 08:54 AM
சட்டத்தின் படி (9)
சென்ற வாரம்
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.


பார்வையில் பலவிதம் என்ற உண்மை பானுவின் பார்வையில் ராசாத்தியைப் பார்க்கும் பார்வை வினாடிக்கு வினாடி மாறுபட்டது.

மோனோலிசாவின் பார்வையைப் போல் இருந்தது பானுவின் பார்வை. ஒன்றும் புரியவில்லை முத்துவிற்கு.

கோபம் வெறுப்பு ஏளனம் கடைசியில் ராசாத்தியை ஏற இறங்க பார்த்தபின் கொஞ்சம் அனுதாப பார்வைத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் பார்வையால் உள்ளே வா என்பது போல் இருந்தது அவள் பார்வை.

முத்து செல்ல ராசாத்தி பின் தொடர்ந்தாள்.

கோயமுத்தூர் சுற்றுவட்டார மண்ணுக்கே சொந்தமான முதல் உபசரிப்பு, யார் வந்தாலும் வந்தவர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பது. எங்கிருந்தோ வந்தவர்கள் தாகத்திலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆண்டாண்டு காலமாய் இந்த பழக்கம் இன்னும் இந்த கொங்கு மண்ணில் இருக்கிறது.

பானு என்கின்ற இந்த பானுமதி கோயமுத்தூரைச் சேர்ந்தவள். வீட்டார் பார்த்து முத்துவிற்கு மணமுடித்து வைத்தார்கள். மிகவும் நல்ல பழக்கம் கொண்ட ஒரு குடும்பப் பெண். ஆனால் என்ன?.. கொஞ்சம் சந்தேகப் புத்தி.

உள்ளே சென்ற பானு, ராசாத்திக்கு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன முழுகாம இருக்கியா?”

தலையை குனிந்தபடி “ம்” என்றாள் ராசாத்தி.

சற்று பதற்றமான முகத்துடன் ராசாத்தியையே பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

முத்துவின் சம்பாதனை இந்த வீட்டில் வயிற்றுக்கு மட்டும் சரியாக இருந்தது. சின்ன வீடு. மொத்தம் இரண்டே அறைகள் தான். ஒன்று வந்தவர் அமருவதற்கு. அல்லது படுப்பதற்கு, இன்னொன்று சமையல் செய்ய.

ஏதோ மனதில் தோன்றியவளாய் வேகமாக சமையல் அறைக்குள் சென்றாள் பானு.

“என்னங்க….”

பானுவின் குரல் சற்று சப்தமாகவும், கோபமாகவும் இருந்தது.

முத்து “என்ன பானு” என்றபடி உள்ளே சென்றான்.

“மெதுவாய் பேசு பானு” என்றான் முத்து.

“இனி பேசறதுக்கு என்ன இருக்கு? அதுதான் கூட்டிட்டு வந்துட்டியே ஒரு சக்களத்தியை…”

தங்கச்சியாய் நினைத்து பாசத்தோடு கூட்டி வந்தவளை சக்களத்தி என்று சொன்னவுடன் கோபம் வருவதற்கு முன்பே அவன் கை அவள் கன்னத்தை நோக்கி விரைந்தது.

“பளார்” என்று ஓர் அறை விட்டான் முத்து.

பானுவிற்கு மின்னல் தெறித்தது போல் இருந்தது அந்த அடி. வலி தாங்காமல் ஓ எனக் கத்தினாள்.

அந்த சப்தத்தை கேட்டு பதறியபடி உள்ளே வந்த ராசாத்தி…

“அண்ணா அண்ணியை அடிக்காதீங்க..என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். நான் இங்க இருக்க விரும்பல..அண்ணா நிறைமாசத்துல அண்ணி இருக்குறாங்க..அவங்களை போய் அடிக்கலாமா? இது தப்பில்லையா?” என்று கண்ணீர் மல்க கை யெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தி வெளியே புறப்படத் தயாரான போது…

பானுமதி சற்றே யோசித்தவளாய், ராசாத்தியை தடுத்து நிறுத்தினாள்.

“எப்போ நீங்க என்னை அண்ணியா ஏத்துக்கிட்டீங்களோ இனிமே நீங்களும் எனக்கு அண்ணிதான். உட்காருங்க நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கயே என் கூடவே இருங்க”…என்று கண்ணீர் கன்ன மேட்டில் வழிந்தபடி பாச உணர்வுடன் சொன்னாள் பானு.

ராசாத்தி பேச வார்த்தையில்லாமல் வாய் விக்கித்து நின்றாள். அந்த இருவரின் பாசக்குவியலில் சிக்குண்டு மூச்சு திணறியபடி கண்ணீh.; விட்டாள்.

“சரி..அதுதான் சொல்லிட்டாளே..உள்ளே போய் உட்காரு தங்கச்சி”…முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவியை நினைத்து பெருமைப்பட்டான் முத்து.

“மாசமா இருக்கிறாள் இல்ல…காலையில இருந்து சாப்பிட்டு இருக்கமாட்டா .. போய் ஏதாவது பண்ணிக் கொடு”.. பாசத்தோடு கணவன் என்கிற உரிமையோடு உத்திரவிட்டான்.

“ஆமா ஆமா…இருங்க அண்ணி ..அண்ணன் கூட பேசிட்டு இருங்க… கொஞ்ச நேரத்துலேயே சாப்பாடு செஞ்சுத் தரேன்” என்று சமையல் கட்டுக்குள் போன பானுமதியை ராசாத்தி தடுத்து,

“அண்ணி நான் சமைக்கிறேன்.. நீங்களும் அண்ணனும் பேசிட்டுயிருங்க.எந்தெந்த பொருட்கள் எங்கேயிருக்குன்னு சொன்னா மட்டும் போதும்” என்றாள் ராசாத்தி.

அனைத்து டப்பாவையும் திறந்துக் காட்டினாள் பானு.

பானுசும் ராசாத்தியும் பேசுவதைப் பார்த்து சந்தோசத்துடன் நின்றான் முத்து.

“ஏங்க உங்க தங்கச்சிக்கு முதன் முதலா சாப்பாடு கவுச்சியோட போடலாம்… ஏதாவது போய் வாங்கிட்டு வாங்க…” என்றாள் பானு.

“அண்ணி நான் இனிமேல் இங்கதானே யிருக்கப் போறேன்..இப்போதைக்கு சாம்பாரும்,மிளகுரசமும் பொறியலும் செய்தாலே போதும்..என்ன அண்ணா உங்களுக்கு போதுமா?”

“ராசாத்தி எனக்கு போதும் எதுக்கும் உங்க அண்ணியை ஒரு வார்த்தைக் கேட்டுக்கோ”

“அண்ணி.. நானும், உங்க அண்ணனும் காத்தாட வெளியில் இருக்கோம்”.. என்று சொல்லிவிட்டு வெளித்திண்ணையில வந்து பானுமதியும், முத்துவும் உட்கார்ந்தார்கள்..

“பானு எதற்கு வெளியே வந்தேன்னு எனக்கு தெரியும் ராசாத்தியின் கதையை கேட்கத்தானே?”

“ஆமா சொல்லுங்க அவங்க யாரு? ஆனா.. என்னமோ எனக்கு அவுங்க நல்லவங்களாத்தான் தெரியுது.”

முத்து கடற்கரையில் நடந்த முழுக் கதையையும் ஒன்றுவிடாமல் விபரமாகக் கூறினான்.

“அடப்பாவி தங்கமானவளை தறுதலை அநாதையாக்கிட்டானே?! குழந்தையின் கதி என்ன ஆச்சோ?” என்று கண் கலங்கினாள் பானுமதி.

“அண்ணா அண்ணி வாங்க சாப்பிடலாம”;

இருவருக்கும் சாதம் வைத்தாள்

“அண்ணி நீங்களும் உட்காருங்க”

“இல்லே நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க .. அப்புறம் நான் வாப்பிடுறேன்” என்றாள் ராசாத்தி

சமையலை கணவனும் மனைவியுமு; மாறி மாறி புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்கள்.

கடவுளே இவங்களுக்கு என் வேதனை தெரிய வேண்டாம் என்னோடு இருக்கட்டும். அதற்கு எனக்கு தைரியத்தை கொடு என்று கடவுளை மனதார வேண்டினாள் ராசாத்தி.

விடிகாலை சுமார் 5 மணியளலில் பானுவிற்கு பிரசவ வலி மெல்ல மெல்ல அதிகரித்தது

அண்ணி என்று வலியால் முணுமுணுத்தாள்.

இன்னும் சில நேரத்தில் புதுக் குழந்தை இந்த மண்ணிற்கு வரப்போகிறது. அவளுக்கு இது முதல் பிரசவம் வேறு. பயந்தபடி கதறத் தொடங்கினாள். வயிறும் இரண்டு குழந்தைகள் இருப்பது போல் பெரிதாகவே இருந்தது. பனிக்குடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதற்கு தயாராகி கொண்டிருந்தது.

ராசாத்தி அடனே எழுந்து பானுமதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அண்ணா ஏதாவது வண்டியை கூட்டிட்டு வாங்க..உடனே ஆஸ்பத்திரிக்கு போகனும்.

பதறி துடித்துக் கொண்டு எழுந்த முத்து அஞ்சரைப் பெட்டி முதல் அரிசி டின் வரை எல்லாவற்றையும் தேடி எடுத்த பணம் 1200 ஐ தொட்டது.

இதைப் பார்தத ராசாத்தி அண்ணா “இந்தாங்க இதையும் புடிங்க”..என்று தன்னிடமுள்ள சில ஐநூறு ருபாய் அநாட்டுகளை கொடுத்தாள். (கடற்கரையில் தன்னை கற்பழித்த அந்த காமுகன் கொடுத்தப் பணம்)

பானுமதியுடைய அழுகை சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் ஓடி வந்தார்கள்.

அதற்குள் ஒருவர் 101 போன் செய்தார்.

ஆம்புலன்ஸ் வந்ததும் ராசாத்தி, முத்து பிறர் உதவியுடன் பானுவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்க்ள்.

பானுமதியின் அழுகை அவளின் பிரசவ வேதனையை சொல்லாமல் சொல்லியது. அவசர அவசரமாக முத்துவிடம் கையெழுத்து வாங்கினார்கள் அங்குள்ள மருத்துவ ஊழியர்கள்.

ஆப்ரேசன் தியேட்டருக்குள் பானுமதி கொண்டுச் செல்லப்பட்டாள்.

பின்னாலேயே பதற்றத்துடன் சென்ற முத்துவையும், ராசாத்தியையும் தடுத்து நிறுத்தினார் ஒரு நர்ஸ்.

“நீங்கல்லாம் இங்கயே இருங்க…”

டாக்டர் புனிதா உள்ளே சென்ற 30 நிமிடத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது.

முத்துவுக்கும் ராசாத்திக்கும் ஆனந்த அதிர்வை அந்த மழலையின் முதல் அழுதை ஏற்படுத்தியது.ஆனந்தக் கண்ணீர் விட்டான் முத்து.

டாக்டர் புனிதா சிரித்த முகத்துடன் “ஆண் குழந்தை பிறந்திருக்கு”..என்றபடி குழந்தையை ராசாத்தியிடம் கொடுத்தார்.
http://1.bp.blogspot.com/-mFJiq-NlxEg/UBzCKjx0O9I/AAAAAAAAAZA/qFyUbjqaK6U/s400/1.jpg

என் செல்லம்..இதோடா அப்பா பாரு…அத்தையைப் பாரு என்றபடி முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆப்பரேசன் தியேட்டரிலிருந்து பானுவின் அலறல் சத்தம் மீண்டும் கேட்டது.

ஒரு நர்ஸ் அங்கிருந்து டாக்டர் அறைக்கு வேகமாக பதறி அடித்தபடி வேர்க்க விறுவிறுக்க ஓடினாள்.

மின்னல் வேகத்தில் புனிதா டாக்டரும் அவரோடு இன்னும் சில டாக்டர்களும் ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.


முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.

என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.

கலைவேந்தன்
14-08-2012, 12:04 PM
என்ன நடந்திருக்கும்..? இன்னொரு குழந்தை பிறந்திருக்கும்.. அவ்வளவுதான்.. :)

நாஞ்சில் த.க.ஜெய்
14-08-2012, 06:27 PM
ஆர்வத்தினை தூண்டும் தொடர்கதை ...தொடருங்கள் தோழர்...

otakoothan
21-08-2012, 11:04 AM
சட்டத்தின் படி (10)

சென்ற வாரம்
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.


திவாகரன் வருவதற்கு பவ்யமாக கதவைத் திறந்து விட்டு ஏசியை ஆன் செய்தான் ஆபீஸ் பியூ ன்.

கோட்டை கழட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்டர்காமில் மேனேசரை அழைத்து பேக்டரி விசயங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்ட பின் மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் மற்றும் புதிதாக கிடைத்து இருக்கிற ஆடர்களை பற்றியும் இருவரும் விவாதித்தார்கள்.

நிட்டிங் சூப்பர்வைசர் வந்தாரா?

இல்லைங்க சார்…வேலைக்கு இனிமேல் வரமாட்டார் என்றார் மேனேசர்.

திவாகரன் கண்களாலேயே ஏன் என்றார்

நமக்கு வர வேண்டிய நூல் பண்டல்களை வேறு கம்பெனிக்கு அவர் அனுப்பி வைத்து கமிசன் பெற்ற அந்த விவகாரம் நிருபணமாகி விட்டது. அதை நான் தட்டிக் கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார். என்று தயக்கத்துடன் சொன்னார் அந்த மேனேசர்.

வெரி குட். கேள்விப்பட்டேன். நானும் அதைப்பத்தி கேட்கலாமுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் என்ன செய்யனுமுன்னு நினைச்சேனோ அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க. உடனே அவருடைய ரூமை காலி பண்ணிடுங்க.

நிட்டிங், கட்டிங,; ஓவர்லாக், பேட்லாக், பிரிண்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து செக்சன் சூப்பர் வைசர்களுடன் சென்று ஆய்வு நடத்திவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்குள் நுழைந்தார்.

டேபிளின் மீது இருந்த பைல்களை எடுத்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு, இண்டர்காமில் மேனேசரிடம் ஏதோ பேசிவிட்டு டையிங் பேக்டரிக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றார்.

அவர் போன சிறிது நேரத்தில் ஆபிஸ்க்கு வெளியே பவ்யமாக “என்ன நினைத்தாரோ முதலாளி” என்ற குழப்பத்துடன் தன் மகனுடன் நின்றுக் கொண்டிருந்த வேலுவை அழைத்தார் அந்த மேனேஜர்.

இந்தாப்பா பையனும் நீயும் அந்த கேண்டினுக்கு சென்று சாப்பிட்டு இங்கே வாங்க… கேண்டீனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் போங்க என்றார்.

வேலு மகனுடன் கேண்டீனில் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மேனேசர் ரூம் அருகே வந்து நின்றான்.

டையிங் பேக்டரியிலிருந்து திவாகரன் "என்ன ரெண்டு ஜெனரேட்டர்களும் ரிப்பேரா? இன்சார்ஜ் எங்கே போனார்?" என்றபடி படு கோபமாக அங்கிருந்த ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார்.

சார் இன்சார்ஜ் எங்கயோ வெளியில போறதா சொல்லிட்டு போனாரு…

உடனே மேனேஜருக்கு போன் செய்தார் திவாகரன்.

என்னய்யா வேலைப் பாக்குறீங்க? காலையில சேம்பல் கொடுத்தாகனும் என்ன செய்வீங்களோ ஏது செயிவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துக்குள் ஜெனரேட்டர் ஓடியாகனும் என்று மிரட்டியபடி போனைக் கட் செய்தார்.

டையிங் இன்சார்ஜ்க்கும் மெக்கானிக்குக்கும் எத்தனை தடவைசொன்னாலும் மண்டையில ஏறாது இப்போ என் தலையிலதான் கட்டிட்டு போயிட்டாரு முதலாளி. அவனுங்க வரட்டும் நாளைக்கு பார்த்துக்கிறேன் என்றபடி அந்த மேனேசர் புலம்பிக்கொண்டிருந்தார்.

“அங்கு நின்றுக் கொண்டிருந்த வேலு மிகவும் பணிவாக அய்;யா எனக்கு ஜெனரேட்டரெல்லாம் ரிப்பேர் பாக்கத் தெரியுமுங்க..மெக்கானிக்கிடம் 5 வருசம் ஹெல்பரா வேலை பாத்திருக்கேன்”;.

வேலுவை ஏற இறங்க பார்த்த மேனேசர் “உனக்கு மெக்கானிக் வொர்க் தெரியுமா? ஓட வைச்சுருவியா?”

“ஐயா ஜெனரேட்டரை பார்த்தபின்தான் என்ன போயிருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதை பார்த்து பின் கண்டிப்பாக ஓட வைத்து விட முடியும”; என்றான் வேலு.

உடனே திவாகரனுக்கு போனில் தகவல் சொன்னார் மேனேசர்.

உடனே வேலுவையும் அவர் மகனையும் கூட்டிக்கொண்டு மேனேசர் காரில் டையிங் பேக்டரியை அடைந்தார்.

ஜெனரேட்டர் அருகில் நின்றிருந்த திவாகரனை வேலு கும்பிட்டபடி “ஐயா” என்றான்

“போப்பா போய் என்னென்னு பாரு”

ஜெனரேட்டரை ஆன் செய்தான் வேலு. கர் கர் என்ற சப்தம் மட்டும் வந்தது
http://3.bp.blogspot.com/-wpOYyGaNto0/UCjIwbHaccI/AAAAAAAAAZY/roem4Nux0Cg/s400/ross14.jpg


உடனே ஏதோ யோசித்தவனாய் அருகிலுள்ள டூல் பாக்ஸிலிருந்து ஸ்பேனரை எடுத்து டீசல் டியூபை கழற்றி விட்டான். பிறகு உள்ளிருந்த பில்டரை அனைத்தையும் கழட்டினான். அவன் நினைத்தபடியே டீசல் அடைத்துக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் சுத்தம் செய்துக் கொண்டிருக்கையில்…

அங்குள்ள பணியாட்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.

திவாகரன் “நிறுத்துங்க..உங்களைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒரு பானை சோத்துக்கு”… என்று திவாகரன் முடிப்பதற்குள்

வேலுவின் மகன் “ஒரு குண்டா சாம்பார் ”; என்றான்.

திவாகரன் உட்பட அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

அவனுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தான் வேலு.

எல்லாவற்றையும் சரியாக பொருத்தியபின் ஜெனரேட்டரை ஸ்ட்டார்ட் செய்தான் வேலு. ஜெனரேட்டர் ஓடத் துவங்கியது. அனைவரின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது.

“இந்தாப்பா ம்ம் வேலு நீ இங்கேயேயிருந்து ஜெனரேட்டரை பார்த்துக்கோ.! என்றபடி மானேசரிடம் பையனை தன்னுடைய ஆபிஸ் ரூமில் தங்க வைக்கும் படி சொல்லிவிட்டு பேக்டரிக்கு காரில் சென்றார்

ஒரு மணி நேரத்திற்குபின் தன் மகனை காண வேலு MD ரூம்மிற்கு சென்றார்.

மகனை காணவில்லை

ஒவ்வொரு இடமாக தேடினான் எங்கும் பையனில்லை.

RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

எங்காவது தொலைந்து போய் விட்டானா வேலுவின் மகன்?

அடுத்தவாரம் பார்ப்போமா?

otakoothan
29-08-2012, 11:14 AM
சென்ற வாரம்
RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

(11)
அரைமணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார் அவரின் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது.

டாக்டர்…..என்றழைத்தபடி முத்துவும,; ராசாத்தியும் அவரை நெருங்கினார்கள.
கருப்பை ரொம்ப பலவீனமா இருந்ததாலே வலி தாங்க முடியாம ரத்தப் போக்கு அதிகமாகிப் போச்சு. ரத்த அழுத்தமும் கம்மியாயிட்டே இருக்கு. என்னால் முடிந்த அளவுக்கு சிகிச்சையளித்துவிட்டேன். இனி கடவுளின் கையில்தான,;; உள்ளேபோய் பாருங்கள் என்று விரக்தியுடன் கூறியபடி சென்றார்.

அய்யோ என்று அலறியபடி, இருவரும் மிகுந்த சோகத்துடன் கண்களில் கவலை ததும்பும் கண்ணீரை துடைத்தபடி லேபர் வார்டுக்குள் சென்றார்கள்;.

அங்கே…அருகில் குழந்தையுடன் படுத்துக் கிடந்த பானு, தன் உயிர் போனாலும் உன்னை உயிரோடு பெற்|றுவிட்டேன், உன்னை பிரியப் போகிறேனே என்று கண்கலங்க அரை மயக்கத்தில் வலியோடு அந்த சின்னக் குழந்தையைப் பார்த்தபடி கிடந்தாள்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். அழக்கூட முடியாமல் தயங்கி தயங்கி, அருகில் வந்த ராசாத்தியிடம் சன்னமான குரலில்,

“அண்ணி இனி நான் …..”

“இல்லை அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது.” வந்த துக்கத்தை நெஞ்சிலே அடக்கியபடி ஆறுதல் சொன்னாள் ராசாத்தி.

முத்து, தன் தோளிலிருந்த துண்டை வாயில் வைத்தபடி….“பானு பயப்படாதே என்னை விட்டு போகவிடமாட்டேன்” பானுமதி கரத்தைப் பற்றியவாறு முத்து கதறினான். அவனையறியாமல் ஆண்மையையும் மீறி, கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

இதுதான் தாம்பத்யத்தின்; உண்மையான உறவோ?

பானு…குழந்தையை கையில் எடுக்கும் படி கண் ஜாடையில் கூற, ராசாத்தி குழந்தையை எடுத்து பானுமதியின் கழுத்தருகே காண்பித்தாள்.

பலமுறை அந்த பிஞ்சுவை முத்தமிட்டபடி, “அண்ணி இனி நான் பிழைக்க மாட்டேன. இந்த குழந்தைக்கு இனி நீங்கள்தான் தாயும் , அத்தையும்.கடவுளா பார்த்துத்தான் உங்களை எங்களுக்கு கொடுத்துள்ளார்.’ என்று கண்கலங்க அழுதாள் பானு.

என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற முத்துவைப் பார்த்து, “என்னங்க எந்த காலத்திலும் உங்க தங்கையை கைவிட்டுடாதீங்க” என்று தன் கணவரை பார்த்து கூறியபடி விக்கித்து சொன்ன பானுவின் கண்ணுக்கு தெரியாத உயிர் பிரிந்தது.

ராசாத்தி கையிலுள்ள குழந்தையை அணைத்தப்படி கதறினாள்..

தலைதலையாக அடித்துக் கொண்டு முத்து அழுது புரண்டான்.
http://2.bp.blogspot.com/-ZPb0f2_-N9Y/UDcofzdpJPI/AAAAAAAAAcY/NdHP_ZGGpEk/s400/1212.jpg

என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும், மாண்டார் வருவதில்லை.

வந்த உயிரை பானுமதி தந்த உயிரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் ராசாத்தி மிகவும் அக்கறை செலுத்தினாள்.

காலத்தின் சக்கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா? ஒரு நிமிடம் என்பது எவ்வளவு உயர்நதது என்பது சோம்பேறிக்கும் உழைக்கத் தெரியாதவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லை

ஊன் உறக்கமில்லாமல் உழைத்தவர்களின் கணடுபிடிப்பால் இன்றைக்கு இரவினில் இருளில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணமே நேரத்தை நேசித்ததன் விளைவுதான். அதன் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுயிருக்கிறோம்.

மாதங்கள் கடந்தன.

நிறைமாத கர்ப்பிணி ராசாத்தி, நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது பிரசவலி எடுததது.

பல்லைக் கடித்துக் கொண்டு, குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு, அவளையும் அறியாமல் அம்மா என்று கத்தினாள்

அந்த சப்தம் எட்டு வீடு தாண்டியும் கேட்டது.

இதே சப்தம் பணக்காரர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கேட்டிருந்தால் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டடார்கள.

ஆனால் அந்த பகுதி ஏழைகள் வாழும்; என்பதால், போட்டது போட்டபடி பெண்களும் ஆண்களும் முத்துவின் வீட்டிற்கு ஓடி வந்தார்கள்.

நிலமையுணர்ந்த பெண்கள், ஆண்களை வெளியேபோக சொல்லிவிட்டு, ஆறுதலாக “கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று படி, வயதில் முதிர்ந்த தாய்மார்கள்.. பிரசவ ஏற்பாட்டினைச் செய்தனர் மணிகணக்கில் இல்லை... சில நிமிடத்ததில் குழந்தையின் அழுகை சப்தம்…. அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள்.

எங்கேயோ சென்றுவிட்டு வந்த முத்துவிடம் “இந்தாட முத்து…. உன் தங்கைக்கு பெண்குழந்தை பொறந்திருக்கு, போய் பேறுகால செலவு வாங்கிட்டு வா” (பேறுகால செலவு என்றால் குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க கூடியவை துவையளாகசும் கசாயமாகசும் கொடுப்பார்கள் இன்று மருத்துவமனையில் நடப்பது வேறு.)

முகமெல்லாம் பூ ரிப்பான முத்து “இதோ ஒரு நிமிடம்” என்று கடைக்கு ஓடினான்.

செலவுடன் வந்த முத்து, குழந்தையை எடுத்து மகிழ்ந்தாள். சில நாட்கள் பக்கத்து வீட்டுத்தாய்மார்கள் முத்துவினுடைய குழந்தையையும் பச்ச ஒடம்புக்காரியான ராசாத்தியைகவனித்துக் கொண்டார்கள்.

உடல் தேறிய ராசாத்தி, தன் குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலையையும,; முத்துவினுடைய குழந்தைக்கு புட்டிபாலையையும் தன் மடியில் படுக்க வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது முத்துவின் குழந்தையினுடைய பிஞ்சு விரல், ராசாத்தியின் மார்பை வருடியது.

திகைத்துப் போன ராசாத்தி பக்க வீட்டு பாட்டியிடம், முத்துவினுடைய குழந்தையைப் பார்க்க சொல்லிவிட்டு, பூ க்கடைக்கு சென்றாள்.

பூ க் கடையில் மலராத மல்லிகையும், காய்கறிக்கடைக்கு சென்று ஒரு கோஸ்(காய்) வாங்கி வந்து மார்பு மீது மல்லிகை பூ வை வைத்து, அதன் மீது கோஸ் இலையை வைத்துக் கட்டினாள்.

முத்துவின் குழந்தையை எடுத்து வந்த பாட்டி, ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு

“உனக்கொன்ன பைத்தயமா? அப்படி செய்யாதே பால் வற்றி போகும்.”

“இல்லைம்மா குழந்தைக்கு ஏம்மார்பு பால் குடிக்கனும் ஆசை”.

“கொடுக்க வேண்டியதுதானே ?”

“அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”

“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

என்ன முடிவு என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?

otakoothan
03-09-2012, 10:12 AM
சட்டத்தின் படி(12) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

“சார் சொல்லுங்க சார்”

“பக்கத்துலே வேலுயிருந்தா செல்லக்குடுப்பா”

வேலு முதலாளி என்றபடி வேலுவிடம் வெல்லை கொடுத்தார் மனேசர்

“ஐயா வணக்கம்”

“வேலு உன் பையன்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ அவனுடைய காலில் தீக்காயம் இருந்ததைப் பார்த்தேன். உடனே உன்னிடம் சொல்லாமல் ஆஸ்ப்பிட்டல் கூட்டி வந்துவிட்டேன்”

“ஐயா …நீங்க…. என் பையன் மேல..”

“ரொம்ப அக்கரையின்னு கேக்குற?”

“யோவ் வேலு.. உன் பையன் ரொம்ப புத்திசாலி. நான் வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு. அவன் சொன்ன ஜோக்குலே நான் என்னயே மறந்து சிரிச்சிட்டேன்யா.. என்னன்னு சொல்லறேன் கேளு. பழமொழி ஒரு வரி தான் சொன்னேன். அடுத்தவரி அவன் சொன்னது என்னத் தெரியுமா?

தம்பியுடையார்…அண்ணன் செட்டியர்

நல்ல மாட்டுக்கு 2கிலோ புண்ணாக்கு

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்”

என்று சிரித்தபடி சொன்னார் முதலாளி திவாகரன்.

சிறிது நேர மவுனத்திற்கு “கவலைப்படாதே பையனை பங்களாவுக்கு கூட்டிட்டு போறேன். காலையிலே பேக்கரிக்கு வந்துடு.”

அடுத்தநாள் காலையில் தன் குழந்தை முதலாளி திவாகரனுடன் காரில் புது துணியணிந்தபடி முதலாளியின் கையை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.

இக்காட்சியை கண்ட வேலு மற்றும் ஊழியர்கள் திகைப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தார்கள்.

வேலுவை ஆபிஜ்க்கு வரும்படி ஜாடையில் அழைத்தவாறு முதலாளி சென்றார்

“பையனுக்கு என்ன வயசாச்சு”

“ஐயா 5 முடிஞ்சு 6 வயசாச்சு”.

‘இனி நீ பழைய வீட்டை காலி செஞ்சுட்டு பேக்டரி வீட்டிலே தங்கிடு. ஸ்கூல்லே சேர்த்திடலாம். பையனை படிக்க வைக்கிறது என் செலவு”.

எப்படி இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. கடவுளே உனக்கு நன்றி.சொல்வதா முதலாளிக்கு நன்றி சொல்வதா இல்லை இங்கு என்னை வேலைக்கு சேர்த்தாரே டிரைவருக்கு நன்றி சொல்வதா என்று நினைத்து மலைபோல் சிலையாக நின்ற வேலுவைப்பார்த்து

“என்னப்பா நான் பாட்டுக்கு சொல்லிட்டேயிருக்கேன். நீ பேசாமயிருக்க?”

'முதலாளி"

“உன் குடும்பத்தை பற்றி. எல்லாம் டிரைவரிடமும் உன் பையனிடமும் கேட்டு தெரிஞ்குக்கிட்டேன். ஆனால் உன்னிடம் நிறை இருப்பதை மனேசர் மூலமாகவும் நேரிடையாகவும் தெரிந்தது. உனக்கு பனியன் கம்பெனியில் என்ன என்ன வேலைத் தெரியுமோ அத்தனையையும் செய்ய உனக்கு முழு உரிமை தருகிறேன் ஆனால் தப்பு தண்டா நடந்தால் நடக்கிறதே வேற”. என்று கடும் எச்சரிக்கை யோடு சொன்னார்.

பத்தாண்டு கால இரவு பகல் என்று பாரமல் நேரத்தை அலட்சியப்படுத்தாமல் தன்னை அரவணைத்த பனியன் பேக்டரி முதலாளியின் நம்பிக்கையும் பெற்றார் வேலு. உழைப்புடன் சேர்ந்து நாணயமும் இருந்தததால் இன்று வேலு முதலாளி திவாகரின் வலது கை மட்டுமல்லாமல் ஒர்கிங் பார்ட்னர் என்ற நிலை வரை உயர்ந்தான்.

எல்லா தொழிலும் தெரிந்தால் மட்டும் போhதாது உண்மை வேண்டும் கடமைக்காக உழைப்பது வயிரை கழுவ மட்டுமே உதவும். அதையே தன்னுடைய தொழிலாக நினைத்தால் உயர்வு தானக தேடி வரும் என்பதற்கு வேலு ஒரு உதாரணம்.

குடிகாரனாக, ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்தவனாக. மனைவியைப் பிரிந்து இனி வாழ்க்கையே இல்லை என்ற அளவு இருந்த வேலுவுக்கு இந்த உயர் நிலைக்கு வரக் காரணம் நேர்மையான உழைப்பு.

வேலுவின் செல் மணியடித்தது.
http://1.bp.blogspot.com/-iRaN5zzq0rg/UD2xesD3ipI/AAAAAAAAAc0/KQRQFaqKKi8/s320/11.gif

சொல்லுங்க முதலாளி…..
….
ஆடிட்டர் ஆபிஸ்லதான் இருக்கேன்…
….
அமௌண்ட் போட்டாச்சு…
;;;;;;……….
லண்டன் ஜெர்மனிக்கு அவர்கள் கேட்ட ஆர்டர் முழுவதும் பையர் மூலமா அனுப்பிட்டேன்.அமெரிக்க பையர்க்காக வெயிட்டிங் பண்ணிட்டு இருக்கோம்.
………
நோ ப்ராப்ளம்…யூ னியன் லீடர்க்கிட்ட பேசி எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டேன்.

;;;;;……………

இன்சினியர்கிட்டப் பிளானைப்பற்றி முழுமையா சொல்லிட்டேன் இலர் ஒரு வருசத்தில் கட்டிடத்தை முடித்து தர்ரேன்னு சொல்லிட்டாரு.
……….

பாரின்லேயிருந்து நாலு கம்பெனியிடமிருந்து மெசினரி கொட்டீடசன் வந்திருக்கு நீங்க சொன்னா டிக் பண்றேன்.
……….

சரிங்க டிக் பண்ணி அ|னுப்பிச்சறேன். நாளைக்கு புது பேக்டரி கட்டறதுக்கு
பூ மி பூ சை போடனும் நீங்க அவசியம் வரணும்.
……….

அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.

பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


யார் அந்த அரவிந்த்…..அவனது ரிசல்ட் என்ன ஆக போகுது…….

அடுத்த வராம் வரை காத்திருங்களேன் …

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 12:27 PM
சும்மா சொல்ல கூடாது இப்படியும் இன்று நடக்குமா எனும் எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணத்தையும் தாண்டி செல்கிறது கதை அருமை ஒட்டகூத்தன் தொடருங்கள்....

otakoothan
21-12-2012, 06:22 AM
சென்ற வாரம் அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”

“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”
“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”
“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;
“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”
“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான
“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”
“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”
“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.
“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”
“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”
“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”
ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.


முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”
“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”


“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”


“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”
“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”
பின்னே?
“தெய்வம் ஆத்தா தெய்வம்.”
ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”
“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”


“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”
கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..
“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”
“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து
“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!
புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”
“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க


“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,
ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”
“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”
ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?

otakoothan
21-12-2012, 06:24 AM
சட்டத்தின் படி(14) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம் அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……

வேலு மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பைலாக பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் அரவிந்த் காலில் விழுந்துக கொண்டிருப்பதைகூட அவர் கவனிக்கவில்லை.


சுற்று பொறுமையிழந்த அரவிந்த் “ அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா… நான் மாநிலத்தில் 2 வதுமாணவனாக பாஸாயிட்டேன்.” ஏன்று மகி;ழ்ச்சி பொங்க சொன்னான்.
ஏவ்வித சலனமுமின்றி சந்தோசத்தை காட்டாமல் எந்திரிப்பா என்றார் வேலு.


“என்னப்பா மாநிலத்தில் 2 வது மாணவனாக பாஸ் பண்ணியிருக்கேன….; கொஞ்சம் கூட சந்தோசமா இல்லையே..?”


“இல்லைப்பா நான் உன்னை படிக்க வைச்சிருந்தேனா… பாஸ் பண்ணியிருப்ப.. ஆனால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்ட, உன்னை ஆசிர்வாதம் பண்ணறதுக்கோ சந்தோசப்படறதுக்கோ எனக்கு உரிமையில்லப்பா.”.


“என்னப்பா சொல்லறீங்க? நீங்க என்ன பெத்த அப்பா”…


“இல்லைன்னு சொல்லலையே? உங்க அம்மாவை தொலைச்சிட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு வந்த எனக்கு இந்த பேக்டரியில் எல்லா உரிமையும் கொடுத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க, பேச சொல்லிக் கொடுத்து இன்னைக்கு இந்த பேக்டரியின் ஒர்க்கிங் பார்ட்டனரா உயர்ந்த நிலைமைக்கு…..”


“அது உங்களோடு கடினமான உழைப்பின் பிரதி பலன் தானப்பா”


அரவிந்தனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து “என்னடா உழைப்பு? பெரிய உழைப்பு? இந்த பேக்டரியில் 20 வருசம் 30 வருசமா வேலை செஞ்சவனுங்க உழைக்காததை விடவா நான் கடுமையா உழைச்சுட்டேன்.? முதலாளிக்கு நாமென்ன ஒட்டா? உறவா? நம்மள இத்தனை ஒசரத்திலே வைச்சுயிருக்காரு. இவருயில்லைன்னா நீ படிச்சே யிருக்கமாட்ட…நானும் குடிச்சுட்டு தெரு தெருவா அலைஞ்சுட்டுத்தாயிருந்திருப்பேன். என்னை பற்றி டிரைவர் முழுக்கதையையும் சொல்லியும் அவரா இதுவரைக்கும் என்கிட்ட கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. இப்ப சொல்லு…நீ மொதல்ல யார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கணும்.?


அரவிந்த் தலைகுனிந்தபடி “சரி இப்பவே போறேன்பா…”


“நான் தான் உன்னை ஆசிர்வாதம் பண்ண வந்துட்டேனே… என்ன மாநிலத்தில் முதலாவதா வருவன்னு எதிர்பார்த்தேன், பரவாயில்லை 12 வகுப்பில் கண்டிப்பா வருவ…காலில் விழுந்த அரவிந்தை தொட்டு ஆசிர்வதித்தபடி வேலு புது பேக்டரிக்கு பூமி பூஜை போடணும்ன்னு சொன்னேன்ல்ல…போலாமா?”
ஐயா…..
ஐயா …ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன்…


என்ன வேலு…என்ன நாள் நட்சத்திரம் கிரகம் இதிலே எதாவது?


ஆமாங்கய்யா……….


“வேலு எந்த ஜோசியர்கிட்ட ஜோசியம் பார்த்து நல்ல நேரம் பார்த்து எங்கிட்ட வேலை கேட்டியா இல்லை நாதான் உனக்கு நல்ல நேரம் பார்த்து வேலைக்கு சேர்;த்தேனா?. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து அத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற புது மாப்பிள்ளை புது பெண்ணுமே சில நாட்களில் கோயிலுக்கு சாமி கும்பிட போற வழியில கார் ஆக்சிடன்ட்ல செத்ததை எத்தனை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கோம்? சரி சரி உன் விருப்பபடியே செய்ப்பா..”
“இல்லை..முதலாளி இப்பவே பூமி பூஜை போடலாம்”


“வேலு இன்னொரு முக்கியமான விசயம் இவன் ப்ளஸ் 2 முடிப்பதற்கு முன்னமே பேக்டரி வேலையெல்லாம் முடிச்சிடனும்…டேய் அரவிந்த்….”


ஐயா….


ம்ம்…இந்ந ஸ்கூலியே படிக்கிறயா இல்லை…வேற ஸ்கூல சேர்ந்துப் படிக்கிறயா?


ஐயா எப்படி சொன்னாலும் சம்மதம் தாய்யா…


“ஏண்டா நானா படிக்கப் போறேன்…? இந்த நன்றி கின்றி நெனச்சு உன் படிப்பை பாழாக்கிடாதே..உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்னடா முழிக்கிற?
வேலு வா போய் பூமி பூஜை போடலாம். டேய் நல்லா யோசித்து சொல்” என்றபடி முதலாளி திவாகரனும் வேலுவும் பூமி பூஜை போட சென்றார்கள்.

otakoothan
21-12-2012, 06:25 AM
சட்டத்தின் படி(15) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்

ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


காலில் முள் குத்தியதா? காலில் கல் பட்டதா என்பதனைக் கூட அறிய முடியாத நிலையில் உள்ள ஓட்டம.


நெஞ்சினிலே பதற்றமும் பதைபதைப்பும் நிறைந்துயிருந்தும் கடவுளை வினாடிக்கு வினாடி முருகன் முத்தாய்யம்மன் வரை என் குழந்தைகளுக்கு எதுவும் நேரக்கூடாது என் குழந்தைகளை காப்பாற்று என வேண்டியபடி பள்ளிpக்கூடத்தை நெருங்கினாள்.


அம்மா அம்மா என்ற குரல் கேட்டு எங்கடி தியாகு ? என்று மகள் தயமந்தியைப்பார்த்து கேட்டாள் ராசாத்தி.


கூட வந்த முத்து தமயந்தியைக் கட்டித் தழுவி சாமி கண்ணு உனக்கொன்னும் ஆகலயே?


அண்ணா வான்னா, அவதான் நல்லாயிருக்கா இல்லே..தியாகுக்கு என்ன ஆச்சோ கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது என்று சற்று சப்தமாக சொல்லியபடி கூட்டத்தை நெருங்கினாள்.


அத்தை அத்தை என்று கூப்பிட்டபடி தியாககு ஓடி வந்து ராசாத்தியை கட்டடி பிடித்து கொண்டாள்.


தியாகுவை உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டபடி என் ராசா உனக்கு ஒண்ணுமாகாது நான் கும்பிட்ட கடவுள் நமக்குத் துணையிருக்கு என்று சந்தோசத்தில் தன்னையும் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.


பின்னாலே மூச்சு வாங்கி கொண்டு வந்த பாட்டி சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி டேய் முத்து பார்த்தாயாடா தான் பெத்த புள்ளையைக் கூட மறந்துட்டு உன் பையன் மேலே எவ்வளவு பாசமாயிருக்கா..


முத்து தமயந்தியை தோளில் தூக்கி வைத்து தலையை வருடிக் கொண்டிருப்பதைப்பதை பார்த்த ராசாத்தி பாட்டி அண்ணனுக்கு தமயந்தியின்னா உயிரு. என்று பேச்சை மாற்றினாள் ராசாத்தி.


உடனே பாட்டி “சரி சரி எந்த கொள்ளிக் கண்ணாவது உங்க மேலே பட்டுற போகுது.”


பாட்டியின் கோபம் உடனே பள்ளியின் பஸ் ஓட்டிய டிரைவர் மீது பாய்ந்தது. கோபம் தீம்பிளம்பாய் வெடித்தது.


யோவ் உங்கொழந்தை இப்படி செத்திருந்தா துடிச்சு போவாயா இல்லை உம் பொண்டாட்டிக்கு அலுவாயும் மல்லிகைப் pooவையும் வாங்கிக் கொடுத்து கொஞ்சி விளையாடுவியா? ஒன்;னா ரெண்டா அடுக்கடுக்கா எத்தனைப் பிஞ்சுகள்? ஓட்ட வண்டி காத்து கணக்கா வேகம் ஒரே வண்டியில 300 குழந்தைகளை 9 மணிக்குள் சேத்தியாகனும் என்ன கொடுமை முதல்ல இப்படிப்பட்ட பள்ளிக் கூடத்தை மூடணும்.


அப்புறம் இவன் மாதிரி டிரைவருடைய பரம்பரைக்கே லைசன்ஸ் தரக்கூடாது. காலமெல்லாம் களி திங்க வைக்கணும்.இதெல்லாம் இந்த அரசாங்கம் எப்போ செய்யப் போகுதோ?


பாட்டியின் ஆவேசமான பேச்சு கூட்டம் மொத்தமும் பாராட்டியது.


அத்தை…


என்னப்பா தியாகு?


எனக்கு இந்த இங்கிலீஸ் பள்ளிக்கூடம் வேண்டாம்…


ஏன்?


அம்மா நாங்க அரசாங்கப் பள்ளிக் கூடத்திலே படிக்கிறோம் என்றாள் மகள் தமயந்தி.


ஆமா அத்தை நீங்களோ அப்பாவோ காலையிலும் மாலையிலும் கூட்டி கோக வந்துடுவீங்க. எங்களுக்கும் பயமில்லை உங்களக்கும் பயமில்லை இல்லயா?
என்னம்மா ராசாத்தி குழந்தைகள் சொல்றது எனக்கு சரியின்னு படுது உனக்கு?
இல்லையிண்ணா…இங்கிpலிஸ் பள்ளிக்கூடத்திலே படிச்சு நாளைக்கு பெரிய படிப்புக் கெல்லாம் வசதியாயிருக்கும்


அய்யோ அத்தை அங்கேயும் இங்கிலிஸ் எல்லாம் சொல்லி தராங்க. மத்தியானம் சாப்பாடு கூட தராங்க. புத்தகம் துணிமணி எல்லாம் சும்மா தராங்க.
ஆமாம்மா. நாங்க ரெண்டு பேரும் வாத்தியார் நடத்துறதே கேட்டு நல்லபடியா படிச்சுக்கிறோம். கவலைப் படாதேயம்மா என்றாள் தமயந்தி.


கார் ராசாத்தி தமயந்தி எவ்வளவு தெளிவா சொல்லறா இது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்.


ஆமாண்ணே தியாகுவும் இதைத்தான் சொல்றான். குழந்தைகள் விருப்பப்படி யே செய்திடலாம். ஏ தியாகு அங்க எத்தனை வகுப்பு வரையிருக்கு? 12 வரை யிருக்கும்மா?


ஆமா அத்தை 12 வகுப்பு வரை யிருக்கு. சரி ராசாத்தி டி சி யை வாங்கி ரெண்டு பேரையும் சேர்த்திடலாம் என்றான் முத்து.


அப்போ 6 வருசம் இந்த கவர்ன்மென்ட் பள்ளியில படிக்கலாம்ல்ல? சந்தேகமே வேண்டாம் என்று முடிப்பதற்குள்


பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி


அதென்ன சிக்கல்?


அடுத்த வாரம் பார்ப்போம்.

otakoothan
21-12-2012, 06:26 AM
சட்டத்தின் படி(16) ....-சுவாரஷ்யமான தொடர்கதை
சென்ற வாரம்

பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி


அதென்ன சிக்கல்?
என்னடா சிக்கல் என ஆத்திரத்துடன் கேட்டார் முத்து.

அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ன இத்தனை நாளும் இங்கிலிஸ் படிச்சதுக்கே அனி தமிழிலே தான் எல்லாம் பேசனும் இங்கிலிஸ் பேச வாய்ப்பில்லையே அதுதான் சிக்கல்

அடச்சீ அங்கேயும் இங்கிலீஸ் சொல்லி தராங்க. டேய் நீ பொறந்த உடனே அம்மா அன்னுதான் அழுத. மம்மி மம்மி அம்மி அம்மி ன்னடா அழுத?

என்னயிருந்தாம் இங்கிலீஸ் பள்ளிக்கூடம் மாதிரி வருமா?

ஆமாண்டா வராது வரவே வராது எல் கே ஜி க்கே 20 ஆயிரம் உக்காந்தா காசு எந்திருச்சா காசு ஓட்டவண்டிக்கு காசு.

டேய் இந்தியாவுல வேண்டாம் தமிழ்நாட்டுல எடுத்துக்கோ தமிழ்லே படிச்சு எத்தனை கலெக்டர், போலீஸ் அதிகாரி, விஞ்ஞானியாக எல்லாம் இருக்காங்க. அவங்களுக் கல்லாம் என்ன இங்கிலீஸ் தெரியாதா, அடேய் இவனே திருக்குறளை இன்னைக்கு உலக மொத்த மொழியிலும் எழுதிதாண்டா. ஜப்பான் காரானுக்கும் சைனாக்காரனுக்கும் இங்கிலீஸ் தெரியாது ஆனா அது வல்லரசு நாடுடா வெறும் பகட்டு கவுரவம் பார்த்து பாலாய் போனது போதும் எங்கொழந்தைகள் தமிழ்ல படிகத்கட்டும் எடுத்த காலி பண்ணு என்ன ராசாத்தி நான் சொல்றது?

ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க..ஆமா இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படித் தெரியுமண்ணே?

அப்ப அப்போ தமிழ் மன்றமும் தமிழ் ஆர்வம் உள்ளவங்க கூட்டத்தில் பேசறத கேட்பேன். என்னயிருந்தாலும் ஒடம்பிலே ஓடுறது தமிழ் ரத்தம் தானே?
முத்துவும் ராசாத்தியுமு; பரிப+ரண திருப்தியாக தன் குழந்தைகளை அரசாங்;க பள்ளியில் சேர்த்தனர்.

தனியார் பள்ளிக்கு இணையாக தம் பள்ளியை ஆமம்படுத்தும் முயறிசியில் தலைமையாசிரியர் முதல் கழட நிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததின் பலன் படிப்பு விளையாட்டு கனனி அறிவியல் என்ற முறையில் தமிழ் நாட்டல் அரசு பள்ளி முதன்மை இடம் பெற்றது. அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முத்துவின் மகன் தியாகு விளையாட்டுத் துறையில் மாவட்ட அளவில் முதலானவனாக வந்தான். படிப்பிலும் சோடை போகவில்;லை.

ராசாத்தியின் மகள் தமயந்தி தமிழில் மிகவும் ஆர்வமுள்ளவளாக கட்டுரை கவிதை ஓவியம் என பல துறைகளில் பிரகாசித்தாள். ஆங்கிலமும் கணிதம் கடின என்ற வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்..

ஆக தியாகு தமயந்தியின் மேல் ஆசிரியர்கள் தனி கவணம் செலுத்தினார்கள்.
இவ்விருவரின் வளர்ச்சியின் ;ராசாத்திக்கு பெரும் பங்குண்டு.சும்மா படி படி என நச்சரிகக்காமல் விளையாட்டு என விளையாட்டையும் அனுமதிதத்தாள்.

குழந்தை பருவம் முதலே கண்டிப்பு கலந்த பாசத்துடன் வறுமை என்றால் என்ன என்று உணரும் படியும் சில சமயம் புரியும் படியும் செய்வாள்.

ஆடம்பரமான பொருளை அறவே ஒதுக்கி தள்ளினாள். மீறி கேட்டாள் வியர்வை வந்தவுடன் அத்தனையுமு; அழிந்துப்போகும். உள்ள அழபு கோதுமு; சுத்தாமாக யிருந்ததாலே தனியழகுதான் என்பாள் குழந்தை பிஞ்சு மனதிலர் பதிந்த உண்மை காலத்தால் மாற்ற முடியவில்லை.

பல ஆண்டுகாலம் தனிமையில்; இருந்த முத்து கால சூழ்நிலையில் கூடா நட்பு மது மாது என்று தன்னை மறந்து செய்யக் கூடாத சமூக தவறுகளை செய்தான் இதன் மூலம் கிழடக்கக் கூடிய அதிக வருமானம் தவறுகளை மேலும் செய்யத் தூண்டியது.

ஆனாலும் அவன் மனதில மற்றவர் துன்பபடுவதை கார்த்தால் உதவக் கூடிய நல்ல மனதுமிருந்ததது பசி யென்று கையேந்துபவர்களிடனம் தன் பசியை இடக்கிக் கொண்டு மற்;றவர் பசியை போக்கியது முண்டு.

பானுமதியை சந்தித்து குடும்பம் நடத்திய நாள் முதல் பானுமதி இறக்கும் வரை மாதுவை விட்டொழித்தானே தவிர மதுவை விட முடியவில்லை. பானுமதி இறந்த பின்கும் ஒரு சில மாதங்கள் தன் பழைய தொழிலையே செய்து கொண்டிருந்தான்

ஆனால் ராசாத்தியை தன் உடன் பிறந்த தங்கையாக வந்ததின் மாற்றம் பழைய தொழிலை விட்டொழித்து கிழடக்கின்ற கூலி Nவுலை செய்ய ஆரம்பித்தான். கொற்ப வருமானம் காரணமாக குடியை அறவே ஒழித்து தன்னை தானே மாற்றிக் கொண்டான். அதிக வருமானம் உள்ள போதும் குறைந்த வருமானம் உள்ள கோதுமு; இதுவரை ராசாத்தி முத்துவிடனம் என்ன வேலை என்று ஒரு வார்த்டதை கேட்டது கூட இல்லை.

அடிக்கடி அவன் கடவுளிடம் வேண்டுவது என்னை பழைய நிலைமைக்கே பழைய தொழிலுக்கு திருப்பி விட கூடாது என கண்ணீருடன் veவண்டிக் கொள்வான்.

வேலுவின் மகனுக்கு பாஸ்போர்ட் எல்லாம் தடங்களின்றி கிடைத்தது. திவாகரனிடமிருந்து விசா கிடைத்ததுஃ வேலுவிற்கு மகனை பிரிவதில் ஒரு புறம் மன கஸ்டம் இருந்தாலும் இங்கேயிருந்தால் அவன் கெட்டு கோப நிறைய வழியண்டு என எண்ணியது மட்டுமில்லை

முதலாளி திவாகரன் சொல்லுக்கு கட்டுபடுவதுதான் தர்மமும் கூட என்று எண்ணினான் வேலு.

அரவிந்த் என்னுடைய பெயரை காப்பாற்ற வேண்டாம் நம்ம முதலாளி திவாகர் பெயரை காப்பாற்று நல்லா படி. அடிக்கடி எனக்கு போன் பேசு

என்றபடி எனக்கு இங்கே நெறைய வேலையிருக்கு ஏர்போர்ட்க்கு கூட வரமுடியாது போ Nபுhய் கார்ல ஏறு என்று மகனை வழியனுப்பி வைத்தான் வேலு.

அரவிந்த் காரில் சென்னை வந்து செர்ந்தவுடன் டிலைவர் அண்ணே நாளை காலைல தான் பிளைட் ராத்திரிக்கு நல்ல ஓட்டல்ல தங்கிடறேன். நீங்க..?
நான் கார்லயே தங்கிடறேன் தம்பி.

சே…வேண்டாம்ன்னே…பக்கத்திலே வேறு லாட்ஜ்ல தங்கிழுங்க என்று கூறியபடி டிரைவர் மறுக்க மறுக்க 2 ஆயிரம் ரூபாயை டிரைவர் பாக்கெட்டில் சொறுகினான் அரவிந்த்.

முத்து சொன்னாக் கேளு லம்பா சுளையா பத்தாயிரம் உன் கமிசன் மட்டும் இல்லைன்னே நான் அந்த தொழிலை விட்டு தொம்ப வருசமாச்சு

அட கமிசன் பத்தரையின்னா இன்னும் 5 ஆயிரம் சேர்த்து வாங்கித்ததர்ரேன்.
கொஞ்க வருமானத்தான்…கூலி வேலைத்தான்..ஆனா நிம்மதியா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. அதைக் கெடுத்துடாதே…

முத்து பெரிய இடம் மனசை மட்டும் மாத்து இந்த அமட்டராசுல உனக்கு தெரியாத முகமே..இல்லை. உன் பேச்சு திறமையினால் படியாததைக் கூட படிய வைச்சுரவ..இன்னும் என்ன யோசனை இந்தா அட்வான்ஸ். என்று சில 500 ரூபாய் நோட்டுகளை முத்துக் கையில் திணித்தார்.

முத்து கடும் கோபத்துடன் கண் சிவக்க ரூபாய் நோட்டுகளை முகத்தில் வீசியெறிந்து போய்யா போ..என்று கோபப்பட்டு கத்தினான் முத்து.

சப்தம் கேட்டு அடுக்களையிலிருந்த ராசாத்தி வேகமாக ஓடி வந்தாள்.

ராசாத்தியை பார்த்தவன் ஓஓ இதுதான் சங்கதியா, இதுவவும் பானுமதி மாதிரியா? பரவாயில்லை என்று வந்தவன் சொன்ன மறு நிமிடம் இவன் கன்னத்தில் கண் பொறி தட்;ட பளார் என்று அறைந்தான்.

கன்னத்ததை நீவியபடி பணத்ததை பொறுக்கிக் கொண்டு வருவய்ய முத்து வருவ..அப்போ..பாத்துக்கறேன் என்றபடி சென்றான் அந்த ஆள்.

பதறி போன ராசாத்தி அண்ணா யாருண்ணா அது? ஏன் அந்தாளு அப்படி சொல்லிட்டு போறான்? …

அடுத்த வாரம் பார்ப்போம்.

otakoothan
25-04-2013, 08:12 AM
சட்டத்தின்படி (17)

சொல்றேம்மா சொல்றேன் இல்லை கேட்காதே எதையும் கேட்காதே!

அண்ணா நீங்க இன்னும் என்னை கூட பொறந்தவளா நெனைக்கல. அதுதான் ஏதோ வந்தா நம்ம கொழந்தையைப் பார்க்க ஒரு ஆள் கிடைச்சிடுச்சின்னு நெனைக்கிறீங்களே தவிர இன்னும் சொந்த தங்கச்சியா ஏத்துக்கல. அதுதான் உண்மை.

ராசாத்தி இந்த அசிங்கத்தை உங்கிட்;ட எப்படியம்மா சொல்லறது?
அண்ணா ப+சணிக்காயை மூடிமூடி வைத்தாலும் பொய்யை ஒழிச்சி ஒழிச்சி மறைத்தாலும் அது என்னைக்குமே ஆபத்துதான்.
இல்லைம்மா அது வந்து வந்து….
வந்து போயி எல்லாமே உலகத்திலே நடக்கிறதுதான் நான் உங்ககிட்ட கேட்கறது யாரு அந்த ஆளு?
உங்களுக்கும் அந்த ஆளுக்கும் என்ன உறவு..பகை இதை கூட விறந்த தங்கச்சியா நெனச்சியிருந்தா மட்டும் சொல்லுங்க இல்லை வேற மாதிரி அநனச்சியருந்தா வேண்டாம்ணே!

தயக்கத்துடன் முத்து துயர சொற்களை மென்று முழுங்கிய படி சொல்லம்மா சொல்றேன். சிறிய பெரிய பெருமூச்சுக்கு பின்…
அப்பன் ஆத்தா யாருன்னே எனக்குத் தெரியாது ஆனாலும் பெத்தவ மாதிரி ஒருத்தி என்னை வளர்த்து ஆளாக்கினா. அவ எப்படியிருந்தாலும் கடவுளுக்கு சமம் தான் இவசுட இருக்கும் வரை எந்த கஸ்டமும் தெரியலை. படிக்கவும் வைச்சா ஆன ராத்திரி முழுக்க அவ பக்கத்திலே மாத்தி மாத்தி ஆம்பளை குறல் அப்புறம் நிறைய பேர் வருவானுங்க போவானுங்க…
இதென்னமோ எனக்கு வரவு செலவு மாதிரி தோணுச்சு. அசிங்கமாவும் தெரிஞ்சிச்சு. எதிர்த்துக் கேட்;பேன்.
அவ உடல வித்துதான் இந்த அனாதையை காப்பாத்துறாள் அப்படீன்னு தெரிஞ்சுச்சு.அப்புறம் என்ன குல தொழில் அவ செத்ததுக்குப் பின்னாடி அவ மூலம் நாசூக்கா எசகு பிசகாக தெரிஞ்ச்ச தொழில் மீடியேட்டர் புரோக்கர் இப்;படி பெயருள்ள தொழில் அசிங்கத்தை ஆனாலும் செஞ்சேன்.

அரசியல் வாதியிலிருந்து ஆபிஸர்கள் வரைக்கும் 2000, 5000 வihக்கும் கிடைக்கும். சட்டம் ஒழுங்கு அது இதுன்னும் இருந்தாலும் சமூகத்திலே மரியாதைன்னு ஒண்ணு இருக்கிறது எனக்குத் தெரியல.

கண்ணில் மிருட்சியோடு கேட்டுக் கொண்டிருந்தால் ராசாத்தி.


சட்டத்தின்படி (18)

லாட்ஜிலிருந்து அரைகுறை ஆடைகளுடன் ஆண்களையும் பெண்களையும் அள்ளி வந்தது போலிஸ். அதனைக் கண்ட பாண்டி திரும்பி ஓட முயன்றவனை வேலுவின் டிரைவர் அமுக்கி பிடித்து ஓரமாக அழைத்துச் சென்று,
சொல்லு உண்மையை..உன்னை போலிஸ்ல் காட்டிக் கொடுக்க மாட்டேன். இல்லைன்னா….
உண்மையை சொல்லறேங்க…இந்த லாட்ஜ்pல் தங்கியிருந்த விடலைப் பையன் பொண்ணு வேணும்னு கேட்டான் பெரிய இடத்து பையன் மாதிரி தெரிஞ்சுது. சுலையா ஒரு தொகை கிடைக்கும்னு அலைஞ்சேன்.; அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா நானும் அந்த பையனும் போலிஸ்ல மாட்டியிருப்;போம்.

பாண்;டி; சொல்லி மு;டிப்பதற்குள் டிரைவர் லாட்ஸை நோக்கி ஓடினான்.

வரவேற்பரையில் மனேசரிடம் வேலு மகன் அரவிந்;த ஏதோ காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கவனித்த டிரைவர்…

ஐயா இவர் பெரிய இடத்து பிள்ளை பிரச்சனை பண்ணாதீங்க…
நான் பிரச்சனையெல்லாம் பண்ணல. இந்த தம்பிதான் பண்ணுது. தம்பியுடைய ஊர் பேர் அப்பா பெயர் கேட்டா இன்ஸ்பெக்டரே ஆடி போயிட்டார். தம்பிக்கு புத்தயுமு; சொல்லிட்டு போனார். இனிமே இங்கே மட்டுமில்ல..இந்த மாதிரி லாட்ஜ்ல தங்க வேண்டாம் கொன்னேன் இது தப்பா இதுக்கு…
ஐயா நடந்தது நடந்துருச்சு. விடுங்க தம்பி ரூமை காலி பண்ணிட்டு ஏர்போர்ட் கெஸ்ட் அவுஸ்ல தங்கிட்டு ஓய்வெடுத்துட்டு காலை 5 மணிக்கு பிளைட்ல கிளம்புங்க…என்றபடி அறையை காலி செய்யச் சென்றார் டிரைவர்.

காரில் டிரைவர் மெதுவாக அரவிந்திடம்…
தம்பி சொன்னா தப்பா எடுக்காதீங்க…
உங்கப்பாவை சென்னையிலிருந்து லாரியில் கூட்டி வந்ததே நான் தான். நான் அவரை வேலைக்கு சேத்துவிடல. சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி கஸ்டப்பட்டு இன்னைக்கு பெரிய முதலாளிக்கு அடுத்தபடியா வளர்ந்திருக்காரு. அவர் பெயரை கெடுத்துராதப்பா…

இப்போதைக்கு தெரிஞ்சுக்க., புரிஞ்சுக்க வேண்டியது படிப்பு மட்டும்தான். இந்த சில்மிசம் இருந்தா வாழ்க்கையே சீரழிஞ்சிடும். இன்னும் நீ கண்ணுக் குட்டிதான். காளையில்லை.

அண்ணா…வந்து…

பயப்படாதே..உங்கப்பாகிட்ட சொல்லி உன் படிப்பை நான் கெடுக்க மாட்டேன். புதுநாடு,புது மொழி,பழக்க வழக்கம் எல்லாமே அமெரிக்காவில் உனக்கு புதுசாததான் இருக்கும்.
எல்லா கெட்ட கர்மத்தை மறந்து புதியவனாக வர முயற்சி செய்.உனக்க எல்லா வகையிலும் பெரிய முதலாளி உதவி செய்வார்.

மௌனம் கலையாமல் டிரைவர் சொன்னதைக் கேட்டபடி யிருந்தான் அரவிந்த்.
தம்பி படிக்கணும்னு ஆசையிருக்கிரவனுக்கு வசதியில்லை. வசதியுள்ள வர்களுக்கு வழி தவறி கடைசியிலே சொல்லவே கஸ்டமாயிருக்கு. உங்களுக்கு எல்லாவித வசதியுமிருக்கு நல்லா படிங்க.

வேலு தன் அறையில் பைல்களை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். பிய+ன் ஓடி வந்து வேலுவிடம் ஏதோ சொல்ல்…

அப்படியா வரச்சொல்லுங்க…

வாங்க உட்காருங்க. ஐயா பரவாயில்லை என்றார் டிரைவர்.

நான் சென்னையிலிருந்து வந்து ரெண்டு நாளாச்சு சம்சாரத்துக்கு உடம்பு முடியல. ஆஸபத்திரியில தங்க வேண்டியதா போச்சு. அதனால…

அதனால என்ன இப்ப?. அம்மாவுக்கு எப்படியிருக்கு? லீவு வேணும்னா எடுத்துக்கோங்க. என்றபடி
இண்டர் காமில் கேசியரிடம் ஏதோ சொல்ல…
மீண்டும் டிரைவர் தயங்கியபடி அய்யா தம்பி அரவிந்த…
நல்லபடியா அமெரிக்கா போய் சேர்ந்துட்டானாம்..நைட்தான் திவாகர முதலாளி போன்ல்ல சொன்னார்
கேசியர் கவரை வேலுவிடம் கொடுக்க அவரை போக சொல்லிவிட்டு
இந்தாங்க இதில பத்தாயிரம் ரூபாய் இருக்கு. மனைவியை நல்லபடியா பாத்துக்கோங்க..ஆ ..ஒரு விசயம் இந்த பணம்உங்க சம்பளத்திலிருந்து பிடிக்க மாட்டோம் நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு சின்ன உதவிதான் மேலும் பணம் வேணும்னா தயங்காமல் கேளுங்க
கண்ணில் நீர் தழும்;ப நன்றியுடன் வேலுவை பார்த்படி நின்றார் டிரைவர்.
சட்டத்தின் படி (19)

வேலுவின் கவலையெல்லாம் தன் மகன் அரவிந்தனுடைய செய்கையிலும் செயலிலும் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் தன்னை இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வந்த முதலாளி திவாகரன் முன்னால் தலைகுனிவு ஏற்பட்டால் அய்யோ நினைக்கவே பயமாகயிருந்தது. உடம்பு வேர்த்தது. தண்ணீரை குடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

உடனே ஏதோ நினைத்தவராக தன் மகனை தொடர்புக் கொண்டார்.

"அரவிந்த் நான் தானப்பா…"

"சொல்லுங்கப்பா"

"இப்போ நீ சாப்பிடறது உடுக்கிறது படிக்கிறது எல்லாம் என்னுடைய பணமில்லை. அவரு உனக்கு சொந்த பந்தமில்லை."

"புரியுது சொல்லுங்க."

"அவர் நமக்கு கடவுள் மாதிரி… அவருடைய பெயருக்கு களங்கம் வந்திரக்கூடாது."

அரவிந்தனுக்கு தான் செய்த தவறு டிரைவர் மூலம் அப்பாவுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம் அப்பிக் கொண்டது.

"அப்பா உங்க மனசிலே யாரோ என்னைப் பற்றி தவறா….."

"தவறா? மற்றவர்கள் சொல்லுமளவிற்கு செய்திருந்தால் திருத்திக் கொள். மற்றவர் தவறை கண்டு பிடித்து திருத்தும் நிலையில் நானும் நீயும் இருக்க வேண்டுமே தவிர தவறை மூடி மறைக்கும் நிலை நீடித்தால் புற்று நோய்க்கு வெண்சாமறம் வீசியதாகத்தான் முடியும். புடிப்பில் கூர்மையான கவனிப்பு மட்டும் இப்போதைக்கு உனக்குத் தேவை. இருக்கின்ற, படிக்கிற இடத்தின் பழக்க வழக்கங்கள் வேறு மாதிரி. பார்த்து நடந்துக்கோ. தேவையற்ற செலவு உன்னை பெரும் சுமைக்கு ஆளாக்கும்…பார்த்து நடந்துக்கோ."

வேலு-அரவிந்த் பேச்சு துண்டிக்கப்படுகிறது.

எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை தானே கட்டுப்படுத்தாத நிலைமைக்கு ஆளாகிறான் அரவிந்தத்;. மேலை நாட்டு கூட நட்பு மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு தன்னை தானே வருந்தி விரும்பி நேசித்ததன் விளைவு.
அப்போது உள்ளே வந்தார் திவாகரன்.

"டேய் அரவிந்த் உன் மனசுல என்ன நெனச்சிகிட்டு இருக்க,? நம்ம ஊரல இருந்த கெட்டு போயிருவேன்னு நெனச்சு என் கண்காணிப்புலே இருந்த ஒருங்கா வருவேன்னு நெனச்சேன். ஆனா நீ நைட் கிளப் இது இதுன்னு அசிங்கபடுத்தறயே? உன்னை நல்லா படிக்க வைச்சு இங்கேயிருக்கிற நம்ம கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கலாம் ன்கிறது தான் என் திட்டம் இதுலே மண்ணை போட்டறாதேடா."

"உங்கப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாத்தணும் இன்னும் கொஞ்ச வருசத்திலே உன் படிப்பு முடிஞ்சுரும். அதுவரை இந்த பழக்கத்தை யெல்hம் மூட்டை கட்டி வை. எம் பையனும் தாண்டா தாயில்லா பையன். ஆனா இவன் ச்சே அவனோட உன்னை கம்பேர் பண்ண விரும்பல. உங்க அப்பா வோடு உன்னை பண்ணிப் பார். இல்லை படிக்க விரும்பவில்லைன்னா இந்தியா போக ஏற்பாடு பண்ணறேன். பதில் உடனே வேண்டாம் காலையில சொன்னா போதும் " என்று நிதானமாக சொன்னார் ; திவாகர்;

தொடரும்

சட்டத்தின் படி (20)

முத்துவின் மகன் பள்ளி இறுதி தேர்வில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டோடு கருணை உள்ளத்துடன் கல்லூரியில் கட்டணம் எதுவுமின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
ராசத்திக்கும் முத்துவிற்கும் சொல்லி மாளாத மகிழ்ச்சி.
“தியாகு உன்னை வளர்க்கறப்போ ஒவ்வொரு நாளும் நான் சந்தோசமா இருந்ததைவிட கவலைப் பட்டதுதான் அதிகம்.”
முத்து தியாகு தமயந்தி எல்லோரும் ராசாத்தியை ஆச்சிரியமாக பார்த்தார்கள்.
என்ன எல்லோரும் அப்படிப் பார்க்கிறிங்க,?
எங்கே என் வளர்ப்பிலே தப்பு வந்திடுமோ என்ற பயம். செடி கொடி மரத்தை வளர்க்கின்ற போது கூட ஒழுங்கா தண்ணி ஊத்தனும், எரு போடணும். இல்லைன்னா அது பட்டுப் போய்விடும். உன்னை சில நேரம் கண்டிச்சுயிருக்கேன். பின்னாடி நான் அழுதுமிருக்கேன். இப்போவும் அழுகிறேன். சுந்தோசத்தில.”
“அத்தை என் தாய் உயிருடன் இருந்திருந்தால் கூட என்னை இப்படி வளர்த்திருப்பாங்களோ என்னவோ..சந்தேகம் தான”;. ஏன்றான் தியாகு.
“ராசாத்தி… பானு இறந்தது எனக்கு பெரும் துக்கம் தான.; இந்த துக்கம் வருசக் கணக்கா இலர்லை மாசக் கணக்கா மட்டுமே இருந்தது. என் மருமகள் தமயந்தியை பள்ளியில பாராட்டின அப்ப நான் எப்படி சந்தோசமா இருந்தேன் தெரியுமா,?” ஏன்று முத்து ராசாத்தி மகள் தமயந்தியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாhன்.
“அத்தை நம்ம தமயந்தி ப்ளஸ் டுவில் கட்டாயம் மாநிலத்தில் முதலாவதாக வருவா. கட்டாயம் அவளுக்கும் என்னை போலவே கல்லூரியில் கட்டணமில்லாமல் இடம் கிடைக்கும்.”
“என்னமோப்பா எல்லாம் கடவுள் செயல். உங்க அம்மா பானுவின் ஆசீர்வாதம். நீங்க படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிருச்சு அண்ணனை வீட்டோடு வைச்சு பார்த்தா போதும்”
“ஏ அத்தை பிரிச்சு பேசறீங்க. உங்களையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்புத்தானே.?”
“அப்போ நான் அனாதையா”? என்று சிறிது வருத்தத்துடன் கூறினாள் தமயந்தி.
“அட என் செல்லமே இந்த மாமா உயிருடன் இருக்கும் வரை நீ அனாதையில்லம்மமா” நீ என் தங்கைச்சி பிள்ளை. முட்டுமில்லஃ என் மகளும் நீதான்னம்மா.” ஏன்றான் முத்து.
“எனக்கு நெனைவு தெரிந்ததிலிருந்து மாமான்னு உறவு யிருந்தாலும், பெத்த தகப்பன் மாதிரி தானே பாத்துக்கிறீங்க. அதனால என்னவோ என் அப்பாவைப் பற்றியோ , தொலைஞ்ச அண்ணனை பற்றியோ இதுவரை நான் கேட்டதில்லை” என்றாள் தமயந்தி.
கொஞ்சம் பொறுங்க. இன்னும் நாலு வருசம்…அப்புறம் உங்களை நாங்கப் பாத்துக்குறோம்.