PDA

View Full Version : வஞ்சியிடம் தூது.



M.Jagadeesan
21-06-2012, 01:59 AM
கால்விரலால் நிலத்தைக் கீறிக்
காதல் சொன்னாள் புரியவில்லை!

கைவிரலால் கூந்தல் கோதிக்
காதல் சொன்னாள் புரியவில்லை!

மைவிழியை மூடித் திறந்து
காதல் சொன்னாள் புரியவில்லை!

மயிலிறகால் கன்னம் வருடிக்
காதல் சொன்னாள் புரியவில்லை!

கைவளையல் ஆட்டிக் காட்டிக்
காதல் சொன்னாள் புரியவில்லை!

கால்கொலுசால் சத்தம் எழுப்பிக்
காதல் சொன்னாள் புரியவில்லை !

மலரொன்றை முகர்ந்து பார்த்துக்
காதல் சொன்னாள் புரியவில்லை !

மரக்கிளையில் ஜோடிப் புறா
காட்டி நின்றாள் புரியவில்லை !

தாஜ்மஹால் சின்னம் காட்டிக்
காதல் சொன்னாள் புரியவில்லை !

தனித்திருக்கும் எந்தன் அருகில்
வந்து நின்றாள் புரியவில்லை !

மணம்புரிந்த அன்று தொட்டு
மறுபெண்ணை நினைத்துப் பார்க்கும்

குணமெனக்கு இல்லை என்னும்
சேதியை எடுத்துச் சொல்ல

வலம்வரும் நிலவே! சற்றே
வஞ்சியிடம் தூது செல்வாய் !

தாமரை
21-06-2012, 07:02 AM
கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறது..

ஏன்னா எல்லாத்தையும் புட்டுப் புட்டு வச்சிட்டு புரியவில்லை என்கிறாரே..

பொண்ணுங்க கிட்ட நாம இதற்குப் பாடம் படிக்க வேணும்.

அண்ணா என்று ஒரு அழைப்பில்
அவர்கள் நம்மை
ஆஃப் செய்துவிடுவது போல

தங்கச்சி என்று ஒரு வார்த்தையில்
தங்கட்சியை சொல்லியிருக்கலாம்.

இரசிக்கிற வரை இரசிச்சிட்டு
அப்புறம் தூது யாருக்கு?

aasaiajiith
21-06-2012, 07:17 AM
மிகத்துள்ளியமாய் மனதில் நான் கூறவிருந்த
கருத்தினை அப்படியே வெளிபடுத்தியமைக்கு
வாழ்த்துக்கள், தாமரை !

sarcharan
21-06-2012, 08:31 AM
அருமையான கவிதை

கீதம்
22-06-2012, 02:13 AM
மனையாளை அல்லாது மற்றவளை
மனதாலும் நினைக்கும் குணமில்லையென்று
எடுத்தவுடனே சொல்லியிருந்தால்,
ஏமாறியிருக்க மாட்டேனே...
எதிரிலேயே நின்றிருந்தும் என்னிடத்தில் சொல்லாது
நிலவைத் தூதனுப்புதல் நியாயமா சொல்வீர்!