PDA

View Full Version : எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

ஆளுங்க
20-06-2012, 04:51 PM
விடுகதை இதோ:

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,

இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான

கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்

போவது வாசல் பத்தில் புக்குவிடை சொல்லுங்களேன்..
பிற தகவ்ல்கள் விடையில்..

அன்புரசிகன்
21-06-2012, 02:21 AM
புனம் (வயல்) மூன்றில் மேய்ந்து (3), வழி ஐந்தில் சென்று (5),
இனமான ஏழ் குள நீர் உண்டு (7), கனமான
கா (சோலைகள் / பல மரங்கள் நிறைந்த.... ) ஒன்பதில் சென்று (9), காடவர்கோன் (???) பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு (????) (10)

இப்போ அந்த எண்ணிக்கை 3,5,7,9,10 இன் மடங்குகள்...
3,9 மற்றும் 5,10 ஆகியன ஒன்றின் ஒன்று மடங்கு என்பதால்
7,9,10 ஆகியவற்றின் பொ ம சி ஆக இருக்க வேண்டும். 630 இன் மடங்குகள்

இதுல வேற ஏதாவது எண்களும் ஒழிச்சிருந்தா இந்த விடை பிழைச்சிடும்.
புக்கு என்பது தான் தெரியவில்லை. அது ஏதாவது கணிதத்தில் விளையாடுதோ???

தாமரை
21-06-2012, 03:30 AM
அன்புவா கொக்கா! சரியா பிடிச்சிட்டாரய்யா, சரியா பிடிச்சிட்டாரு,,:icon_b::icon_b::icon_b:

இப்போ இதன் மறுபக்கம் பார்ப்போம்.

மூன்று காலங்களில் மேய்ந்து
ஐம்புலன்களின் வழியே
ஏழுலகையும் அறிந்து
நவத்துவாரங்களின் வழியே பிராணன் சென்று
காடவர் கோன் - தேவர்களுக்கும் தேவனான பரந்தாமன்
பட்டிணத்தில் - வைகுண்டத்தில் பரமபதத்தில்
போவது - இடம் பெறுவது
வாசல் பத்தில் - அவனின் திரு அவதாரங்கள் பத்தில் (மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம,வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி)
புக்கு - சரண்புகுந்து

இப்படிப் பார்த்தா ஆனை எண்ணிக்கை முடிவிலி:icon_b: ..

:lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
21-06-2012, 04:29 AM
தங்களுடைய கணக்கில் எத்தனை யானைகள் என்று கேட்டுள்ளீர்கள். ஆனால் வெண்பாவில் " யானை " என்ற வார்த்தையே இல்லையே!

புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குள நீருண்டு..கனமான
காவொன்பது தன்னிற் கட்டுண்டு நிற்கவே
கோமன்னர் கூட்டக் களிறு.

இதுவே தாங்கள் குறிப்பிடும் கணக்கு.

மூன்று புவனத்தில் ஒற்றைப் படையாக மேய்ந்து, ஐந்து வழியில் ஒற்றைப் படையாகப் பிரிந்து,ஏழு குளத்தில் ஒற்றைப்படையாக நீர்அருந்தி,ஒன்பது கம்பத்தில் ஒற்றைப்படையாக கட்டுண்ட யானைகள்எத்தனை?

அன்புரசிகன்
21-06-2012, 05:30 AM

இதுவேறயா....................
இதப்படிக்கவே மூச்சு முட்டுது. இதுல யானை இவ்வளவற்றையும் செய்து சரணடைகிறதென்றால்.... அதுவும் முடிவிலி யானைகள் என்றால்...................
அப்புறம்
பரந்தாமன்: இப்பவே கண்ணக்கட்டுதே...............
எல்லாம் புதுசு புதுசா இருக்கிறது...

தங்களுடைய கணக்கில் எத்தனை யானைகள் என்று கேட்டுள்ளீர்கள். ஆனால் வெண்பாவில் " யானை " என்ற வார்த்தையே இல்லையே!

புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குள நீருண்டு..கனமான
காவொன்பது தன்னிற் கட்டுண்டு நிற்கவே
கோமன்னர் கூட்டக் களிறு.

இதுவே தாங்கள் குறிப்பிடும் கணக்கு.

மூன்று புவனத்தில் ஒற்றைப் படையாக மேய்ந்து, ஐந்து வழியில் ஒற்றைப் படையாகப் பிரிந்து,ஏழு குளத்தில் ஒற்றைப்படையாக நீர்அருந்தி,ஒன்பது கம்பத்தில் ஒற்றைப்படையாக கட்டுண்ட யானைகள்எத்தனை?

காடவர்கோன் பட்டணத்தில் என்ற வரியை காணவில்லையே....
இது எங்கிருந்து வந்ததென்று தெரியாததால் ஆளுங்கவிற்கே வெளிச்சம்...

தாமரை
21-06-2012, 06:17 AM
புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குளநீ ருண்டு - கனமான
காவொன்ப தன்னிலே கட்டுண்டு நிற்கவே
கோமன்னர் கூட்டக் களிறு.

- இது கேள்வி

புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குளநீ ருண்டு - கனமான
காவொன்ப தில்சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவதுவா சல்பத்தில் புக்கு

இது பதில்

இரண்டையும் பார்த்தால் இரட்டைப் புலவர்களின் கேள்வி பதில் போல இருக்கிறது.

முதல் செய்யுள்,

முக்காலமும் மேய்ந்து ஐம்புலன்கள் வழியே ஏழுலகையும் அறியும் ஆன்மா நவத்துவார உடலில் கட்டுண்டு கிடக்கிறது என்கிறது.

பதிலோ நவத்துவார உடலில் கட்டுண்டு கிடக்கும் அந்த ஆன்மா பத்து அவதாரங்கள் செய்த பரந்தாமனைச் சரண்புக அவனுடைய பட்டிணமாம் வைகுண்டத்தை அடையலாம் என்கிறது.

களிறு - ஆன்மா..

இப்படிப் பார்த்தால் களிறு ஒன்றுதான். :smilie_abcfra:

இந்தப் பாடல்களின் மூலம் அறிந்தால் சரியான பொருள் அறிய முடியும். இவை கணக்குகள் அல்ல என்பது என் எண்ணம்.

M.Jagadeesan
21-06-2012, 06:43 AM
களிறு என்றால் ஆண் யானை. ஆண் பன்றிக்கும் களிறு என்று ஒரு பெயருண்டு.

ஆதி
21-06-2012, 06:48 AM
புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குளநீ ருண்டு - கனமான
காவொன்ப தன்னிலே கட்டுண்டு நிற்கவே
கோமன்னர் கூட்டக் களிறு.

- இது கேள்வி

புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குளநீ ருண்டு - கனமான
காவொன்ப தில்சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவதுவா சல்பத்தில் புக்கு

இது பதில்

இரண்டையும் பார்த்தால் இரட்டைப் புலவர்களின் கேள்வி பதில் போல இருக்கிறது.

முதல் செய்யுள்,

முக்காலமும் மேய்ந்து ஐம்புலன்கள் வழியே ஏழுலகையும் அறியும் ஆன்மா நவத்துவார உடலில் கட்டுண்டு கிடக்கிறது என்கிறது.

பதிலோ நவத்துவார உடலில் கட்டுண்டு கிடக்கும் அந்த ஆன்மா பத்து அவதாரங்கள் செய்த பரந்தாமனைச் சரண்புக அவனுடைய பட்டிணமாம் வைகுண்டத்தை அடையலாம் என்கிறது.

களிறு - ஆன்மா..

இப்படிப் பார்த்தால் களிறு ஒன்றுதான். :smilie_abcfra:

இந்தப் பாடல்களின் மூலம் அறிந்தால் சரியான பொருள் அறிய முடியும். இவை கணக்குகள் அல்ல என்பது என் எண்ணம்.

கூட்டக் களிறு என்று இருக்கே அண்ணா

எனக்கென்னவோ களிறு வெறும் ஆன்மாவை மட்டும் குறிப்பதாக படவில்லை

ஞானம், அறிவு, விழிப்பு நிலை, மனபலம் போன்ற வற்றையெல்லாம் குறிப்பதாக தோன்றுகிறது

மண், பெண், பொன் எனும் மூன்றை தேடி தேடி மேய்ந்து, ஐம்புலன் போன வாறெல்லாம் போய், செய்ய கூடாத பாவமெலாம் செய்து, இந்த ஒன்பது வாய் உடம்பின் சுகமே பிரதானம் என்று திரிந்தால், பெரும் மன்னரின் களிறுகள் கூட்டம் கொடும் மததோடு முட்டிய கோட்டை போல் சிதைந்துவிடும் வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா ?

தாமரை
21-06-2012, 06:56 AM
நீ சொல்லும் அத்தனையும் ஆன்மாவின் குணங்கள் ஆதவா!!!

அவற்றைத் தனிப்படுத்த வேண்டியதில்லை.

மேயச் சென்ற களிறுகள் கட்டுண்டு கிடக்கின்றன. அது எப்படி பட்டிணம் திரும்பச் சேரும் என்பதுதான் எனக்குத் தெரிகிறது.

ஆளுங்க
21-06-2012, 01:12 PM
ஆகா... நல்ல விளக்கங்கள்..!!

அன்புரசிகன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!

இது "கணக்கதிகாரம்" என்கிற நூலில் இடம்பெற்ற பாடல்....

தாமரை
21-06-2012, 01:34 PM
http://www.tamilheritage.org/old/text/ebook/oldtamillet-kanakathigaram.pdf

இந்த நூலில் ஆளுங்க கொடுத்த பாடலே உள்ளது.

ஆளுங்க
21-06-2012, 01:41 PM
http://www.tamilheritage.org/old/text/ebook/oldtamillet-kanakathigaram.pdf

இந்த நூலில் ஆளுங்க கொடுத்த பாடலே உள்ளது.

அதே தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி!

M.Jagadeesan
21-06-2012, 04:29 PM
புனமூன்றில் மேய்ந்து பொறியைந்திற் சென்று
இனமான ஏழ்குளநீ ருண்டு - கனமான
காவொன்ப தன்னிலே கட்டுண்டு நிற்கவே
கோமன்னர் கூட்டக் களிறு.

இந்தக் கவிதையின்படி மொத்த யானைகள் = 315 ( 5 , 7 , 9 ஆகிய எண்களின் மீ. சி. ம.= 315 )

புனம் மூன்றில் மேய்ந்த யானைகள் = 3 x 105

பொறி ஐந்தில் சென்ற யானைகள் = 5 x 63

ஏழு குளத்தில் நீருண்ட யானைகள் = 7 x 45

காவொன்பதில் கட்டுண்ட யானைகள் = 9 x 35

இனி தங்களின் கவிதைப்படி யானைகளின் எண்ணிக்கை = 7 , 9 , 10 ஆகிய எண்களின் மீ.சி.ம.= 630

சுகந்தப்ரீதன்
22-06-2012, 10:39 AM
நீ சொல்லும் அத்தனையும் ஆன்மாவின் குணங்கள் ஆதவா!!!.
ஆதவன் இங்கே அருவமாக பதிவிடுகிறானோ..?!:confused:

ஆதனுக்கும் ஆதவனுக்கும் பேதம்காண இயலாத நிந்தன் ஆன்மநேயம் கண்டேன்; களித்தேன்..!!:lachen001:

தாமரை
22-06-2012, 10:46 AM
ஆதவன் இங்கே அருவமாக பதிவிடுகிறானோ..?!:confused:

ஆதனுக்கும் ஆதவனுக்கும் பேதம்காண இயலாத நிந்தன் ஆன்மநேயம் கண்டேன்; களித்தேன்..!!:lachen001:

வ - அப்படின்னா தமிழ் எண்களில் கால் (அதாம்ப குவார்ட்டர்) என்று பொருள்..

ஆதனுக்கு கை கொடுக்க முடியலை. பூனா போயிட்டான். அதனால கால் கொடுத்தேன்.(மிஸ்டு காலா இருந்திருந்தா "வ" இருந்திருக்காது)(குவார்ட்டர் வாங்கிக் கொடுத்தேன்) உனக்குப் பொறுக்கலையோ?

சு.பீ : அப்ப ஆதவன் குவார்ட்டர் அடிச்ச ஆதனா?
தாமரை : இல்லியா பின்ன. குவார்ட்டர் அடிச்சதால ஜிவ்வுன்னு ஏறி அப்புறம் குப்புறக் கவுந்துபடுத்திடறது இல்லையா?
சு.பீ ; அப்ப.....
தாமரை : தண்ணி அடிச்சா கண்ணு சிவக்கும். சூரியன் ஏன் காலையிலும் சாயங்காலமும் சிவப்பா இருக்குன்னு புரிஞ்சதா?
சு.பீ ; அய்யய்யோ

sarcharan
22-06-2012, 11:17 AM
கதறக்கதற கடிச்சாலும் சிவப்பா (ரத்தம்) வரும்

அன்புரசிகன்
22-06-2012, 11:20 AM
தாமரை : தண்ணி அடிச்சா கண்ணு சிவக்கும். சூரியன் ஏன் காலையிலும் சாயங்காலமும் சிவப்பா இருக்குன்னு புரிஞ்சதா?

கீழ்வானம் மற்றும் மேல்வானம் சிவப்பாயிருக்க காரணத்தை இப்படி வேறுஒருவராலும் கொடுக்கமுடியாது....

jayanth
22-06-2012, 11:20 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
22-06-2012, 11:27 AM
வ - அப்படின்னா தமிழ் எண்களில் கால் (அதாம்ப குவார்ட்டர்) என்று பொருள்..

ஆதனுக்கு கை கொடுக்க முடியலை. பூனா போயிட்டான். அதனால கால் கொடுத்தேன்.(மிஸ்டு காலா இருந்திருந்தா "வ" இருந்திருக்காது)(குவார்ட்டர் வாங்கிக் கொடுத்தேன்) உனக்குப் பொறுக்கலையோ?

சு.பீ : அப்ப ஆதவன் குவார்ட்டர் அடிச்ச ஆதனா?
தாமரை : இல்லியா பின்ன. குவார்ட்டர் அடிச்சதால ஜிவ்வுன்னு ஏறி அப்புறம் குப்புறக் கவுந்துபடுத்திடறது இல்லையா?
சு.பீ ; அப்ப.....
தாமரை : தண்ணி அடிச்சா கண்ணு சிவக்கும். சூரியன் ஏன் காலையிலும் சாயங்காலமும் சிவப்பா இருக்குன்னு புரிஞ்சதா?
சு.பீ ; அய்யய்யோ
அடேங்கப்பா.... நானும் எத்தனையோ யானையை பார்த்திருக்கேன்... அடி சருக்காத யானையை இன்னைக்குதாம்ப்பா பார்க்குறேன்..!!

முத்தெடுக்க இன்னும் ஆழமா தமிழ்கடல்ல மூழ்கனும் போலிருக்கே..!!

vasikaran.g
24-06-2012, 10:53 AM
ஆள் ஆளுக்கு என்னமோ சொல்றீங்க ! புரிஞ்சும் புரியாமலும் போன யானை கூட்டம் . அருமை .