PDA

View Full Version : அலட்சியம்



sukhan
19-06-2012, 07:17 AM
நான் என்னும் தனி ஒருவன்
நாம் என்னும் சமுதாயத்துள்........
தனக்கு என மட்டும் சிந்திக்கிறான்
தனக்கென்ன என பலவற்றை மறக்கிறான்
கண்டும் காணாமல் கலைந்து போகிறான்
பெறுகி ஓடும் லஞ்ச வெள்ளமும்
வெட்டி வீசப்படும் விறகைச் சுமந்த உயிரும்
சிதைந்து போன சமுதாய நலம்
இவையெல்லாம் இவன் செய்த தவறோ???????????
இவர்கள் செய்த தவறோ????????
இல்லை இவர்களுக்குள் இருக்கும்
இவன் தான் காரணம்
- அலட்சியம்

vasikaran.g
24-06-2012, 11:20 AM
நல்லா கருத்து சுகன் ..

கீதம்
25-06-2012, 01:26 AM
அடுத்தவீட்டுக்காரன் எதிரியென்றிருந்தாலும் அவன் வீடு தீப்பற்றினால் தனக்கென்ன என்றிருக்க இயலுமா?

அடுத்திருக்கும் தன்வீடு நினைவுக்கு வர தானாய்க் கரங்கள் தீயணைக்க முயலுமே...

சுற்றிலும் சீர்கேடுகள் காண தான் மட்டும் சுகமாய் வாழ நினைத்தலும் முறையா?

சமுதாய விலங்கான மனிதன், தன்னல விலங்கிட்டுத் தன்னையொதுக்கி வாழ முனைந்தால் கேடு அவனுக்கும்தான் என்பதை அழகாய் உரைக்கும் வரிகள்.

பெருகி ஓடும் லஞ்ச வெள்ளமும்
வெட்டி வீசப்படும் விறகைச் சுமந்த உயிரும்
சிதைந்து போன சமுதாய நலம்
இவையெல்லாம் இவன் செய்த தவறோ?

இந்த வரிகளின் அமைப்பில் ஏதோ குறையைக் காண்கிறேன். தெளிவின்மையாக இருக்கலாம். செப்பனிட்டால் இன்னும் ரசிக்கலாம். பாராட்டுகள் சுகன்.