PDA

View Full Version : தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி



neechalkaran
19-06-2012, 02:34 AM
இணையத் தமிழில் சந்திப்பிழைகள், மரபுப் பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள் உட்பட பலவானவை மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப் பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்த "நாவி (http://tamilpoint.blogspot.com/p/naavi.html)" என்கிற புதுச் செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், 40% சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது,

ஒரு மொழிக்குப் பிழை திருத்தி என்பது 100% செம்மையாக இருக்கமுடியாது, காரணம் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்தபோதும் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு நாவி கணிக்கிறது.
http://3.bp.blogspot.com/-IAs_MGZZ3B4/T92AQdh6ABI/AAAAAAAAA9M/6vz94xpxctI/s1600/tamil%2Beditor.jpg
நாவி (http://tamilpoint.blogspot.com/p/naavi.html) -முகவரி

இச்செயலியில் வாக்கியத்தைப் போட்டு ஆய்வு செய் பொத்தானைத் தட்டினால். வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோக கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடிக்கினால்[click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக "சம்மதம்" என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.

இச்செயலி பிறமொழிச் சொற்கள், உயர்திணைப் பெயர்கள், இடப்பெயர்கள் போன்ற எண்ணற்ற பெயர்களைக் கண்டுனராது. மற்றத் தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட வாக்கியங்களைப் பகுத்து சந்திப் பிழைகளைத் திருத்த முயலும்/பரிந்துரைக்கும். சரியான காற்புள்ளி, நிறுத்தப் புள்ளி, கேள்விக்குறி, தகுந்த இடைவெளி என முறையான வாக்கியமாக இருந்தால் சிறப்பு.

பயன்படுத்திவிட்டு குறைகளையும், அபிவிருத்தி ஆலோசனைகளையும் இங்கு (http://ethirneechal.blogspot.com/2012/06/naavi.html) வழங்குங்கள்

பாரதி
19-06-2012, 08:42 AM
பயனுள்ள செயலியின் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.
இத்தகைய முயற்சிகள் படிப்படியாக பிழைகளை நீக்க உதவும்.

சிவா.ஜி
19-06-2012, 09:04 AM
இப்படிப்பட்ட செயலிகள் இன்னும் சில நாட்களுக்குப் பிறகு மேலும் செம்மையாகும். பலரின் பங்கெடுப்புகள் அவற்றை மேம்படுத்தும்.

தகவலுக்கு நன்றி நண்பரே.

sarcharan
19-06-2012, 09:21 AM
அலுவலகக்கணினியில் இந்த வலைதளத்தை பார்வை இட முடியவில்லை. இரவு மடிக்கணினியில் இதை முயன்று பார்க்கிறேன்.

jayanth
19-06-2012, 09:44 AM
பயனுள்ள செயலியின் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.

கீதம்
19-06-2012, 10:54 AM
தமிழைத் தவறில்லாமல் எழுத விரும்பும் பலருக்கும் பயன்படும் செயலி. அறிமுகப் பகிர்வுக்கு நன்றி நீச்சல்காரன்.

ஆளுங்க
19-06-2012, 02:39 PM
நேற்று தான் இதைப் பற்றி இணையத்தில் படித்தேன்...
தமிழ்மன்றத்திலும் இதைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

கலையரசி
28-06-2012, 01:46 PM
பிழையின்றி எழுத உதவும் செயலி பற்றிய செய்தியைப் பதிவிட்டு உதவியமைக்கு மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
04-07-2012, 06:14 PM
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நீச்சல்காரரே..!! இதற்காக உழைத்தவர்களுக்கு எம் நன்றி உரித்தாகுக..!!

சந்திபிழை இன்றி எழுத தெரியாத என்போன்ற சந்ததியினருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்..!!

leomohan
17-02-2015, 10:04 AM
பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.