PDA

View Full Version : நகைச்சுவை-௧ (1 )..



vasikaran.g
18-06-2012, 04:10 AM
உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!

நைட்'ல தூக்கம் வரலையா? போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க! இதுதான் அழகுல மயங்கி விழறது!

ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா? ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்? ... நோ .. நோ .. அழக்கூடாது...
நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை!
நபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை!
நபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை!
டீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....



ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார். உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....

கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???

எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

டாக்டர்! என்னோட மனைவி ஒரு லிட்டர் பெட்ரோல் குடித்து விட்டாள்! என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க! சரியாகி விடும்!!

தொண்டை கர கரப்பாக இருக்கிறதா? "சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க! இந்த கர அந்த கர எந்த கரையா இருந்தாலும் போய்டும்!

ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.

மகன்: குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா?
அப்பா: ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ வச்சிட்டு போய்டும்!
மகன்: அப்ப நீ டம்மி பீசாப்பா?
----- LKG டெரர்ஸ்


நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!

இராஜிசங்கர்
18-06-2012, 04:30 AM
எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

என்ன மரியாதை!என்ன மரியாதை!


ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

அப்டி சொல்லு சித்தப்பு ..


உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!
:icon_b:

M.Jagadeesan
18-06-2012, 05:43 AM
சிரிப்புகளைப் படித்துவிட்டு விலாநோகச் சிரித்தேன். தொடருங்கள்!

அன்புரசிகன்
18-06-2012, 05:48 AM
த்ரீ ரோசஸ், ஹையாக் மற்றும் காக்கா நகைச்சுவை அருமை...

sarcharan
18-06-2012, 08:50 AM
நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!


ஹீ ஹீ.. சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல..

மதுரை மைந்தன்
18-06-2012, 09:18 AM
நகைச்சுவை அருமை!

சிவா.ஜி
18-06-2012, 06:51 PM
ஹா...ஹா....அனைத்தும் நகைக்க வைத்தன......ரொம்ப சம்பிரதாயமா இருக்கா.......செம தூளுமா....கலக்கிட்டே....பாராட்டுக்கள் வசீகரன்.

jayanth
19-06-2012, 10:58 AM
ஜோக்குகள் அனைத்தும் அருமை...

vasikaran.g
24-06-2012, 10:57 AM
நன்றி ராஜி ..

vasikaran.g
24-06-2012, 10:58 AM
நன்றிங்க ஜெகதீசன் சார் .

vasikaran.g
24-06-2012, 10:59 AM
அன்புரசிகன் ,மதுரைமைந்தன் ,sarcharan ,ஜெயந்த் ,சிவா.ஜி அனைவருக்கும் நன்றி .

lenram80
29-06-2012, 06:02 PM
ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.
:):):):):)

vasikaran.g
30-06-2012, 11:46 AM
நன்றிங்க லென்ராம் !!

அனுராகவன்
15-08-2012, 09:37 AM
பாராட்டுக்கள் வசீகரன்.

கலைவேந்தன்
16-08-2012, 02:05 AM
சிரித்துச் சிரித்து வயிறு நோகுதுங்க.. க்ளாசிக் நகைச்சுவை..!