PDA

View Full Version : யானைக்கும் அடி சறுக்கும்.



M.Jagadeesan
16-06-2012, 06:10 AM
டேய் ! பாஸ்கரா! பரீட்சையில நீ பெயிலாயிட்டியாமே?

ஆமாம் பாட்டி! அடுத்த தடவை எழுதும்போது பாசாயிடுவேன்!

நம்ம வீட்ல இதுவரைக்கும் யாரும் பெயிலானது கிடையாது; நீதான் முதல் தடவையா பெயிலாயிருக்கே!

பரீட்சையில கேள்வி எல்லாம் கொஞ்சம் கஷ்டமா கேட்டுட்டாங்க! அதான் பெயிலாயிட்டேன்; அடுத்த தடவை எழுதும்போது நிச்சயம் பாசாயிடுவேன் பாட்டி!

உடனே அங்கு வந்த அம்மா,பாட்டியிடம், " பரீட்சை சமயத்துல இவன் கிரிக்கெட் மேட்ச் பாத்துக்கிட்டு இருந்தா எப்படி பாசாக முடியும்? நாம சீரியல் பாக்க விடாம நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான். அதான் பெயிலாயிட்டான்; இவன் பெயிலாயிட்டான்னு வெளியில சொன்னா வெட்கக்கேடு!"

அப்போது அங்குவந்த பாஸ்கருடைய அக்கா," நம்ம வீட்டுக் குழந்தைங்க பரீட்சையில மார்க்கு கம்மியா வாங்குனா ," தண்டச்சோறு, மக்கு பிளாஸ்திரி,எருமைமாடு அப்பிடி,இப்பிடின்னு திட்டுவான் .இப்ப இவனே பெயிலாயிட்டானே ! முகத்த எங்ககொண்டு போயி வச்சுக்குவான்னு தெரியலையே! அம்மா ! இந்த லட்சணத்துல இவன் பரீட்சை எழுதும்போது பிட்டு வேற அடிச்சிருக்கான்; இவனோட பிரண்ட் மாதவன் சொன்னான்; நேத்து அவனைக் கடை வீதியில பாத்தேன்; அப்ப அவன் சொன்னான்."

இதைக்கேட்ட பாட்டி,தலையிலடித்துக் கொண்டே, " கருமம்! கருமம் ! பிட்டு வேற அடிச்சானா? அட ஈஸ்வரா! இதக் கேட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே? என்னைக் கொண்டு போயிடப்பா! " என்று புலம்பினாள்.

M. A. தேர்வில் பெயிலான பட்டதாரி ஆசிரியரான பாஸ்கர் , தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன்னுடைய பைக்கின் மீது காட்டி பலமாக உதைத்தார். பள்ளிக்குப் புறப்பட்டார்.

Keelai Naadaan
16-06-2012, 01:34 PM
சிலவரிகளில் கதை முடிந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறது.

காவல்துறை சம்மந்தப்பட்ட தேர்வுக்கு வரும் நபர்களே காப்பி அடிக்கவும் பிட் அடிக்கவும் தயாராக வருகிறார்கள்.

பணம் கொடுக்து சான்றிதழ் வாங்கி ஏமாற்றும் அநேகர் உண்டு. இப்போதெல்லாம் பிட் அடித்தால் தவறில்லை. மாட்டிக்கொண்டால் தான் தவறு.

jayanth
16-06-2012, 04:49 PM
சுவராசியம்...

சிவா.ஜி
17-06-2012, 08:12 AM
இப்படிப்பட்ட ஆசிரியர்களை வைத்துக்கொண்டுதான் பிள்ளைகள் இப்போது மாரடிக்க வேண்டியிருக்கிறது.


ம்...எங்கள் ஆசிரியர்களை கோவில் கட்டி கும்பிடவேண்டும்.


நல்ல கதைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

ஆளுங்க
17-06-2012, 12:44 PM
சீரியல் பார்க்க விடாமல் வயித்தெரிச்சலைக் கட்டிக்கிட்டாராம்.. அந்த டிவியை வித்து இருக்கணும்!!!

நல்ல கதை ஐயா!

கீதம்
18-06-2012, 06:08 AM
இறுதியில் புன்னகை எழுந்தாலும் அவருடைய மாணவர்களை எண்ணி பரிதாபமும் மிகுகிறது. கதையின் இறுதியில் சுவாரசியமான எதிர்பாரா திருப்பங்கள் தந்து அசத்துவதில் கைதேர்ந்தவராகிவிட்டீர்கள். இக்கதையும் தங்கள் திறனுக்கு மற்றுமொரு சான்று. பாராட்டுகள் ஐயா.

sarcharan
18-06-2012, 07:50 AM
பள்ளிப்பருவத்தில் நானும் ஜியாமெட்ரி பாக்ஸில் பிட்டு வைத்து அடித்துள்ளேன். ஆனாலும் அந்த தேர்வில் (சோசியல் சயின்ஸ்) பாஸ் ஆகவில்லை

எனக்கு சோசியல் சயின்ஸ் என்றாலே அலர்ஜி. அந்த பாடத்தில் மட்டும் அவ்வளவு கேள்விகள் வரும். எங்க செட்டுல ஒரு பயலும் படிக்கமாட்டான்.


ஆனால் அந்த பாடம் நடத்திய டீச்சர் மீது ப்ரியம் அதிகம். அவர்கள் வகுப்பில் (நல்ல!!) ஜோக்குகள் எல்லாம் சொல்வார்கள்.

ஒரு வழியாய் பத்தாம் வகுப்பில் அந்த சப்ஜெக்டில் பார்டர் மார்க் வாங்கி பாசானேன்