PDA

View Full Version : தேக தேசம்.



தமிழ்குமரன்
30-12-2003, 02:04 PM
உன் தேக தேசத்தில்
எல்லை கடந்த தீவிரவாதி நான்.
மரணதண்டனையை கூட ஏற்க தயார்
ஆனால்
நாடு கடத்தி விடாதே...

இளசு
30-12-2003, 11:57 PM
தேச நேசம்
ஆக்கிரமிப்பு
இழப்பு

தொடரட்டும்...

பசலை படர்ந்த நிலை..

பாராட்டுகள் தமிழ்..

aren
31-12-2003, 12:28 AM
மனதிற்குள் புகுந்த
மந்திரவாதிக்கு
மரண தண்டனையா?
இல்லவே இல்லை,
பஞ்சணை மெத்தைதான்
இதயம் என்னும்
இனிய வளாகத்தினுள்.

அருமை!! தொடருங்கள்.

இளசு
31-12-2003, 12:32 AM
காதல் ஒரு மந்திரவாதிதான்
கவிதை மாங்காய் ஆரெனிடம் இருந்து..

அலை...
31-12-2003, 12:43 AM
நச் கவிதை..தமிழ்க்குமரன்..பாராட்டுதல்கள்...



மனதிற்குள் புகுந்த
மந்திரவாதிக்கு
மரண தண்டனையா?
இல்லவே இல்லை,
பஞ்சணை மெத்தைதான்
இதயம் என்னும்
இனிய வளாகத்தினுள்.

அருமை!! தொடருங்கள்.

கவிதை எழுதவெல்லாம் வராது என்று எமாற்றும் ஆரென்...புத்தாண்டில் அடிக்கடி இந்தப் பக்கம் வரவும்...

அன்பு

அலை...

aren
31-12-2003, 03:36 PM
உண்மையில் நான் உரைநடையில்தான் சில வரிகளில் அதை எழுதினேன். இளசு அவர்கள் அதை கவிதை மாதிரி மாற்றியிருக்கவேண்டும். என்னுடைய உரைநடை வரிகளை கவிதையாக மாற்றிய பெருமை அவரையேச்சாரும்.

Nanban
05-01-2004, 11:24 AM
அய்யா, சாண்டில்யனை மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே.....

என்றாலும், சாண்டில்யனைப் பிடிக்கும்...... அளவு கடக்காமல், காதல் ஓவியம் தீட்டுவதனால்.......