PDA

View Full Version : தலைப்பற்ற கவிதைஆதி
13-06-2012, 05:30 PM
திறந்து உள்ளே
நுழைய முயலுகையில்
இழுத்து சாத்துகிறாய் மனதை

எல்லயற்ற மனதுக்கு எல்லை வகுகிறாய்
சுற்றுச்சுவர் எழுப்புகிறாய்
கதவு வைக்கிறாய்

யாரும் தாண்டி உள்வந்துவிடும்
சாத்தியங்கள் உணரும் தருணத்தில்
பலவீனங்களை கண்டறிய
பலகோண பரிசீலனை செய்கிறாய்
கூரையீட்டு மூட முடிவெடுத்துக்கு
கனத்த கம்பிகள் மேல் கலவை படர்த்தி
தடித்த மேல்தளம் அமைக்கிறாய்

தனித்த வெற்றறையின் புழுக்கத்தில்
உள்ளிருக்க இயலாமல்
கதவை திறந்து
அகமும் புறமும் வருவது போவதுமாய் இருக்கிறாய்

மிதமிஞ்சிய தனிமையின் கணங்களில்
தட்டப்படாத கதவுகளை திறந்து
யாரும் காத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாய்

யாரும் இல்லாததால் தொற்றிக் கொள்ளும் சோர்வில்
தொய்ந்து உள் திரும்புகிறாய்
யாரும் இருந்திருந்தால் தொற்றிக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியென திட்டவட்டமாய் உரைக்கிறாய்

சுமக்க முடியாத உனது
தனித்த அறையை தூக்கி கொண்டு
ஊரூராய் போகிறாய்
கோவில் கோவிலாய் திரிகிறாய்
ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் குருஜி சொன்ன*
அமுத மொழிகளின் உபயத்தில்
சுவரை கொஞ்சம் பேர்த்து
குளிர்சாதனம் பூட்டுகிறாய்
வெளிப்புறம் கேமிராக்கள் பொருத்தி
கணினி மூலம் கண்காணித்தவாறு
உட்புறமே அமர்த்து கொள்கிறாய்

வெளியே உன்னை யாரும் பார்த்ததாக*
சொல்லுவதே இல்லை

"பொத்தனூர்"பிரபு
14-06-2012, 01:14 AM
👍👍👍👍👌

கீதம்
14-06-2012, 10:13 PM
வாசிக்க வாசிக்க என்னைத் தன்னுள் மூழ்கடிக்கிறது கவிதை. என்னென்னவோ எண்ணங்கள் விரிகின்றன ஆதன்.

1.சங்கோஜமோ, அச்சமோ, குற்றவுணர்வோ, ஏதோவொரு உணர்வின் தீவிரத்தில் உழன்று தன்னத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் ஒருவனால் கூட, புற உலகின் மீதான நாட்டத்தையும், அவ்வுலகின் நடமாட்டத்தையும் கண்ணுறாமல், கவனியாமல் இருக்கமுடிவதில்லை என்னும் உண்மையை உணர்த்தும் வரிகளெனக் கொள்கிறேன். தன்னைப் பற்றிய பிறரது எண்ணங்களை ரகசியமாய் அறிந்துகொள்ளும் முயற்சியோ, மற்றவரின் ரகசியம் அறியும் முனைப்போ... ஏதோவொரு தூண்டலின் பேரில் கண்காணிப்பைப் பலப்படுத்தும் அவனோ, எவராலும் கண்காணிக்கப்படாத வண்ணம் வெகு சிரத்தையுடன் கட்டப்பட்ட கல் அறைக்குள் பதுங்கியிருக்கிறான். கல்லறை செல்லும்வரை கல் அறையிலேயே அவன் வாசம்.

2. தன் சுயம் மறந்து சுற்றம் மறந்து, சூழல் மறந்து, கணினிக்குள் தன்னை நுழைத்து, வெளிவரத் தெரியாமலோ, வெளிவர விரும்பாமலோ, தன்னைத்தானே பணயம் வைத்து வாழும் வாழ்க்கை சூதாட்டம். அவனை யாரும் கவனத்தில் வைக்க வாய்ப்பே தராத தலைமறைவு வாழ்க்கை.

3.அகத்தைக் குறுக்கி புறத்தை விரித்து, அர்த்தமில்லா வாழ்க்கை வாழ்பவனைப் பற்றியக் குறிப்பு.


நிறைய யோசிக்கவைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

உங்கள் விளக்கம் நிச்சயமாய் மாறுபட்டிருக்கும் என்றாலும் எண்ணியதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. இறுதியில் உங்கள் எண்ணத்தின், பார்வையின் பரிமாணம் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

vasikaran.g
16-06-2012, 11:40 AM
தலை பற்ற கவிதை ,
களைப்புற்ற மனதை
சிலை பற்று
உள்ளதாய்
செய்தது ..

சுகந்தப்ரீதன்
16-06-2012, 07:47 PM
டில்லிக்கு ராசான்னாலும் (அவர் இப்ப ஜாமின்ல வெளியில வந்துட்டாரு..:lachen001:) பாட்டி சொல்லை தட்டாதே..!!

“இனிது இனிது ஏகாந்தம் இனிது”

ஆதி
21-06-2012, 07:12 AM
ஒரு தெளிவான ஆரம்பமோ, தெளிவான முடிவோ இல்லாமல், மையமும் இல்லாமல்( அதனால்தான் தலைப்பு வைக்கவில்லை) பின்னவீனத்துவம் தோய்ந்து எழுதிய கவிதை

படிமங்களை இல்லாமல், யார் யாரை பற்றி சொல்கிறார்கள், அல்லது நானே என்னை பற்றி பேசுகிறேனா ? அல்லது ஒரு பெண்ணுடன் பேசுகிறேனா ? அல்லது யாரையும் திட்டுகிறேனா ? அல்லது ஒரு நோயாளியிடம் பேசுகிறேனா ? என்று மையமில்லாமல் எழுதியது

சூழல் கிடையாது, ஆன்மிக குருக்களின் போதனை மன அமைதியை தரவில்லை மனிதனை இன்னும் மனிதனிடம் இருந்து பிரிக்கிறது எனும் தர்கத்தையும், தொழிநுட்பங்கள் நம்மை சமூக வாழக்கையை இழக்க வைக்கிறது எனும் தர்கத்தையும், குருக்களையும், தொழில்நுட்பத்தையும் கேள்விக்குள்ளாகி நாம் சரியான திசையில் செல்கிறோமா எனும் சந்தேக*த்தையும், கடைசி பத்திக்கு முந்தைய பத்தியில் பதிவு செய்திருக்கிறேன்


பின்னூட்டிய அவைவருக்கும் நன்றி

பிறரையும் இன்னும் பல விதங்களில் யோசிக்க வைக்கும் வகையில் தம் கோணங்களை, தான் புரிந்து கொண்ட வகையையும் பதிவு செய்த கீதம் அக்காவுக்கு சிறப்பு நன்றி