PDA

View Full Version : வெற்றிக்கும் ஓர் எல்லையுண்டு



jokertin92
13-06-2012, 09:21 AM
இன்னும் சற்றே அருகே நெருங்கினால் பிடித்துவிடுவேன் அதை,
பிடிகொடுக்காமல் அது ஓடியபோதும் விடவில்லை நான்,
ஏதோ ஒரு உத்வேகத்தில் துரத்துகிறேன், இன்னும் வேகமாய்
எதற்கும் சளைத்ததில்லை போலும் அது, தன் வேகத்தை கூட்டுகிறது
எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா, வேறுவழியில்லாமல் நிற்கிறது
பிடித்துவிட்டேன் அதை, இப்போது உணர்கிறேன்
வெற்றிக்கும் ஓர் எல்லையுண்டு,
விரட்டுங்கள் அதை, வேறு வழியில்லாமல் நிற்கும் வரை!!!!

-நாகா

jokertin92
14-06-2012, 09:20 AM
நண்பர்களே!!
தங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்!!