PDA

View Full Version : சென்னை செந்தமிழ் அகராதி !



vasikaran.g
12-06-2012, 07:55 AM
சென்னையில் வழங்கப்படும் நானாவிதமான 'தனித்தமிழ்' சொற்களை எண்ணி பல நாட்கள், இவற்றின் பொருள் என்னவாக இருக்கும் என்று வியந்திருக்கிறேன். எச்சொல்லுக்கும் உறுதியாக ஒரு பின்புலம் அல்லது காரணம் இருக்கும்; அல்லது ஒரு வரலாறே அதன்பின் ஒளிந்திருக்கும்.

சென்னைத் தமிழ் என்றாலே பொருளற்ற சொற்களை உள்ளடக்கிய ஒரு தனித்தமிழ் என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் சென்னைத்தமிழின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சரியான பொருள் அல்லது பின்புலம் உள்ளது என்பதே உண்மை. இதற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்அகராதி ஒரு சான்றாக விளங்குகிறது. "ஆதலினால், சென்னைத் தமிழில் செப்புவீர், செம்மொழியைக் காப்பீர்"

இணையத்தில் இச்சொற்களை தேடலில் இட்டபோது பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களையே இச்சொற்களின் மீதேற்றி பலவிதமாக பொருளிட்டிருக்கின்றனர். பெரும்பாலானோரின் க*ருத்துக்க*ள் ச*ரியாக இல்லை. மனம்போன போக்கில் அவரவர் எண்ணப்படி 'புருடா' விட்டிருக்கின்றனர். ஆராய்ச்சி நோக்கில் சென்னையில் வழங்கப்படும் 'தனித்தமிழ்' சொற்கள் குறித்து மேலும் தேடிய*போது சுவையான* விடைகள் பெறப்பட்டன.

சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழகராதியே பெரும்பாலும் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/


இச்சொற்க*ள் ப*ல*வும் வேறுமொழியிலிருந்து எடுத்தாளப்பட்ட 'ம*ருவல்'களே என்ப*து தெளிவு. எந்த* ஆண்டிலிருந்து இச்சொற்க*ள் அக*ராதியில் சேர்க்க*ப்ப*ட்ட*ன* போன்ற* விவ*ர*ங்க*ள் அக*ராதியில் இல்லை.

டங்குவார் (தமிழ்)
குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை

ட*ங்குவார் அந்து போச்சு

'டங்குவாரறுதல்' என்ற* சொல் அப்படியே அக*ராதியில் இருக்கிற*து. 'வேலை மிகுதியாற் களைத்துப் போதல்' என்ற* பொருள் 'டங்குவாரறுதல்'க்கு உள்ள*து. அதிக* வேலை செய்து நொந்து போன*வ*னை இங்க*ன*ம் நையாண்டி செய்த*ல் சென்னைய*ர் வ*ழ*க்க*ம். குதிரையின் தோற்ப*ட்டை அறுத*ல் என்று*ம் இத*ற்குப் பொருள் த*ர*ப்ப*ட்டுள்ள*து.

சோமாறி
பொருள் : சோம்பேறி (தமிழ்)

'ஏனாதிப*ர்வகை' என்றும் சோமாறி எனும் சொல் குறிக்க*ப்ப*டுகிற*து. இங்கு 'ஏனாதி' என்றால் வட ஆர்க்காடு, நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியினரைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.

ஏனாதி என்றால் நாவிதன், புறம்போக்கு, ப*டைத்த*லைவ*ன், ம*ற*வ*ன், என்று ப*ல* வித*ங்க*ளில் பொருள் கிடைக்கிற*து.

பன்னாடை
பொருள் : மூடன் (தமிழ்)

கீசிடுவேன்
பொருள் : கிழிச்சிடுவேன் என்பதே இங்கனம் மருவியது.

தாராந்துடுவே
தாரா என்ப*து விண்மீன், வாத்து, ஒருவ*கை நாரை என்ப*ன*வ*ற்றையெல்லாம் குறிக்கிற*து என*த் தெரிகிற*து. இதற்கும் 'தாராந்துடுவே'க்கும் சம்பந்தம் இல்லையென்றும் தெரிகிறது.

தாரன் என்பது உடையவனைக் குறிக்குஞ் சொல்; வார்சுதாரன். என*வே, தாராந்துடுவே என்று திட்டப்படுதல் வாரிச*ற்றுப் போகும் ஒரு நிலையை நினைவுப*டுத்தும் என்று ச*ப்பைக்க*ட்டு க*ட்ட*லாம்.

இந்தியில் 'டர்' என்றால் பயம். 'டர் ஆயிட்டான்பா' என்று பயந்து போனவனைச் சொல்வது வழக்கம். 'தாராந்துடுவே' இதிலிருந்து வந்திருக்கலாம்.

வீட்டாண்டை
அண்டை என்பது பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள் தரும் ஒரு சொல். எனவே கடையாண்டை, வீட்டாண்டை என்று குறிப்பிடப்படுவதை கொச்சை என்று சொல்ல இயலாது. ஆனால் வூட்டாண்ட*, கோயிலாண்ட*, க*டியாண்ட* என்று சொல்வ*தெல்லாம் கொஞ்ச*ம் அதிக*ம்தான்.

ஆதி
12-06-2012, 09:03 AM
//டங்கு//

என்றால் குதிரை என்பது பொருள், அது தெலுங்கில்

திருபதியை கொடுத்துதான் சென்னை வாங்கினோம், சென்னை அதிகம் தெலுங்கு பேசுபவர்கள் இருந்ததால், சென்னை தமிழில் அதிக தெலுங்குவார்த்தைகளை காணமுடியும்

டங்குவார் = குதிரைக்கு அனுவிக்கும் தோற்பட்டை

பெல்ட் பிச்சிடும் என்பதற்கு இணையாகவும் பயன்படுத்த படுகிறது

அதிக பணி பலுவால் தொய்ந்து சோர்வுறுவதற்கு இணையாகவும் பயன்படுத்தப்படுகிறது

சென்னை தமிழில், ஹிந்தி, பர்மா கலப்புக்கள் கூட காணமுடியும்

சிவா.ஜி
12-06-2012, 12:26 PM
அட பரவால்லியே...இதுக்கெல்லாம் கூட அகராதி இருக்கா...?

நல்லாதாம்ப்பா கீது.....

கீதம்
12-06-2012, 12:41 PM
யாராவது எந்த வழிக்கும் வராமல் முரண்டுபிடித்துக்கொண்டிருந்தால் என் தாத்தா, 'அவனோடு பெரிய டக்கப்போரா இருக்கு' என்பார். வெகுநாளாய் அதன் பொருள் எனக்கு விளங்கவே இல்லை. பின்னாளில்தான் புரிந்தது tug of war என்பதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்பது. பல வார்த்தைகள் அவற்றின் பலகாலப் புழக்கத்தின் விளைவாய் மருவி அறியாப் பொருளில் நிற்பது வேடிக்கைதான்.

கலையரசி
12-06-2012, 05:31 PM
பன்னாடை என்றால் தென்னை, பனை மரங்களில் காணப்படும் வலை போன்ற பகுதியையும் குறிக்கும். கள்ளை வடிக்கட்ட இந்த வலையைப் பயன்படுத்துவார்கள். நல்லவற்றைக் கீழே விட்டு விட்டுக் கெட்டவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் இதன் குணத்துக்காக இவ்வார்த்தையை எங்களூரில் கூட திட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள்.

vasikaran.g
16-06-2012, 11:17 AM
தகவல் புதிது ..அறிய தந்தமைக்கு நன்றி ஆதன் .

vasikaran.g
16-06-2012, 11:18 AM
அட ஆமாங்க சிவா.ஜி இதுக்கு கூட அகராதி இருக்கு தெரியுமா ..நன்றி

vasikaran.g
16-06-2012, 11:20 AM
தகவலுக்கு நன்றி கீதம் ..

vasikaran.g
16-06-2012, 11:21 AM
பன்னாடை க்கு
உங்கள்
விளக்கம்
பொன்னாடை !
நன்றி கலைஅரசி