PDA

View Full Version : மனங்கவர் பதிவர் போட்டிக்கான பரிந்துரைகள்



கீதம்
10-06-2012, 07:02 AM
அன்பார்ந்த மன்ற உறவுகளே…

களைகட்டிவிட்டது திருவிழா!

வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் துவங்குகிறது மன்றத்தின் மனங்கவர் பதிவரைத் தேர்ந்தெடுப்பதற்கானப் போட்டி.

கடந்த மாதங்களில் உங்கள் மனங்கவர்ந்த பதிவுகளைப் படைத்தவரை இங்கு பரிந்துரை செய்யுங்கள்.

ஒருவர், ஒருவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

பரிந்துரை செய்யப்படும் பதிவர் உங்கள் மனங்கவர்ந்த காரணத்தையும் தெரிவித்தால் போட்டி களைகட்டும்.

நீங்கள் பரிந்துரைப்பவர் நிர்வாக உறுப்பினராக இருக்கக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி,

உரியவரை வரும் 20 ஆம் தேதிக்குள் முன்மொழிந்து போட்டியை செம்மையாய் நடத்திட ஒத்துழைப்பு தாருங்கள்.

பரிந்துரைக்குப் பின் வாக்கெடுப்பு நடைபெறும்.

அனைவரின் சீரிய ஒத்துழைப்பையும் நாடுகிறோம். நன்றி.

**************************************************************************


மனங்கவர் பதிவருக்கான வாக்கெடுப்பு துவங்கிவிட்டது. இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/29680-மனங்கவர்-பதிவர்-ஏப்ரல்-மே-ஜூன்-2012) சென்று உங்கள் பொன்னான வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே பதியலாம்.

வாக்கினைச் செலுத்த கடைசி நாள் : 24 - 07 - 2012

பண்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வாக்கெடுப்பில் பங்கேற்று மன்ற உறுப்பினர்களை ஊக்குவியுங்கள்.

ஆதி
10-06-2012, 07:43 AM
சென்ற மாததில் எனது மனங்கவர்ந்தவர் மதுரை மைந்தன் ஐயா அவர்கள்

விரைவில் அவர் துவங்கிய திரிகளை இங்கு சுட்டுகிறேன்

ஆதி
11-06-2012, 10:05 AM
அனைவரின் பார்வைக்காகவும் மேலெழுப்புகிறேன்

சிவா.ஜி
11-06-2012, 02:41 PM
எனது பரிந்துரை....கவிதைகளாலும், தொடர்ந்த பங்காற்றுதலாலும் மனம் கவர்ந்த தங்கை இராஜிசங்கர்.

அன்புரசிகன்
11-06-2012, 11:20 PM
விந்தையான தகவல்களுடன் கதை மற்றும் தகவல்களை பகிரும் மதுரை ஐயா......

கீதம்
12-06-2012, 12:19 PM
கலைவண்ணம், கைவண்ணம், கவிவண்ணம் என்று பல்விதப் பரிமாணங்களில் தன் திறன் காட்டும் ஹேகாவைப் பரிந்துரைக்கிறேன்.

M.Jagadeesan
12-06-2012, 12:38 PM
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் அயராது ஆன்மீகப் பணியாற்றும் ஜானகி அம்மையாரையே நான் தேர்வு செய்கிறேன்.

கீதம்
19-06-2012, 01:30 AM
பரிந்துரைகளுக்கான கால அவகாசம் நிறைவடையவிருப்பதை நினைவுபடுத்துகிறேன்.

மன்ற உறுப்பினர்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் என்றும் நாடுகிறேன்.

jayanth
19-06-2012, 10:25 AM
மன்றத்தில் அனைத்து படைப்புக்களையும் ஆழமாக ஆராய்ந்து அனுபவித்துப் படித்து அழகாக பின்னூட்டம் இடும் தங்கை கீதம் அவர்களுக்கு என்னுடய வாக்கு...!!!

கீதம்
19-06-2012, 10:33 AM
உங்களுடைய அன்புக்கும் பரிசீலனைக்கும் நன்றி ஜெயந்த். விதிப்படி நிர்வாக உறுப்பினர்களைத் தவிர்த்து மற்ற உறுப்பினர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எனவே தங்கள் மனங்கவர்ந்த வேறொரு பதிவரைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரையுங்கள்.

jayanth
19-06-2012, 11:04 AM
உங்களுடைய அன்புக்கும் பரிசீலனைக்கும் நன்றி ஜெயந்த். விதிப்படி நிர்வாக உறுப்பினர்களைத் தவிர்த்து மற்ற உறுப்பினர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எனவே தங்கள் மனங்கவர்ந்த வேறொரு பதிவரைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரையுங்கள்.

ஓ அப்படியா...(.) மன்னிக்கவும். அப்படியென்றால் மறு பரிசீலனை செய்ய வேண்டும்...

Hega
19-06-2012, 01:33 PM
.

கடந்த மாதங்களில் உங்கள் மனங்கவர்ந்த பதிவுகளைப் படைத்தவரை இங்கு பரிந்துரை செய்யுங்கள்.

கடந்த மாதத்தில் எனறில்லாமல் கடந்த மாதங்களிற்கான மனங்கவர் பதிவர் என்றிருப்பதால் கடந்த பல மாதங்களாகவே தமிழ் மன்றத்தில் டாப் ஐந்திற்குள் பதிவுகளை தொடர்ந்தும் இடுவதோடு ஏனைய பதிவர்களையும் உற்சாகப்டுத்தி ஊக்க்பபடுத்தி தமிழ் மன்றத்திலேயே குடியிருக்கும் எங்கள் அன்பு ]சிவாஜி அண்ணாவை மனங்கவர் பதிவராக பரிந்துரைக்கிறேன். .


.
பரிந்துரை செய்யப்படும் பதிவர் உங்கள் மனங்கவர்ந்த காரணத்தையும் தெரிவித்தால் போட்டி களைகட்டும்.




பலர் தமிழ் மன்றத்தின் தமக்கு பிடித்த பகுதிகளோடு நின்று விட எல்லா பகுதிகளிலும் பழையவர் புதியவ ரென பாகுபாடின்றி அனைவர் பதிவுகளையும் படித்து கருத்திடுவதோடு உற்சாகமும் கொடுக்கும் விதமாக பல மாதங்களாகவே தனி ஒருவராய் சிவாஜி அண்ணாவின் பங்களிப்பு தொடர்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக மற்றவர்கள் என் மனம் கவர்ந்தவர்களாய் இல்லையென்பதில்லை. எல்லோரும் என் மனம் கவர்ந்த பதிவர்களே.. ஒருவரை மட்டுமே பரிந்துரைக்கலாம் என்பதால் முறை என் ஒட்டு சிவாஜி அண்ணாவிற்கே..

Hega
19-06-2012, 01:43 PM
கலைவண்ணம், கைவண்ணம், கவிவண்ணம் என்று பல்விதப் பரிமாணங்களில் தன் திறன் காட்டும் ஹேகாவைப் பரிந்துரைக்கிறேன்.

என்னை நினைவுகூர்ந்தமைக்காக நன்றி கீதம் அக்கா, டாப் பதிவுகள் இடுவதோடு அனைவர் பதிவுகளையும் படித்து ஊக்கம் கொடுக்கும் நீங்கள் என்றைக்கும் எமது மனம் கவர்ந்த பதிவரே.. உங்களுக்கு அப்புறம் தான் நாங்கள் ஆனால் அக்கா நான் இங்கே சமீப காலங்களாக அதிக பதிவுகள் இடுவதில்லையே அக்கா.... அப்புறம் எப்படி....

ஆளுங்க
19-06-2012, 02:52 PM
தமிழ் இலக்கணம், கவிதை, கதை , கணிதம், புதிர் என அனைத்திலும் கலக்கும் ஜெகதீசன் ஐயா அவர்களை பரிந்துரை செய்கிறேன்

அமரன்
21-06-2012, 10:24 PM
ஆசை அஜித்

கீதம்
22-06-2012, 12:07 AM
மனங்கவர் பதிவரைப் பரிந்துரைப்பதற்கானக் காலக்கெடு நிறைவடைந்தது. விரைவில் இதற்குரிய வாக்கெடுப்பு துவங்கும். பதிவர்களைப் பரிந்துரைத்து ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. மன்றத்தின் அனைத்துப் போட்டிகளிலும் தவறாமல் வாக்களித்து மன்றத்தின் உறுப்பினர் என்னும் அங்கீகாரத்தைப் பெருமிதத்துடன் நிலைநிறுத்துமாறும் அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

கலைவேந்தன்
23-06-2012, 05:22 AM
நான்கொஞ்சம் லேட். தமிழகம் வந்திருப்பதால் இணையம் கிடைப்பதில்லை. ஜூலை முதல் என் பங்கெடுப்பினைத் தொடர்கிறேன். தேர்ந்தெடுக்கப்படுபவர்க்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.

கீதம்
10-07-2012, 12:38 PM
அன்பார்ந்த உறவுகளே… கடந்த மாதங்களுக்கான மனங்கவர் பதிவருக்கான வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/29680-மனங்கவர்-பதிவர்-ஏப்ரல்-மே-ஜூன்-2012) சென்று உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

மன்றத்தின் பண்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து மன்றத்தின் செயல்பாடுகளில் கரம் கோர்த்து, மன்றத்தின் தேர்ந்த பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


வாக்களிக்கக் கடைசி நாள் : 24-07-2012

Hega
25-07-2012, 10:04 PM
கடந்த மாதத்தில் எனறில்லாமல் கடந்த மாதங்களிற்கான மனங்கவர் பதிவர் என்றிருப்பதால் கடந்த பல மாதங்களாகவே தமிழ் மன்றத்தில் டாப் ஐந்திற்குள் பதிவுகளை தொடர்ந்தும் இடுவதோடு ஏனைய பதிவர்களையும் உற்சாகப்டுத்தி ஊக்க்பபடுத்தி தமிழ் மன்றத்திலேயே குடியிருக்கும் எங்கள் அன்பு ]சிவாஜி அண்ணாவை மனங்கவர் பதிவராக பரிந்துரைக்கிறேன். .




பலர் தமிழ் மன்றத்தின் தமக்கு பிடித்த பகுதிகளோடு நின்று விட எல்லா பகுதிகளிலும் பழையவர் புதியவ ரென பாகுபாடின்றி அனைவர் பதிவுகளையும் படித்து கருத்திடுவதோடு உற்சாகமும் கொடுக்கும் விதமாக பல மாதங்களாகவே தனி ஒருவராய் சிவாஜி அண்ணாவின் பங்களிப்பு தொடர்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக மற்றவர்கள் என் மனம் கவர்ந்தவர்களாய் இல்லையென்பதில்லை. எல்லோரும் என் மனம் கவர்ந்த பதிவர்களே.. ஒருவரை மட்டுமே பரிந்துரைக்கலாம் என்பதால் முறை என் ஒட்டு சிவாஜி அண்ணாவிற்கே..


ஹைய்யா, சிவாஜி அண்ணாவிற்கு வாழ்த்துகள். :huepfen024::aktion033::music-smiley-009:

ஒட்டு போட்டவர்களுக்கு நன்றிகள். :icon_b:


வாக்கெடுப்பில் உங்க பெயரையும் சேர வைச்சதுக்கான கமிஷனும், எனக்கான விசேட ட்ரீட்டும் உடனடியாக சுவிஸுக்கு வந்தாகணும் அண்ணா..:sport-smiley-014:

என்னம்மா வேண்டும்னு கேளுங்க.. அப்புறம் லிஸ்ட் தர:nature-smiley-002: