PDA

View Full Version : முகமூடி



ஜான்
09-06-2012, 05:22 PM
ஆலயத்துக்குள்ளிருக்கும்
அத்தனைபேர் முகங்கள் மேலும்
முகமூடிகள்!
பக்தன் ஆகவும் பக்தனாகவும்
பாவியாகவும் பாவியாகவும்
வள்ளல் ஆகவும் வள்ளலாகவும்
தேவியாகவும் சேடியாகவும்
அவரவர் தேவைக்காய்
முகமூடிகளை
அணிந்துகொண்டு....
***************************
உற்றுப் பார்த்தால்
அம்மன் கூட
மூக்குத்தியும் புன்னகையும்
முகமூடியாய்!!

ஒரு உந்துதலில்
என் முகமூடியைக் கழற்றிக்
கீழே போட்டேன்......
அம்மனின் முகமூடியும்
கீழே விழுந்து விட்ட து !!

அமரன்
09-06-2012, 06:09 PM
ஆன்மீகத்தை அரித்துக் கொடுக்கும் கவிதை.

கல் அணிந்த முகமூடிதானே கடவுள்.

நிர்வான மனசுதான் உண்மையான ஆலயம்..

பாராட்டுகள் ஜான்.

ஆதி
11-06-2012, 07:47 AM
பல திசைகளில் விரிகிறது க*விதை

அவிழ்ந்த முகமூடி அம்மன் அணிந்து கொண்டதள்ள நாம் அனுவித்தது

நாமும் முகமூடி அணிந்து அம்மனுக்கும் முகமூடியிட்டு, அந்த முகமே அம்மன் முகமென மனதை நம்ப வைத்து கொண்டு வாழ்கிறோம்

நம் முகமூடி கழல அம்மன் முகமூடி கழல்கிறது

சில நேரம் அம்மனின் முகமூடி கழண்டும் நம் முகமூடி கழட்டப்படாமலே இருக்க அல்லது அம்மனின் உண்மை முகத்தை பார்க்க விரும்பாமல் இருக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது

ஆடி போலத்தான் அம்மனும், அவள் முகம் பிரதிபளிப்பது அவளை அல்ல நம்மை

இந்த கவிதையில் வரும் அத்தனைபேர் எனும் வார்த்தை மற்றவரை குறிப்பதாக எடுத்து கொள்ளலாம் அல்லது நம்முடைய பல முகங்களை குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

நம் முகமென கொண்டால் எல்லா முகமூடிகளும் கழண்டுவுட்டதாகவே அர்த்தமாகிறது

வாழ்த்துக்கள் ஜான் அண்ணா