PDA

View Full Version : அஞ்சேல்! யாமுளோம் அன்பாய்!!



நாகரா
08-06-2012, 04:57 AM
இறைஉது அன்பு தானே இரையாம்
இரைஉது பொங்கும் இருதயத் திருந்தே
இடம்வலம் மேல்கீழ் முன்பின் னெங்கும்
இடையறா தோடும் நற்பால் ஆறாய்
இரைஉதில் ஊறு அன்பின் பிள்ளாய்
இறைஉதில் தானே என்றும் உள்ளாய்
மறதியில் அச்சங் காமங் கோபம்
மயக்கெனும் மாயைப் பள்ளம் வீழ்ந்தாய்
மறந்ததால் மறைந்தது மந்திர இருதயம்
திறந்துதான் கிடக்குது வள்ளலின் கிடங்கது
திருப்பிநின் மனத்தைத் திரும்புநீ உங்கே
திடுமென உணர்ந்திடு அன்பின் உச்சமே
திகிலெலாந் தீர்ந்திடு சடுதியில் உய்ந்திடே
அன்பிடம் அச்சங் கரைந்திடும் சட்டென
அன்பதை இறுகப் பற்றிடு பட்டென
இன்பமே பெருக உய்ந்திடு சிக்கென
பொருளலப் பொருளெனக் கருதிடும் மருள்விடு
அருளதே பொருளெனக் கருதிடும் தெருள்உறு
அன்பதே உருவென விடிந்திடு இருள்அறு
என்புதோல் உடலதை மெய்யென உயிர்த்திடு
நல்லதோர் உலகினைச் செய்திடு அன்பொடு
சொல்லதில் சிக்குமோ அன்பே சிவமது
சொல்லவுங் கூடுமோ அல்லாஹ் புகழது
நல்லவன் நபிகுரு கிறிஸ்து மசியா
வல்லபம் வெல்லவே சரணடை பிரம்மமே
சொல்லறச் சும்மா இரு!இரு தயத்திரு!

vasikaran.g
16-06-2012, 11:36 AM
இறை பற்றியும்
இரை பற்றியும்
உரை எழுதிய
மன
உறை உருவிய
கவிதை ..
சிலருக்கு
கவிதைக்கு
உரை தேவைப்படலாம்
உறையுள்
இருந்து
வாசிக்க ..

நாகரா
25-10-2012, 03:46 PM
உம் பின்னூட்ட இரைக்குக்குக் கவிமய உரைக்கு நன்றி வசிகரன்