PDA

View Full Version : நான் யார்?????????????



sukhan
07-06-2012, 02:46 PM
இன்முகத்தோடு பார்க்க ஏங்கும் ஒருத்தி,
இரக்கமற்று இயற்கை அவளை அலைத்துப்போக
இதயமில்லா எந்தையும் என்னை தூக்கியெறிய
ஒராயிரம் கோடி உயிர்களை சுமக்கும் உலகில்
ஓர் குப்பைத்தொட்டி என்னை சுமந்தது.............
நான் அதற்கும் சொந்தமில்லாதவன் போலும்!
என்னை சுற்றி உயிர்கள் இருந்தும்
அதற்கு உள்ளமும் இருந்தும்,
எனக்கோர் இடமில்லை அதில்....................
குற்றங்கள் செய்யும் இவர்கள்
என்னை எனக்கு அறிமுகம் செய்தது
- நான் அநாதை :(

சிவா.ஜி
07-06-2012, 06:51 PM
சமூக அவலங்களில் தலையாய அவலம்...தனக்குப் பிறந்த குழந்தையை....தானறிந்து...குப்பையில் வீசுவது. வீசியவள் தாயென்றாலும்....தாயுக்கான தரமிழக்கிறாள்.

அநாதை என்ற சொல்லை...அந்த அநாதரவான குழந்தையின் மேல் சுமத்திய தாய் குற்றவாளியா....அல்லது அவளை அப்படி செய்ய வைத்த சமூகம் குற்றவாளியா....இந்தக் கேள்விக்குப் பதிலாய் அந்த தாயையே சுட்டுவேன். தனது சுகத்துக்காக...தன் தனையனின் நிலை மாற்றிய இவளும் ஒரு தாயா?

நல்லதொரு சமூகக் கருத்தைக் கொண்டு வந்திருக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

aasaiajiith
09-06-2012, 06:50 AM
நல்ல வரிகள் !
சிவா, உங்கள் கருத்தோடு உடன்பட்டாலும்
சூழலையும், சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா??

வரிகளுக்கு வாழ்த்துக்கள் சுகா !

செல்வா
13-06-2012, 02:05 AM
கருவறிவதில் ஒரு தடுமாற்றம். அலைத்துப்போக வா அல்லது அழித்துப்போகவா இரண்டிலும் பொருள் மாறுபடுகிரது. பின் வரிகளிலிருந்து நான் புரிந்து கொள்வது தாய் இறந்து விட தந்தை தூக்கி எறிவதாகப் படுகிறது.
யார் எறிந்தாலும் அனாதை என்பது ஆற்றமுடியாத துயரமே.

vasikaran.g
16-06-2012, 11:50 AM
அருமை அன்பரே ...