PDA

View Full Version : எனது தேசத்தை இழக்க தயார்.



தமிழ்குமரன்
30-12-2003, 04:10 AM
உன் நேசத்தின்
வாசம் தான்
பாசம்
அதற்காக
எனது தேசத்தையே
இழக்க தயார்.

இக்பால்
30-12-2003, 04:36 AM
தமிழ்க் குமரன் எழுத்துக்களில் வண்ணத்தை மாற்றிக் கொடுங்களேன்.

இக்பால்
30-12-2003, 04:38 AM
கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் நண்பன் ஏதாவது
சொல்வார். ஆகையால் அவர் கருத்தும் பார்க்க ஆசை.-அண்ணா.

இளசு
30-12-2003, 07:30 AM
தமிழ்
நீங்கள் சக்ரவர்த்தியா?
இல்லை உங்கள் இதயதேசத்தை சொன்னீங்களா?:)

ம்ம்ம்ம்ம்ம்ம்
நோய் முற்றிய நிலை.
வாழ்த்துகள் இன்னும் தீவிரம் ஆகி வெற்றியாய் முடிய..

Mano.G.
30-12-2003, 08:43 AM
[quote]தமிழ்
நீங்கள் சக்ரவர்த்தியா?
இல்லை உங்கள் இதயதேசத்தை சொன்னீங்களா?:)

ம்ம்ம்ம்ம்ம்ம்
நோய் முற்றிய நிலை.

பெருசுங்க சொல்லுவாங்க
பித்தம் தலைக்கேறி போச்சு
பாத்துப்பா

மனோ.ஜி

ரவிஷா
30-12-2003, 09:07 AM
தேசம் பொதுச்சொத்தல்லவா?
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?................
கவனம் தமிழ்குமரரே.........

தமிழ்குமரன்
30-12-2003, 09:12 AM
தேசம் பொதுச்சொத்தல்லவா?
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?................
கவனம் தமிழ்குமரரே.........

நண்பரே மன்னிக்கவும்.
நான் எனது தேசம் என்று தான் கூறியுள்ளேன்.

இக்பால்
30-12-2003, 10:07 AM
இழந்த பின் ஏது உமக்கு தேசம்?

ரவிஷா
30-12-2003, 10:41 AM
உமது தேசமா அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?
உமது தேசத்திற்காக இதுவரை நீர் என்ன தியாகம் செய்துள்ளீர் என்று
தெரிந்து கொள்ளலாமா?
என்னைப்பற்றி உமக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ளலாமா?

ரவிஷா
30-12-2003, 10:45 AM
நண்பரே மன்னிக்கவும்.
நான் எனது தேசம் என்று தான் கூறியுள்ளேன்.



........

இக்பால்
30-12-2003, 11:35 AM
தமிழ்க்குமரன் தம்பி...சீரியஸாக எதையும் எடுத்துக் கொண்டு விடாதீர்கள்.
பயந்து விடவும் வேண்டாம். ஒரு வாத-பிரதிவாதம். அவ்வளவுதான்.

இளசு
30-12-2003, 11:55 PM
தமிழ்

விமர்சனங்களை ஆக்கபூர்வமாய், ஜாலியாய் மட்டும் எடுத்துக்குங்க. சரியா?

இக்பால்
31-12-2003, 08:22 AM
இளசு அண்ணாவும் பயந்து விட்டார் போல் தெரிகிறது. :)

-அன்புடன் இளவல்.

மன்மதன்
31-12-2003, 08:25 AM
இதில் பயப்பட என்ன இருக்கு..
இது மாதிரி எல்லாம் விமர்சனங்களும் பதில்களும் தேவை ..
அது இருந்தால்தான் தன்னை மெருகேற்றிகொள்ள உதவும்..

இக்பால்
31-12-2003, 08:46 AM
அப்படீங்களா மன்மதன் தம்பி...உங்களுக்கு உண்டு!!! :)

மன்மதன்
31-12-2003, 08:48 AM
ஹம்ம்ம்ம்ம்.
ரெடியா இருக்கிங்க.............
ஆகட்டும் ஆகட்டும்.. இக்பால் அண்ணா லீவில போகட்டும்ம்ம்ம்ம்ம்

இக்பால்
31-12-2003, 08:51 AM
லீவில் போக வேண்டுமா? திட்டமா?
லீவ் எல்லாம் கேன்ஸல் செய்து விட்டேன்.(உங்களுக்காக)

Mano.G.
31-12-2003, 08:51 AM
விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக இருத்தல் வேண்டும்
விமர்சிப்பது என விமர்சித்தால் விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
விமர்சிப்பது தட்டிகொடுத்து தவறை சுட்டிகாட்டவே
விமர்சனம் விமர்சிக்கப்படுபவருக்கு வழிகாட்டலாக இருக்க
வேண்டுமே ஒழிய, மட்டம் தட்ட அல்ல.
"தம்பி தமிழ்குமரன் அவர்களே பாசிட்டீவாக எடுத்துக்கொள்ளுங்கள்."
மனோ.ஜி

Nanban
12-01-2004, 06:30 AM
தேசம் என்பது தன் இதயதேசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்......... கவிஞர்களுக்கு சொந்தமாக இருப்பது அது ஒன்று தான். ஏனென்றால், இதயமில்லாதவனால், கவிதை படைக்க இயலாது. மேலும் இது உண்மையும் கூட. காதலுக்காகப் போராடும் பலர் கவிஞர்களாக இருக்கிறார்கள். பிறகு காதல் வெற்றி என்றதும், இதயத்தைக் கொடுத்து விட்டதினால், கவிதை எழுத மறந்து போய் விடுகின்றனர்.........