PDA

View Full Version : திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...



HEMA BALAJI
07-06-2012, 07:17 AM
உன்னோடு நான்
திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...

உன் நினைவு அழிக்கச் சொல்லி
அறிவு தூண்டும் போதும்
பேதை மனது உன் நினைவால்
குழையும் போதும்
உன்னோடு நான்
திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...

ஒரு வார்த்தையும் கூறாமல்
இதழ் மட்டும் மௌனம் காக்க
ஓயாமல் உன்னோடு இதயம் பேசும் தருணங்களில்- தோழா
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

காலச்சக்கரத்தில் கழன்று விழுந்த
நம் தருணங்களை தட்டிவிட நினைத்தும்
என் நெஞ்சில் தடம் பதிக்க அனுமதித்து
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...

காயப் பூக்கள் எனத் தெரிந்தும்
கண்ணுக்குள் பொத்தி வைத்து
கண்ணீரை வரமாக்கி கடையாணி கழன்ற தேராய்
உள்ளம் உன்னிடமே சாய்ந்து விட
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...

வார்த்தைகளில் வாள் வீச்சும்
கண்களிலே காதல் பேச்சும் - என
முரன்பட்ட நம் களத்தில் தோல்வி
எனக்கான சுகம் என்பதால் - தோழா
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்...

கீதம்
07-06-2012, 07:32 AM
திட்டமிட்டுத் தோற்றுப்போதல் களவிளையாட்டுகளில் அவமானம்.

திட்டமிட்டுத் தோற்றுப்போதல் காதல் விளையாட்டில் பரமசுகம்.

காதல் பகடையென கவி வரிகள் உருட்டிப்போடுது மனதை. பாராட்டுகள் ஹேமா.

தாமரை
07-06-2012, 08:31 AM
ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு அழகான் யுத்தம் நடந்தது.

http://www.tamilmantram.com/vb/showthread.php/16025-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

அதிலும் இப்படித்தான் ஒருத்தர் திட்டமிட்டே தோற்றார்.

தோல்வியும் இரணமும் சுகமாகும்..

அதை உண்டாக்கியவர் நிஜமாகவே "நம்மை வென்றிருந்தால்"

aasaiajiith
08-06-2012, 10:18 AM
எத்தனை முறைகள் தெரிந்தே
தொடர்ந்து தோற்று வந்தாலும்
அன்பாம் அது ஊற்றாய் எடுப்பது
காதலில் மட்டும் தான் ...

தோற்று தோற்றே வென்றெடுப்பது
சாத்தியம் என்றால்
அதுவும் காதலில் மட்டும் தான் ..

வரிகளுக்கு வாழ்த்துக்கள் !

HEMA BALAJI
09-06-2012, 07:40 AM
என் முதல் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்ட நட்புகளுக்கு என் இனிய நன்றிகள்.

சிவா.ஜி
09-06-2012, 09:20 AM
தோழா என்ற அழைப்பால்...இந்த திட்டமிட்டு தோற்றுப்போதலின் அர்த்தம் தெளிகிறது. தோழமையின் ஆதாரக் கோட்பாடு....தோல்வியையும் சகிக்கும் குணம்.

அழகான எண்ண வெளிப்பாடு. வாழ்த்துக்கள்மா தங்கையே.

HEMA BALAJI
10-06-2012, 03:42 PM
தோழா என்ற அழைப்பால்...இந்த திட்டமிட்டு தோற்றுப்போதலின் அர்த்தம் தெளிகிறது. தோழமையின் ஆதாரக் கோட்பாடு....தோல்வியையும் சகிக்கும் குணம்.

அழகான எண்ண வெளிப்பாடு. வாழ்த்துக்கள்மா தங்கையே.

நன்றி சிவா அண்ணா....

பென்ஸ்
02-07-2012, 09:41 AM
காயப்பூக்களாய் இருந்தாலும் - இவை
காயாப்பூக்கள்
அமிலம் வீசும் வார்த்தைகள்
காதல் கொண்ட நெஞ்சினில் இருந்து வருமானால்...
கவனம் தோழி.... இது தொடரும்...

இந்த தோல்வி... நிதானிக்க...

HEMA BALAJI
05-07-2012, 04:54 AM
காயப்பூக்களாய் இருந்தாலும் - இவை
காயாப்பூக்கள்
அமிலம் வீசும் வார்த்தைகள்
காதல் கொண்ட நெஞ்சினில் இருந்து வருமானால்...
கவனம் தோழி.... இது தொடரும்...

இந்த தோல்வி... நிதானிக்க...

பின்னூட்டத்திற்கு நன்றி பென்ஸ் அவர்களே..