PDA

View Full Version : எல்லை மீறல்



PUTHUVAI PRABA
06-06-2012, 10:41 AM
வாய்ச்சண்டையில்
எல்லை மீறி
பேசுகிறான் கணவன்

கோவமாய்-
வீட்டைவிட்டு வெளியேறி
தலைவிரி கோலத்தோடு
வீதியில் நடக்கிறேன் நான்

தெரு நாயொன்று
குரைத்தபடி துரத்துகிறது


விரக்தியில் நான்
விரட்டாமல் விட்டபோதும்
குறிப்பிட்ட தொலைவோடு
குரைப்பதை நிறுத்திவிட்டு
திரும்பிச்செல்கிறது

நாய்கள்கூட
அதன் எல்லைகளை
மீறுவதில்லை.

புதுவைப்பிரபா

ஆதி
06-06-2012, 11:28 AM
வாங்க புதுவை பிரபா ?

நலமா ?

ஒரு வருடத்துக்கு பின் மன்றம் வந்திருக்குறீர்கள், ஒரு உணர்வுப்பூர்வமான கவிதையோடு

யோசித்துப் பார்க்கிறேன், நம் ஆழ்மனத்தின் குரூரம் குறித்து, வன்மம் குறித்து, கருணையற்றத்தனங்களை குறித்து

ஒரு பிரிடெரைப் போல முக மூடிக் கழட்டி கோரமுகத்தை காட்டி இளிக்கும் நம் இழி செய்லகள் குறித்து

கொண்டவள், உரியள், உரிமையானவள் என்பதற்காக ஒரு தீங்கற்ற மனதை கண்மூடித்தனமாக தாக்கி ரணமாக்கி கொடுமிருகத்தின் நாவுடன் இரத்தம் நக்கியும் தகிப்படங்காமல், மேலும் மேலும் குதறித்தள்ளும் குணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு

கடைசி வரி மிக நல்ல படிமம் பிரபா, நாய்கள்கூட அதன் எல்லைகளை மீறுவதில்லை

மிக ஆழமான வரிகள்


பாராட்டுக்கள், தொடர்ந்து கவிதை படையுங்கள்

ஜானகி
06-06-2012, 11:39 AM
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது....என்று விட்டுவிடவேண்டியதுதான்....

aasaiajiith
06-06-2012, 01:37 PM
அது தான் ஐந்தறிவிற்கும், ஆறறிவிர்க்கும்
வித்தியாசம் போலும் ???

(ஒருவேளை ,தலைவிரி கோலம் கண்டு
நாய் மிரண்டிருக்குமோ??)

வாழ்த்துக்கள் !

HEMA BALAJI
06-06-2012, 02:38 PM
முழுக்கவிதையும் மிக நன்று அதிலும் கடைசி வரிகள் மிக நச்சென்று இருக்கிறது ப்ரபா.. ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள்.

M.Jagadeesan
06-06-2012, 03:51 PM
நல்ல கவிதை! நாய்கள் மட்டுமல்ல ; புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் கூட தங்களுக்கென்று ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு , அதை மீறிச் செல்லாமல் வாழ்கின்றன. எல்லாவற்றிலும் எல்லையை மீறி நடக்கின்ற ஒரே விலங்கு மனிதன் மட்டும்தான்!

Ravee
06-06-2012, 03:54 PM
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது....என்று விட்டுவிடவேண்டியதுதான்....


நம்ம மன்ற உறுப்பினரை பார்த்து நாய் ஏன் குறைக்க வேண்டும் அம்மா .... சூரியன் அண்ணனுக்கு உங்க விளக்கம் தேவை ........... :nature-smiley-006:

M.Jagadeesan
06-06-2012, 04:22 PM
நம்ம மன்ற உறுப்பினரை பார்த்து நாய் ஏன் குறைக்க வேண்டும் அம்மா .... சூரியன் அண்ணனுக்கு உங்க விளக்கம் தேவை ........... :nature-smiley-006:

நாயால் சூரியனைக் குறைக்க முடியுமா ? இரவி அவர்களே!

Ravee
06-06-2012, 04:31 PM
தகராறுகள் ஏற்ப்படும் போது எல்லாம்

தாய் கழகத்துடன் இணைந்து கொள்ளும் அரசியல்வாதிகள் போல

தாய் வீடு புறப்படும் தாய் குலங்கள்

கலகங்கள் பிறக்கும் காரணம் அறியாதவர்கள்

இருட்டில் தொலைப்பதை

விளக்கடியில் தேடிய விந்தை இது

பிரச்சனை வீட்டில் இருக்க

படிதாண்டி பயன் என்ன ?

ஐந்தறிவு நாய் எல்லை அறிந்து நின்றது

ஆறறிவு நாய்களின் நாக்குகளுக்கு எல்லை ஏது ?


தவறுகள் பொது என்றால் நிதானம் கொள்

தவறுவதே எப்போதும் என்றால் எதிர்கொள்

சாலையில் இறங்கி செல்வதால் சாதிக்க ஒன்றும் இல்லை

சாலைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் கடந்து போகும்

பிரச்சனைகளை கண்டு எப்போதும்

இணங்கு . இடைமறி , எதிர்கொள் ...... வெற்றி உனதே........ :icon_b:



.

Ravee
06-06-2012, 04:40 PM
நாயால் சூரியனைக் குறைக்க முடியுமா ? இரவி அவர்களே!

கை கால்களை கடிக்கும் போது உடம்பில் கொஞ்சம் உருப்படிகள் குறையத்தானே செய்யும் அய்யா ? .....:icon_wacko:

அரசே பழைய தட்டச்சு பலகையை கொண்டுவாருங்கள் ..... இதுக்கு மேல ஒட்டுப் போட்டு பிட்டு ஓட்ட முடியாது ... :smilie_bett:

ஆளுங்க
06-06-2012, 04:43 PM
அருமையான கவிதை...
நன்றி!

ஆதி
06-06-2012, 04:55 PM
ரவியண்ணா அளவு கடந்த எதுவுமே நஞ்சுத்தான்

இங்கே அளவு மீறிய வார்த்தைகள் மனவதை, மன ரீதியாக கொடுக்கப்படும் வன்முறை

எல்லை மீறியதால் அவள் எல்லை மீறி நடந்தால், எல்லை மீறி அலைந்த குழலை கண்டு குரைத்த நாய்கள் கூட எல்லைக்குள்த்தான் இருந்தன*

தன் சக மனுசியை சகட்டுமேனிக்கு திட்டிவிட்டு, இது எல்லாம் சகஜம் என்று சொல்லும் பழக்கம் அப்பட்டமான ஆணாதிக்கம் என்பேன்

தெருவில் இறங்கி நடந்தால் நாய்கள் துறத்துக்கும் கடிக்கும் தொல்லைதரும்

இங்கே வெளியேறுவது வழியற்று அல்ல வழிகாண*

இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை

பெண்மைக்கு பொருமை அவசியம்தான் அதற்காக ஆண்கள் எல்லை மீறலாம் என்பது விதியில்லை

ஜான்
06-06-2012, 05:00 PM
நாய்கள் எல்லை மீறுவதில்லை !

நாம் மீறுகிறோம் ...!!!
நம்மையும் பாரு ....நாடே சிரிக்கும் என்கிற சினிமா பாட்டு நினைவு வருகிறது !

நன்றி பு.பி

சிவா.ஜி
06-06-2012, 05:05 PM
ஆதனின் அத்தனை வார்த்தைகளையும் அப்படியே வழிமொழிகிறேன். ஆழமான கவிதை....அதே சமயம் மிக எளிமையாய்...வாசிப்பவர் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தனை சிறப்பாய் அளித்திருக்கும் புதுவை பிரபா அவர்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் நண்பரே.

PUTHUVAI PRABA
06-06-2012, 06:03 PM
எனது கவிதையை பாராட்டிய அனைத்து தோழர் தோழியருக்கும் மனமார்ந்த நன்றி இந்த கவிதை வரிகளில்... கணவன் என்கிற இடத்தில் மனைவி என்றும் போட்டு மாற்றி வாசித்துப்பார்த்து ஆறுதல் அடையும் ஆண்களும் இருப்பார்கள்தானே!

Ravee
06-06-2012, 08:14 PM
ரவியண்ணா அளவு கடந்த எதுவுமே நஞ்சுத்தான்

இங்கே அளவு மீறிய வார்த்தைகள் மனவதை, மன ரீதியாக கொடுக்கப்படும் வன்முறை

இங்கே வெளியேறுவது வழியற்று அல்ல வழிகாண*

இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை

பெண்மைக்கு பொருமை அவசியம்தான் அதற்காக ஆண்கள் எல்லை மீறலாம் என்பது விதியில்லை



கோவமாய்-
வீட்டைவிட்டு வெளியேறி
தலைவிரி கோலத்தோடு
வீதியில் நடக்கிறேன் நான்

ஆதி மேற்கண்ட வரிகள் அந்த பெண்ணின் நிதானம் தவறியதை மட்டுமே காட்டியது. இதுதானே இன்று பல குடும்பங்கள் நீதிமன்றபடி ஏற காரணம் ஆகிறது . மேலும் நிதானம் தவறி கோபத்தின் உச்சியில் வீட்டை விட்டு வெளியேறிய பெண் கூறுகிறாள் எதிராளி வரம்பு மீறி பேசியதாக. நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து சொல்ல முடியாதே இது செல்லும் என்று.

நான் கூறிய விசயங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே ..... குடும்ப நலன் கருதி .

கீதம்
07-06-2012, 01:49 AM
எல்லை மீறினால் எதுவுமே தொல்லைதான்.

எல்லை மீறிவிடும் ஒருவனது குதர்க்கப் பேச்சால் எல்லை மீறும்படி விரட்டப்படுகிறாள் ஒருத்தி.

எல்லைக்கோட்டுப் பராமரிப்பில் நாயோடு நரனை ஒப்பிட்ட வரிகள் கவிதையின் முழுப்பலம்.

மனமார்ந்த பாராட்டுகள் புதுவை பிரபா. (போட்டிகளில் மட்டும் தலைகாட்டிக்கொண்டிருக்காமல் அவ்வப்போது மன்றத்திற்கு வந்து இப்படிப்பட்ட அருமையான கவிதைகளைத் தந்து எங்களை மகிழ்வியுங்கள். :) )


இது ரவிக்காக...


கோபம் வரும் நேரத்தில் ஆணோ பெண்ணோ எவருமே தன்னிலை மறக்கின்றனர் என்பதையும் கவிதை சுட்டத் தயங்கவில்லை.

ஒரு மனைவி, இப்படி தலைவிரிகோலமாக தெருவில் இறங்கி நடப்பது, அவளைவிடவும் அவள் கணவனுக்கே பெரும் இழுக்கு.

அதை உணர்ந்திருந்தால் எல்லை மீறிய வார்த்தைகளைத் தவிர்த்திருப்பான் அக்கணவன்.

எடுத்த எடுப்பிலேயே படிதாண்டினாளா? அல்லது பலகாலம் சகித்திருந்து பொறுமையின் எல்லை கடந்தபின் அடியெடுத்துவைத்தாளா? என்பது தெரியா நிலையில் மனைவியின் போக்கைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

எதுவாயினும், அடித்தலும் மிதித்தலுமான செய்கைகள் மட்டும் வன்முறையில்லையே... வரம்பு மீறிப் பேசி, மனதைக் கிழிப்பதும், வன்முறைதானே...ரவீ.

பூமகள்
07-06-2012, 02:55 AM
கோபம் வரும் நேரத்தில் ஆணோ பெண்ணோ எவருமே தன்னிலை மறக்கின்றனர் என்பதையும் கவிதை சுட்டத் தயங்கவில்லை.

ஒரு மனைவி, இப்படி தலைவிரிகோலமாக தெருவில் இறங்கி நடப்பது, அவளைவிடவும் அவள் கணவனுக்கே பெரும் இழுக்கு.

அதை உணர்ந்திருந்தால் எல்லை மீறிய வார்த்தைகளைத் தவிர்த்திருப்பான் அக்கணவன்.

எடுத்த எடுப்பிலேயே படிதாண்டினாளா? அல்லது பலகாலம் சகித்திருந்து பொறுமையின் எல்லை கடந்தபின் அடியெடுத்துவைத்தாளா? என்பது தெரியா நிலையில் மனைவியின் போக்கைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

எதுவாயினும், அடித்தலும் மிதித்தலுமான செய்கைகள் மட்டும் வன்முறையில்லையே... வரம்பு மீறிப் பேசி, மனதைக் கிழிப்பதும், வன்முறைதானே...ரவீ.

:icon_b::icon_b:
'நச்' கீதம் அக்கா..

"பொத்தனூர்"பிரபு
07-06-2012, 05:26 AM
👌.....

M.Jagadeesan
07-06-2012, 05:30 AM
தகராறுகள் ஏற்ப்படும் போது எல்லாம்

தாய் கழகத்துடன் இணைந்து கொள்ளும் அரசியல்வாதிகள் போல

தாய் வீடு புறப்படும் தாய் குலங்கள்

கலகங்கள் பிறக்கும் காரணம் அறியாதவர்கள்

இருட்டில் தொலைப்பதை

விளக்கடியில் தேடிய விந்தை இது

பிரச்சனை வீட்டில் இருக்க

படிதாண்டி பயன் என்ன ?

ஐந்தறிவு நாய் எல்லை அறிந்து நின்றது

ஆறறிவு நாய்களின் நாக்குகளுக்கு எல்லை ஏது ?


தவறுகள் பொது என்றால் நிதானம் கொள்

தவறுவதே எப்போதும் என்றால் எதிர்கொள்

சாலையில் இறங்கி செல்வதால் சாதிக்க ஒன்றும் இல்லை

சாலைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் கடந்து போகும்

பிரச்சனைகளை கண்டு எப்போதும்

இணங்கு . இடைமறி , எதிர்கொள் ...... வெற்றி உனதே........ :icon_b:






.


இரவியின் பின்னூட்டமே அழகான கவிதையாக உள்ளது!

Ravee
07-06-2012, 06:17 AM
:icon_b::icon_b:
'நச்' கீதம் அக்கா..

என்ன நச் ... அம்மா பூ வரதட்சனையால் வாடி போன குடும்பங்கள் எத்தனையோ உண்டு ... அதை தடுக்க போட்ட சட்டத்தால் பொய் வழக்குக்கு ஆளாகி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி ஆண்களும் உண்டு . நான் கவிதையில் சாடிய ஒரே விஷயம் அது ஒரு பக்கமாவே சொல்லப்பட்டு உள்ளது . அவன் பேசுவதற்கு முன் அவள் என்ன செய்தாள் என்றும் இல்லை . கோபப்பட்டு தெருவில் இறங்கி நடந்த அவள் நாயின் செய்கையை கூட தனக்கு சாதகமாவே பார்க்கிறாள். எனவே என் பார்வையில் கவிதையின் நாயகி ஒரு அவசரபுத்தி கொண்டவளாகவும் ... சுயபச்சாதாபம் பாராட்டுபவளாகவே தெரிகிறது .

இதில் நான் ஆணின் செயலை எங்கேயும் நியாயப்படுத்தவில்லை . குடும்பத்தின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நிதானம் தேவை என்றே கூறவந்தேன் ..... :ohmy:

ஆதி
07-06-2012, 06:29 AM
//நான் கவிதையில் சாடிய ஒரே விஷயம் அது ஒரு பக்கமாவே சொல்லப்பட்டு உள்ளது . அவன் பேசுவதற்கு முன் அவள் என்ன செய்தாள் என்றும் இல்லை . கோபப்பட்டு தெருவில் இறங்கி நடந்த அவள் நாயின் செய்கையை கூட தனக்கு சாதகமாவே பார்க்கிறாள். எனவே என் பார்வையில் கவிதையின் நாயகி ஒரு அவசரபுத்தி கொண்டவளாகவும் ... சுயபச்சாதாபம் பாராட்டுபவளாகவே தெரிகிறது .
//


இதைத்தான் ஆணியத்தின் ஆதிக்கத்தனம் என்று சொல்லியிருந்தேன்
வரதட்சனைச் சட்டத்தால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு இரங்கும் ரவியண்ணா, வரதட்சனைச் சட்டம் வந்த பிறகும் இன்னும் வரதட்சனையால் பாதிக்கப்படும் பெண்களை பற்றி பேசாதது ஏனோ ?
பொய் வழக்குகள் எதில்தான் போடப்படவில்லை ?
பெண்கள் மட்டுமா பொய்வழக்குகள் போடுகிறார்கள்
இன்று தமிழில் உள்ள பெரிய கெட்டவார்த்தையே பொய் வழக்கால் வந்த்துதானே இரவியண்ணா ?

இதற்குமுன் அவள் என்ன செய்தாள் என்று கேள்வி எழுப்பும் இரவியண்ணா இதற்கு பதில் சொல்லுங்கள் முதலில், என்ன வேண்டுமனாலும் அவள் செய்திருக்க*ட்டுமே, அதற்காக எல்லை மீறுதல் சரியா ?

PUTHUVAI PRABA
07-06-2012, 07:16 AM
போட்டிகளில் மட்டும் தலைகாட்டிக்கொண்டிருக்காமல் அவ்வப்போது மன்றத்திற்கு வந்து இப்படிப்பட்ட அருமையான கவிதைகளைத் தந்து எங்களை மகிழ்வியுங்கள்.

போட்டிகளுக்காக மட்டுமே மன்றத்தின் பக்கம் வரவேண்டும் எனது எண்ணமில்லை.ஏனெனில். . .ஒரு படைப்பு போட்டிகளில் பங்கேற்பதைவிட மன்றத்தில் இதற்கான திரியில் இடும்போது வரும் பின்னூட்டங்களை காணுதல் , விவாதங்களை உண்டாக்கல். ..பாராட்டுகளை உடனுக்குடன் பெறுதல்... சுகமானது. ஆனால்.. ஏனோ தெரியவில்லை அடிக்கடி ஆர்வக் குறைபாடு எனை ஆளத்தொடங்கிவிடுகிறது. மாற்ற முயற்ச்சிக்கிறேன்.

கீதம்
07-06-2012, 07:20 AM
போட்டிகளுக்காக மட்டுமே மன்றத்தின் பக்கம் வரவேண்டும் எனது எண்ணமில்லை.ஏனெனில். . .ஒரு படைப்பு போட்டிகளில் பங்கேற்பதைவிட மன்றத்தில் இதற்கான திரியில் இடும்போது வரும் பின்னூட்டங்களை காணுதல் , விவாதங்களை உண்டாக்கல். ..பாராட்டுகளை உடனுக்குடன் பெறுதல்... சுகமானது. ஆனால்.. ஏனோ தெரியவில்லை அடிக்கடி ஆர்வக் குறைபாடு எனை ஆளத்தொடங்கிவிடுகிறது. மாற்ற முயற்ச்சிக்கிறேன்.

நல்லதொரு படைப்பாளியை நழுவ விட்டுவிடவேண்டாமென்னும் முனைப்பினால் அப்படி சொன்னேன். தவறாக நினைக்காதீர்கள்.

இனி அடிக்கடி வந்து கவிதைகள் படைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆரம்பித்துவிட்டால் போதும், ஆர்வக்குறைபாடு உண்டாகாமல் மன்ற நட்புகள் பார்த்துக்கொள்வார்கள். :)

தாமரை
07-06-2012, 08:11 AM
எல்லை மீறுதல் சரியா ? தவறா ?
அது பிறகு எழும் கேள்வி...

கணவன் மனைவிக்கு மத்தியில் எல்லை
எப்பொழுது
ஏன்
எப்படி
வந்தது என்பதுதான்
முதல் சிந்தனை.

இருவரும் ஒரே எல்லைக்குள்
இருப்பது நல்லது.

எல்லைகளுக்கு அப்பால்
இருந்து கொண்டு
குடும்பம் நடத்தினால்
எல்லையில்லாமல் போகும்
துன்பங்கள்!!!

ஆதி
07-06-2012, 08:46 AM
எல்லை மீறுதல் சரியா ? தவறா ?
அது பிறகு எழும் கேள்வி...

கணவன் மனைவிக்கு மத்தியில் எல்லை
எப்பொழுது
ஏன்
எப்படி
வந்தது என்பதுதான்
முதல் சிந்தனை.

இருவரும் ஒரே எல்லைக்குள்
இருப்பது நல்லது.

எல்லைகளுக்கு அப்பால்
இருந்து கொண்டு
குடும்பம் நடத்தினால்
எல்லையில்லாமல் போகும்
துன்பங்கள்!!!

இதில் எனக்கு உடன்பாடு இல்லைங்கண்ணா

எல்லைகளால் ஆனதுதானே நம் பூமி

நாடுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டதுக்கு மாவட்டம், ஊருக்கும் ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, மனிதருக்கு மனிதர்கள் என்று எங்கும் எல்லைகள் உண்டுதானே அண்ணா

ஒரு எல்லைக்குள் இருப்பதுதான் ஊர், ஆனாலும் அங்கு உள் எல்லைகள் இருக்கின்றன
*
புற எல்லைகள் மண்டுமில்லையே அண்ணா அக எல்லையும் உண்டு இல்லையா

எனக்கு உரிமையான வீடு என்பதற்காக அதனை நான் எப்படியும் கையாள முடியாது இல்லையா ?

வீட்டுக்கே அப்படி என்றால் உணர்வுள்ள மனுசி/மனுசனை எப்படி கையாள வேண்டும்

நம்ம ஐயனே அதைத்தான அண்ணா சொன்னான்

கும்பம் என்பது ஒரு எல்லைக்குள் இருந்தாலும், குடும்பத்தில் இருக்கும் மனிதர்களிடம் ஒரு எல்லை இருக்கத்தான் செய்கிறது, அந்த எல்லைகள் மீறும் போது, குடும்பங்களில் மிக பெரிய உடைவுகள் ஏற்படுகிறது, மீண்டும் நிக*ழும் ச*மாதான*ப் பேச்சுக்க*ளால் அவை ஒட்டுப்போட* ப*ட*லாம், ஒட்டுக்க*ள் சில* நேர*ம் ஒட்ட*மாலும் போகும், அல்ல*து சில* நேர*ம் ஒட்டுவ*து போல் ஒட்டி பெரிதாய் விரியும் அல்ல*து மீண்டும் ஒரு குலுங்க*ளில் த*ரைம*ட்ட*மாய் த*க*ர்ந்துவிடும்
என்ன* தான் க*ண*வ*ன் ம*னைவி என்றாலும் அவ*ர்க*ளுக்குள்ளும் ஒரு மெல்லிய* எல்லை இருக்க*த்தான் செய்யும், அது இல்லை என்றோ அப்ப*டி இருக்க* கூடாது என்றோ சொல்ல*வே முடியாது, அந்த* எல்லைக*ள் என்ன* என்று அறிந்து கொண்டு புரித*லோடு ந*ட*த்த*லே நல்ல* குடும்ப* வாழ்வு இல்லையா ?

Ravee
07-06-2012, 08:49 AM
//.
//


முதலில், என்ன வேண்டுமனாலும் அவள் செய்திருக்கட்டுமே, அதற்காக எல்லை மீறுதல் சரியா ?

கணவன் மனைவி என்ற பந்தத்தில் எல்லை என்பது எது என்று சொல்லுங்கள் ஆதி ..... தெரிந்துகொள்கிறேன் ..... :confused:

ஆதி
07-06-2012, 09:20 AM
கணவன் மனைவி என்ற பந்தத்தில் எல்லை என்பது எது என்று சொல்லுங்கள் ஆதி ..... தெரிந்துகொள்கிறேன் ..... :confused:

கீதமக்கா பதில் போட்டிருக்காங்களே அண்ணா உங்கள் கேள்விக்கு

தாமரையண்ணாவின் பின்னூட்டக்கு இட்ட பதிலிலும் பதில் இருக்கே

எல்லை என்னனு சொல்லலாம், அதற்கு கொஞ்சம் எல்லை மீற வேண்டியும் வரலாம்

தாமரை
07-06-2012, 09:25 AM
எல்லைகள் என்பவை பிரிப்பவை.

திருமணம் என்பது இணைப்பது.

இருவருக்கு இடையில் உள்ள எல்லையை அழிப்பதாகவே திருமணம் இருக்க வேண்டியது அவசியமாகிறது ஆதன்.

நீங்கள் சொன்ன அத்தனை எல்லைகளும் உண்மையில் இல்லை. நாமாக உருவாக்கிக் கொண்ட கற்பனைக் கோடுகள் அவை.

பல பிரச்சனைகளுக்கு அடிப்படையே இந்த எல்லை அல்லவா?

காவிரி பிரச்சனை, அண்டை நாட்டுப் பிரச்சனைகள், முல்லைப் பெரியாறு பிரச்சனை இப்படி அனைத்திற்கும் காரணமே இந்த எல்லையில் உள்ளது எல்லாம் எனக்குச் சொந்தம் என்ற மனப்பான்மை தானே ஆதன்.

எல்லைப் பிரச்சனைகள் எல்லைகள் வரையறுக்கப்படும் பொழுதே உண்டாகி விடுகின்றன.

இதை நான் மட்டும் சொல்லலை.. நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி சொல்லுது

Mind Without Fear

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason
has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake.

நாட்டிலேயே எல்லைகள் இருக்கக் கூடாது என்கிறார் தாகூர்
வீட்டுக்குள்ளே, மனக்கூட்டுக்குள்ளே எல்லையை வகுத்துக் கொண்டால் விடுதலை எப்படிங்க கிடைக்கும்?

தாமரை
07-06-2012, 09:46 AM
வாய்ச்சண்டையில்
எல்லை மீறி
பேசுகிறான் கணவன்

கோவமாய்-
வீட்டைவிட்டு வெளியேறி
தலைவிரி கோலத்தோடு
வீதியில் நடக்கிறேன் நான்

தெரு நாயொன்று
குரைத்தபடி துரத்துகிறது


விரக்தியில் நான்
விரட்டாமல் விட்டபோதும்
குறிப்பிட்ட தொலைவோடு
குரைப்பதை நிறுத்திவிட்டு
திரும்பிச்செல்கிறது

நாய்கள்கூட
அதன் எல்லைகளை
மீறுவதில்லை.

புதுவைப்பிரபா

இந்தக் கவிதையின் இரசனையான இரசாயனமாற்றம் தரும் விஷயமே இரு நிகழ்வுகளின் ஒப்பீடு.

வீட்டில் கணவன் சண்டை என குரைக்கிறான்.
தெருவில் நாய் குரைக்கிறது.

நாய் தன் எல்லை மட்டும் குரைக்கிறது.
கணவன் எல்லைதாண்டியும் குரைக்கிறான்

இரு நிகழ்வுகளையும் ஒப்பிடும் இரசனை அருமையான விஷயம்.

ஆனால்..

(தாமரை ஆனால் போட்டாச்சி.. இனி மனதை திடப்படுத்திக் கொண்டு மேலே படிக்கவும்)

இந்த நாய் கணவனா மனைவியா என எனக்குள் ஒரு சந்தேகம் எழுகிறது.

இரண்டாம் நிகழ்வை அலசுவோம்.

தலைவிரி கோலமாக அரற்றியபடி ஒருத்தர் தன் எல்லைக்குள் நுழைகிறார்.
இதைக் கண்டதும் நாய் குரைத்து விரட்டுகிறது. எதிரி எல்லையைத் தாண்டியதும் அமைதியாகி விடுகிறது.

இதை முதல் நிகழ்வுக்கு ஒப்பிடலாமா?

எல்லை மீறியது அங்கே கணவன்.

அப்படியானால் இரண்டாம் நிகழ்வில் தலைவிரிகோலமாக எல்லையில் ஊடுருவிய பெண் - கணவன்.
நாய் - மனைவி.

நாய் கூட தன் எல்லையைக் காக்க போராடியது. குரைத்தது. ஆனால் இந்த மனைவி?

தன் எல்லையைத் தாண்டியல்லவா ஓடுகிறாள். அங்கேயும் கணவனைப் பற்றிக் குறை கூறிக் குரைக்கிறாள்.

உவமான உவமேயங்கள் மருவி நிற்கிறது பார்த்தீங்களா?

காண்பவர் கண்களுக்கேற்ப காட்சிகள் மாறும்.

கவிஞனின் திறமை தான் கண்டதை பிறர் காணவைப்பது.

நாய் பிறர் எல்லைகளுக்குள் நுழைவதில்லை என எடுத்துக் கொள்வோமா?

அப்படின்னா தெருவுக்குத்தெரு நாய்ச் சண்டை ஏன் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு நாய் எல்லை தாண்டியதால்தானே இரு நாய்களுக்குச் சண்டை வந்தது.

மிருகங்கள் கூட எல்லை வைத்துக் கொண்டிருக்கின்றன - என்பது ஒரு பார்வை
மிருகங்கள்தான் எல்லை வைத்துக் கொண்டிருக்கின்றன - என்பது பீர்பால் பார்வை.

(
ஒரு முறை அக்பர் பீர்பாலிடம், பீர்பால் நீங்கள் குதப்பிக் கொண்டிருக்கின்றீர்களே வெற்றிலை, அதைக் கழுதைகள் கூடச் சீண்டுவதில்லை என்றாராம்.
பீர்பல் எளிமையாக "கழுதைகள்தான் சீண்டுவதில்லை" என்றாராம்
)

இப்போ இந்த பீர்பால் பார்வையில் பார்த்தால் ஒருவர் தன் எல்லைக்குள் அத்து மீறினால் விரட்டுவது மிருகபுத்தி என்றாகி விடுகிறது.

இப்பதான் குழப்பம் ஆரம்பம்.

குரைக்கும் நாயைக் கணவனுக்கு ஒப்பிட்டால் எல்லை தாண்டியது மனைவி.
குரைக்கும் நாயை மனைவிக்கு ஒப்பிட்டால் அப்பவும் எல்லை தாண்டியது மனைவி.

நல்லா குழப்பி இருக்கேன்.

தெளிவாக்கவும்

M.Jagadeesan
07-06-2012, 12:10 PM
அன்று கண்ணகி மதுரைத் தெருக்களில் தலைவிரி கோலமாக நடந்தாள்- கணவனுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க.
இன்று இக்கதையின் நாயகி தெருவில் தலைவிரி கோலமாக நடப்பது- கணவனுக்கு அவப்பெயரை உண்டாக்க!

aasaiajiith
07-06-2012, 12:13 PM
ரவி யின் கேள்விக்கு பதில் வரவில்லையே ?

எல்லை மீறலுக்கு முன் என்ன நடந்ததோ என் அறியாமல், தெரியாமல்
ஆணியம் , ஆணாதிக்கம் என்பது எந்த வகை நியாயம் ??

அவன் பேசுவதற்கு முன் அவள் என்ன செய்தாள் என்றும் இல்லை . கோபப்பட்டு தெருவில் இறங்கி நடந்த அவள் நாயின் செய்கையை கூட தனக்கு சாதகமாவே பார்க்கிறாள். எனவே என் பார்வையில் கவிதையின் நாயகி ஒரு அவசரபுத்தி கொண்டவளாகவும் ... சுயபச்சாதாபம் பாராட்டுபவளாகவே தெரிகிறது .

இக்கருத்தை நான் வழிமொழிகின்றேன் !

aasaiajiith
07-06-2012, 12:19 PM
நியாயமான கருத்து , வீட்லிலே கணவனுக்கும் மனைவிக்கும் வாய்த்தகராறு என்றால்
தலைவிரி கோலமாய் தெருவில் நடக்கவேண்டிய அவசியம் என்ன ?? இத்தனைக்கும்
அரங்கேறிய எல்லை மீறல் வெறும் வாய்ச்சண்டையில் தான் ...

சிந்தித்து பார்க்க வேண்டும் சகோதரர்களே !

ஆதி
07-06-2012, 12:21 PM
அன்று கண்ணகி மதுரைத் தெருக்களில் தலைவிரி கோலமாக நடந்தாள்- கணவனுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க.
இன்று இக்கதையின் நாயகி தெருவில் தலைவிரி கோலமாக நடப்பது- கணவனுக்கு அவப்பெயரை உண்டாக்க!

தாமரையண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்

அப்போது அவர் கேட்டார்

"வளையாபதி படிச்சிருக்கியா ?"

"இல்ல"

"மந்திரி குமாரி பார்த்திருக்கிறாயா ?"

"ம்"

"வாராய் நீ வாராய் பாடலில் என்ன நடக்கும்"

"தன்னை கொல்ல வந்த கணவனை மனைவி கொன்றுவிடுவாள்"

"ஆமா, அப்ப இலக்கியம் என்ன சொல்லி கொடுத்துச்சு, கணவன் திருந்தி வந்தா ஏற்றுக்கோ, திருந்தாவனாக இருந்தா கொன்றுவிடு.
ஆனால் நம்ம ஆட்கள் நமக்கு எது வசதியோ அதை பற்றி மட்டுமே சொல்லிடுத்தாங்க" என்றார்

M.Jagadeesan
07-06-2012, 12:43 PM
இக்கவிதையில் கருத்துப் பிழை உள்ளதாகவே எண்ணுகிறேன்.அந்தப்பெண் வசிக்கும் தெருவில் உள்ள நாயாக இருந்தால் , அந்தப் பெண்ணைப் பலமுறை பார்த்திருக்கும்; எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து , அந்த நாய் , குரைத்திருக்க வாய்ப்பில்லை. வேற்றுத் தெருவில் உள்ள நாயாக இருந்தாலும் , அந்தப் பெண்ணைப் பார்த்துக் குரைத்திருக்க முடியாது. ஏனெனில் குலப் பெண்களைக் கண்டு நாய்கள் குரைப்பதில்லை. இது அனுபவத்தில் கண்ட உண்மை. அழுக்கேறிய கந்தலாடை அணிந்த பிச்சை எடுக்கும் பெண்களை, நாய்கள் எளிதில் இனம் கண்டு , அவர்களைப் பார்த்துக் குரைப்பதுதான் நாய்களின் வழக்கம்.

ஆதி
07-06-2012, 01:11 PM
ஒரு படைப்பை விமர்சிக்கும் போது அதன் உபபிரதியையும்(subtext) பற்றி அலசுவது நம் மன்றத்தின் சிறப்பு

அப்படித்தான் ரவி அண்ணாவின் விமர்சனம் அமைந்திருந்தது

எனினும், அவரின் விமர்சனம் எல்லா திசைகளிலும் விரிந்ததா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது

எப்படி கவிதையில் அவள் என்ன செய்தாள் என்று குறிப்பிடப்படவில்லையோ

அப்படியே அவன் எத்தனை முறை எல்லை மீறியதை அவள் பொறுத்திருந்தாள் என்பதையும் சொல்லப்படவில்லை

அப்படியிருக்க அதையும் அலச வேண்டும் என்பதே இங்கு வைக்கப்பட்ட விவாதம்

அதுமட்டுமல்ல, அவன் என்ன செய்தாலும் பொறுமைக் காத்துக் கொள்/ல்(வளையாபதி சொல்லுச்சு, என்னை மாதிரி யாரோ 'ல'வ 'ள'வா மாற்றிட்டாங்க போல, அந்த எழுத்துப்பிழை எல்லாருக்கும் சாதகமா போச்சோ ???? )

கணவன் மனைவிக்கு இடையில் இருப்பதாக நான் எண்ணியிருந்த எல்லையை, தாமரையண்ணா அகற்றி, அது கணவன் மனைவிக்கு நடுவில் இல்லை
சுற்றியிருக்கிறது, அது பிரிவின் எல்லையில்லை, தர்மத்தின் எல்லை என்று விளக்கி புரிய வைத்தார்

மனைவி எனக்கு உரியவள் என்பதற்காக அவளை தமிழில் இருக்கிற மிக பெரிய கெட்ட வார்த்தை திட்ட முடியுமா ?

என்று கேட்கலாம் என்றாலும்

அண்ணன் கேட்ட கேள்வி முன்னால் வந்து நிற்கிறது

"என்னை நானே வரம்பு மீறிய* வார்த்தை சொல்லி திட்டக்கலாமா ?"

"இல்லை"

"அப்போ திருமண பந்தம் என்பது என்ன ?, இருவ*ர் ஒருவ*ர் ஆவ*து இல்லையா, அவ*ளையும் அப்ப*டி திட்ட* கூடாது தான, ?

"ஆமா"

அதனால், நான் சொன்ன எல்லை இப்போது அண்ண*னின் தெளிவாக்க*லுக்கு பிற*கு, த*ர்ம*த்தின் எல்லையென* மாறவிட்ட*து

மனைவி எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும், அவளை கண்டிக்க உரிமை உண்டே தவிர தண்டிக்கும் உரிமை அவனுக்கு அறவே இல்லை, அதற்கு அவன் கடவுளும் இல்லை, இது ம*னைவிக்கும் பொருந்தும்

அத*ற்குமுன் என்ன* வேண்டுமானாலும் நிக*ழ்ந்திருக்க*ட்டுமே, ம*னைவி முழுக்க* த*வ*றே செய்திருக்க*ட்டுமே, அத*ற்காக* அவ*ள் மீது வ*ன்முறை தொடுத்த*ல் எந்த* வ*கை நியாய*ம்

இங்கு நாம் விவாதிக்காத** இன்னொரு கோண*த்தையும் அண்ண*ன் சொன்னார், அதாவ*து இந்த* பிர*ச்சனை ஏன் வ*ந்த*து என்று யாரும் பேச*வே இல்லையென
*
இப்பிர*ச்ச*னை ஒரு ப*க்க*த்தால் விளைந்த*து ம*ட்டும*ல்ல* இருப்ப*ப் ப*க்க*திலும் இல்லாத* புரித*லால் விளைந்த*தும் கூட*

ஏன் இந்த* புரித*ல் இல்லை என்று, மீண்டும் ஒரு நெடும் பேச்சு ந*ட*ந்த*து

ஈருட*ல் ஓருயிர் என்ப*தே ந*ம் த*த்துவ*ம், ஆதியில் சொல்ல*ப்ப*ட்ட* த*த்துவம், கணவனும் மனைவியும் சமம்

இருவரும் ஒன்று( தனித்தனி அல்ல)

பின் வந்த படையெடுப்பு, பிற கலாச்சார ஊடலால், நாம் நம் சுயமிழந்து பிற கலாச்சாரத்தின் தத்துப்பிள்ளையாக மாறிவிட்டோம்

அந்த கலாச்சாரத்தால் புகுந்த ஒன்றுத்தான் பெண் அடிமைத்தனம்

ஆணுக்கு சேவகம் தரவதும், இன்பம் தரவதும் மட்டுமே பெண்ணின் கடமை என்று அழுத்தப்பட்டால்

பிறகு மீண்டும் நான் ஆணுக்கு பெண் சமம் என்று பேச ஆரம்பித்த போது, நாம் நம் முன்னவர்கள வகுத்துவைத்தவைகளை கொண்டு சமத்துவம் பேசாமல், மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு சமத்துவம் பேசி, உனக்கும் எனக்கும் எல்லை உண்டு, இந்த பாடர தாண்டி நீயும் வரக் கூடாது நானும் வர மாட்டேன் என்று வகுத்துக் கொண்டோம்

இதுதான் இன்றைய குடும்பங்களில் நிகழும், இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம்

எல்லை நமக்கு நடுவில் இல்லை நம்மை சுற்றி இருக்கிறது, அது த*ர்ம*த்தின் எல்லை அதை க*ட*க்காம*ல் இருந்தாலே இல்ல*ற* த*ர்ம*ம்

சுருக்க*மாய் சொல்லிவிட்டேன் அண்ண*னுட*ன் பேசிய*தை, நான் சொல்லாம*ல் விட்ட*தை அண்ண*ன் சொல்வார் என் ந*ம்புகிறேன்

ஆதி
07-06-2012, 01:16 PM
இக்கவிதையில் கருத்துப் பிழை உள்ளதாகவே எண்ணுகிறேன்.அந்தப்பெண் வசிக்கும் தெருவில் உள்ள நாயாக இருந்தால் , அந்தப் பெண்ணைப் பலமுறை பார்த்திருக்கும்; எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து , அந்த நாய் , குரைத்திருக்க வாய்ப்பில்லை. வேற்றுத் தெருவில் உள்ள நாயாக இருந்தாலும் , அந்தப் பெண்ணைப் பார்த்துக் குரைத்திருக்க முடியாது. ஏனெனில் குலப் பெண்களைக் கண்டு நாய்கள் குரைப்பதில்லை. இது அனுபவத்தில் கண்ட உண்மை. அழுக்கேறிய கந்தலாடை அணிந்த பிச்சை எடுக்கும் பெண்களை, நாய்கள் எளிதில் இனம் கண்டு , அவர்களைப் பார்த்துக் குரைப்பதுதான் நாய்களின் வழக்கம்.

முக்கியமான விடயம் ஐயா, மிருகங்களுக்கு வண்ணங்கள் தெரியாது, நீங்கள் வளர்க்கும் நாயாக கூட இருக்கட்டும் அதன் முன் மெல்ல மெல்ல பதுங்கு நடந்து பாருங்கள் முதலில் பின் வாங்கி மெல்ல நகரும், கொஞ்சம் குரைக்கும்

அப்படியிருக்க இங்கு தலைவிரி கோலமாய் போகிறாள், அதனால் கருத்துப் பிழையில்லை என்று சொல்லலாம்

அமரன்
07-06-2012, 10:08 PM
நல்ல கவிதையும் கருத்தாடலும்..

இல்லறத்தில் எல்லை வானம் போன்றது..

இருக்கிறதாத் தெரியும்.. ஆனால் இல்லை..

இந்த மாயை புரிந்துணர்வின் சாயை



தாய்க்கழகத்துக்கு ஓடிடு'ராங்'களே என்று ஆதங்கப்படும் ரவிண்ணா புண்ணியத்தில், ஆண்களுக்கு ஒரு அட்வைஸ்.. வீட்டோட மாப்பிள்ளை ஆயிடுங்க.

ஆழம் பார்க்க வைக்கும் கவிதை பிரபா.

PUTHUVAI PRABA
08-06-2012, 12:29 AM
முக்கியமான விடயம் ஐயா, மிருகங்களுக்கு வண்ணங்கள் தெரியாது, நீங்கள் வளர்க்கும் நாயாக கூட இருக்கட்டும் அதன் முன் மெல்ல மெல்ல பதுங்கு நடந்து பாருங்கள் முதலில் பின் வாங்கி மெல்ல நகரும், கொஞ்சம் குரைக்கும்

அப்படியிருக்க இங்கு தலைவிரி கோலமாய் போகிறாள், அதனால் கருத்துப் பிழையில்லை என்று சொல்லலாம்

இது 100% உண்மை. ஆக... கவிதையில் கருத்துப்பிழை இருப்பதா சொல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் திரு.ஜகதீசன் அவர்கள்...

ஜான்
08-06-2012, 02:46 AM
எனது கவிதையை பாராட்டிய அனைத்து தோழர் தோழியருக்கும் மனமார்ந்த நன்றி இந்த கவிதை வரிகளில்... கணவன் என்கிற இடத்தில் மனைவி என்றும் போட்டு மாற்றி வாசித்துப்பார்த்து ஆறுதல் அடையும் ஆண்களும் இருப்பார்கள்தானே!

சரியா பாயின்ட்டபிடிச்சிட்டீங்க

தாமரை
08-06-2012, 05:11 AM
எல்லை மீறிய ...

என்ற வார்த்தை வந்த பிறகு எல்லை என்பது எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

அதுவே நாய் போன்ற விலங்குடன் ஒப்பிடும் பொழுது என் எல்லை - உன் எல்லை என்ற பிரிவினை காட்டப்படுகிறது.

உன்மையில் என் எல்லை எது, அதாவது எனக்கு உரிமையுள்ளது எது என்று யோசிக்கிறேன்.

அப்படி எதுவுமே எனக்கு வெளியேயும் இல்லை. எனக்கு உள்ளேயும். இல்லை. என் மனம் கூட என் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டதல்ல.

ஆனாலும் எல்லை மீறாமை என்பது சரி. என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்படியானால் எல்லை எது என்று தேடிப் புறப்படுகிறோம்.

அந்த எல்லையைத் தேடிய பயணத்தில் எல்லை தாண்டுதல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் எல்லையை அறிய முடியவதில்லை.

எல்லை தாண்டுதல் என்றால் என்ன?

முன்பே பல இடங்களில் சொல்லி இருக்கும் தத்துவம்தான்.

சரி - தவறல்ல - சரியல்ல - தவறு

என நான்கு பெட்டிகளில் எந்த எண்ணத்தையும் செயலையும் அடக்கி விடலாம்.

சரி - தவறு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட தர்மங்கள்

ஆனால் தவறல்ல - சரியல்ல என்ற இரண்டும் பிரச்சனைக்குள்ளான வரையறையில் குழப்பமான எல்லைகள்.

இந்த தர்மத்தின் எல்லை ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு தூரங்களில் உள்ளன. அம்மா என்றால் ஒரு தூரம், மனைவி என்றால் ஒரு தூரம்,நண்பன் என்றால் ஒரு தூரம், விரோதி என்றால் ஒரு தூரம் என இருக்கின்றன.

சரி என்ற இடத்தில் நாம் இருந்தால் எல்லை பிரச்சனை வருவதில்லை. தவறல்ல என்ற இடத்திற்குப் போகும் பொழுதே எல்லை பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், சரி என்றால் யாரைப் பொருத்தவரை சரி, எதைப் பொருத்தவரை சரி என அதற்கும் பல காரணிகள் இருக்கின்றன.

எல்லோரும் அவரவர் கோணத்தில் இருந்து கொண்டே பார்ப்பதால் சரி என்பது அவரவருக்கு மாறுகிறது.

அதனால்தான் சமூகம் தர்மம் என்ற வரையறையைக் கொண்டு சரி என்பதையும் தவறு என்பதையும் மிகச் சரியாக வரையறுக்க முயற்சி செய்கிறது.

அந்த தர்மத்தை மதித்து நடத்தல் எல்லை மீறாமை எனப்படுகிறது. இப்படி அனைவருக்கும் பொதுவான எல்லை இருக்கிறதே தவிர ஒவ்வொருவர்க்கும் தனித் தனி எல்லை என்பது இல்லை. இதுவே நமது கலாச்சாரம் ஆகும்.

அதனால்தான் எல்லை மீறிய பேச்சு என்பதும், படிதாண்டியது எல்லை மீறல் எனவும் இரு பக்கம் இருந்தும் விமர்சனங்கள் வருகின்றன.

தனித்தனி எல்லை. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழையாமை, தனி மனித உரிமை ஆகியவை சமூக விரிசலை தற்காலிகமாக பூச்சு பூசி மறைக்க மட்டுமே பயன்படும். தர்மம் என்பது தனி மனிதனோ சமூகமோ எல்லாவற்றிற்கும் பொதுவாக இருத்தலே சிறந்த சமூகம் அமைய வழி வகுக்கும்.

இதை இன்னொரு உதாரணத்துடன் ஆதனுடன் விவாதம் நடத்தினேன்.

பாகிஸ்தானுடன் யுத்தம் என்றால் இந்தியனாகிறோம்
காவேரி பிரச்சனை என்றால் தமிழனாகிறோம்.
ஊர் பிரச்சனை என்றால் ஊர்க்காரனாகிறோம்.

இப்படி எல்லைகளை நாம் மாற்றிக் கொண்டே இருக்கிறோம். காரணம் என்ன? எல்லைகள் மாயை. அதனால்தான் எல்லைகளை நம்மால் எளிதில் மாற்றிக் கொள்ளவும் முடிகின்றன.

ஆனால் தர்மத்தின் எல்லை என்பது பிரிப்பதாக இல்லை. அது பொதுவாக நம் அனைவருக்கும் சுற்றி இருக்கிறது. நமக்கிடையில் இல்லை. அதனால்தான் தர்மத்தின் எல்லை மீறப்படாமல் இருந்தால் பிரச்சனைகள் வருவதில்லை. மீறியவர் சமூகத்திலிருந்து பிரிகிறார்.

நம் தமிழ்மன்றத்தில் கூட அது மாதிரிதான். மன்றத்திற்கென விதிகளை வகுத்தோம். அந்த விதிகள் சமூக எல்லை. அதை மீறுவது என்பது ஒருவரை மன்றத்தில் இருந்து தூரப்படுத்துகிறது. அந்த எல்லை எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் வரை மன்றம் அமைதிப் பூங்காவாக இருக்கும்.

எனவே

எல்லை மீறல் ..

தவறு..

எல்லை என்பது தர்மக் கோடு.. தனிமனிதச் சுதந்திரக் கோடல்ல.

அது தனிமனித உரிமைக் கோடானால்.. மனிதன் விலங்காகி விடுகிறான்...

:)

Ravee
08-06-2012, 07:54 AM
தாமரை அண்ணா, அருமை .............. :icon_b:
விலங்கை விட கேவலமாக நீ நடந்து கொண்டாய் எனவே குறைந்த பட்சம் நான் விலங்காக நடந்து கொள்கிறேன் என்று கூறுவது தவறு என மக்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

Ravee
08-06-2012, 07:59 AM
ஆதி .... பிரச்சனைகள் வரும் போது குடும்பத்தில் ஒருவராக தன்னை பார்த்தால் பிரச்சனைகளை தவிர்க்க, தீர்க்க ஆணோ பெண்ணோ முன்வருவார்கள் . தன்னை மட்டும் முன் நிறுத்தி பார்த்தால் குடும்பம் குடும்பமாக இருக்காது . இங்கு தனி மனிதன் முக்கியமா ? , இல்லை கணவன், மனைவி என்ற குடும்பம் முக்கியமா ? இதுதான் கேள்வி .... அலுவலகத்திலோ , பேருந்திலோ இப்படி ஒரு நிகழ்வு என்றால் .... போடா என்றோ போடி என்றோ போகலாம் . ஒரு குடும்பத்தில் ... அங்கே கண்ணகியின் நிதானம் வேண்டி இருக்கிறது . எனவே தான் சொன்னேன் .... பேச்சுகள் வளரும் போது ஒரு அமைதி காத்தால் பிரச்சனைகள் குறையும் . எனவே இணங்கு என்றேன் ....மேலும் பிரச்சனைகள் வரும் போது இடைமறி .... உன் கருத்துக்களை பெரியவர்களை கொண்டு சொல் . அதற்கும் அடங்காமல் போனால் வாழ்க்கையை எதிர் கொள் .... வெற்றி உனதே என்றேன் . இதில் ஆணியம் பெண்ணியம் எங்கிருந்து வருகிறது . அவ்வையே சொல்லி இருக்கிறார் .... ஆணவம் கொண்ட பெண்டீர் கையால் அமுது வாங்கி புசிப்பதை விட காவி கட்டி சன்யாசம் போ என்று . அப்படி என்றால் அவ்வை பாட்டி என்ன ஆணியமா பேசினார் .... அவர் குறிப்பிட்டது ஆணவம் கொண்ட பெண்ணை உவமையாய் மட்டுமே .

Ravee
08-06-2012, 08:05 AM
முக்கியமான விடயம் ஐயா, மிருகங்களுக்கு வண்ணங்கள் தெரியாது, நீங்கள் வளர்க்கும் நாயாக கூட இருக்கட்டும் அதன் முன் மெல்ல மெல்ல பதுங்கு நடந்து பாருங்கள் முதலில் பின் வாங்கி மெல்ல நகரும், கொஞ்சம் குரைக்கும்

அப்படியிருக்க இங்கு தலைவிரி கோலமாய் போகிறாள், அதனால் கருத்துப் பிழையில்லை என்று சொல்லலாம்

ஆதி பேய் வருவது நாய்க்கு தெரியுமாமே .......... :sprachlos020:

இந்த தலை விரி கோலமாய் எண்ணும் போது தகஸ் எழுதிய கொல்லி பயண கட்டுரையில் முதல் நாள் காலையில் அறையில் நடந்த சந்திப்பு காட்சி நினைவுக்கு வந்தது ... ஹா ஹா ஹா

ஆதி
08-06-2012, 08:34 AM
ஆதி பேய் வருவது நாய்க்கு தெரியுமாமே .......... :sprachlos020:

இந்த தலை விரி கோலமாய் எண்ணும் போது தகஸ் எழுதிய கொல்லி பயண கட்டுரையில் முதல் நாள் காலையில் அறையில் நடந்த சந்திப்பு காட்சி நினைவுக்கு வந்தது ... ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா என்னா வில்லத்தனம்

ஆதி
08-06-2012, 08:57 AM
ஆதி .... பிரச்சனைகள் வரும் போது குடும்பத்தில் ஒருவராக தன்னை பார்த்தால் பிரச்சனைகளை தவிர்க்க, தீர்க்க ஆணோ பெண்ணோ முன்வருவார்கள் . தன்னை மட்டும் முன் நிறுத்தி பார்த்தால் குடும்பம் குடும்பமாக இருக்காது . இங்கு தனி மனிதன் முக்கியமா ? , இல்லை கணவன், மனைவி என்ற குடும்பம் முக்கியமா ? இதுதான் கேள்வி .... அலுவலகத்திலோ , பேருந்திலோ இப்படி ஒரு நிகழ்வு என்றால் .... போடா என்றோ போடி என்றோ போகலாம் . ஒரு குடும்பத்தில் ... அங்கே கண்ணகியின் நிதானம் வேண்டி இருக்கிறது . எனவே தான் சொன்னேன் .... பேச்சுகள் வளரும் போது ஒரு அமைதி காத்தால் பிரச்சனைகள் குறையும் . எனவே இணங்கு என்றேன் ....மேலும் பிரச்சனைகள் வரும் போது இடைமறி .... உன் கருத்துக்களை பெரியவர்களை கொண்டு சொல் . அதற்கும் அடங்காமல் போனால் வாழ்க்கையை எதிர் கொள் .... வெற்றி உனதே என்றேன் . இதில் ஆணியம் பெண்ணியம் எங்கிருந்து வருகிறது . அவ்வையே சொல்லி இருக்கிறார் .... ஆணவம் கொண்ட பெண்டீர் கையால் அமுது வாங்கி புசிப்பதை விட காவி கட்டி சன்யாசம் போ என்று . அப்படி என்றால் அவ்வை பாட்டி என்ன ஆணியமா பேசினார் .... அவர் குறிப்பிட்டது ஆணவம் கொண்ட பெண்ணை உவமையாய் மட்டுமே .

தனி மனிதன் முக்கியமில்லை

குடும்பம் தான் முக்கியம்

இதனை இருவரும் தான் யோசிக்க வேண்டுமே ஒழிய, மனைவி மட்டுமே எப்போது யோசிக்க கூடாது

எனக்கு கோபம் வருகிறது, என் மனைவியிடம் காட்டுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், கோவ நிமித்தமாக நான் என்ன வேண்டுமனாலும் பேசலாம் என்று இல்லையா ?

என் மனைவி என்பதற்காக தமிழில் இருக்கிறத அந்த மிக பெரிய கெட்ட வார்த்தையை கொண்டு திட்ட முடியுமா ? நிச்சய்ம முடியாது

எதற்கும் ஒரு எல்லை இருக்கு இல்லையா அதுதான் தர்மத்தின் எல்லை

பொறுமை என்பதற்கும் அளவு உண்டு இல்லையா ?

அவள் எத்தனை முறை பொறுத்தாள் என்பதும் யோசிக்க வேண்டியிருக்கு இல்லையா ?

கோபத்தில் அமைதி காக்கலாம், சண்டையில் அமைதி காக்கலாம், வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி அமைதி காக்க முடியும், அதற்குத்தான் அண்ணனே பதில் சொன்னார்

அடங்கம அவன் திரும்பி திரும்பி அதையே செய்தா, போட்டுத்தள்ளுனு

குடும்பம் குடும்பம் என்று எல்லா காலமும் பொறுக்க முடியாது

கோவலன் மாதவியை தேடி போன மாதிரி, மனைவி மாதவனை(சினிமா நடிகர் இல்லை) தேடி போய்ட்டா, கண்ணகி பொறுமை என்ப கணவனுக்கும் வேண்டும் என்று உங்களால் சொல்லி முடியுமா அண்ணா ?

Ravee
08-06-2012, 10:40 AM
ஆதி நீங்க சொல்லுறதை பார்த்தா கண்டிப்பா அந்த கெட்ட வார்த்தை பார்ட்டி உங்களுக்கு தெரிந்தவர்ன்னுதான் நினைக்கிறேன் . ஆளை மட்டும் காட்டுங்க .... உடம்பெல்லாம் கோடு போட்டு புலியை வரிப்புலி ஆக்கிடுவோம் ...... ஹா ஹா ஹா

நாகரா
08-06-2012, 12:54 PM
எல்லை மீறிப் பாயும் அருங் கருத்துக்களின் காரணமான
"எல்லை மீறல்" கவிதை அருமை, வாழ்த்துக்கள் புதுவை பிரபா

நாகரா
08-06-2012, 01:07 PM
அன்பின் ஆளுமைக்கு உட்பட்ட ஆணும்
பேணுந் தாய்மையில் கனிந்த பெண்ணும்
கணவன் மனைவியாகி
அன்பின் எல்லை மீறலில்
வன்சொலும் வன்செயலும் இன்றி
நல்ல குடும்பங்கள் தழைக்க
ஆண்டவர் அருளட்டும்

PUTHUVAI PRABA
09-06-2012, 01:03 AM
எல்லை மீறிப் பாயும் அருங் கருத்துக்களின் காரணமான
"எல்லை மீறல்" கவிதை அருமை, வாழ்த்துக்கள் புதுவை பிரபா

நன்றி...நாகரா அவர்களே...