PDA

View Full Version : திருடன்



M.Jagadeesan
06-06-2012, 02:54 AM
இரவு மணி இரண்டு இருக்கும். பவர்கட் இருந்ததால் எங்கும் ஒரே கும்மிருட்டு. திடீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. என் மனதில் பயம் பற்றிக்கொண்டது. ஒருவேளை திருடன் எவனாவது வந்திருப்பானோ? நல்லவேளையாக போன மின்சாரம் , திரும்ப வந்தது.நைட்லேம்ப்பின் மங்கலான வெளிச்சத்தில் பூட்டியிருந்த பீரோவைக் கண்டதும் , மனதிற்குள் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.திருடன் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பீரோவைத் திறப்பதற்காக சாவியைத் தேடினேன். எங்கு தேடியும் சாவி கிடைக்கவில்லை. மாற்று சாவியைப் பயன்படுத்தி பீரோவைத் திறந்தேன்.
பீரோவில் நகைகளும், பணமும் பத்திரமாக இருந்தது கண்டு போன உயிர் திரும்ப வந்தது.கடவுளுக்கு நன்றி சொன்னேன். வீட்டுக்காரன் விழித்துக் கொள்வதற்கு முன்பாக வந்த வேலையை முடித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணி , பீரோவில் இருந்த நகைகளையும், கரன்சி நோட்டுகளையும் அவசர அவசரமாக , நான் கொண்டுவந்த கோணிப் பைக்குள் நிரப்பினேன். சத்தமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்.

கீதம்
06-06-2012, 03:16 AM
அட, இப்படியும் திருப்பம் வைத்து ரசிக்கவைக்கமுடியுமா, பத்து வரிகளுக்கும் குறைவான கதையில்! மிக மிக ரசித்தேன். எனக்கு முன் திருடன் எவனாவது வந்திருப்பானோ என்று இருந்திருந்தால் அப்போதே திருப்பத்தை யூகித்திருக்க முடியும். ஆனால் கவனமாக தவிர்த்திருக்கிறீர்கள். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
06-06-2012, 04:59 AM
நன்றி கீதம்! ஒவ்வொரு எழுத்தையும் உன்னிப்பாகக் கவனித்துப் படிப்பவர் நீங்கள். எனவே இதுபோன்ற டுவிஸ்ட் கதைகளை எழுதும்போது , மிகவும் எச்சரிக்கையாக எழுதுவேன்.

மஞ்சுபாஷிணி
06-06-2012, 06:28 AM
ஆஹா இந்த திருப்பம் புதியது... நார்மலா வீட்டுக்கு சொந்தக்காரர் தான் அடிக்கடி பீரோ திறந்து பார்த்து நகை பணம் பத்திரமா இருக்கான்னு செக் செய்துப்பார்....

இதில் வித்தியாசமா திருடனுடைய எண்ண ஓட்டங்களை பிரதிபலிச்சிருக்கீங்க....

முதல்ல கதை படிக்க ஆரம்பிக்கும்போது ஒரு சொந்தக்காரரின் மனக்குரல் போல தான் நினைத்து படித்தேன்...

முடிவு படிக்கும்போது அட சொல்ல வைத்தது ட்விஸ்ட்....

அன்பு பாராட்டுகள் ஐயா...

M.Jagadeesan
06-06-2012, 07:39 AM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி மஞ்சுபாஷிணி.

கலைவேந்தன்
30-06-2012, 05:30 PM
சிறியதொரு கதையாயினும் சிரிக்கவைக்கும் திருப்புமுனைக்கதை. பாராட்டுகள் ஐயா..!