PDA

View Full Version : வெள்ளி இடைமறிப்பு (Venus transit) - 06 ஜூன் 2012 - காணத்தவறாதீர்!!ஆளுங்க
05-06-2012, 05:02 PM
ஜூன் 6 , 2012 அன்று வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது.


அது என்ன வெள்ளி இடைமறிப்பு?

நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களும் , அவற்றின் துணைக்கோள்களும், மற்றும் சில சிறிய கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறன.

இந்த நகர்வின் போது அபூர்வமாக மூன்று கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதுண்டு. அப்படி வரும் போது, இடையில் உள்ள பொருள் மற்றதை மறைக்கும். இதற்கு இடைமறிப்பு (Astronomical Transit) என்று பெயர்.

வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.

[ஒரு கோளும், அதன் துணைக்கோளும் சூரியனும் ஒரே கோட்டில் வந்தால் அது கிரகணம் (Eclipse). அதுவே, இரு கிரகங்களும் சூரியனும் வந்தால் அது இடைமறிப்பு (Transit) ]


http://1.bp.blogspot.com/-16BVYi2BGqY/T8ZFd6jps1I/AAAAAAAACRk/yhUr_fmE51Q/s640/Venus-Transit-on-June-5-6-2012.jpg (http://1.bp.blogspot.com/-16BVYi2BGqY/T8ZFd6jps1I/AAAAAAAACRk/yhUr_fmE51Q/s1600/Venus-Transit-on-June-5-6-2012.jpg)(http://1.bp.blogspot.com/-1a0e0HRou44/T8ZETarQONI/AAAAAAAACRc/wOUPQhgMxAs/s1600/venus.jpg)
அதில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

வெள்ளியும், பூமியும் சூரியனைச் சுற்றி வர முறையே 224.7 மற்றும் 365.25 நாட்கள் எடுக்கிறன. வெள்ளியும், பூமியும் 584 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்கிறன.

ஆனால், இரண்டின் பாதைகளும் சாய்வாக இருப்பதால், சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு-- 243 ஆண்டுகளுக்கு நான்கு முறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.

http://1.bp.blogspot.com/-1a0e0HRou44/T8ZETarQONI/AAAAAAAACRc/wOUPQhgMxAs/s640/venus.jpg (http://1.bp.blogspot.com/-1a0e0HRou44/T8ZETarQONI/AAAAAAAACRc/wOUPQhgMxAs/s1600/venus.jpg)

இந்த நான்கு நிகழ்வுகளும் கூட சீராக இருக்காது. 8 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரட்டை நிகழ்வாய் நிகழும். அடுத்த இரட்டை நிகழ்வுகள் 105 1/2 ஆண்டுகள் கழித்து வரும்.

தற்போதைய இடைமறிப்பு 2004 ஜூன் மற்றும் 2012 ஜூன் ஆகிய இரட்டைகளைக் கொண்டது.


எப்போது நடக்க உள்ளது?

இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.

இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.

பிற நாடுகளில் உள்ளவர்கள் தக்கவாறு நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

யார் எல்லாம் பார்க்கலாம்?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்... தெரியும்!! (தேவைஎனில், சொடுக்கிப் பெரிதாகப் பாருங்கள்)

தெற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் சூரிய உதயம் துவங்கி பார்க்கலாம். அமெரிக்காவில் இடைமறிப்பை சூரிய மறைவு வரை பார்க்கலாம்.

சீனா, ஜப்பான் முதலிய கிழக்காசிய நாடுகளில் இடைமறிப்பை முழுவதுமாகக் காணலாம்!
தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் இந்நிகழ்வைக் காண முடியாது!!

http://4.bp.blogspot.com/-68GASxdMSo0/T8ZSs_QG9UI/AAAAAAAACSo/4RDZeqUCq84/s640/venustransitmap.jpg (http://4.bp.blogspot.com/-68GASxdMSo0/T8ZSs_QG9UI/AAAAAAAACSo/4RDZeqUCq84/s1600/venustransitmap.jpg)

எப்படி பார்ப்பது?

இதுவும் சூரிய கிரகணத்தைப் போலத் தான். என்றாலும், வெள்ளி கிரகம் தொலைவில் உள்ளதால், சூரியனில் ஒரு புள்ளி போலத் தான் தெரியும்!!
2004 இல் நிகழ்ந்த இடைமறிப்பின் படங்கள்:


http://1.bp.blogspot.com/-T9SGHiXLKvY/T8ZOAmRfmaI/AAAAAAAACSU/CxugBJWU-oc/s320/2004-06-08-venus-transit-05.jpg (http://1.bp.blogspot.com/-T9SGHiXLKvY/T8ZOAmRfmaI/AAAAAAAACSU/CxugBJWU-oc/s1600/2004-06-08-venus-transit-05.jpg)
http://1.bp.blogspot.com/-_ffNnL2Ltks/T8ZNt372UCI/AAAAAAAACSM/4pJcVdt6NZ0/s320/venus_transit_6-8-2004.jpeg (http://1.bp.blogspot.com/-_ffNnL2Ltks/T8ZNt372UCI/AAAAAAAACSM/4pJcVdt6NZ0/s1600/venus_transit_6-8-2004.jpeg)தொலைநோக்கியின் (telescope) மூலமாகவோ, அல்லது பிம்பத்தைத் திரையில் பெரிதுபடுத்தியோ காணலாம்..அல்லது சூரிய கண்ணாடிகள் அணிந்தும் பார்க்கலாம்!!
யாரும் வெறும் கண்ணால் பார்க்க முயற்சி செய்யாதீர்கள்.


இதைத் தவற விட்டால்......?

இந்த அரிய நிகழ்வைத் தவற விடுபவர்கள் மனம் தளர வேண்டாம்.Stellarium போன்ற மென்பொருட்களின் உதவியால் கண்டு களிக்கலாம்.

நேரில் காண விரும்புபவர்களுக்கும் பிரச்சனை இல்லை. வெறும் 105 1/2 ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.. மீண்டும் இதனைக் காணலாம். [2117 டிசம்பர் 10-11](http://1.bp.blogspot.com/-lUI7DWJ8VTM/T8ZKm9fkGpI/AAAAAAAACRw/VFKan9FvkkY/s1600/ipad-art-wide-a21-20venus-420x0.jpg)
நன்றி: விக்கிபீடியா, கூகிள் (செய்தி மற்றும் படங்கள்)

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!!

கீதம்
06-06-2012, 01:20 AM
இடைமறிப்பு பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி ஆளுங்க. இன்று என் மகளின் பள்ளியில் தொலைநோக்கி மூலம் காட்டவிருப்பதாக சொல்லியிருந்தாள். ஆனால் இப்போது வரை சூரியனைக் காணவில்லை. மிகவும் மூட்டமாக உள்ளது. அப்படியெனில் பார்க்க இயலாதுதானே?

meera
06-06-2012, 01:33 AM
தேவையான படங்களுடன் அழகாய் விளக்கம் தந்துருக்குறீர்கள். அனைவருக்கும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
06-06-2012, 02:29 AM
இதை நேரடியாக பார்க்கக்கூடாதாம்.
http://news.ninemsn.com.au/img/2012/world/0606_transit_lg_sp.jpg

http://news.ninemsn.com.au/img/2012/world/0606_transit2_sp.jpg
இதை தற்போது புனித லூசியா பல்கலைக்கழகம் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டுள்ளது. காணவிரும்புபவர்கள் கீழுள்ள இணையத்திற்கு செல்லவும்.
http://www.ustream.tv/channel/transit2012

கீதம்
06-06-2012, 03:55 AM
இணைய இணைப்புக்கு நன்றி அன்பு. நானும் பார்த்தேன். :icon_b:

ஆளுங்க
06-06-2012, 03:25 PM
ஒருவழியாக நேரடியாக பார்த்தேன்.. (வெல்டிங் ஷீல்டு உதவியுடன்)!

ஆளுங்க
06-06-2012, 03:26 PM
படித்து கருத்திட்ட கீதம் அக்கா, மீரா மற்றும் அன்புரசிகன் ஆகியோருக்கு நன்றி!

சிவா.ஜி
06-06-2012, 05:53 PM
செய்திகளில் இரு வரிகளில் முடித்த விஷயத்தை விலாவரியாய் தெரியப்படுத்திய பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆளுங்க.

ஆனால் நேரிடையாய் காணமுடியாத நிலை. அதுக்கென்ன அடுத்த இடைமறிப்பைப் பார்த்துவிட வேண்டியதுதான்...ஹி..ஹி..!!

ஆளுங்க
14-06-2012, 06:28 PM
நன்றி சிவா.ஜி அவர்களே