PDA

View Full Version : நீ பார்த்த விழிகள்......



sukhan
05-06-2012, 08:18 AM
நர்த்தனமாடும் நதிகளே!
கவிபாடும் காற்றே!
நான் ஒரு ரசிகன்....................
உலகின் அசைவுகளும்
உயிர்களின் மொழியும்
உணர்ந்த உத்கமம் நான்................
உயிர்கள் பார்க்கும் வண்ணங்கள்,
வண்ணம் தீட்டிய இயற்கையாலோ???????
இல்லை நான் விழித்ததாலோ??????
இரவுகள் மட்டும் காணும்
இருளையும் கண்டவன் நான்...............
மறைந்து போகும் முன் மனிதா
உன்னுள் இருந்த என்னை
மறக்காமல் மண்ணுலகிலே விட்டுப்போனாய்
ஈடில்லா உன் செயலுக்கும்
இணையில்லா இன்னொருவன் மகிழ்விற்கும்
நான் பேசும் மொழி
கண்ணீர்தான்....................................
இப்படிக்கு,
நீ பார்த்த விழிகள்.

இராஜிசங்கர்
06-06-2012, 04:44 AM
ஈடில்லா உன் செயலுக்கும்
இணியில்லா இன்னொருவன் மகிழ்விற்கும்
நான் பேசும் மொழி
கண்ணீர்தான்....................................

அருமையான வரிகள் sukhan ..வாழ்த்துக்கள்

sukhan
06-06-2012, 05:44 AM
thnk u :)

செல்வா
14-06-2012, 12:06 AM
தானத்திலே சிறந்தது நிதானம் அதனினும் சிறந்தது கண்தானம்.
நல்ல கவிதை பிழை களைந்தால் இன்னும் சிறப்பாகும்

vasikaran.g
16-06-2012, 11:42 AM
புதியவர்
கவிதை
பதிகிறது
மனதில் ..
புதியவர்
மன்றத்துக்கு
பழையவர்
கவிதைக்கு

kulakkottan
04-08-2012, 01:28 AM
கண்தானம் என்ற பக்குவத்தை அழகாய் ரசிக்கும் படி கவிதை சரத்தில் கோர்த்து விட்டீர்கள் !சபாஸ் !