PDA

View Full Version : எது அமைதி?



இராஜிசங்கர்
05-06-2012, 04:35 AM
அமைதிக்காக ஆயுதம் ஏந்துவது சாதாரணமாய் ஆகி விட்டது
அன்று பிரம்பெடுத்தார் ஆசிரியர் - வகுப்பறையில்;
இன்று தடியெடுக்கிறார் காவலர் - அமைதி மாநாட்டில்;
நாளைக்காவது ஆயுதத்தால் வேண்டாம்
அன்பினால் காப்போம்..

M.Jagadeesan
05-06-2012, 05:31 AM
அன்பினால் எல்லாமே நடக்காது தங்கையே!
அன்பு கொண்டவரிடமே அன்பு காட்டவேண்டும்.
ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் !
பாடுகிற மாட்டை பாடித்தான் கறக்கவேண்டும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற
முதுமொழி முன்னோர்கள் சொன்ன மொழியன்றோ!

சிவா.ஜி
05-06-2012, 07:58 AM
ஐயா சொல்வது உண்மைதான் தங்கையே...

கோலெடுத்தால்தான் குரங்காடும், நயமாய் சொல்லித் திருத்தும் நிலையை மக்கள் கடந்துவிட்டார்கள். பொது இடத்தில் குப்பை போட்டால் 500 வெள்ளி அபராதமெனும் அச்சமிருப்பதால்தான் சிங்கப்பூர் எழில் நகரமாய் இருக்கிறது.

ஆயினும் அன்பெனும் ஆயுதமும் வீரியமுள்ளதுதான்...அதன் வீச்சு அதிகமானால் நல்லதுதான்.

வாழ்த்துக்கள் தங்கையே.

கீதம்
06-06-2012, 12:48 AM
எல்லோரையும் அன்பால் திருத்திவிட இயலாதுதான். ஆனால்...

குறைந்தபட்சம் குழந்தைகளிடத்திலாவது கைப்பிரம்பு தவிர்த்து கருணை கொள்வோமே...

அழகான, ஆக்கமிகு சிந்தனைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
06-06-2012, 04:31 AM
கருத்துக்களுக்கு நன்றி M.Jagadeesan , சிவா.ஜி அண்ணா & கீதம் அக்கா

"பொத்தனூர்"பிரபு
06-06-2012, 07:32 AM
👌.....

அமரன்
07-06-2012, 09:26 PM
காவலன் தரித்த சீருடை அவனை நமக்கு அடையாளம் காட்ட..

அவன் ஏந்திய ஆயுதம் அவனுக்கே அவனை அடையளம் காட்ட..

விளங்கக் கூறின் அவனுக்கு நம்பிக்கை ஊட்ட..

அந்நம்பிக்கைதான் அவனுக்கு இறுமாப்பைக் கொடுத்து செவ்வனே சேவை செய்ய வைக்குது.

ஆசான் கையில் பிரம்பு?

நம்பிக்கை இழந்தவனி்ன் ஊன்று கோல்.

சிதனை தூண்டும் கவி.

செல்வா
13-06-2012, 02:19 AM
நிதர்சனக் கவிதை
கவிதையை மேடையேற்றும் கருத்துள்ள பின்னூட்டங்கள்.
வாழ்த்துக்கள்.

இராஜிசங்கர்
13-06-2012, 04:07 AM
நன்றி செல்வா

vasikaran.g
16-06-2012, 11:46 AM
கவிதை
அளவோடு
வேண்டும்
வளமோடு
வாழ ..
தடி
எடுக்க
தடைகள்
தகர்க்க !
இது
கலிகாலம் !
சில
இடங்களில்
நிர்பந்தம் ..