PDA

View Full Version : நான் வர காத்திரு.....

sukhan
03-06-2012, 08:33 AM
கரிசல் காட்டு பாதையிலே
தனியே இவள் மட்டும்
துணையாய் நான் வர எண்ணினேன்
ஏனோ எனக்காக நீயும் காத்திருந்தாய்
மாலை வந்த மன்னவனிடம்
நான் வரும் செய்தி சொன்னாயோ???
உன்னுள் என்னையும் சுமந்தாய்
உணர்வுகளோடு என் கணவுகளையும் சுமந்தாய்
இதோ பத்து மாதங்கள் முடிந்தது..................
உலகைக் காண விழி திறந்தேன்
அதே இருட்டு இன்னும் என்னைச் சூழ்ந்தது........
ஐயோ! திறக்கும் விழிகள் மூடியதேனோ?
உன் ஒரு வேளை சோற்றை பங்குகேட்டதாலோ?
இல்லை இவள் உன் சீருக்கு பங்குகேட்டதாலோ???
பாவம் பஞ்ச பாட்டு நீ பாட
உன் பாலைவனத்தில் பிறந்த எனக்கு
கள்ளிப்பாலுடன் தாலாட்டு
இப்போது கண்ணுறங்குகிறேன்....................
இனி ஒரு ஜென்மம் உன்னைத் தாலாட்ட
ஓர் அன்னையாய் நான் வர காத்திரு...................

சிவா.ஜி
03-06-2012, 06:53 PM
இக்கவிதையை தகுந்த இடத்துக்கு மாற்ற பொறுப்பாளர்களை வேண்டிக்கொள்கிறேன்.

கீதம்
03-06-2012, 10:54 PM
இக்கவிதையை தகுந்த இடத்துக்கு மாற்ற பொறுப்பாளர்களை வேண்டிக்கொள்கிறேன்.

மாற்றப்பட்டுவிட்டது அண்ணா. கவன ஈர்ப்புக்கு மிகவும் நன்றி.

கீதம்
03-06-2012, 11:10 PM
கருப்பை சிசுவின் கனவு சூழ் வாழ்வு கள்ளிப்பாலோடு களவாடப்பட்ட கொடுமையை சித்தரிக்கும் வரிகளில் மனம் நெகிழ்ந்தேன்.

இது உங்கள் முதல் முயற்சியெனில் பெரிதும் பாராட்டி வரவேற்கிறேன்.

கவிதை வரிகளை சிறிதே செப்பனிட்டால் மிகவும் அழகான வடிவில் உருப்பெறும்.

கரிசல் காட்டு பாதையிலே
தனியே இவள் மட்டும்
துணையாய் நான் வர எண்ணினேன்
ஏனோ எனக்காக நீயும் காத்திருந்தாய்

கவிதையில் சிசு, தன் தாயிடம் பேசும்போது, நான், நீ என்னும் தன்னிலை முன்னிலை இரண்டைத் தவிர அவள் இவள் என்று படர்க்கையில் குறிப்பிடப்படும் இடங்களில் சற்றே குழப்பம் உண்டாகிறது. மேலே உள்ள வரிகளில் இவள் என்பதற்கு பதில் நீ என்றிருந்தால் நன்றாயிருக்கும்.

கரிசல் காட்டு பாதையிலே
தனியே நீ மட்டும்
துணையாய் நான் வர எண்ணினேன்
ஏனோ எனக்காக நீயும் காத்திருந்தாய்

உன் ஒரு வேளை சோற்றை பங்குகேட்டதாலோ?
இல்லை இவள் உன் சீருக்கு பங்குகேட்டதாலோ???

உன் ஒரு வேளை சோற்றை பங்குகேட்டதாலோ?
இல்லை நான் உன் சீருக்கு பங்குகேட்டதாலோ???

இனி ஒரு ஜென்மம் உன்னைத் தாலாட்ட
ஓர் அன்னையாய் நான் வர காத்திரு...................

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். உன்னைத் தாலாட்ட, என்னைத் தாலாட்ட என்று எப்படியிருந்தாலும் அதற்குரிய பொருளைத் தந்து கவிதையைப் பலப்படுத்தும் வரிகள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/38-உங்களை-அறிமுகம்-செய்து-கொள்க) தந்து அனைவருடனும் கைகுலுக்கிக் கொள்ளுங்களேன்.

ஜானகி
04-06-2012, 01:40 AM
கருவிலேயே பாடம் போதித்த சிசுவிற்குப் பாராட்டுக்கள்.....

பொய்யான உலகில் நீ பிறவாததே நன்று என்பதை நீயும் உணர்வாய்...!

இராஜேஸ்வரன்
04-06-2012, 02:09 AM
உன் பாலைவனத்தில் பிறந்த எனக்கு
கள்ளிப்பாலுடன் தாலாட்டு
இப்போது கண்ணுறங்குகிறேன்....................
இனி ஒரு ஜென்மம் உன்னைத் தாலாட்ட
ஓர் அன்னையாய் நான் வர காத்திரு...................

அருமையான கவிதையில் மனதை கவர்ந்த வரிகள். பாராட்டுக்கள்.

ஆதி
04-06-2012, 07:48 AM
கருப்பை சிசுவின் கனவு சூழ் வாழ்வு கள்ளிப்பாலோடு களவாடப்பட்ட கொடுமையை சித்தரிக்கும் வரிகளில் மனம் நெகிழ்ந்தேன்.

இது உங்கள் முதல் முயற்சியெனில் பெரிதும் பாராட்டி வரவேற்கிறேன்.

கவிதை வரிகளை சிறிதே செப்பனிட்டால் மிகவும் அழகான வடிவில் உருப்பெறும்.

கவிதையில் சிசு, தன் தாயிடம் பேசும்போது, நான், நீ என்னும் தன்னிலை முன்னிலை இரண்டைத் தவிர அவள் இவள் என்று படர்க்கையில் குறிப்பிடப்படும் இடங்களில் சற்றே குழப்பம் உண்டாகிறது. மேலே உள்ள வரிகளில் இவள் என்பதற்கு பதில் நீ என்றிருந்தால் நன்றாயிருக்கும்.

கரிசல் காட்டு பாதையிலே
தனியே நீ மட்டும்
துணையாய் நான் வர எண்ணினேன்
ஏனோ எனக்காக நீயும் காத்திருந்தாய்

உன் ஒரு வேளை சோற்றை பங்குகேட்டதாலோ?
இல்லை நான் உன் சீருக்கு பங்குகேட்டதாலோ???

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். உன்னைத் தாலாட்ட, என்னைத் தாலாட்ட என்று எப்படியிருந்தாலும் அதற்குரிய பொருளைத் தந்து கவிதையைப் பலப்படுத்தும் வரிகள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/38-உங்களை-அறிமுகம்-செய்து-கொள்க) தந்து அனைவருடனும் கைகுலுக்கிக் கொள்ளுங்களேன்.

அக்கா 'இவள்' என்று சிசு தன்னை பற்றி சொல்லும் போது தன் பாலையும் குறிப்பிடுகிறது, அதாவது தான் ஒரு பெண் சிசு என்பதை அழுத்தி சொல்ல 'இவள்' பயண்படுத்தப் பட்டிருக்கிறது

கீதம்
04-06-2012, 08:16 AM
அக்கா 'இவள்' என்று சிசு தன்னை பற்றி சொல்லும் போது தன் பாலையும் குறிப்பிடுகிறது, அதாவது தான் ஒரு பெண் சிசு என்பதை அழுத்தி சொல்ல 'இவள்' பயண்படுத்தப் பட்டிருக்கிறது

ஒரு முறைக்கு மேல் படிக்கும்போது புரிகிறது ஆதன். ஆனால் முதல்முறை வாசிக்கும்போது கொஞ்சம் குழம்பினேன். அதிலும் முதலிரண்டு வரிகள் தாயைக் குறிக்கிறதா? சிசுவைக் குறிக்கிறதா என்பதில் குழம்பிப் பின் தெளிந்தேன். அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன். நன்றி ஆதன்.

ஆதி
04-06-2012, 09:04 AM

இப்படி முரட்டுத்தனமான சிக்கலோடான மொழியை கொண்டதாலோ என்னமோ, சசூரும், ரோலன் பார்த்தும் கவிதையை மிக தீவிரமாய் வெறுத்தோர்களோ ?

செல்வா
13-06-2012, 02:24 AM
வரிகளின் மயக்கம் கீதமிசையிலும் ஆதனொளியிலும் தெளிந்தது.
வாழ்த்துக்கள்.

vasikaran.g
16-06-2012, 11:47 AM
நல்ல
கவிதை !
இடைச்சொருகல்
இரண்டொரு
குழப்பங்கள் ..

kulakkottan
04-08-2012, 01:51 AM
கண்ணிடை நடக்கும் கண்மூடித்தனத்தை கவிதையாய் வரைந்துள்ளீர்கள் !
அழகனா ஓவியம் என்று சொல்லமாட்டேன் !அர்த்த முள்ள கவி ஓவியம் என்பேன்!
உன் ஒரு வேளை சோற்றை பங்குகேட்டதாலோ?
இல்லை இவள் உன் சீருக்கு பங்குகேட்டதாலோ??
சோறு ,சீறு ரெண்டையும் ஒலித்தால் தான் இந்த கள்ளி பால் கலாசாரம் ஒழியுமோ ?