PDA

View Full Version : இஃபிஜெநியா



சொ.ஞானசம்பந்தன்
03-06-2012, 10:21 AM
எலெக்த்ராவின் தமக்கை இஃபிஜெநியா என்பது நமக்குத் தெரியும் . இவளது கதையை நாடகமாக்கியுள்ளார் யூரிப்பிடீஸ் . இவரது இறுதிப் படைப்பு இது

அகமெம்நோனின் தம்பி மெநெலாஸ் . இவருடைய மனைவி , பேரழகி ஹெலெநாவை ட்ரோய் நகரத்தார் அழைத்துப் போய்விட்டனர் . அவளை மீட்டு வர,

கிரேக்கக் கப்பல்கள் குழுமின.

நெடுநாள் ஆகியும் பயணிக்க இயலாதவாறு கடுமையான எதிர்க் காற்று வீசிற்று . அது ஓய்வதாய்த் தெரியவில்லை . தெய்வம்தான் உதவவேண்டும் ஆகையால் அதனிடம் அருள்வாக்கு வேண்டியபோது

கல்க்காஸ் என்பவர் மூலமாய் தெய்வம் பேசியது :

இஃபிஜெநியாவைப் பலி கொடுத்தால் காற்று சாதகமாகத் திரும்பும் " .

படை நடத்திப் பகைவரை வென்று ஹெலெநாவை மீட்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அகமெம்நோன் அதற்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும் ; மகளை இழக்க விரும்பாத க்ளித்தெம்நேஸ்த்ரா

எதிர்த்தாள் . இஃபிஜெநியாவை மணக்க விரும்பியிருந்த எக்கிலீஸ் ( Achilles ) அவளைக் காப்பாற்ற முனைந்தான் ; ஆனால் தெய்வக் கட்டளைக்கு அடிபணிய வேண்டுமென மிகப் பெரும்பாலோரின் உறுதிகண்டு

பின்வாங்கினான்.

வேறு வழியின்றி மங்கை பலியானாள் இது முக்கிய காரணம் அகமெம்நோனைக் க்ளித்தெம்நேஸ்த்ரா கொன்றமைக்கு .

இந்த நாடகமும் செய்யுளால் இயன்றதே . இதன் ஆங்கில மூலத்திலிருந்து சில காட்சிகளை வாசிப்போம் .

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

.

கீதம்
03-06-2012, 11:49 PM
மிகவும் சிக்கலான உறவிழைகள். மகளைக் காக்கத் தந்தை தவறியதால் மனைவியால் கொல்லப்பட்டார். கணவனைக் கொன்றதால் மகனாலும் மகளாலும் தாய் கொல்லப்பட்டாள். தெய்வ வாக்கினை நம்பி உயிர்ப்பலி கொடுக்கப்படும் கொடுமையை (அவள் அரசன் மகளேயானாலும்) கிரேக்கத் தொன்மத்திலும் காண வியப்பாயுள்ளது. தொடரவிருக்கும் காட்சிகளின் மொழிபெயர்ப்பை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
04-06-2012, 06:25 AM
விரிவான திறனாய்வுக்கு நன்றி . கிரேக்கத் தொன்மத்துக்கும் இந்துத் தொன்மத்துக்கும் இடையே அநேக ஒற்றுமை உண்டு .