PDA

View Full Version : கொசு தூறல்



ஆதி
30-05-2012, 01:10 PM
புன்னகை


எப்போதும்
எனை கடந்து போகையிலெல்லாம்
மறவாமல் ஒரு புன்னகையை உதிர்க்கும்
எதிர்வீட்டு தாத்தாவின் மரணத்தை
அறிந்த தருணத்திலிருந்து
மனதை குடைந்து கொண்டிருக்கிறது
போனமுறை அவருக்கு உதிர்க்க தவறிய
பதில் புன்னகை

ஜானகி
30-05-2012, 02:02 PM
தவறியதால் புன்னகையும் சோகமானதோ..?

ஆதி
01-06-2012, 06:31 AM
இரண்டு கவிதைகள்

பெருமதில்களால் நிர்மாணிக்கப்பட்ட*
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட*

***************************

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புறப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு தேவைப்படுமென
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை

ஆதி
01-06-2012, 06:32 AM
தவறியதால் புன்னகையும் சோகமானதோ..?

இருக்கலாம் அம்மா, நன்றிங்க அம்மா

சிவா.ஜி
01-06-2012, 08:24 AM
முதல் கவிதை நெஞ்சுக்கு நெருக்கமாய் வந்து செல்கிறது...இரண்டாவது கவிதை உண்மையை உரைத்து சொல்கிறது...

மூன்றாவது கவிதை காதலிலினுள் ஒளிந்திருக்கும் மற்றொரு கோரத்தைக் காட்டிச் செல்கிறது....!!!

வாழ்த்துக்கள் ஆதன்.

(புறப்படுகையில், தேவை....வேதையென இருக்கிறது....)

jayanth
01-06-2012, 09:13 AM
இரண்டு கவிதைகள்

பெருமதில்களால் நிர்மானிக்கப்பட்ட*(நிர்மாணிக்கப்பட்ட)
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட*

***************************

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புறப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு தேவைப்படுமென
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை

ஆதன் கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை. எல்லாவற்றையும் திருத்தியவர் இதை மட்டும் ஏன் திருத்தவில்லை. கண்திருஷ்டிக்காகவா...

நாகரா
01-06-2012, 10:10 AM
பெருமதில்களால் நிர்மாணிக்கப்பட்ட*
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட*

மனச் சுவர்களின் இடிபாடுகளிடையே
நாசமாகா இருதய வெளியில்
மணக்கிறது மெய்

ஆதி
01-06-2012, 01:21 PM
நன்றி சிவா அண்ணா

நன்றி ஜெயந்த்

நன்றி நாகரா ஐயா

தாமரை
01-06-2012, 05:20 PM
வந்தவுடன் நீர்கொடுத்து தாகசாந்தி செய்வதும்
போகும்பொழுது புன்முறுவல் கொடுத்து வழியனுப்பலும்
விருந்தோம்பல்

வந்தால் புன்னகைத்தலும்
போகையில் நீர்துளிப்பதும்
பெற்ற மகளிடத்தில்
இது பாசம்

வரும்பொழுதும் அழுகை
போனாலும் அழுகை
இது வாழ்க்கை

வந்தால் அழுகை
போனால் சிரிப்பு
இது கஷ்டம்!!! :icon_rollout:

vasikaran.g
03-06-2012, 07:56 AM
தாத்தாவுக்கு
நீங்கள்
உதிர்க்காத
புன்னகை
பொன்னகை !

இரண்டு கவிதைகள்
திரண்டு நின்று
பிரர்த்திகட்டும்
தாத்தாவுக்கு
கவிதை
போர்வை
சார்த்தட்டும் ..

மஞ்சுபாஷிணி
03-06-2012, 11:40 AM
உதிர்க்க தவறிய புன்னகை, செய்ய மறந்த செயல், சொல்ல மறந்த சொல், கேட்க மறந்த மன்னிப்பு... இவை எல்லாமே உயிரும் உறவும் நட்பும் உயிரோடு இருக்கும்போதே பகிர்வது நலம் என்பதை உரைக்கும் மிக அருமையான வரிகள் ஆதி....

உண்மையே ஆதி.... அனுமதி கிடைக்காதவரை காத்திருப்பு அவசியம்....

இத்தனை நாள் இருந்துவிட்டு திடிர்னு பிரிந்து போகும்போது மனம் கனத்து வார்த்தைகள் வெளிவரமறந்து கண்ணீர் மட்டும் மடை திறந்த வெள்ளம் போல.... போகும்போது நம் சந்தோஷத்தையும் எடுத்துக்கொண்டு கண்ணீரை நமக்கு உரிமையாக்கிவிட்டு போகும் அன்பு அப்படி தான் என்று நச் நு சொன்ன கவிதை....

மூன்று கவிதைகளுமே மிக மிக அருமை ஆதி... அன்பு வாழ்த்துகள்....

ஆதி
26-06-2012, 06:25 PM
காற்றிலொரு வண்ணத்துப் பூச்சியென
பரிணமித்து
எங்கு செல்லினும்
என்னை பின் தொடர்ந்து
அருகில் அகல சிறகு பரப்பி வந்த*மரும்
உன் நினைவுகள் மட்டும்

*****************************************************

கார்பரேட்/ஐடி வாழ்க்கை அல்லது வேலை

உதற இயலாத புழுதியென*
உடலில் அசதியை சுமந்தவாறு
பொழுதுபூறாவும் அலைந்து சோர்வுற்று
ஓய்வெடுக்க ஆயாசமாய் அமரும் தருணத்தில்
ஆசனத்தில் இருந்து
ஓடு ஓடு இன்னும் ஓடுவென*
குற்றும் ஒரு முள்

***********************************************

பகட்டு செறிந்திருக்கும் இந்த நகரத்தில்
பெருகியோடு கவர்ச்சியின் பிரளயத்தில்
தொலைத்துவிடாமல்
சிரத்தையோடு காத்து வைத்திருக்கிறேன்
நம் காதலை

***********************************

நேற்றிந்த புல்வெளியில் நிகழ்ந்த சந்திப்பில்
நாம் சுமந்திருந்த கௌரவங்களுக்கு
எந்த பங்கமும் உண்டாகிவிடாத கவனத்தோடு
பேசிக் கொண்டிருந்துவிட்டு பிரிந்தோம்
சுமக்க முடியாமல் சுமந்திருந்த காதலை
இறுதிவரை பரிமாறி கொள்ளாமல்

**************************

இந்த புதிய அப்பார்ட்மெண்டில்
அறிமுகத்திற்கு பிந்தைய சந்திப்புகளில்
"எப்படி இருங்கீங்க ?" என கேட்கும் பக்கத்துவீட்டுக்காரருக்கு
பத்து வருடத்திற்கு முன்
நீ வழங்கிப் போன கொடுங்கசைப்பை
இன்னும் செரிக்க இயலாமல் வதையுறுவது பற்றி
தெரிந்துவிட கூடாதென்று
ஒவ்வொருமுறையும்
வெறுமனே புன்னகைத்து மட்டும் வைக்கிறேன்

கீதம்
26-06-2012, 10:44 PM
அகலச் சிறகு பரப்பி அருகில் வந்தமரும் எண்ணத்துப்பூச்சியிலும், உதற இயலாத புழுதியென உடல் சேர்ந்த சோர்விலும், இன்னும் உடல் சுமக்கும் கௌரவப்பொதியிலும், உளம் சுமக்கும் காதற்பொதியிலும் மனம் பறிகொடுத்தேன். ஐந்து கவிதைகளும் எனக்கு முறையே மருதம், பாலை, நெய்தல், முல்லை,குறிஞ்சி என்று ஐந்து நிலங்களை நினைவூட்டின. :) பாராட்டுகள் ஆதன்.

ஆதி
27-06-2012, 06:48 AM
அகலச் சிறகு பரப்பி அருகில் வந்தமரும் எண்ணத்துப்பூச்சியிலும், உதற இயலாத புழுதியென உடல் சேர்ந்த சோர்விலும், இன்னும் உடல் சுமக்கும் கௌரவப்பொதியிலும், உளம் சுமக்கும் காதற்பொதியிலும் மனம் பறிகொடுத்தேன். ஐந்து கவிதைகளும் எனக்கு முறையே மருதம், பாலை, நெய்தல், முல்லை,குறிஞ்சி என்று ஐந்து நிலங்களை நினைவூட்டின. :) பாராட்டுகள் ஆதன்.

நன்றிங்க அக்கா

இப்படி ஒரு கோணத்தை நான் யோசிக்கவே இல்லை

சிவா.ஜி
27-06-2012, 08:48 AM
ரொம்ப அழகா வார்த்தைகள் வந்து விழுந்திருக்கிறது ஆதன். ரசிக்க வைக்கும் வரிகள். வாழ்த்துக்கள் இளவலே.

vasikaran.g
27-06-2012, 09:34 AM
IT கவிதை அருமை ..

ஆதி
27-06-2012, 02:27 PM
கார்பரேட் கலாச்சாரம்

இப்பொழுதெல்லாம்
மிக சாதாரணமாகிவிட்டது
காஃபிக்கு அழைப்பதை போல*
யாரையும் கலவிக்கு அழைப்பது

jayanth
27-06-2012, 04:49 PM
கார்பரேட் கலாச்சாரம்

இப்பொழுதெல்லாம்
மிக சாதாரணமாகிவிட்டது
காஃபிக்கு அழைப்பதை போல*
யாரையும் கலவிக்கு அழைப்பது

இது "கார்பரேட்" கலாச்சாரத்தில் இல்லை... "கால் சென்டெர்" கலாச்சாரத்தில் இருக்கின்றது...