PDA

View Full Version : வார்த்தைகள்....



மஞ்சுபாஷிணி
30-05-2012, 11:05 AM
http://redriverpak.files.wordpress.com/2010/10/kiss-on-neck.jpg

காதலில்
திக்கி திணறுகிறது…..

அழுகையில்
வெம்பி வெதும்புகிறது….

கோபத்தில்
இரக்கமில்லாது
பிரிவைத் தூண்டுகிறது…..

மகிழ்ச்சியில்
நிலை கொள்ளாமல்
தவிக்கிறது….

மயக்கத்தில் ஆழ்த்துகிறது……
வசியம் செய்கிறது…..

ஊடல்களில்
தப்பி மனதுக்குள்
செல்கிறது…

ஒருவரையொருவர்
அறிய உதவுகிறது….

ஒன்றாய் இணைக்கிறது….

கூடலில்
மனம் அமைதிக்கொள்கிறது….

கொஞ்சம் ஓய்வெடுக்கிறது
மௌனத்தில் உறைகிறது...


வார்த்தைகள்...

vasikaran.g
03-06-2012, 07:52 AM
வெள்ளத்தின்
இடையே
இரண்டு
அன்பு
உள்ளத்தின்
அழகு
துள்ளல் !
கிள்ளைகளின்
இளம்
முல்லைகளின்
அழகு
இல்லம்

மஞ்சுபாஷிணி
03-06-2012, 11:33 AM
அன்பு நன்றிகள் வசீகரன்....

கீதம்
03-06-2012, 11:54 PM
வார்த்தைகளின் ஜாலத்தை அழகுக் கவிதையில் உரைத்து ஜாலம் செய்கிறீர்கள்.

என்னதான் செய்யமாட்டாதவை இந்த வார்த்தைகள்!

இணைப்பவையே இன்னொருநாள் பிரிக்கும்.

பிணக்குண்டாக்கும், பிறிதொருநாள் மீண்டும் பிணைக்கும்.

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் மஞ்சு.

ஜானகி
04-06-2012, 01:34 AM
பேசாத ஓவியம் பாடியதோ காவியம்...?

aasaiajiith
05-06-2012, 08:34 AM
வார்த்தைகளை பற்றி வடிக்கபட்டிருந்த
வரிகளை வர்ணித்து ,விமர்சித்து
வனப்பாய்,வசீகரமாய்,வரிவரியாய்
பல வரிகள் வந்திருப்பதை கண்டு
என் விமர்சனத்தையும் பதிப்பிக்க
வரையறை இல்லா ஆசையுடன் நான்,
பேசமுடியாத ஊமையாய் .......

வார்த்தைகளுக்கான வரிகளுக்கு வாழ்த்துக்கள் !

kulakkottan
04-08-2012, 02:10 AM
"கொஞ்சம் ஓய்வெடுக்கிறது
மௌனத்தில் உறைகிறது..."
அழகான வரிகள் ,ஆனால் காதலர்கள் மௌனத்தில் ஓய்வெடுபதில்லை ,மௌனத்தில் தான் அதிகம் பேசிக்கொள்கிறார்கள்

சுகந்தப்ரீதன்
09-08-2012, 04:13 PM
“உங்கள் மௌனத்தைவிட அழகாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே உச்சரியுங்கள் வார்த்தைகளை” - அரேபிய பழமொழி

வார்த்தைகளை கோர்த்து வார்த்திட கவிதை அழகோ அழகு...:) வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா..!!:icon_b: