PDA

View Full Version : வாழ்க இடைத்தேர்தல்...!!!



சிவா.ஜி
28-05-2012, 09:22 PM
எனக்காயிரம்
என் மனைவிக்காயிரம்
மகனுக்காயிரம்...என்
மகளுக்காயிரம்...
அடக்கடவுளே...
இப்படியெனத் தெரிந்திருந்தால்
ம்கனுக்கும்...மகளுக்கும்
ஐந்தாண்டு இடைவெளி விட்டிருக்க மாட்டேனே
விபத்துகள் இடைத்தேர்தல்களை உருவாக்கும்
இடைத்தேர்தல்கள் பணத்தேவையை சரியாக்கும்
இதையறியாமல் என்
இளமையை வீணடித்தேனே...
மகனின் மகனுக்கு
இந்த தாத்தாவின் அறிவுரை
எதிர்காலம் நிறைய இடைத்தேர்தல்கள் தரும்
எல்லாம் கிழம்.....
விரைவாய் விழும்...
வேகமாய் வளரு....பிள்ளைகளை கொணரு
இலவசமாய் எல்லாமுண்டு
இடைத்தேர்தலின் பணமும் உண்டு...
பாடு நீ பாடு...
வாழ்க நம் திராவிட நாடு...!!!

கீதம்
28-05-2012, 11:42 PM
நாட்டின் அவலத்தையும் மக்களின் பேதைமையையும் சுட்டாமல் சுட்டும் நறுக்கானக் கவிதைக்குப் பாராட்டுகள் அண்ணா..

ஆதங்கம் தெறிக்கும் வரிகள் கண்டு ஆயாசப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

அவரவர் தானே உணர்ந்து திருந்தினாலே நாடு நலம்பெறும்.

vasikaran.g
29-05-2012, 01:28 PM
பணம்
பணம்
பணம் ..
ஆளுங்கட்சி
உண்மை
பொய்
எல்லாவற்றையும்
ஆளுங்கட்சி ..
இடைத்தேர்தல்
கோடை மழை ..

சிவா.ஜி
29-05-2012, 03:43 PM
இடைத்தேர்தல்களின் அவலத்தையும், இறந்துபோனவரின் இடத்தைப் பிடிக்க அலையும் கூட்டத்தின் கேவலத்தையும் பார்த்தால்.....கோபம் வரவில்லை....வெறுப்புதான் வருகிறது.

என்ன செய்யறதும்மா....இந்த தாய்திருநாட்டிலே பொறந்து தொலைச்சுட்டோமே.

நன்றிம்மா தங்கையே.

சிவா.ஜி
29-05-2012, 03:45 PM
உண்மை, பொய் எல்லாவற்றையும் ஆளுங்கட்சி.....மட்டுமல்ல....எல்லாக் கட்சிகளுமே அப்படித்தான்.

நன்றி வசீகரன்.

பாலகன்
29-05-2012, 06:11 PM
அடிக்கடி வருகிற இடைத்தேர்தலுக்காக ஜனத்தொகையும் பெருகிடுமே சிவா அண்ணே :)

சிவா.ஜி
01-06-2012, 08:05 AM
ஆமாம்....அதானே சம்பாதிக்க உதவும்...மகாபிரபு சார்...!!!

செல்வா
01-06-2012, 03:33 PM
ஹா ஹா நல்ல ஐடியாவா இருக்கே...
கவிதை நல்லாருக்கு அண்ணா.

சிவா.ஜி
01-06-2012, 05:23 PM
நல்ல ஐடியாவா.....ஃபாலோ பண்ணுங்க....உங்க தொகுதியிலயும் இடைத்தேர்தல்கள் வரும்.

நன்றி செல்வா.